வட்டலாப்பம்

Advertisement

mila

Writers Team
Tamil Novel Writer
HI friends எங்க ஊரு கல்யாணத்துல இருக்கும் ஸ்பெஷல் டிஸ்ஸே இதுதான்.

தேவையான பொருட்கள்
முட்டை 50
கருப்பட்டி 1kg
ஏலக்காய் 12 to 15
thik தேங்காய் பால் 1 cup விரும்பினா சேர்த்துக்கோங்க.


இதுதான் அளவு. முதல்ல நீங்க 5 or 10 eggs ல செஞ்சி பாருங்க.

நல்ல கருப்பாட்டியாக இருக்கணும். எங்க ஊர்ல கித்துள் கருப்பட்டினு சொல்லுவோம். கல்லுமாதிரி இருக்கும் லேசுல உடையாது நிறம் கூட டார்க் ப்ரவ்னா தான் இருக்கும்.

5.jpg

முதல்ல கருப்பட்டியை உடைச்சு கோங்க இல்ல கிரேட்டர் வச்சி சீவி கோங்க, சில பேர் கருப்பட்டியை பாணி காச்சியும் சேர்ப்பாங்க கலர் நல்லா வரும்.

பாத்திரத்துல உடைத்த கருப்பட்டியை போட்டு சூடாகும் போது அடி பிடிக்காமல் கிளறி இறக்கவேண்டும். பாத்திரம் சூடாக ஆரம்பிக்கும் போதே கருப்பட்டி கரைஞ்சிடும். நல்லா ஆறின பின் சேர்க்கவும் (tnx sana dear)



முட்டைகளை ஒரு பாத்திரத்தில் இட்டு ஏலக்காய் கொஞ்சம் தட்டி விட்டு சேர்த்து beat செய்யவும். நன்றாக அடித்தபின் கருப்பட்டி சேர்த்து மீண்டும் beat செய்து வடிகட்டி வெள்ளை நுரைகளை அகற்றவும்.

அதன் பின் விரும்பிய பாத்திரத்தில் ஊற்றி நீராவியில் அவித்து எடுக்கவும்.

20190812_090928.jpg
 
Last edited:

mila

Writers Team
Tamil Novel Writer
egg smell varaadha mila?
flour edhuvum vaedama?
ஏலக்காய் போடுவது ஸ்மெல் வராம இருக்கத்தான். சில பேர் சின்ன வெங்காயம் போடுவாங்க, வெனிலா போடுவாங்க. ஆனா ஏலக்காய் போட்டா தான் அதனோட உண்மையான சுவை தெரியும்.
 

banumathi jayaraman

Well-Known Member
அடக்கடவுளே
வெறும் முட்டை மட்டும்தானா,
பஸ்மிலா டியர்?
அரிசி மாவு கோதுமை or மைதா
மாவு இப்படி எதுவும் சேர்க்க
வேண்டாமா?
 

banumathi jayaraman

Well-Known Member
ஏலக்காய் போடுவது ஸ்மெல் வராம இருக்கத்தான். சில பேர் சின்ன வெங்காயம் போடுவாங்க, வெனிலா போடுவாங்க. ஆனா ஏலக்காய் போட்டா தான் அதனோட உண்மையான சுவை தெரியும்.
கரெக்ட், மிலா டியர்
இனிப்புக்கு ஏலக்காய் வெனிலா
இந்த மாதிரிதான் போடணும்
வெங்காயமெல்லாம் காரத்துக்குத்தானே போடணும்
இனிப்புக்கு போட்டால்
நல்லாயிருக்குமாப்பா?
 

mila

Writers Team
Tamil Novel Writer
அடக்கடவுளே
வெறும் முட்டை மட்டும்தானா,
பஸ்மிலா டியர்?
அரிசி மாவு கோதுமை or மைதா
மாவு இப்படி எதுவும் சேர்க்க
வேண்டாமா?
no....
 

mila

Writers Team
Tamil Novel Writer
கரெக்ட், மிலா டியர்
இனிப்புக்கு ஏலக்காய் வெனிலா
இந்த மாதிரிதான் போடணும்
வெங்காயமெல்லாம் காரத்துக்குத்தானே போடணும்
இனிப்புக்கு போட்டால்
நல்லாயிருக்குமாப்பா?
smell வராம இருக்க சில பேர் போடுறத பாத்திருக்கேன். வெங்காயம் ஸ்மெல் அடிக்கும். ஏன் போடுறாங்கனு தெரியல.
 

Barakath Nisha

Well-Known Member
இந்த ஸ்வீட்ல ஒரு முட்டைக்கு ஒரு ஸபூன் ஜீனி சேர்த்து பெரிய மிக்ஸி கப்ல அடிக்கனும் நல்லா அடிச்சி 150 ml தேங்காய் பால் சேர்த்து மறுபடியும் அடிக்கனும் கொஞ்சம் மஞ்சள் தூள் சேர்த்து அடிச்சி வடிகட்டி ஒரூ ஸூபூன் நெய் விட்டு இட்லி சட்டி இல்ல குக்கர் ல வேகவிடலாம் குக்கர்ல 2 நிமிசம் வச்சி கேஸ் ஆப் பண்ணி ஆவி அடங்கின பிறகு திறந்து ஸூபூன் வச்சி லைட்டா கிளறி விடனும் அப்போ தான் எல்லாம் ஓரே மாதிரி செட் ஆகும் மறுபடியும் குக்கர் மூடி 3வீசில் வச்சி சிம்ல 10நிமிசம் வேகவிட்டு எடுக்கனும் வட்டலப்பம் மேல முந்திரி திராட்சை நெய் வறுத்து தூவலாம் .குக்கர்ல தண்ணி ஏறாத அளவுக்கு ஒரு பாத்திரத்தில் வேக வைக்கனும் ...... மிலா இது எங்க ஊர் வட்டலப்பம்......
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top