வசந்தம்- 10 டீஸர்

surthi

Well-Known Member
#1
Hi friends எல்லாரும் எப்படி இருக்கீங்க நீங்க எல்லாரும் என்னையும். என்னோட. கதை மறந்துர்ப்பீங்க மன்னிக்கவும். அதுக்கு. நான் தான் காரணம் என். Family issues னால கதைய என்னால இவ்வளவு நாளா தொடர்ந்து எழுத முடியல.extremely sorry for that இந்த ஜுன் 7 ல். இருந்து முன்ன மாதிரி. ஞாயிற்றுக்கிழமை ஞாயிற்றுக்கிழமை ud கண்டிப்பாக உண்டு அது சொல்லத்தான் வந்தேன். Sorry உங்க எல்லாரையும் காக்க வைக்கரதுக்கு நான் இவ்வளவு தூரம். காக்க வைத்ததுக்கு பின்னும். நீங்க எல்லாரும் என்னை திட்டாம. பொறுமையா. இருக்கறதுக்கு ரொம்ப ரொம்ப நன்றி இனி கண்டிப்பா. Delay or break இல்லாம கதையை கொடுக்கிறேன் friends அதுக்கு இது வரை என்னை நீங்க எல்லாரும் ஊக்குவிச்ச மாதிரி இனியும் என் கதையோட நிறை குறைகளை சுட்டி காட்டி உறுதுணையா இருக்கனும் வேண்டி கேட்டுக்கறேன் .
 
Last edited:

surthi

Well-Known Member
#2
வசந்தம் -10 டீஸர்


க்ரிஷ் அநியின் பிரதியாக இருப்பவளை நோக்கி துப்பாக்கியை நீட்டியதை கண்டு அதிர்ந்த ஜோசஃப் , மரியம் இருவரும் " க்ரிஷ் ........!???" என்று அலறினர் .

இவர்களின் அலறலில் அநிக்கு உணர்வு வந்தது என்றால் ரிஷி இன்னும் தன் எதிரில் இருப்பவளின் மீதிருந்து பார்வையை எடுக்காமல் அசையாமல் இறுகி நின்றான்

ஆனால் உணர்வுக்கு வந்த அநி நிமிர்ந்து பார்த்தவள் க்ரிஷ்ன் செயலை கண்டு ஞஆத்திரத்துடனும் ஆங்காரத்துடனும் எழுந்து க்ரிஷ் கன்னத்தில் அடியை இறக்கினாள்( இடியை என்று சொல்ல வேண்டுமோ) அநியின் அடியிலும் அவளில் முகத்தில் இருந்த ரௌத்திரத்திலும் க்ரிஷ் மட்டும் அல்ல ஜோசஃபும் மரியமும் கூட அரண்டு விட்டனர்

ஆனால் அநியோ இது எதையும் கவனிக்கும் நிலையில் இல்லை க்ரீஷ்ஷை அடித்தவள் அவன் சட்டையை பிடித்து உலுக்கி கொண்டே " செத்தவளை இன்னும் எத்தனை முறை சாகடிக்க போகிறாய் "

" அநிகா..........................????!!!!??????!!??....?-இப்போது அலறுவது ஆன்மாவின் முறையானது .

" அநிகாவா"............- க்ரிஷ், ரிஷி இருவரும் இப்பெயரை கேட்டு ஒவ்வொரு உணர்வுகளை வெளிபடுத்தினர் க்ரிஷ் அதிர்ந்தான் என்றால்
ரிஷிக்கு குழப்பங்கள் விலகுவது போல் இருந்தது.

"அநிகா தான இறந்தது " க்ரிஷ் அதிர்வுடன் கேட்க
அநிகா உதடுகளில் விரக்தி சிரிப்பும் கண்களில் வெறுமையும் இருந்தது

ஆனால் இவ்வளவு நேரம் அமைதியாகவும் மென்மையாக ரிஷியை பார்த்து கொண்டு இருந்த அநியின் பிரதியின் முகம் நொடியில் ரத்த சிவப்பாக மாற கண்களில் கண்ணீருக்கு பதில் இரத்தம் தான் கட்டியதோ என்று என்னும் அளவிற்கு கண்ணில் கனல் பொங்க
"உண்மை தான் அநிய கொலை செய்ய தான் முயற்சித்தார்கள் ஆனால் அதை நான் நடக்க விடவில்லை இனியும் நடக்க விடமாட்டேன்
ஓர் முறை உயிர் கொடுத்து காப்பாற்றி விட்டேன் இனி ஒவ்வொரு முறையும் உயிரை எடுத்து காப்பாற்றுவேன் "


வசந்தம் பூக்கும்........................
 
#5
Continue வா அப்டேட்ஸ் கொடுங்க ஸ்ருதி டியர்
விட்டு விட்டு கொடுப்பதால் கதை மறந்து விடுகிறதுப்பா
 
Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Sponsored

Advertisement