வட்டலாப்பம்

Advertisement

sana

Active Member
HI friends எங்க ஊரு கல்யாணத்துல இருக்கும் ஸ்பெஷல் டிஸ்ஸே இதுதான்.

தேவையான பொருட்கள்
முட்டை 50
கருப்பட்டி 1kg
ஏலக்காய் 12 to 15
thik தேங்காய் பால் 1 cup விரும்பினா சேர்த்துக்கோங்க.


இதுதான் அளவு. முதல்ல நீங்க 5 or 10 eggs ல செஞ்சி பாருங்க.

நல்ல கருப்பாட்டியாக இருக்கணும். எங்க ஊர்ல கித்துள் கருப்பட்டினு சொல்லுவோம். கல்லுமாதிரி இருக்கும் லேசுல உடையாது நிறம் கூட டார்க் ப்ரவ்னா தான் இருக்கும்.

View attachment 4432

முதல்ல கருப்பட்டியை உடைச்சு கோங்க இல்ல கிரேட்டர் வச்சி சீவி கோங்க, சில பேர் கருப்பட்டியை பாணி காச்சியும் சேர்ப்பாங்க கலர் நல்லா வரும்.

பாத்திரத்துல உடைத்த கருப்பட்டியை போட்டு சூடாகும் போது அடி பிடிக்காமல் கிளறி இறக்கவேண்டும். பாத்திரம் சூடாக ஆரம்பிக்கும் போதே கருப்பட்டி கரைஞ்சிடும். நல்லா ஆறின பின் சேர்க்கவும் (tnx sana dear)



முட்டைகளை ஒரு பாத்திரத்தில் இட்டு ஏலக்காய் கொஞ்சம் தட்டி விட்டு சேர்த்து beat செய்யவும். நன்றாக அடித்தபின் கருப்பட்டி சேர்த்து மீண்டும் beat செய்து வடிகட்டி வெள்ளை நுரைகளை அகற்றவும்.

அதன் பின் விரும்பிய பாத்திரத்தில் ஊற்றி நீராவியில் அவித்து எடுக்கவும்.

View attachment 4431
 

Attachments

  • Jaggery_palm.jpg
    Jaggery_palm.jpg
    119.9 KB · Views: 1

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top