ராதையின் கண்ணன் இவன்-8

Advertisement

Hema Guru

Well-Known Member
கடைக்கு செல்லும் வழியில் சிவகாமி அம்மையாருக்கு அழைத்தாள் ராதிகா,

"ஹலோ"

"சிவா, நா ராதிகா"

"சொல்லுடி ஏ மாமியார், என்ன இன்னைக்கு இவ்ளோ சீக்கிரம் போன் பண்ணி இருக்க"

"வெள்ளிக்கிழமை காலேஜ்ல ஒரு பங்க்ஷன், புடவை தான் கட்டணும்னு சொல்லிட்டாங்க, நா தான் எதும் எடுத்துட்டு வரலேயே, அதான் கடைக்கு போறேன், வழில போர் அடிச்சதா அதான் உனக்கு போன் அடிச்சேன்"

"அடியேய் வந்தனு வை, அடி பிச்சிடுவேன், இவளுக்கு போர் அடிச்சிதுன்னு எனக்கு போன் போட்டலாம், எனக்கு வேலை வெட்டி இல்ல பாரு, இவ கிட்ட வெட்டி கதை பேச தான் இங்க காத்து இருக்காங்க"

"வேலைகாரங்களை வேலை வாங்குறதுக்கே இவ்ளோ பில்டப், இன்னும் நீயே வேலை பார்த்த அவ்ளோ தான் போலவே, உன்ன சொல்லி தப்பு இல்ல தில்லைய சொல்லணும், இந்த பொண்ணு தான் வேணும்னு ஒத்த கால்ல நின்னு உன்ன போய் கல்யாணம் பண்ணார் பாரு அவர சொல்லணும்"

"உன்னோட தாத்தா மூஞ்சிக்கு நானே அதிகம்டி, வந்துட்டா பெருசா பேச"

"ஓ அவ்ளோ தூரம் வந்தச்சா, நா அங்க இல்லன்னு உனக்கு பயம் விட்டுபோச்சி ஹ்ம்ம், தில்லை கிட்ட சொல்லி உன்னை கொஞ்சம் கவனிக்க சொல்லணும்" (இதே ராதிகா தான், தில்லை சிவாவை அதட்டினாலும் மண்டபடி நடத்துவாள்)

"அய்யோ, உன்னோட தாத்தாவை நினைச்சி எனக்கு அப்படியே கை, காலு எல்லாம் நடுங்குது போ டி"( இப்படி சொல்லும் சிவகாமி அம்மையார் தில்லைநாயகத்தின் பேச்சுக்கு எதிர் பேச்சு என்ன பார்வை கூட பார்க்க மாட்டார்), புடவை வாங்க கடைக்கு போறவளே, அப்படியே அதுக்கு தோதா நகை வாங்கு அப்போ தான் பாந்தாம இருக்கும், காசு இருக்கா, இல்ல உன்னோட தாத்தாகிட்ட சொல்லி போட சொல்லவா"

"காசு எல்லாம் இருக்கு ஆனா நகை எல்லாம் வேணாம் சிவா"

"எந்தாயி இல்ல சொன்ன கேளுடா, நீ போட்டு இருக்க சின்ன தோடு, அந்த கண்ணுக்கே தெரியாத சங்கிலி புடவைக்கு எடுப்பா இருக்காது"

"சரி, பார்க்குறேன் சிவா, நேரம் இருக்குமா தெரில, நா கடைக்கு வந்துட்டேன் வீட்டுக்கு போய் பேசுறேன் வச்சிடட்டுமா"

"சரி தாயி பாத்து பத்திரம்"

கை பேசியை துண்டித்துவிட்டு நிமிர்ந்து பார்த்த ராதிகா நிச்சயம் இவ்ளோ பெரிய கடையை எதிர்பார்க்க வில்லை. எல்லா விதமான புடவைகளுக்கும் தனி தனி பிரிவு என கண்ணை கவரும் விதம் அழகாக அடுக்கி காட்சிகாக வைக்கப்பட்டு இருந்தன. எல்லா புடவைகளுமே யுனிக் பீஸ். ஒரு நிறத்தில், ஒரு டிசைனில் ஒரு புடவை மட்டுமே, ராதிகா சில்க் காட்டன் புடவைகள் பக்கம் சென்று பார்க்க இளம்பச்சை நிறத்தில் உடல் முழுதும் அழகிய மயில்கலும், இளம்ரோஜா நிறத்தில் தங்க சரிகையில் பார்டர் கொண்ட புடவை கருத்தை கவர அதையே தேர்ந்து எடுத்தாள். இங்கு புடவைகள் நிறைய ரகங்கள் இருக்க, அப்படியே சிவாக்கும் எடுக்க எண்ணம் கொண்டாள்.

அப்படியே வயதானவர்கள் அணியும் புடவை பக்கம் சென்று சிரிய பார்டர் வைத்த புடவைகளில் சிவாவின் சிவந்த நிறத்திற்கு தோதாக ரத்த சிவப்பில் கொஞ்சம் வேலைப்பாடுகளுடன் ஒரு புடவையும், வேலைப்பாடுகள் கம்மியகா உறுத்தாத வண்ணம் வீட்டிற்கு என இரண்டு மூன்றும் வாங்கி மொத்தமாக பில் போட்டு வாங்கிக்கொண்டு வெளியே வர மணி ஏழு. காரில் ஏறிய சில நிமிடங்களில் எல்லாம் பொன்னிற மேனியனிடன் இருந்து அழைப்பு,

"என்ன ராதா பர்சேஸிங் எல்லாம் ஓவரா, இல்ல இன்னும் கடைய தான் தூறு வாரிக்கிட்டு இருக்கியா?"

"ஓய் என்ன நக்கலா"

"இல்ல விக்கல், பின்ன பொண்ணுங்க புடவை கடைக்கோ, நகை கடைக்கோ போன கடைக்காரரே வந்து கடைய மூடனும்னு சொல்லி கெஞ்சினா தானே வெளிய வருவிங்க அதான் கேட்டேன்"

"நா எல்லாம் சூப்பர் பாஸ்ட், எனக்கு எடுத்துட்டு சிவாக்கும் எடுத்துட்டேன் தெரியுமா"

"நீ புடவை கடைக்கு தானே போன, பின்ன சிவாக்கு எடுத்தேனு சொல்ற"

"சிவா, சிவகாமி என்னோட பாட்டி"

"மரியாதை எல்லாம் உன்கிட்ட தான் கத்துக்கணும்"

இதற்கு ராதிகா ஏதோ பதில் சொல்ல வர கார் கீரிச்சிட்டு நிற்கும் ஓசை அவளின் கை பேசி வழியாக அவனுக்கு கேட்கவும், அதை தொடர்ந்து அவனின் கார்மேகம் "என்ன ஆச்சி முத்து அண்ணா", "என்ன பிரச்சனைனு தெரிலமா, இருங்க பார்க்குறேன்"

"ராதா என்ன"

"கார் ஏதோ ரிப்பேர் போல ராகி, அண்ணா பார்க்குறங்க"

"போன் முத்து அண்ணா கிட்ட கொடு" எனவும், ராதிகா அவரை அழைத்து "ராகவ் லைன்ல இருக்காங்க, இந்தாங்க" என்றவாறே கொடுக்க, அவரும் வாங்கி பேசிவிட்டு, இந்தாங்க உங்க கிட்ட கொடுக்க சொன்னாங்க என்றவாறே கை பேசியை திரும்ப இவளிடமே கொடுத்துவிட்டு அகன்றார்.

"சொல்லு ராகி"

"ஏதோ கொஞ்சம் பெரிய பிரச்சனை தான் போல, மெக்கானிக் வரணும்னு சொல்றாங்க முத்து அண்ணா, அது பிரச்சனை இல்ல, எனக்கு தெரிஞ்ச மெக்கானிக் ஒருத்தர் இருக்காரு, சொன்ன உடனே வந்து பார்ப்பாங்க, ஆனா ரெடி ஆக எவ்ளோ நேரம் ஆகும்னு தான் தெரில,உன்னோட ரிலேட்டிவ் வீட்டுல சொன்ன யாரும் வருவாங்களா, இல்ல எதும் அரேஞ் பண்ணுவங்களா?"

"அவங்கள எல்லாம் டிஸ்டர்ப் பண்ண முடியாது ராகி, பேசாமா நா கார் புக் பண்ணி போறேன், முத்து அண்ணா வண்டி ரெடி ஆனதும் எடுத்துக்கிட்டு வரட்டும்" , அவளுக்கு அவர்களிடம் உதவி கேட்க விருப்பம் இல்லை என்பது புரிய,

"டிஸ்டன்ஸ் அதிகம் ராதா, தனியா போறது ரிஸ்க், சரி நீ உன்னோட லொகேஷன் எனக்கு வாட்ஸ்அப்ல ஷார் பண்ணு, நா மெக்கானிக் கிட்ட பேசிட்டு சொல்றேன்" என்று வைத்தவன், அடுத்த சில நிமிடங்களில் அழைத்து "நா பேசிட்டேன், அங்க பக்கத்துல தான் இருக்காங்க போல சோ சீக்கிரமா வருவாங்க, நீ காருக்குள்ளவே இரு, கீழ இறங்காதா புரியுதா"

"ஹ்ம்ம்" எப்போ அவங்க வந்து வண்டி சரி எப்போ வீட்டுக்கு போறது ஆண்டவா, என நேரத்தை நெட்டி தள்ள, அடுத்த பத்து நிமிடத்தில் மெக்கானிக் வந்து சேர்ந்தார். வண்டியை ஆரய்ந்து பார்த்துவிட்டு சரி பண்ண எப்படியும் நாற்பது நிமிடங்கள் ஆகும் என்றுவிட்டு தன் பணியை தொடர்ந்தார். மெக்கானிக் வந்ததையும் அவர் சொல்லியதையும் சொல்ல ராகிக்கு அழைக்க கை பேசியை எடுத்துவிட்டு நிமிர்ந்தாள், எதிரில் மயக்கும் புன்னகையுடன் பொன்னிற மேனியன்.

அவனை இங்கு, இந்த நேரத்தில் எதிர்ப்பாராததால் அவளின் குவளை மலர் கண்கள் இன்னும் பெரிதாக விரிய, அதரங்கள் அழகிய புன்னகை பூக்க வழக்கத்தைவிட இன்னும் அழகாக தெரிந்தால் அவனின் கார்மேகம்.

"ஹே உனக்கு தான் போன் பண்ண போன் எடுக்கறேன், நீயே இங்க வந்து நிக்கிற"

"அதான் ஆர்.கே"(கெத்தாம்)

"நீ சொன்னது அப்படியே "அதம்லா வர்கீஸ்" மாடுலட்ஷன்ல இருக்கு"

"உன்னை வச்சுக்கிட்டு ஒரு பில்டப் கூட பண்ண முடியாது "

"உன்னை யாரு உனக்கு வரதாத எல்லாம் பண்ண சொல்றா"

"நீ பேசுனா பேசிக்கிட்டே இருப்ப, இரு நா போய் மெக்கானிக்அஹ கிட்ட என்ன ஏதுன்னு கேட்டுட்டு வரேன்", என்றபடி சென்று அவரிடம் விவரம் கேட்டுவிட்டு இவளிடம் வந்தான்,

"எப்படியும் இன்னும் அரைமணி நேரம் ஆகும் போல"

"ஹ்ம்ம் சொன்னாங்க, உனக்கு தான் அலைச்சல்,, அதான் மெக்கானிக்கையும் அனுப்பிட்ட, கூட முத்து அண்ணாவும் இருக்காங்க அப்புறம் என்ன"

"இதுல என்ன இருக்கு, தெரியாத ஊர் தனியா என்ன பண்றியோ, வண்டி ரெடி ஆச்சானு அங்க இருந்து டென்ஷன் ஆகுறதுக்கு இங்கவே இருக்கலாம், அதான் வந்தேன்" இவன் பேச, ராதிகாவின் கை பேசி ஒலித்து தன் இருப்பை காட்ட அதை பார்த்த ராதிகா "அய்யோ இதை எப்படி மறந்தேன்" என தலையில் கை வைக்க, ராகவோ "என்ன ஆச்சி ராதா, போன் அஹ பார்த்துகிட்டு இருக்க எடுத்து பேசு",வேற வழி என்றவாறே அழைப்பை எடுக்க

"டாலி"

"சொல்லு கிறிஸ்"

"எங்க இருக்க நீ, நா இப்போ தான் மீட்டிங் முடிச்சிட்டு வந்தேன்,இந்த நேரம் எல்லாம் உன் கிட்ட இருந்து மெயில் வந்து இருக்கும், இன்னைக்கு வரல, நீ என் கிட்ட எதும் சொல்லவும் இல்லை, என்னடா எல்லாம் சரியா தானே இருக்கு" அக்கறையான பதட்டம்,

"ஆமா, ஆமா எல்லாம் சரியா தான் இருக்கு, கடைக்கு வந்தேன், சீக்கிரமா வந்துடலாம்னு பார்த்தா, வழில கார் ரிப்பேர், மெக்கானிக் வந்து பார்த்துகிட்டு இருக்காங்க, அந்த டென்ஷன்ல தான் இன்போர்ம் பண்ண மறந்துட்டேன், சாரி"

"தனியாவா இருக்க"

"இல்ல முத்து அண்ணா இருக்காங்க, அப்புறம் என்னோட பிரின்ட் இருக்காங்க கூட"

"சரி டா, பார்த்து பத்திரம், வீட்டுக்கு போனதும் எனக்கு இன்போர்ம் பண்ணு, சரியா, ஒன்னும் பிரச்சினை இல்லை தானே, இல்ல நா எதாவது பண்ணட்டுமா"

"அய்யோ, நிஜமா பிரச்னை எல்லாம் இல்லை, அப்படியே இருந்தாலும், ஐய்யா அங்க இருந்துகிட்டு என்ன பண்ணுவிங்க"

"நீ, ஹ்ம்ம் னு சொல்லு என்னால, இங்க இருந்து அங்க என்ன பண்ண முடியும்னு நா காட்டுறேன்"

"தெய்வமே நா தான் உங்க லெவல் தெரியாம பேசிட்டேன், விடுங்க"

"அது, அப்புறம் டாலி உன் பிரின்ட் சனி கிழமை பிரீயானு கேளு, சும்மா பிரின்ட்லியா ஒரு டாக், கேட்கிறியாடா"

"ராகவ் இங்க தான் இருக்கான், ஒரு நிமிசம் இருங்க கேட்டு சொல்றேன்" என்றவாறே பொன்னிற மேனியனிடன் திரும்பி, "ராகி,சனி கிழமை நீ பிரீயா, கிறிஸ் உன்கிட்ட பேசனும்னு சொல்றாங்க", "பிரீ தான் ராதா"

"கிறிஸ் ராகவ் பிரீ தானாம், நீங்க பேசுங்க"

"நீயும் கூட இருந்தா நல்ல இருக்கும், வெறும் பிசினஸ்னா நானே பேசிடுவேன், பட் ராகவ் உன்னோட பிரின்ட், சோ நீயும் இரு"

"சரி, ஓகே நா பார்த்துகிறேன், உங்க டைம் டேபிளை பார்த்துட்டு டைம் சொல்லுங்க, நா அதுக்கு ஏற்றமாதிரி பிளான் பண்ணிக்கிறேன்"

"சரிடா டாலி, பாய், டேக் கேர்"

"பாய்"

அழைப்பு கிறிஸ் இடம் என்று தெரிந்ததுமே, பொன்னிற மேனியனுக்கு ஏனோ உற்சாகம் சற்று வடிந்தது போல் இருந்தது, கிறிஸ் பேசியது தெளிவாக கேட்கவில்லை என்றாலும் அவனின் கார்மேகத்தின் பதிலில் ஓர் அளவுக்கு அவனால் என்ன பேசினார்கள் என அனுமானிக்க முடிந்தது. அது அவனுக்கு உணர்த்தியது என்னவென்றால் அந்த கிரிஸ் ஆகப்பட்டவனுக்கு இவனின் கார்மேகத்தின் மேல் ஆழமான பாசம் உள்ளது, இவன் நினைத்தது போல் இவன் கார்மேகத்தை அவளின் உழைப்புக்கான ஊதியம் தராமல் ஏமாற்றுபவனாக எல்லாம் தெரியவில்லை, இதில் தான் தெரிந்து கொள்ள வேண்டியது ஏதோ உள்ளது என்பது மட்டும் புரிந்தது. இவன் இவ்வாறு சிந்தனைவயப்பட மெக்கானிக் அழைக்கவும் தன் கவனத்தை அங்கு திசை திருப்பினான்.

"சர், வண்டி ரெடி ஆகிடுச்சு, ஸ்டார்ட் பண்ணி பார்க்க சொல்லுங்க"

"முத்து அண்ணா பாருங்க"

"ஸ்டார்ட் ஆகிடுச்சு தம்பி" எனவும், ராகவ் மெக்கானிக்கு கொடுக்க தன் பார்ஸில் இருந்து பணம் எடுக்க முயல அவனை தடுத்த ராதிகா, தன் பார்ஸில் இருந்து எடுத்து கொடுத்தாள், இவன் முறைக்கவும், "இங்க பாரு ராகி, பிரின்ட் அஹ நீ பண்ற ஹெல்ப் எல்லாம் நா வேண்டாம்னு சொல்லல தானே, காசு. விஷயம் வேற, இதையும் அதையும் போட்டு குழப்பிக்க கூடாது, என் கிட்ட இல்லனா கூட பரவ இல்லை, இருக்கும் போது எதுக்கு", அவனுக்கு அவளின் கோட்பாட்டில் விருப்பம் இல்லை என்றாலும் நடு வீதியில் அதை பற்றி தர்க்கம் செய்ய விரும்பால் அமைதியானான். இவன் அமைதியை தொடர்ந்து அவள் "நீ எதில வந்த"

"ஆட்டோ"

"சரி வா, அப்போ நாங்க உன்னை ஹாஸ்டல விட்டுட்டு போறோம்"

"இல்ல, நா பார்த்துக்குறேன், உனக்கு தான் அல்ரெடி லேட் ஆச்சி நீ கிளம்பு"

"நீ வராம நா கிளம்ப போறது இல்ல, இப்போ நீ தான் லேட் ஆக்குற" என கையை கட்டிக்கொண்டு நிற்க,

"பிடிவாதம், அவ்வளவும் பிடிவாதம்" வேற வழி இல்லாமல் காரில் ஏறினான். அவளும் ஒரு சிரிப்புடன் ஏறவும், கார் அவனின் ஹாஸ்டல் நோக்கி சென்றது, அந்த பயணம் முழுதும் அவன் அமைதியை கடைப்பிடிக்கவும் இவளுக்கு தான் ஒரு மாதிரி ஆனது, ஹாஸ்டல் வந்ததும் அவன் இறங்க முற்படவும் அவனின் கை பிடித்து தடுத்த அவனின் கார்மேகம், "கோவமா போகாத ராகி, எனக்கு வருத்தமா இருக்கு, எப்படி சொல்ல தெரில, தில்லை, கிறிஸ் தவிர வேற யாரும் எனக்கு செலவு பன்னது இல்ல, அந்த அளவுக்கு எனக்கு யாரும் க்ளோஸ்உம் இல்ல, இப்போ நீ, என்னால சடன் அஹ அக்ஸ்ப்ட் பண்ண முடில, சில விசயங்களால் நா எப்பவுமே காசு விஷயத்துல கரட் அஹ இருப்பேன் ,புரிஞ்சிக்கோ, பிலீஸ்" என்றவுடன் அவள் இவன் பணத்தை வாங்காதது அவனை பாதித்தது வேற விதத்தில், இவள் என்னை இவ்வளவு பாதிக்கும் போது, நான் இவளில் சிறு சலனத்தையும் ஏற்படுத்த வில்லையா, இவளுக்காக நான் பணம் கூட தர கூடாதா என்ற கோவம், இப்போது தன் கோவம் அவளையும் பாதிக்கிறது, இந்த மாதிரி விளக்கங்கள் சொல்வது அவளுக்கு புதிது இருந்தாலும் தனக்காக செய்கிறாள் என்பது புரிவதாலும் அவளை மேலும் வருத்த பிடிக்காமல்,"சரி, சரி நா கோவமா எல்லாம் இல்லை, சின்ன பொண்ணு அதனால் விடுறேன் பொழைச்சு போ, பத்ரம்" என ஒரு சிரிப்புடன் கூற, அதே சிரிப்புடன் அவளும் விடைபெற்றாள்.

வீட்டிற்கு சென்றதும் தெய்வா வாசலிலே இவளை ஏதிர் கொண்டு " ஏன்மா, வண்டி ரிப்பர்னா எனக்கு சொல்லி இருக்கலாம் இல்ல, வேற வண்டி அனுப்பி இருப்பேன்" எனவும், அப்போது தான் வண்டியை அதன் இடத்தில் நிறுத்திவிட்டு இவர்கள் அருகில் வந்த முத்து அண்ணாவை இது உங்கள் வேலையா எனும் விதமாக பார்க்க, அவரோ "இல்ல ராதிகாமா, எப்பவும் வர நேரத்தை விட லேட் ஆகிட்டதால் எங்க இருக்கிங்கன்னு கேட்க போன் பண்ணாங்க, அதான் வண்டி ரிப்பர்னு சொன்னேன்" என்று மென்று விழுங்க,

"உங்களுக்கு எதுக்கு தேவை இல்லாத சிரமம்"

"இதுல என்னமா சிரமம், நீ எங்க பொறுப்புமா" என தெய்வா நீ என் பெண், உன்னை காப்பது ஒரு அம்மாவாக என் கடமை என்று மறைமுகமாக சொல்ல அதை கேட்டவுடன் ஒரு இளக்கரமான புன்னைகை உதயமாக ராதிகா,
"என் பொறுப்பு எப்பவும் உங்களை சேராது, இல்லாததை எல்லாம் இருக்குனு கற்பனை பண்ணாதீங்க" என்று அவரின் விதத்தில் அவருக்கு பதில் அளித்துவிட்டு, வாங்கிய பைகளுடன் உள்ளே சென்றாள். அவளின் பதிலில் தெய்வா தான் விக்கித்து நின்றார், அவர் நினைத்து அளவு ராதிகா இல்லை, அவளை நெருங்குவது கடினம் தானோ தவிப்புடன் தெய்வா.

இவன் ராதையின் கண்ணன்………………..

Thaayanbirkku eedaethamma
Aagaayam kooda athu pothaathu
Thaai pola yaar vanthaalumae
Un thaayai polae athu aagaathu

En moochil vaazhum pullaanguzhal
Un pechu naalum senthaen kuzhal
Muthae en muthaaramae
Sabhai yerum paadal
Nee paadamma… nee paadamma….karpoora bommai ondru...
 

Chittijayaram

Well-Known Member
Unakaga ivlo parthu panrane avanai Oru punch dialogue solla vidamtriye ma, dai unnoda kovam avalai badhikkudu, nice update ruthra dear thanks.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top