ராதையின் கண்ணன் இவன்-7

Advertisement

E.Ruthra

Well-Known Member
காலையில் வழக்கம் போல ராதிகா கிளம்பி கீழே வர அவளுக்காக உணவு பரிமாற தெய்வா காத்திருக்க சிறு வியப்பே, ஒரு வேலை நேற்றைய பேச்சின் தாக்கமோ, உணவு மேசைக்கு இவள் வந்ததும், இவள் முக குறிப்பறிந்து அவர் பரிமாற ராதிகாவிற்கு தான் கொஞ்சம் சங்கோஜமாக இருந்து, ஒருவாறு உணவை முடித்து கிளம்ப மதிய உணவு பையை நீட்டினார், ஆச்சர்ய பார்வையை அவரை நோக்கி செலுத்தினாலும் ஏதும் பேசாமல் கல்லூரிக்கு கிளம்பினாள் ராதிகா. ஆனால் அவள் அறியாத ஒன்று அவள் இங்க வந்த இரண்டு நாட்களாக இவ்வளவு நாட்கள் தள்ளி இருந்து விட்டு திடீரென எப்படி அவளிடம் நெருங்க என தெய்வா தயங்க, நேற்றைய நிகழ்ச்சிக்கு பிறகு, தயக்கம் தன் மகளை தன்னிடம் இருந்து நிச்சயம் பிரித்துவிடும் எனும் நிதர்சனம் உரைக்க தன்னால் ஆன முயற்சிகளை செய்வது என்று உறுதி கொண்டார் தெய்வா, அதன் விளைவே இன்றைய சம்பவம். ராதிகா கோபப்படாமல் இவர் பரிமாறி உண்டதே இவருக்கு நிறைவை தர சீக்கிரம் தன் மகள் தன்னை புரிந்துகொள்வாள் என்ற நம்பிக்கையுடன் தெய்வா.

நேற்றைக்கு பார்த்த அதே மரத்தடியில் கார்மேகத்தின் கண்கள் இயல்பாய் அவனை தேடி பாய அவளின் நயனங்களை ஏமாற்றாமல் அதே இடத்தில் இன்றும் ராகவ் ஆனால் சிறிது பதட்டத்துடன் ஆனால் ஏன் என்ற சிந்தனையுடன் அவனை நெருங்கி இவள் குட் மார்னிங் என சொல்ல வாய் திறக்கும் முன்னரே இவளின் கையை பற்றி வகுப்பிற்கு செல்லும் வழிக்கு எதிர் திசையில் இவளை இழுத்து செல்ல ஏன் என்று புரியாமல் ராதிகா ராகவனை பார்க்கவும் அவன் பொறியவும் சரியாக இருந்தது.

"உன்னோட போன் எங்க, நீ எல்லாம் எதுக்கு போன் வச்சி இருக்க" நேற்று பிரச்சனையின் போது தில்லைக்கு அழைத்து பேசிய பிறகு, பேசி முடிக்கும் வரை எந்த விதமான தொந்தரவும் கூடாது என கை பேசியின் சத்தத்தை தான் குறைத்ததும், பின்பு அதை சரி செய்ய மறந்ததும் நினைவில் வர தன் நுனிநாக்கை கடித்தவாறே தலை சாய்த்து பொன்னிற மேனியனை பார்த்து "ஸ்ஸ்ஸ்ஸ் சாரி, அது போன் அஹ சைலேண்ட்ல போட்டேன், எடுக்க மறந்துட்டேன்" ,அவள் சொன்ன விதத்தில் அவளை "அய்யோ எவ்ளோ அழகா இருக்கா" கண் எடுக்காமல் உள்ளுக்குள் ரசித்தாலும், வெளியில் சலித்துக்கொண்டு,

"நல்ல மறந்த, சரி மார்னிங் கூட மொபைல் அஹ செக் பண்ணலையா?"

"இல்லையே, ஏதும் முக்கியமான விசயத்தை மிஸ் பண்ணிட்டனா, என்னனு சொல்லு ராகி"

"எதையும் மிஸ் பண்ணல, இன்னைக்கு மார்னிங் 8.30 க்கு எல்லா பஸ்ட் இயர்கும் சீனியர்ஸ் ஆடிட்டோரியம்ல மீட்டிங் சொல்லி இருக்காங்க"

"என்னவாம்"

"மே பி பிரஷர்ஸ் டே சிலேப்ராஷன் பத்தி பேசுவாங்கன்னு நினைக்குறேன்," பொன்னிற மேனியன் சொல்லி முடித்து ஆடிட்டோரியத்தின் பெரிய கதவை திறக்கவும், உள்ளே இருந்து அனைவரின் பார்வையும், இருவரையும் பார்த்துவிட்டு, பொன்னிற மேனியன் கைகளில் அடைக்கலம் ஆகி இருந்த கார்மேகத்தின் கைகளில் நிலைபெற, எங்க பார்க்குறாங்க என்றவாறே அவர்களின் பார்வையை தொடர்ந்த கார்மேகம், இவளோ நேரம் இதை எப்படி மறந்தேன், என அவனின் கைகளில் இருந்து தன் கையை விடுவித்து கொள்ள, அதான் பார்த்துடாங்களே இப்போ எதுக்கு இவ கைய எடுக்குறா (ராசா நீங்க ரொம்ப ஓவரா போறீங்க, பின் விளைவுகளுக்கு சங்கம் பொறுப்பேற்காது சொல்லிட்டேன்)

"ஹாய் சீனியர்ஸ்" ஒரு விரிந்த புன்னகையோடு அனைவரையும் பார்த்து சொல்லிவிட்டு, கார்மேகம் பின் தொடர உள் நுழைந்து, ஏற்கனவே இருந்த மாணவர்கள் திரலில் தாமும் சேர்ந்தனர் இருவரும்.

"ஹாய், நாங்க எல்லாம் உங்களுக்கு சீனியர்ஸ், இந்த காலேஜ் பொறுத்த வரைக்கும் எம்.பி.ஏ ல இருக்க எல்லா குரூப் செகண்ட் இயரும் எல்லா குரூப் பர்ஸ்ட் இயர்க்கும் சீனியர் தான், உங்க குரூப் சீனியர் மட்டும் கிடையாது, எல்லாருக்கும் மரியாதை கொடுக்கணும், புரியுதா" என ஒவொவ்வொரு பிரிவிற்கு இருவர் என குழுமி இருந்த எல்லா பிரிவுகளை சேர்ந்த இராண்டாம் வகுப்பு மாணவர்களின் சார்பாக ரஞ்சன் பேச,

"புரியுது சீனியர்" (நம்ப விழுதுகள்)

"சீனியர் அண்ட் ஜூனியர்க்குள்ள எந்த பிரச்சனையும் வர கூடாது, அதோட எல்லாரையும் எல்லாருக்கும் தெரிஞ்சி இருக்கணும், அதனால எங்க சீனியர்ஸ் எங்களுக்கு வச்ச மாதிரி, நாங்களும் உங்களுக்கு காலேஜ் ஓப்பன் பண்ண பர்ஸ்ட் வீக்ளையே அதாவது வர வெள்ளி கிழமை பிரேஷர்ஸ் டே வைக்கலாம்னு இருக்கோம்" மாணவர்களிடம் சிறு சலசலப்பு எழ,

"நீங்க பயப்படுற மாதிரி ஏதும் இருக்காது, உங்க எல்லாரோட இன்ட்ரோ, அப்புறம் குட்டி குட்டி டாஸ்க், ஒரு பண் ஷோ மாதிரி", மாணவர்களின் முகம் சற்று தெளிய,

"அப்புறம் இன்னொரு முக்கியமான விஷயம், அன்றைக்கு எல்லாரும் ட்ரடிஷனல் அவுட் பிட்ல தான் வரணும், நீங்க எல்லாரும் இப்போ போகலாம், வெள்ளிக்கிழமை பார்ப்போம் காய்ஸ் பாய்" என விடைகொடுக்க, எல்லாருடனும் சேர்ந்து இவர்களும் வெளியே வர கார்மேகத்தின் முகம் முழுக்க சிந்தனை மேகங்கள்.

"என்ன ஆச்சி ராதா"

"சீனியர்ஸ் சொன்னத செய்யலனா என்ன பண்ணுவாங்க"

"எதை கேட்குற"

"அதான் ட்ரடிஷனல் அவுட் பிட்"

"கண்டிப்பா பிரச்சனை ஆகும், அவங்கள மதிக்கலைனு, அதுல உனக்கு என்ன பிரச்சனை"

" ஐடியா, அன்றைக்கு எப்படியும் ஹால்ப் டே கிளாஸ் நடக்காது, பேசாம லீவ் போட்டுட்டா"

"புல் டே வுமே கிளாஸ் இருக்காது தான், ஆனா லீவ் போட்டாலும் பிரச்சனை தான், மன்டே வந்த உடனே அவங்கள வந்து பார்க்க சொல்லுவாங்க, இப்போ, உனக்கு என்ன பிரச்சனைனு சொல்ல போறியா இல்லையா"

"என் கிட்ட ட்ரடிஷனல் அவுட் பிட் இல்ல ராகி" தயங்களுடன் அவள்,

"புரில"

"ட்ரடிஷனல் அவுட் பிட் எல்லாம் நா ஊர்ல இருந்து எடுத்துட்டு வரல ராகி"

"நீ வீட்டில இருந்து தானே வர" கூர்மையுடன் அவன்,

"நா தங்கி இருக்குறது ரிலெட்டிவ் வீடு" விரும்பாததை செய்யும் பாவம் அவள் குரலில், அவள் சொன்ன விதத்தில் அதை மேற்கொண்டு ஆராய பிடிக்காமல்,

"இல்லைனா என்ன புதுசா வாங்கு"

"ஒரு நாள் தானே இருக்கு"

"எல்லாரையும் தெரிஞ்சிக்கவும் பழகவும் இது ஒரு நல்ல சான்ஸ், ரீசன் தேடாம கெட் ரெடி பார் பிரேஷர்ஸ் டே"

"ஹ்ம்ம், நீ"

"எனக்கு தெரியும் இப்படி தான் பண்ணுவாங்கன்னு, சோ நா வரும் போதே பிரெப்பேரெட் தான் வந்தேன், நாங்களாம் யாரு"

"மேய்க்குறது எருமை இதுல என்ன பெருமை, ஏற்கனவே நாலு வருஷம் இதே காலேஜ்ல குப்பைகொட்டி இருக்க, அதான் ஏற்கனவே தெரிஞ்சி இருக்கு, இதுக்கு என்னமோ இவ்ளோ பில்ட்அப்"

"நீயே கேள்வியும் கேட்டுட்டு, பதில் சொன்னா கலாயக்குரா, உன்னை"

"அது அப்படி இல்லை, இப்போ நா கேட்டு நானும் வாங்கணும்னு, நீ சொல்லி இருந்தேனு வை, அப்போ நா என்ன சொல்லி இருப்பேன் தெரியுமா, நாலு வருஷம் இங்க தானே குப்பை கொட்டுன இது கூட தெரியாதனு கேட்டு இருப்பேன், பேசிக்கல்லி நாங்க கலாய்க்க முடிவு பண்ண நீ என்ன பதில் சொன்னாலும் வச்சி செய்வோம்" அவனை தடுமாற வைக்கும் கண்ண குழியுடன் அவன் கார்மேகம்.

"விடு, விடு, அரசியல் வாழ்க்கையில இது எல்லாம் சகஜம் பா" (ஹாப்பா எப்படி எல்லாம் இமேஜ்அஹ மெயின்டெயின் பண்ண வேண்டியாதா இருக்கு)

இவ்வாறு சலசலத்தவாறே வகுப்புக்கு செல்ல, கல்லூரி முடிந்து வீட்டிற்கு கிளம்பும் போது,

"ராகி" தயக்கங்களின் குவியலாய் இவள்,

"சொல்லு ராதா" யோசனையோடு அவன்,

"இங்க எங்க ட்ரெஸ் நல்ல இருக்கும், எனி ஐடியா,எனக்கு சென்னை பத்தி அந்த அளவுக்கு தெரியாது" கேட்கலாமா வேண்டாமா என குழப்பதுடன் அவள்,

"ஹ்ம்ம், எனக்கும் வுமன் அவுட்பிட் பத்தி தெரியாது, வெய்ட் நா அம்மா கிட்ட கேட்கிறேன் அவங்களுக்கு தெரியும்" என்றவாறே அவனின் ராஜா மாதக்கு அழைப்பெடுக்க அந்த புறம் அவர் அழைப்பை ஏற்ற உடன்,

"ராஜமாதா"

"சொல்றா மகனே அதிசயமா இந்த நேரத்துக்கு கூப்பிட்டு இருக்க"

"நீங்க சாரீஸ் எல்லாம் எங்க வாங்குறிங்க"

"நா கும்பிட்ட சாமி எல்லாம் என்ன கை விடல, ஒரு வழியா உனக்கும் புத்தி வந்துடுச்சி போலவே, ஆனா அம்மாக்கே போன் பண்ணி எங்க புடவை வாங்கணும்னு கேட்குற பார்த்தியா உன்னை நினைச்சி எனக்கு அப்படியே புல்லரிக்குதுடா மகனே"

"நா என்ன கேட்குறேன் நீங்க என்ன பேசிக்கிட்டு இருக்கீங்க"

"ஒரு வழியா நீ ஒரு பொண்ண கரெக்ட் பண்ணிட்டா போலவே, நீ கரட் பண்ணியா இல்ல அந்த பொண்ணு உண்ண கரட் பண்ணுச்சாடா, நா கூட நீ அதுக்கு எல்லாம் சரி பட்டு வர மாட்டியோனு நினைச்சேன்டா, எப்படிடா"

"அம்மா" என இவன் பற்கள் அரைப்படும் சத்தம் அங்கே கேட்க, இதுக்கு மேல போன பயப்புள்ள தாங்காது என்றவாறே இறங்கி வந்து அவர் தான் வழக்கமாக செல்லும் புகழ் பெற்ற கடையின் பெயரை கூற, ராகவோ,

"சரி அங்க பிளவுஸ் எல்லாம் ஒரு நாள்ல ஸ்டிச் பண்ணி கொடுப்பாங்களா"

"அது எல்லாம் அங்கவே பண்ணி தருவாங்களே, டேய்… மகனே என்னடா உங்க லவ் அந்த பொண்ணு வீட்டுல தெரிஞ்சி பிரச்சனை ஆகிடுச்சா, கல்யாணம் பண்ணிக்க போறீங்களாடா, நீ தாலி மட்டும் கட்டி வீட்டுக்கு கூட்டிட்டு வா நா பார்த்துக்குறேன், ஏன்டா அந்த பொண்ணு மேஜர் தானே இல்லனா போலீஸ் கேஸ் ஆகிடும்டா" ராஜமாதா வழக்கம் போல அடவுகட்ட, பொன்னிற மேனியன் அருகில் நின்றிந்த ராதிகாவிற்கு அவர் பேசுவது எல்லாம் தெளிவாக காதில் விழ, இவ்வளவு நேரம் அணைபோட்ட சிரிப்பு வெள்ளம் இப்போ அப்போ என கரையை உடைக்கும் அபாயத்தை உணர்ந்து திரும்பி ராகியிடம், "எனக்கு ஒரு போன் பேசணும், வரேன்" என நகர, அதற்காகவே காத்திருந்தது போல்,

"என்னலா பதில் பேச முடிலனா போதுமே என்ன எல்லாம் பேசுறீங்க"

"டேய் அப்போ நீ நிஜமா கல்யானம் பண்ண போறது இல்லையா"

"ஒரு அம்மா மாதிரியா பேசுறீங்க"

"நீயும் நானும் அம்மா புள்ளை மாதிரியா பழகுறோம், பிரின்ட் மாதிரி தானே மகனே பழகுறோம்,ஆமா யாருடா அந்த பொண்ணு எனக்கு தெரியாம"

"நா தான் சொன்ன இல்ல ராதா"

"புடவை வாங்குற அளவுக்கு வந்தச்சாடா"

"ஏன்மா நீங்க வேற, நல்ல கடை தெரியுமானு கேட்டா அதான் நீங்க நினைக்குற மாதிரி ஒன்னும் இல்ல"

"போட இப்படி ஏமாத்திட்டியே"

"அம்மா உங்க போதைக்கு எல்லாம், என்னால ஊறுகா ஆக முடியாது, சரி மா நா அப்புறம் பேசுறேன் பாய்" ஒரு சிரிப்புடன் ராதையிடம் சென்று,

"அம்மா ********* கடை சொன்னாங்க, இங்க நம்ப காலேஜ்ல இருந்து கொஞ்சம் தூரம் தான் அங்கேயே வங்கிக்கோ சரியா"

"ஹ்ம்மம்" (குருகுறுப்புடன் பார்க்க)

"என்ன ஏன் இப்படி பார்க்குற"

"அம்மாவும், நீயும் செம க்ளோஸ் போல"

"ஹ்ம்ம் ஆமா, அப்பா சைலேண்ட், அம்மா அப்படியே ஆபோஸிட், அவங்க தான் என்னோட பெஸ்ட் பிரின்ட், நானும் அம்மாவும் சேர்ந்தா வீடே கலைகட்டும், பச் அப்பா இறந்ததும் தான் அம்மா அப்படியே அமைதியா ஆகிட்டாங்க, எங்க இவங்களையும் நா இழந்திடுவேன் பயந்த பயம் ஹாப்பா அவங்கள மறுபடியும் இதே மாதிரி மாத்த, அந்த நாள் எல்லாம் நரகம் ராதா" பொன்னிற மேனியன் அந்த நாளின் நினைவில் கணத்துடன் பேச, அவன் இதை எல்லாம் யாரிடமும் பேசியதில்லை என்பது அவனின் உடல் மொழியிலே தெரிய, அவனின் சோகம் அவளையும் தாக்க, அவனின் கையை பற்றி ஆறுதலாக அழுத்திவிட்டு அவனை திசைதிருப்பும் விதமாக "அம்மா தனியாவா இருக்காங்க"

"இல்ல, அம்மா கூட, அவங்க தங்கச்சி ஐ மீன் என்னோட சித்தி அண்ட் சித்தப்பா இருக்காங்க"

"ஓ அப்போ சரி"

"சரி, நீ என்ன நேரா கடைக்கு தானே, கிளம்பு வாங்கிட்டு வீட்டுக்கு போக லேட் ஆக போகுது"

"சரி ராகி, பாய்" ராதிகா கிளம்ப, எப்படி என்னால் இவளிடம் எல்லாவற்றையும் பகிர்ந்து கொள்ள முடிகிறது, நம்பிக்கை என்பது உருவாக வருட கணக்கு தேவையா என்ன, சந்தித்த இரண்டு நாட்களில் இவள் மீது எனக்கு இருக்கும் நம்பிக்கையையும், நெருக்கமும் மிக அதிகம், இது என்ன மாதிரியான பந்தம், இந்த உணர்வு தரும் சுகம் அது அவனுக்கு மிக புதிது, இந்த உணர்வையும், அதை அவனுக்கு பரிசளித்தவளான அவனின் கார்மேகம் பற்றிய இனிய கற்பனைகளுடன் பொன்னிற மேனியன்…....


இவன் ராதையின் கண்ணன்…………….
 

banumathi jayaraman

Well-Known Member
என்னப்பா தெய்வாம்மாவுக்கு திடீர்னு ஞான்னோதயம் பிறந்திருக்கு
மவளுக்கு டிப்பன்லாம் செர்வ் பண்ணுறாங்க
காலேசுக்கு சோறுலாம் கொடுக்குறாங்க
கார்மேகத்தின் நேற்றைய பேச்சின் எதிரொலியா?

ஹா ஹா ஹா
ராகியின் மம்மி அவனை களி கிண்டாமல்
விட மாட்டாங்க போலவே
என்னைய போலவே பையனைப் பத்தி நல்லாத் தெரிஞ்சு மூவ் பண்ணுறாங்களே
ஐ லைக்ஸ் பொன்னிறமேனியனின் மம்மி
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top