வண்ணங்களின் வசந்தம் - 13

Advertisement

சுதிஷா

Well-Known Member
received_403233810863852.jpeg
அத்தியாயம் -13

நாட்கள் அதன் போக்கில் செல்ல அவர்கள் கல்லூரியில் சேர்ந்து இத்தோடு ஒன்றரை வருடம் முடிந்திருந்தது. இதற்கிடையில் அர்ஜுன் மற்றும் பூஜாவின் காதலும் அவர்களது படிப்போடு வளர்ந்து கொண்டிருந்தது.

ஒருநாள் மதிய நேரம் பூஜா தங்களது கேன்டீனில் சோகமாக அமர்ந்து இருக்க அவளை கண்ட மது “என்னடி சோகமா உட்கார்ந்து இருக்க” என்று கேட்டாள். அவளை பாவமாக பார்த்த பூஜா “இன்னிக்கு கிளாஸ் அட்டென்ட் பண்ணவே, எனக்கு பிடிக்கல டி, பயங்கர மொக்கையா இருக்கு என்று கூறியவள், பின் கண்கள் மின்ன வெளில எங்கயாவது போகலாமா என்று கேட்க, ப்ரீத்தியோ “போலாம்” என்றவள் “ஆனால்……” என்று இழுத்து “அபியும், சூர்யாவும் அவங்க காலேஜில இருகராங்களே” என்று சொல்ல, பூஜாவோ “ஒன்னும் பிரச்சனை இல்ல நான் உடனே அபிக்கு கூப்பிடுறேன்” என்றவள் தனது கைப்பேசியில் அபிக்கு அழைத்தாள்.
அபி தன் போன் அடிக்கவும் யாருக்கும் தெரியாமல் எடுத்தவள் “ சொல்லுடி” என்று தூக்க கலக்கத்திலேயே கேட்க, பூஜாவோ அவள் குரலை வைத்தே தோழியின் நிலையை புரிந்து கொண்டவளாக “சேம் பிளாட், அங்க நிலவரம் என்ன” என்று கேட்க.

அபி, “இப்போதான் ஒரு மொக்க கிளாஸ் முடிஞ்சுது அடுத்து ஒரு பெரிய ரம்பம் வரும் அது என்ன மொழி பேசுதுன்னு எனக்கும் புரியாது மத்தவங்களுக்கும் புரியாது அதுக்கே புரியுமானுதான் எங்களுக்கு தெரியல” என்று புலம்ப அந்த பக்கம் இருந்த பூஜாவிற்கோ குதூகலமாகி போனது.

பூஜா, “ஹை ஜாலி இங்கயும் அதே நிலைதான் நாம எல்லாரும் எங்கேயாவது வெளில போயி சுத்திட்டு வரலாமா.காலேஜ் வந்தும் கட் அடிக்காம இருந்தா நாளைக்கு வரலாறு நம்ம தப்பா பேசும்” என்று கூற, அபியும் “அடுத்த ரம்பத்துல இருந்து எப்படி தப்பிக்க போறோம்ன்ற கவலைல இருந்தேன். நல்ல வேலை நீ கால் பண்ணுன, எல்லாரும் இப்ப எங்க இருக்கீங்க” என்று கேட்க பூஜா கேன்டீனில் இருப்பதாக சொன்னாள்.உடனே அபி “சரி அங்கேயே இருங்க, நாங்க ரெண்டு பேரும் அங்க வரோம்” என்றவள் சூர்யாவை பார்க்க அவளோ பொறுப்பாக அடுத்த வகுப்பில் லெக்சரர் எடுக்க போகும் புக்கை புரட்டி கொண்டு இருந்தாள்.

சூர்யாவின் செயலை பார்த்து தலையில் அடித்து கொண்ட அபி “இவ கடமை கண்ணியம் கட்டுப்பாடுனு ஓவரா பேசுவாளே”, என்று யோசித்தவள் பின் “எவ்வளவோ சமாளிச்சுட்டோம் இவளை சமாளிக்க மாட்டோமா”என்று தனக்கு தானே சொல்லி கொண்டவள், அவள் அருகில் சென்று கையை பிடித்து கேன்டீன் நோக்கி தர தரவென இழுத்து சென்றாள்.

சூர்யா, “அடியே என்ன பண்ற கைய விடுடி, ஏற்கனவே அந்த அம்மா நடத்தறது ஒன்னும் புரியாதுனுதான் என்ன டாபிக்னாவது பார்த்து வைக்கலாம்னு பாத்துட்டு இருக்கேன், அதைக்கூட செய்ய விடாம எங்கடி இழுத்துட்டு போற”என்று கத்தியவளை கண்டுகொள்ளாதவள் கேன்டீன் வந்துதான் கையை விட்டாள்.

அங்கு பூஜா, மது, ப்ரீத்தி மூவரும் இருப்பதை பார்த்தவள் “இவங்க ஏன் கிளாஸ்க்கு போகாம இங்க இருக்காங்க” என்று கேட்டு கொண்டிருக்கும்போதே அவர்கள் அருகில் வந்த ப்ரீத்தி “ஹேய் நாம எல்லாம் சீனியர் ஆகிட்டோம் காலேஜ் கட் அடிக்க போறோம் வெளிய சுத்த போறோம்” என்று குதித்து கொண்டு சொல்ல, அபியை முறைத்த சூர்யா அங்கேயே இதை சொல்றத்துக்கு என்னடி”என்று விட்டு ஆர்வமாக “எங்க போறோம்” என்றாள்.

தோழியை ஆச்சர்யமாக பார்த்த அபி “ஏன்டி பொறுப்பு பொறுப்புன்னு கருத்து கந்தசாமியா பேசுவியே இப்போ என்ன ஆச்சு”என்று சொல்ல, சூர்யாவோ அசட்டு சிரிப்புடன் “அந்த கிளாஸ்ல இருந்து தப்பிக்கத்தான் நானும் யோசிச்சுட்டு இருந்தேன்” என்று சொல்ல அவளை அணைத்து கொண்ட பூஜா “நீ என் இனமடா” என்றாள்.

மதுவோ அவர்கள் இருவரையும் பிரித்து நிறுத்தியவள், “ஆமா பெரிய அயல் நாட்டு அதிபர்கள் ஒப்பந்தம் பேசறாங்க கட்டி பிடிச்சு சம்மதம் தெரிவிக்கறாங்க, ஓவரா பண்ணாம எங்க போறோம்னு சொல்லுங்க” என்க, பூஜா வேகமாக “பக்கத்துல இருக்க மாலுக்கு ஏன் போகக்கூடாது” என்று கேட்டாள்”.

அபியும் “ஆமா இல்ல, இந்த மால் நியாபகமே இல்லை, சரி அங்கேயே போகலாம்”, என்று சொல்ல அதே நேரம் ப்ரீத்தி “நோ…..” என்று கத்தினாள்.அபி,”என்னடி இப்போ உனக்கு என்ன, எதுக்கு கத்தின”.

ப்ரீத்தி, “எனக்கு ‘சூசூ’ வருது நான் போயிட்டு வந்துடறேன் அப்புறம் எங்க வேணா போலாம்”என்றவள் துணைக்கு வர மாட்டேன் என்று பிடிவாதம் பிடித்த மதுவையும் சேர்ந்து இழுத்து கொண்டு சென்றாள்.மது அவளுடன் செல்லும் வழி எல்லாம் அவளை திட்டிக்கொண்டே வந்தாள்.”ஏன்டி இப்படி பண்ற குழந்தை மாதிரி பயந்துட்டு,எப்போ பாரு யாராவது துணைக்கு வரணும்னு நீ எல்லாம் காலேஜ் படிக்கறன்னு வெளிய சொல்லிடாத” என்று கத்த, உடனே ரோஷம் வந்த ப்ரீத்தி “அடியே யாருக்கு பயம்னு சொல்ற எனக்கு எவ்ளோ தைரியம்னு இப்போ காட்டறேன், இப்போவே ஒரு ஜூனியர் பையன கூப்பிட்டு ராகிங் பண்றேன் எனக்கு அவன் எப்படி பயப்படறானு மட்டும் பாரு” என்றவள் கிரவுண்டை சுற்றி கண்களை சுழற்றினாள்.

மது, “இந்த வாய்க்கு மட்டும் குறைச்சல் இல்லை.வாய் இல்லனா உன்னை நாய் தூக்கிட்டு போய்டும்” என்ற தோழியின் பேச்சை காதில் வாங்காமல் கண்களை சுழற்றியவள் “ஹுர்ரே.. …”என்று கத்தி கொண்டே “ஒரு அடிமை சிக்கிடுச்சு” என்று குதித்தவள், “டேய் தம்பி இங்கவா” என்றாள் சத்தமாக.

மதுவோ அந்த பையனை பார்த்து பயந்தவளாய் “அடியே பேசாம இருடி அவன பார்த்தா ஜூனியர் மாதிரி தெரில,அது மட்டும் இல்லாம நம்ம தைரியத்தோட அளவை யோசிச்சு முடிவெடு” என்றாள்.

ப்ரீத்தி, “பயந்து சாகாதடி வெள்ளை சட்டை போட்ட பசங்க ரொம்ப சைலன்ட் டைப்பா இருப்பாங்க, அங்க பாரு நான் கூப்பிடவும் பயந்துட்டு சுத்தி முத்தி பாக்குறான்.ஹே வைட் சர்ட் உன்னைதான் வா இங்க” என்று கெத்தாக இவள் கூப்பிட அந்த வெள்ளை சட்டைகாரனும் ஒருவிதமான முக பாவனையுடன் அவளிடம் வந்தான். அவன் வருவதை பார்த்த மது அலுங்காமல் அந்த பக்கம் ஓடி விட தனியாக நின்ற ப்ரீத்தி “என்ன தம்பி சீனியர்ங்கற மரியாதை இல்லையே உன்கிட்ட, கூப்பிட்ட உடனே வேகமா சொல்லுங்க சீனியர்னு ஓடி வர வேண்டாமா” என்று அதட்ட அவனோ அவளை சிறு சிரிப்புடன் பார்த்திருந்தான். “சரி சரி சின்ன பையன்னு இந்த ஒரு டைம் விடறேன், நீச்சல் அடிக்க தெரியுமா? தரைல அடிச்சுக்காட்டு பாக்கலாம்” என்று சொல்ல அவனோ கிண்டலான குரலில் “எத்தனை வருஷத்துக்குதான் இதையே பண்ண சொல்லுவீங்க சீனியர், ‘ஐ வாண்ட் மோர் எமோஷன்’ என்றான்.

அவனின் சிரிப்பையும், கிண்டலான பேச்சை கவனித்த ப்ரீத்தி “நம்ம டம்மி பீஸ்னு இவனுக்கு தெரிஞ்சுருக்குமோ நக்கலா சிரிக்கறான்” என்று யோசித்தவள், அருகில் நின்ற தோழியை தேட அவள்தான் எப்பவோ ஓடி இருந்தாளே, “ஐயோ இவ எங்க போனா” என்று ப்ரீத்தி திகைத்து நின்று கொண்டு இருக்கும்போதே அந்த பக்கம் வந்த நான்காம் ஆண்டு பையன் ஒருவன் அந்த வெள்ளை சட்டை போட்டவனிடம் சென்று “என்ன ஆச்சு சீனியர் எதுவும் பிரச்சனையா” என்று கேட்க, அவனோ “ஒன்றும் இல்லை” என்று சொல்லி அந்த பையனை அனுப்பிவிட்டு ப்ரீத்தியை பார்க்க அவளோ திரு திருவென்று விழித்து கொண்டிருந்தாள்.
“ஹய்யோ அந்த பனை மரமே பைனல் இயர், அவன் இவனை சீனியர்னு சொல்றான் அப்போ இவன் என்ன படிக்கறான்னு தெரிலயே” என்று ப்ரீத்தி யோசித்து கொண்டு இருக்க, அவளின் என்ன ஓட்டத்தை தெரிந்து கொண்டவனாக “நான் எம்.பி.ஏ” என்று சொல்ல, அவளோ திகைத்து விழித்தாள்.அவளின் முகத்தில் தெரிந்த திகைப்பை பார்த்தவன் சிறு சிரிப்புடன் “நீச்சல் அடிக்கணுமா” என்று நக்கலாக கேட்டு ப்ரீத்தியின் அருகில் வந்தவன் அவள் தலையில் நங்கென்று ஒரு கொட்டு கொட்ட, அவளோ “ஆ. ………”என்று கத்தி கொண்டே கொட்டிய இடத்தை தேய்த்தாள், அதை எல்லாம் கண்டு கொள்ளாதவன் அவளை முறைத்து பார்த்து “இனி நான் என்ன சொல்றனோ அதைதான் நீ செய்யணும்” என்று கட்டளையாக சொல்ல, அவளும் பூம் பூம் மாடு போல் பயத்துடன் தலையாட்டினாள். “கிளாஸ்க்கு போகாம இந்த டைம்ல இங்க என்ன பண்ற” என்றான்.

ப்ரீத்தி அவனின் கேள்வியில் கடுப்பானவள் “இவனும்தான் கிளாஸ்க்கு போகாம இங்க நிக்கறான்.நான் ஏதாவது கேட்டனா வந்துட்டான் என்கிட்டே கேள்வி கேட்க” என்று நினைத்தவள் அவனுக்கு பதில் சொல்லாமல் இருக்க,இவனும் விடாமல் “இங்க என்ன பண்ற இந்த நேரத்தில்” என்று அழுத்தி அதட்டி கேட்கவும், வழக்கம்போல் பயந்தவள் தோழிகளின் பிளானை சொல்ல அவன் முகத்தில் மகிழ்ச்சி ரேகை பரவியது.உடனே தன்னை சமாளித்து கொண்டு “சரி சரி நீ போ” என்று கூறி விட்டு, சென்றான் திருனேஷ்.

அவன் சென்ற பிறகும் வலித்த தன் தலையை தேய்த்து கொண்டு இருந்தவளின் அருகில் வந்த மது ஒன்றும் தெரியாதது போல் “என்னடி ஆச்சு” என்று கேட்க அவளோ உடனே தலையில் இருந்து கையை எடுத்துவிட்டு “ஒன்னும் இல்லை நான் மிரட்டுனதுல பையன் மிரண்டு போய்ட்டான், என்ன விட்டுருங்க அக்கானு ஒரே அழுகை அதான் அவன போக சொல்லிட்டேன்” என்று கெத்தாக சொல்ல மதுவோ கிண்டலான குரலில் “பார்த்தேன் பார்த்தேன் அவன் பயந்து அழுததையும் பார்த்தேன்,நீ தலையில் கை வச்சிட்டு இருப்பதற்கான காரணத்தையும் பார்த்தேன்” என்க.

ப்ரீத்தியோ “ரொம்ப முக்கியம் தனியா விட்டுட்டு ஓடிபோய்ட்டு பேச்சாடி பேசுற பேச்சு உனக்கு ஒரு ஒரு நாள் இருக்கு”என்று திட்டி கொண்டிருக்க மதுவோ “சரி சரி வா வந்த வேலைய முடிப்போம்.அப்புறம் மாலுக்கு போக லேட் ஆகிடும்” என்று பேச்சை மாற்ற, ப்ரீத்தியும் நடந்த அனைத்தையும் மறந்தவளாக “ஆமாம்டி” என்றவள் வேகமாக பாத்ரூம் நோக்கி ஓடினாள்.

ஒரு வழியாக இருவரும் மற்றவர்கள் இருந்த இடத்திற்கு வர அவர்களை பார்த்த அபி “ஏன்டி இங்க இருக்க பாத்ரூம் போயிட்டு வர எவளோ நேரம்” என்று திட்ட மது அங்கு நடந்த அனைத்தையும் சொல்ல ஆரம்பித்தாள்.அவள் சொல்ல சொல்ல மூவரும் வயிற்றை பிடித்து கொண்டு சிரிக்க ஆரம்பித்தனர்.

ப்ரீத்தி, “பாக்கல பாக்கலைனு சொல்லி மொத்தத்தையும் பாத்துட்டு மொத்துனதையும் பார்த்து சொல்லிட்டாளே”.

பூஜா, “ஏன்டி உனக்கு இந்த வேண்டாத வேலை நாமதான் புல் தடுக்கி பயில்வான் ஆச்சே நமக்கு இது எல்லாம் தேவையா” என்க, சூர்யாவோ “எது வைட் ஷர்ட் போட்டவங்க சைலன்ட்டா இருப்பாங்களா, என்னடா இது புது புரளியா இருக்கு என்று சொல்லி சிரித்தாள்.

அவர்கள் சிரிப்பதை பாவமாக பார்த்த ப்ரீத்தி ஒரு அளவுக்கு மேல் முடியாமல் “போதும் வாங்கடி போலாம் அப்புறம் ரவுண்ட்ஸ்க்கு வர்ற பிரின்சி இங்க என்ன பண்றீங்கன்னு கேட்டு கிளாஸ்க்கு போக சொல்லிட போறாரு” என்று சொல்ல மற்றவர்கள் அனைவரும் தெறித்து ஓட ஆரம்பித்தனர், அவர்கள் வண்டியை நிறுத்தி வைத்திருக்கும் பார்க்கிங் ஏரியா நோக்கி.அவரவர் வண்டியிடம் வந்து தங்கள் ஓட்டத்தை நிறுத்தியவர்கள் மாலை நோக்கி வண்டியை செலுத்தினர்.

இங்கு ப்ரீத்தியிடம் இருந்து தனக்கு தேவையான தகவலை பெற்று கொண்ட திருனேஷ் “இங்க ஒருத்தன் வருஷ கணக்கா உனக்காக காத்துட்டு இருக்கேன், நீ என்னடானா என்ன கண்டுக்காம வேற ஒருத்தனையா சைட் அடிக்கற வரேன்,நானும் மாலுக்கு வரேன், இன்னைக்கு நீ மட்டும் என்கிட்டே தனியா மாட்டு நான் யாருனு உனக்கு காட்டுறேன்.நான் பண்ற வேலைல இனி எவனையும் நீ பாக்க கூடாது” என்று தனக்குள் பேசி கொண்டவன் தன் வண்டியையும் மாலை நோக்கி செலுத்தினான்.

தோழிகள் ஐவரும் மாலிற்கு வந்து தங்களது வாகனத்தை பார்க் செய்து விட்டு திரும்ப, அங்கு அவர்களை வரவேற்கும் விதமாக நின்று கொண்டிருந்தவனை கண்டு அதிர்ந்தவர்கள் பூஜாவை பார்க்க, அவளோ அசட்டு சிரிப்போடு தோழிகளை பார்த்தாள்.

‘ஆம்’ அங்கு தனது உயர்ரக ஆர் எக்ஸ் 100 வகை வண்டியில் சாய்ந்து நின்றபடி பூஜாவையே விழுங்குவது போல் பார்த்துக் கொண்டிருந்தான் அர்ஜுன். அபி, “என்னடி இது? இங்க என்ன நடக்குது” என்று கேட்க மற்றவர்களும் அதே கேள்வியுடன்தான் அவர்கள் இருவரையும் பார்த்திருந்தனர். ஆனால் பூஜா இவர்கள் யாரையும் கவனிக்காமல் அர்ஜுனையே வைத்த விழி எடுக்காது பார்த்து கொண்டு இருக்க, அதை பார்த்த தோழிகள் அனைவரும் ஒரு சேர அவளை முறைத்து கொண்டு நின்றனர்.

அனைவரும் தன்னை முறைப்பது தெரிந்தாலும் அதைக் கண்டு கொள்ளாதவளாக அர்ஜுனை பார்த்து கையாட்டி அருகில் அழைக்க, அவனும் தன்னவளை பார்த்து விரிந்த சிரிப்புடன் அவர்கள் அருகில் சென்று, பூஜாவிடம் “படத்துக்கு டைமாச்சு கிளம்பலாமா” என்று கேட்க அனைவருமே அவளை வாய்பிளந்து பார்த்து “என்னது படத்துக்கு டைம் ஆச்சா” என்று கேட்க, அர்ஜுனும் “ஆமா மதியம் படத்துக்கு போலாம்னு சொன்னா, அதனாலதான் நான் முன்னாடியே வந்துட்டேன்” என்று கூற, மதுவோ தோழியை முறைத்து “அடிப்பாவி முன்னாடியே எல்லா முடிவும் எடுத்துட்டு தான் எங்ககிட்ட அப்படி நடிச்சியா, நான் கூட உண்மையாவே உனக்கு கிளாசுக்கு போக பிடிக்காமதான் சொல்றியோ நெனச்சுட்டமே, இப்போல்ல தெரியுது, நீ போட்ட கோடுக்கு நான் ரோடு போட்டு வச்சிருக்கேன்னு” என்று புலம்ப.
அபியும் தன் பங்குக்கு “உங்க போதைக்கு எங்களை ஊறுகா ஆக்கிட்டீங்களே” என்க, பூஜாவோ அப்பாவியாக முகத்தை வைத்து கொண்டவள் தோழிகளை பார்த்து “அது ஒன்னும் இல்லடி பழகி பார்த்தா தானே லவ் பண்றதா வேண்டாமானு முடிவெடுக்க முடியும் அதுக்கு தான்….” என்று இழுக்க அவள் காதை பிடித்து திருகிய சூர்யா “இந்த நடிப்பெல்லாம் எங்ககிட்ட வேணாம் ராசாத்தி, இவங்க பழகிப் பார்த்து லவ் பண்றதா வேண்டாமான்னு முடிவெடுப்பாங்களாம்,இத நாங்க நம்பனும், அர்ஜுன் மாதிரி ஒரு பையன் போனாலே இவன் என் ஆளு மாதிரியே இருக்கானுலனு சொல்லி சைட் அடிப்பா, அந்த அர்ஜுனே கிடைச்சதுக்கு அப்புறம் பழகி பார்த்து நீ லவ் பண்ண போற இத நாங்க நம்பனும்” என்று கேட்டாள்.

பூஜாவோ வலிக்காத காதை வேண்டுமென்றே வலித்த மாதிரி தேய்த்து கொண்டு பாவமாக பார்த்திருக்க பின் சூர்யாவே “ சரி சரி போய் தொல” என்று சொன்ன அடுத்த நிமிடம் அர்ஜுன் பூஜாவின் கையை பிடித்தவன் “சரி வா டைம் ஆச்சு” என்று இழுத்து செல்ல பார்க்க, அதற்குள் இருவரையும் தடுத்த அபி “ஹலோ நீங்க பாட்டுக்கு எங்க போறீங்க எங்களுக்கு கொடுக்குறத கொடுத்துட்டு கிளம்புங்க” என்று கூற, அர்ஜுனோ குழம்பி போனவனாக “ஏது கொடுக்கிறது கொடுக்கனுமா என்ன குடுக்கணும்” என்றான்.

அர்ஜுன் கேள்வியில் கடுப்பாகி அவர்கள் முன்னால் வந்து நின்ற ப்ரீத்தி “என்ன பாஸ் ஒன்னும் தெரியாத மாதிரி கேக்குறீங்க நீங்க பாட்டுக்கு உங்க ஆள் கூட படத்துக்கு போயிடுவீங்க எங்களுக்கு என்டர்டைன்மென்ட் வேணும்ல, அது மட்டும் இல்லாம இவ்ளோ பெரிய மால்ல சும்மா சுத்தி வந்தா நல்லாவா இருக்கும்,ஐஸ்கிரீம் சாப்பிட தோணும் அப்புறம் புட்கோர்ட் இருக்கு பிரியாணி சாப்பிட தோணும், பக்கத்துலயே கே.எப்.சி இருக்கு இப்படி சில பல செலவுகள் இருக்கு, நாங்க வாய மட்டும்தான் எடுத்துட்டு வந்தோம், அதுவும் உங்க ஆள நம்பி, இப்போ நீங்க பொறுப்பில்லாம அவளை கூட்டி போன என்ன அர்த்தம், இல்லை என்ன அர்த்தம்னு கேக்குறேன், இப்போ இவ்ளோ நேரம் உங்க கூட பேசுனதுக்கே நான் டயர்ட் ஆகிட்டேன் அதுக்கே நீங்க பாதம் பால் வாங்கி தரணும்” என்று கூறி, பின் “வள வளன்னு பேசாம சீக்கிரம் பணத்தை எடுத்து வச்சிட்டு கிளம்புங்க படம் போட்டுற போறான்” என்றாள் கிண்டலாக.

அர்ஜுன் பேந்த பேந்த விழித்தபடி பூஜாவை பார்க்க, அவளோ அவனது பேண்ட் பாக்கெட்டில் கையை விட்டாள், அவள் செயலில் பதறி போனவன்“அடியே என்னடி பண்ற” என்று கேட்டு துள்ளி குதித்து நகர, அதற்குள் அவனது பர்ஸை எடுத்திருந்தவள், அதிலிருந்த 2000 ரூபாய் நோட்டு சிலவற்றை எடுத்து தனது தோழிகளிடம் கொடுத்து “என்ஜாய் பண்ணுங்க” என்று கூற, தோழியை அணைத்து கொண்ட அபி “இது அல்லவா நட்பு ஒத்தையா கொடுக்காமல் கத்தையா குடுத்துட்டாளே” என்க, பூஜாவும் அவள் அணைப்பில் இருந்து விலகிய பின் தோளில் கை போட்டு “நண்பேண்டா”என்று சொல்ல மற்றவர்களும் ஓடி வந்து அவர்கள் அருகில் ஒருவர் தோள் மேல் ஒருவர் கை போட்டு நின்றவாறே மீண்டும் ஒரு முறை “நண்பேன்டா” என்று கத்தினர்.இது அனைத்தையும் பார்த்துக் கொண்டிருந்த அர்ஜுன் “காலியானது என் பர்ஸ்டா” என்று மனதில் நினைத்து தலையில் அடித்தபடியே பூஜாவை அழைத்துச் சென்றான்.
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top