ராதையின் கண்ணன் இவன்-5

Advertisement

Sesily Viyagappan

Writers Team
Tamil Novel Writer
புது இடம் அதுவும் விருப்பமின்றி திணிக்கப்பட்ட இடம் என்பதாலோ என்னவோ இரவு முழுதும் நித்ராதேவி இவளிடம் பிணக்கு கொள்ள பொழுது புலர இன்னும் சிலமணி நேரங்களே என்னும் நிலையில் கால், கையில் விழுந்து அவளை சமாதானபடுத்திய கொஞ்ச நேரத்திலேயே சூரியபகவன் வந்து காலை வணக்கம் சொல்ல "நல்ல இருக்குயா உங்க டீலிங்" என புலம்பிக்கிட்டே எழுந்து கல்லூரி செல்ல கிளம்பி கிழே வர, ராதிகா இங்கு வந்த இரண்டு நாட்களாக கண்ணில் படாதா சண்முகம் கூடத்தில் காட்சி தந்தார். மனச்சாட்சியோ "இருக்கு இன்னைக்கு ஒரு சம்பவம் இருக்கு" என கவுண்டர் தர அவரையும் தன் மனசாட்சியையும் சேர்ந்து அலட்சியப்படுத்தியவாறே உணவு உண்ண அவரை கடந்து செல்லும் போது ,சண்முகம் எந்த முகவுரையும் இல்லாமல் "ஸ்வேதா, இந்த வீட்டுக்கு மகாராணி, வந்தமோ, தங்கனுமா, படிச்சமானு தான் உண்டு தன் வேலை உண்டுனு இருக்கணும், என்னோட பொண்ண தேவை இல்லாம சீண்டுனா நான் மனிஷனா இருக்க மாட்டேன் புரியுதா" என எச்சரித்துவிட்டு இவளின் பதிலுக்காக இவளை நிமிர்ந்து பார்க்க, ராதிகாவோ அவரை அவரால் இன்னதென்று பொருள்விளக்கி கொள்ள முடியாத ஒரு பார்வையோடு கடந்து உணவு மேசைக்கு சென்று "கமலாம்மா எனக்கு காலேஜ்கு டைம் ஆச்சி, நா கிளம்பனும் லஞ்ச் ரெடியா, சீக்கிரம் கொடுங்க" என கேட்க தன்னை அவள் பதில் சொல்லாமல் உதாசீனப்படுத்தியதோடு, அவளின் பார்வைக்கான பொருள் விளங்காத எரிச்சலும் சேர்ந்துகொள்ள கோபத்துடன் விருட்டென சென்றார் திருவாளர் சண்முகம்.

இந்த ஸ்வேதா என்னத்த சொன்னாளோ அவ அப்பா கிட்ட, அது என்ன அப்பா,பொண்ணு ரெண்டு பேருமே ஏதோ போன போகுதுன்னு அடைக்கலம் கொடுத்து தங்க வச்சி இருக்க மாதிரியே பேசுறாங்க, முதல இதுக்கு ஒரு முடிவு கட்டணும், சாயந்திரம் தெய்வா கிட்ட தெளிவா பேசணும் இதை பத்தி. "எய்யா தில்லை நீ பெத்தது தான் இப்படினா அது பெத்தது அதுக்கும் மேலே இருக்கு, இதுங்க கூட என்ன மல்லுகட்ட விட்டுட்டு நீ அங்க ஜாலியா சிவா கூட இருக்க, உன்னை வந்து கவனிச்சிக்கிறேன்". இதே யோசனையில் காலை உணவை தவிர்த்து கமலாமா கொடுத்த உணவு பையை பெற்றுக்கொண்டு விட்டு அவரிடம் மட்டும் தலையசைத்து விடைப்பெற்று முத்து அண்ணாவுடன் கல்லூரி கிளம்பினாள்.

கல்லூரியில் இறங்கி உள்ளே நுழையும் போதே வலது பக்கம் இருக்கும் பெரிய மரத்தடியில் பொன்னிற மேனியன் தன் மடிக்கணினியுடன் தரிசனம் தர, கிளாஸ்கு போகாம இங்க என்ன வேலை என்ற யோசனையோடு அவனை நெருங்கினாள் அவனின் கார்மேகம்.

"குட் மார்னிங் ராகி, கிளாஸ்கு போகமா இங்க என்ன பண்ற"

"வெரி குட் மார்னிங் ராதா, இன்னைக்கு நமக்கு பஸ்ட் பீரியட் பிரீ, அதோட எனக்கும் கொஞ்சம் வேலை இருந்ததா அதான் இங்கவே உட்காந்துட்டேன்" என அவளை நிமிர்ந்து பார்த்து ஒரு மலர்ந்த புன்னகையுடன் சொல்ல, சுவதினமாக அவன் அருகில் அமர்ந்தவாறே, "உனக்கு எப்படி தெரியும்"

"நேத்து ஹாஸ்டல் போற வழில நம்ப சீனியர பார்த்தேன், பேசிக்கிட்டு இருக்கும் போது பேச்சுவாக்குல அவர் தான் சொன்னாரு அந்த ப்ரொபஸ்சர் லீவ்னு" ராதிகாவிடம் சொல்லியவரே, பொன்னிற மேனியன் தன் பார்வையை சற்று சிரமப்பட்டு அவனின் கார்மேகத்தில் இருந்து மடிக்கணினியை நோக்கி திருப்ப,

ஓஹோ என்றவாறே ராதிகா அவனை தொந்தரவு செய்யாமல் திரும்பி போவோர் வருவோரை பார்த்த வண்ணம் அமர்ந்தாள்.சிறிது நேரத்திற்கு எல்லாம் ராகவின் பச் என்ற சலிப்பனா குரலில் கவனத்தை அவனிடம் திருப்பி,

"இப்போ என்ன ஆச்சு"

"ஆபீஸ்ல எமெர்ஜென்சினு நேத்து நைட் கால் பண்ணி ஒரு பிரோப்ளம் பார்க்க சொன்னாங்க, நானும் நைட்ல இருந்து பார்க்கிறேன், சரி பண்ணவே முடில" என இரவு முழுதும் வேலை பார்த்தும் அதை சரி பண்ண முடியாத இயலாமையோடு நெற்றியை தேய்த்தவாறே சலிப்புடன் சொல்ல,

"எந்த டூல் நீங்க ஒர்க் பண்றது"

"ட்ரைரிகா"

"ஓ என்ன பிரச்சனை இப்போ"

"சர்வர் அப்ல தான் இருக்கு, ஆனா எங்களால தான் சர்வர் ரீச் பண்ண முடில"

"உனக்கு பிரச்சனை இல்லனா சொல்லு, நா என்னனு பார்க்கிறேன்" என கேட்க

"இதுல என்ன இருக்கு ராதா, இந்தா உனக்கு தெரியும்னா பாரு" என்றவாறே தன் மடிகணியை அவளிடம் கொடுத்தான் பொன்னிற மேனியன்.

ட்ரைரிகா என்பது வெளிநாடுகளில் நிலம் தொடர்பான ஒப்பந்தகள், நிலத்தின் உரிமையாளர்கள், அவர்களின் விவரங்கள் அனைத்தும் ஒரே இடத்தில் பராமரிக்க பயன்படும் ஒரு செயலி. அந்த செயலியை வாங்கி வாடிக்கையாளர்கள் தேவைக்கு ஏற்ற வகையில் அதை மாற்றி அவர்களுக்களின் பயன்பாட்டிற்கு எளிதாக மாற்றுவது தான் ராகவின் நிறுவனத்தில் வேலை. நேற்று இரவு உருவான பிரச்சினை இவர்களால் அந்த செயலியை இங்கு இருந்து தொடர்பு கொள்ள முடியவில்லை. அவர்களில் வாடிக்கையாளர்கள் இதை கண்டுபிடிக்கும் முன்னர் இவர்கள் அதை சரி செய்வது அவசியம். அதற்காக தான் ராகவ் முயற்சி செய்தது. இரவு தூக்கத்தை, காலை உணவை தியாகம் செய்தும் அவனால் என்ன தவறு எங்கே தவறு என்று அறிய முடியால் தலை வலி வந்தது தான் மிச்சம், அட போங்கடா….

அவனின் கார்மேகம் மடிகணியில் தன் முழு கவனத்தையும் செலுத்தி அதை ஆராய அவள் கவனம் தன் மேல் இல்லை என்ற நம்பிக்கையில் இவன் அவளை ஆவலாய் ரசிக்க ஆரம்பித்தான்.
சில மணித்துளிகளே ஏதோ கை பேசி சத்தத்தில் கலைந்த பொன்னிற மேனியன் யாருடையது என்ற சுற்றிலும் பார்க்க, சத்தம் வந்தது அவனின் கார்மேகத்தின் பையில் இருந்து, அதுகூட தெரியாமல் ராதிகா வேலையில் மூழ்கி இருக்க இவனே இரண்டு தடவை அழைத்து தான் இவனை நிமிர்ந்து பார்த்தாள். இவன் போன் என்பதாய் சைகை செய்ய ஒரு நிமிடம் மொழி தெரியாத மழலை என முழித்தவள், பிறகு ஒருவாறு அவன் சொன்னதை புரிந்துகொண்டு தன்னோட கை பேசியை எடுத்து பார்க்க, ஏதோ எண்ணில் இருந்து அழைப்பு வர யார் என்ற யோசனையோடு அதை ஏற்றாள்.

"ஹலோ"

…..……………………

"சொல்லுங்க கமலாம்மா"

…..……………………..

"இருங்க பார்க்கிறேன்" உணவு பையை ஆராய

……………………….

"இருக்கு, ஏன் இப்படி பண்றிங்க"

……………………….

"சரி, சரி சாப்பிடுறேன், வச்சிடட்டுமா" என்றவாறே அழைப்பை துண்டித்தால், ராகவ் என்ன எனபதாய் பார்க்க, காலையில் நடந்ததை முழுதும் கூறாமல் தாமதத்தால் தான் உணவு உண்ணாமல் வந்தது, அதனால் கமலாம்மா காலை உணவை கொடுத்து இருப்பதை ஒரு சிரிப்புடன் கூற, ஏற்கனவே உணவகத்தில் அந்த வீட்டைப்பற்றி இவள் பேசியதை கேட்டதால், உண்மையாகவே காலை உணவை தவிர்த்தற்கு காரணம் தாமதாமா அல்லது வேறு ஏதேனும் பிரச்சனையா என இவள் முகத்தை ஆராய, அவனின் கார்கேத்தின் முகத்தில் இருந்து எதையும் அறிய முடியாமல், இனிமே அவளின் உணவு விஷயத்தில் சிறிது கவனம் செலுத்த வேண்டும் என்ற முடிவோடு,

"ஹே, நீ சாப்பிடலையா பஸ்ட் சாப்பிடு அப்புறம் இந்த ஒர்க் பார்க்கலாம்" என சிறு கண்டிப்புடன் கூற, ஏதும் சொல்லாமல் அவனை நிமிர்ந்து பார்த்த ராதிகா மூன்று இட்லியை எடுத்து மூடியில் வைத்து அவனிடம் நீட்டினாள்,

"என்ன"

"நீயும் தானே சாப்பிடல, இந்தா சாப்பிடு"

"நா சாப்பிடலன்னு எப்படி தெரியும்"

"அதான் மூஞ்சில எழுதி ஒட்டி இருக்கே, இந்தா சாப்பிடு" என்றவாறே அவனுக்கும் கொடுத்துவிட்டு , தானும் வேக வேகவேகமாக மீதி இருந்த இரண்டு இட்லியை உண்ண ஆரம்பித்தாள், ராகவ் அமைதியாயாய் உண்ணாமல் இருக்க,

"ஓய் ராகி, என்ன யோசனை சாப்பிடு" மிரட்டலாக அதட்டி கூற

"ஹ்ம்ம்" ஒரு சிரிப்புடன் உண்ண ஆரம்பித்தான். பொதுவாக ராகவின் முகத்தில், கோவம், பசி, அழுகை என அனைத்தும் இவனாக எதிரில் இருப்பவர் அறிய வேண்டும் என்று முடிவு செய்தாள் ஒழிய அவர்களாக அறியமுடியாதபடி உணர்ச்சிகளை கவனமாக கையாள்வதில் வல்லவன் இவன். தாய் அறியாத சூல் இல்லை என்பதாலோ அல்லது தாயின் அருகில் இவன் இவனாக இருப்பதாலோ என்னவோ அவனின் ராஜமாதா மட்டுமே அவனின் முகத்தை பார்த்து அவனை படிப்பார்.அந்த வரிசையில் அவனின் கார்மேகம்.இவளின் அருகில் நான் நானாக இருக்கிறேன் என்பதை மகிழ்ச்சியுடன் உணர்ந்தான் பொன்னிற மேனியன். இவன் இத்தனை சிந்தனைகளுக்கு இடையில் அவள் தந்த இட்லியை கொரிக்க அதற்குள் அவனின் கார்மேகம் தன் உணவை முடித்துவிட்டு இவன் குடிக்க தண்ணீரை எடுத்துவைத்துவிட்டு மீண்டும் வேலையில் மூழ்கி இருந்தாள். ஹாப்பா என்ன இப்படி தீயா வேலை பார்க்குறா என்று வியக்க, அதேநேரம் இவள் கொண்டு வந்ததே ஐந்து இட்லி தான், அதிலும் தனக்கு கொடுத்தது போக மீதி உண்டது எப்படி போதும் என்ன பண்ணலாம், என இவனின் சிந்தனை நீள்வதாய்…..

சில மணி நேரங்களில் தன்னை முழுதாக அந்த வேலையில் தொலைத்து அந்த தவறை கண்டு பிடித்து அதை சரி செய்து சரியாக வேலை செய்வதை உறுதி செய்து கொண்டு திரும்பி ராகவை பார்க்க, அவன் அருகில் இல்லை, எங்க போனான் இவன் என கண்கள் தேட தூரத்தில் கையில் இரண்டு பழசார்களுடன் இவளை நோக்கி வந்து கொண்டு இருந்தான் பொன்னிற மேனியன்.

"சரி அகிடுச்சி, இந்தா செக் பண்ணி பாரு"என்றவாறே மடிகணியை அவனிடம் ஒப்படைக்க அவனோ மடிக்கணினியை அவளிடம் இருந்து பெற்றுக்கொண்டு பழச்சாறை கொண்ட பையை அவளின் கையில் திணித்தான். நிமிர்ந்து அவனை பார்த்ததோடு அமைதியாக ஒன்றை அவனுக்கு எடுத்து கொடுத்துவிட்டு மற்றும் ஒன்றை எடுத்து பருக ஆரம்பித்தாள் அவனின் கார்மேகம்.தான் அருந்தாமல் அவள் விட போவது இல்லை என்றவுடன் ராகவும் பருகிவிட்டு, பின்பு மடிக்கணினியில் எல்லாம் சரியாக இருக்கா என பார்த்துவிட்டு அவனின் மேலதிகாரிக்கு அழைத்து பிரச்சனை சரி ஆனதை கூற ராதிகா அமைதியாய் கடமையே கண்ணாய் தன் கையில் இருந்த பழச்சாறு கோப்பையுடன் ஒன்றி இருந்தாள்.

"இவ்ளோ சீக்கிரம் எப்படி என்ன, எங்க தவறுன்னு கண்டுபிடிச்ச " ஏன் என்றால் தவறை கண்டு பிடிப்பது தான் கடினம், அது சிலந்தி வலை போல பல தொடர்புகள் கொண்ட செயலி, எங்கே தவறு என்று அறிந்தாலே சுலபமாக சரி செய்து விடலாம்.

"நான் ரெண்டு வருஷமா இதை பார்க்கிறேன், சோ எங்க என்ன மாதிரி பிராபளம் வரும்னு தெரிலான தான் அசிங்கம் ராகி"

"ரெண்டு வருஷமா?, எங்க யாருக்காக ஒர்க் பண்ற"

"ஒர்க் எல்லாம் பண்ணல, கிறிஸ் ஓட கம்பனி யு.ஸ் ல இருக்கு, அவங்க தான் சொல்லி கொடுத்தாங்க, அப்போ அப்போ சின்ன சின்ன வேலை கொடுப்பாங்க, அது போக ஏதும் பிராப்ளம்னா நானும் பார்ப்பேன்" என சாதாரணமாக சொல்ல பொன்னிற மேனியன் மனதில் பல எண்ணங்களின் ஊர்வலம்.

பகுதி நேரம் வேலை பார்க்கும் இவனுக்கே சம்பளம் நான்கு லகரத்தில் இருக்க காரணம் அந்த செயலியின் முக்கியத்துவம் அப்படி. இந்தியா அளவிலே மிக சில மென்பொருள் நிறுவனங்கள் மட்டுமே இந்த செயலியை பயன்படுத்துகின்றனர். பொன்னிற மேனியன் இந்த செயலியை பற்றி அறிந்து அதன் முக்கியத்துவம் புரிந்து இணையத்தில் முடித்த வகுப்பே இந்த வேலை கிடைக்க முக்கியகாரணம். இருந்தும் படிப்பதற்கும், அதை நடைமுறையில் பயன்படுத்தும் போது இப்போ நடந்தது மாதிரி சில முறைகள் தடுமாறுவது உண்டு. அவனின் கார்மேகத்தின் ஆழ்ந்த அறிவு அவனை ஆச்சர்யப்படுத்தியது, அதும் இலவசமாக செய்வது போல் கூறியது உறுத்தியது. இன்றைக்கு நிலைக்கு இவளின் அறிவுக்கு வேலை என்று பார்த்தால் கண்டிப்பாக ஐந்து லகரத்தில் சம்பளம் சுலபமாக கிடைக்கும் அப்போ அந்த கிறிஸ் இவளை ஏமாற்றுகிறான அல்லது வேறு எதும் காரணமா, ஏதும் தெரியாமல் கார்மேகத்திடம் கேட்டு அவளின் கோபத்தை சம்பாதிக்க விருப்பம் இல்லாமல் என்ன செய்யலாம் என யோசிச்சவாறே

"கிறிஸ்……" என பொன்னிற மேனியன் தன் வாயில் முனுமுனுக்க, அதை காதில் வாங்காமல் அவனின் கார்மேகம் தொடர்ந்து,

"ஆமா, நீ ஒர்க் பண்றியா, எந்த கம்பனி, படிச்சிகிட்டே எப்படி" என கேள்விகளை அடுக்க, பொன்னிற மேனியனும் தன் சிந்தனைகளை ஒதுக்கிவிட்டு, தனக்கு வேலை கிடைத்த விதத்தை உரைக்க, அனைத்தையும் உள்வாங்கி கொண்ட அவனின் கார்மேகம்,

"நா ஒரு விஷயம் யோசிச்சிக்கிட்டு இருக்கேன், அதை நடைமுறை படுத்த முடியும்னா நீயும், கிறிஸ் பேசுற மாதிரி இருக்கும், ஒரு ப்ரொபெர் மீட்டிங் அரேஞ் பண்ணனும், எனக்கு உன்னோட கம்பனி டீடைல்ஸ் வாட்ஸ்அப் பண்ணு சரியா ராகி, வா வா நேரம் ஆச்சி கிளாஸ் போலாம்" என வகுப்பை நோக்கி நடக்க,

இங்கு பொன்னிற மேனியன் நிலை தான் கவலைக்கிடம், அந்த பேர சொல்லும் போதே என்ன ஒரு பாச பாவம் அவனின் கார்மேகத்தின் குரலில், முதல் நாள் உணவகத்தில் கிறிஸ் பற்றி சொன்னது எல்லாம் மனக்கண்ணில் ஓட இவன் யாருன்னு தெரியலையே "ஏன்டா ராகவா இந்த கிறிஸ் உன்னோட கதையில் வில்லனா இல்ல வெறும் கேரக்டர் ஆர்ட்டிஸ்ட்னு தெரியலையே,
ஒண்ணுமே புரியலே உலகத்திலே
என்னன்னமோ நடக்குது மர்மமா இருக்குது"
என மனம் சோக கீதம் வாசிக்க
மனச்சாட்சி வேற நேரம் காலம் தெரியாமல் இங்க உலகம் அப்படின்றது உங்க கார்மேகமா பாஸ் என டௌட் கேட்க அதை தலையில் தட்டி அமைதியாக்கி,கண்டுபிடிக்கிறேன் அவன் யாருன்னு கண்டுபிடிக்கிறேன் என தனக்கு தானே சூளுரைத்து கொண்டு அவனின் கார்மேகத்தை தொடர்ந்தான்.

இவன் ராதையின் கண்ணன்………..

பி.கு
மக்களே மீண்டும் திங்கள் அன்று கார்மேகமும், பொன்னிற மேனியனும் தங்களை சந்திக்க வருவார்கள்..........
Nice ep
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top