ராதையின் கண்ணன் இவன்-28

E.Ruthra

Well-Known Member
#1
செய்த தவறுக்கு, இன்னொருவர் வலிக்க வலிக்க தரும் தண்டனையை காட்டிலும்,தன் தவறை தானே முழுதாக உணர்ந்து, அதற்கு பொறுப்பேற்று, அதனால் விளைந்த பாதகங்களை நித்தமும் நினைத்து, நினைத்து துன்புருவதை காட்டிலும் தரமான தண்டனை என்னவாக இருக்க முடியும். தெய்வா, சண்முகம் தம்பதியரும் அந்த நிலையில் தான், வெவ்வேறு சூழ்நிலைகளில் பொட்டில் அறைந்த மாதிரி தங்கள் தவறை உணர்ந்து, அதை நினைத்து நித்தமும் மறுகும் நிலை.பெற்ற பெண்ணே அவளின் திருமணத்தை பற்றி சொல்லும் அளவுக்கு கூட ஒரு ஆளாக இவர்களை மதிக்கவில்லை, அதை காட்டிலும் தாங்கள் அவ்வாறு நடந்துகொள்ள வில்லை என்பது புரிய அது இன்னும் தான் வலியை அதிகமாக்கியதே ஒழிய குறைக்கவில்லை, பெற்றோர் இருந்தும் அவர்களை தன் திருமணத்தில் பெற்றோராக நிறுத்த அவர்கள் மகள் பிரியப்படவில்லை, தெரிந்தவர்கள் என்ற முறையில் வரவேற்புக்கு கூட அழைப்பு இல்லை, வரலாறு திரும்ப தாங்கள் செய்யும் போது புரியாத வலி, இப்போது அனுபவிக்கும் போது பலமடங்காக தெரிந்தது. அப்பட்டமான புறகணிப்பை தவிர ஆக சிறந்த தண்டனை என்னவாக இருக்க முடியும்.

சண்முகத்தின் கடைகளை அவரின் கண்ணால் காணாத சத்ருவே வாங்க ஏற்பாடு ஆகி இருக்க, இவரிடம் சொத்து சம்பந்தமாக கை எழுத்து பெற கூட அவரின் எதிரி இவருக்கு தரிசனம் தரவில்லை. அவனின் சத்ருவின் காரியதரிசியே வந்து பத்திரங்களில் கை எழுத்து வாங்கிக்கொண்டு, பணத்தை காசோலையாகவும் கூடவே ஒரு கடிதத்தையும் அளித்து விட்டு செல்ல, அந்த கடிதத்தை பிரிக்க, அதன் சாராம்சம் இது தான், இவர் தொடர்ந்து இங்கு வேலை செய்ய விருப்பப்பட்டால்,இப்போது போலவே எல்லா கடைகளையும் மேற்பார்வையிடும் பணி அளிக்க தயாராக இருப்பதாகவும், அப்படி சம்மதிக்கும் பட்சத்தில் சம்பளமாக ஒரு கணிசமான தொகையையும் குறிப்பிட்டு இருந்தனர்.

சண்முகமோ தீவிர யோசனையில் இருந்தார், பெண்ணுக்கு கல்யாணம் பேசி இருக்கும் இந்த நேரத்தில் கடைகளை விற்றது மாப்பிளை வீட்டில் தெரிந்தால் அது ஏற்படுத்த போகும் பின் விளைவுகளை எண்ணி, தன் பெண்ணோட நிலைமை புகுந்த வீட்டில் சீராகும் வரையேனும் இந்த வேலையை ஏற்க முடிவு செய்தார். இத்தனை நாளாக முதலாளியாக இருந்த கடையில், சம்பளத்துக்கு வேலை செய்வது எவ்ளோ பெரிய கொடுமை, எனினும் குறைந்த பட்சம் ஒரு பெண்ணுக்காவது நல்ல தந்தையாக இருக்க, தன்னால் முடிந்த முயற்சி என மனதை தேற்றிக் கொண்டார் சண்முகம்.கடைகளை வாங்கிய, அவரின் சத்ரு கடைகளின் பெயர் என ஆரம்பித்து உள் அமைப்புகள் வரை எல்லாவற்றையும் மாற்றி புதிய மெருகுடன் திறக்க எல்லா ஏற்பாடுகளையும் செய்ய, கைகட்டி வேடிக்கை பார்க்கும் நிலைமை தான் சண்முகத்துக்கு.

ஒரு வழியாக பொன்னிற மேனியனும், கார்மேகமும் அவர்களின் படிப்பை முடிக்க, பரிட்சை முடிந்த அடுத்த நாளே ஊருக்கு கிளம்பிவிட்டாள் பொன்னிற மேனியனின் கார்மேகம் அவளின் கூட்டை நாடி. இன்னும் ஒரு வாரத்தில் கல்யாணம் நடக்க இருக்க, சாதாரணமாகவே அவ்ளோ வாங்கி வருபவன், இப்போது கல்யாணம் எனும் போது சும்மா இருப்பானா, கண்ணில் பட்டது எல்லாம் அள்ளிக்கொண்டு கிறிஸ் தரை இறங்கி இருக்க, தினமும் நலங்கு என ஆரம்பித்து எல்லாம் முறைப்படி சிவகாமியால் நடத்தப்பட்டது, பெற்றோர் இல்லாமலே, அந்த குறையும் தெரியாமலே.

பொன்னிற மேனியனோ எல்லா ஏற்பாடுகளை மேற்பார்வையிடுவது, நண்பர்களுக்கான அழைப்பு, அதுபோக அவசரமாக பார்க்கப்பட வேண்டிய அலுவலக வேலைகள், இடையில் கிடைக்கும் கொஞ்ச நேரமும் அவனின் கார்மேகத்துடன் அலைபேசி உரையாடல் என காலில் சக்கரம் இல்லாதது ஒன்று தான் குறை.

யாருக்காகவும் காத்திருக்காமல், கல்யாண நாளும் விடிய, கடலூரை தாண்டி ஊரை விட்டு தள்ளி, சிறிய காட்டின் நடுவில், ஒரு ஒற்றையடி பாதையின் முடிவில், ஏரியின் அருகில் அமைந்து இருந்த குலதெய்வ கோவிலுக்கு நல்ல நேரம் பார்த்து மணமகளான ராதிகாவுடன், தில்லை, சிவகாமி, கிறிஸ் கிளம்ப, இவர்களுக்கு முன்னமே மாப்பிள்ளை வீட்டார் கோவிலில் இருந்தனர். திறந்தவெளியில் அய்யனார் மிக கம்பீரமாக, உயரமாக பெரிய அறிவாளுடன் குதிரையில் அமர்ந்து மழை, வெயில் என்று பாராமல் மக்களுக்கு அருள்பாளிக்க, இயற்கையோடு இணைந்து கண்ணை உறுத்தாத வகையில் உண்மையான பூக்களால் கல்யாண மேடை அமைக்கப்பட்டு இருக்க, ஐயர் மந்திரம் சொல்ல, நாதஸ்வர ஓசை எட்டுத்திக்கும் எதிரொலிக்க, உயர்தர காமெராக்கள் கொண்டு முக்கிய தருணங்கள் எதையும் தவரவிட கூடாது என்ற முனைப்புடன் மூவர் இங்கும், அங்கும் நடந்த வண்ணம் இருக்க, திறந்தவெளி என்பதால் மணமக்கள் உடைமாற்ற என கோவிலில் இருந்து சற்று தள்ளி, மன்னர்களின் பாசறை மாதிரி சகல வசதிகளுடன் இரண்டு அறைகள் தயார் செய்யப்பட்டு இருக்க, அந்த இடம் முழுவதுமே பாதுகாப்புக்கென இருபது பேர் நிற்க வைக்கப்பட்டு இருந்தனர்.

மணமக்கள் தனித்தனியே அழைக்கப்பட்டு, அவர்களுக்கான உடைகள் ஐயரால் அளிக்கப்பட, இருவரும் உடை மாற்ற தங்கள் பாசறைகளை நாடி சென்றனர். முதலில் பட்டு வேட்டி சட்டையில் கம்பீரமாக உற்சவர் சிலை என பொன்னிற மேனியன் மேடையில் மந்திரம் சொல்லியபடி தன் கார்மேகத்தை எதிர்பார்த்து காத்திருக்க, அவனின் எதிர்பார்ப்பை பூர்த்தியாக்கவென அவனின் கார்மேகம் தக்காளி நிற பட்டு உடுத்தி, நீண்ட கூந்தலை முழுக்க முழுக்க பூக்கள் அலங்கரிக்க, உதடுகளில் புன்னகை பூத்து இருக்க, மிதமான ஒப்பனையில், நெத்தி சூட்டியில் இருந்து கொலுசு வரை பொன்னிற மேனியனின் குடும்ப நகைகளை அணிந்து மூலவர் சிலை என கண்கள் முழுக்க மன்னவனுக்கான காதலை தேக்கி நடந்து அவனை நோக்கி வர இருவருமே சுற்றம் மறந்து தங்களுக்கான உலகில் விரும்பியே தொலைந்தனர்.

மணமக்கள் இருவரும் வர, அதற்கு பிறகான சடங்குகள் துரித கதியில் நடைபெற, உற்ற சொந்தங்கள் மனமார வாழ்த்த, மங்கல இசை இசைக்க, முப்பத்து முக்கோடி தேவர்கள் ஆசிர்வாதத்துடன், அந்த வனம், ஏரி, அக்னி, காற்று, ஆகாயம் என பஞ்சபூதம் சாட்சியாக, இம்மையிலும், மறுமையிலும் உன்னை பிரியேன் என மானசீகமாக வாக்கு அளித்து,மங்கலநான் அணிவித்து, தன் கார்மேகத்தை தன் சரி பாதியாக வரித்துக்கொண்டான் பொன்னிற மேனியன்.

மணமக்கள் தில்லை, சிவகாமியிடம்ஆசிர்வாதம் வாங்க ஆனந்தத்தில் பேச்சே வரவில்லை பெரியவர்களுக்கு, ராஜமாதாவோ நெற்றியில் இருவருக்கும் ஒரு அழுத்தமான முத்தம் வைத்து தன் மகிழ்ச்சியை காட்ட, கிறிஸ் பொன்னிற மேனியனை இறுக்கி அணைத்து தன் சந்தோஷத்தை பகிர்ந்துகொள்ள, பொன்னிற மேனியனின் சித்தி, சித்தப்பாவிடமும் ஆசி பெற்றனர் இருவரும்.

பொன்னிற மேனியனோ அக்னி வலம் வரும் போது பிடித்த, தன் கார்மேகத்தின் கைகளை விடாமல் ஒரு பரவச நிலையில் இருக்க, நெஞ்சு முட்ட முட்ட மகழ்ச்சியில் திளைக்க அவனின் கார்மேகம் அவனின் அருகில், இதை விட வேற என்ன வேண்டும். பொன்னிற மேனியனின் சித்தியும், சித்தப்பாவும் ராதிகாவிடம் அளவுக்கு அதிகமாக பாசமாக பேச, ஏனோ அதில் ஒரு பாசாங்கு மட்டுமே தெரிய, அவர்களிடம் இவளால் ஒட்டவே முடியவில்லை, அதேநேரம் அண்ணி, அண்ணி என பாசமாக, மென்மையாக உள்ளார்ந்த பாசத்தோடு பேசும் அவர்களின் பையனிடம் இயல்பாகவே ஒரு பாசம் வர, அவனிடம் நன்றாகவே உரையாடினால் பொன்னிற மேனியனின் கார்மேகம்.

திருமணம் முடிந்ததும், பெண் மாப்பிள்ளை வீட்டிற்கு சென்று விளக்கேற்றுவது தான் முறை என்றாலும், இதற்காக சென்னை செல்ல முடியாது என்பதால், குலதெய்வ கோவிலிலே ராதிகா விளக்கேற்ற, மணமக்கள் தங்கள் வாழ்க்கை சிறக்க குலதெய்வத்திடம் மனம் உருகி வேண்டிய பிறகு, எல்லாருக்கும் கொடுக்க வேண்டியதை எல்லாம் கொடுத்து அவர்களை அனுப்பும் பொறுப்பை பொன்னிற மேனியனின் தம்பி ஏற்று கொள்ள, பொன்னிற மேனியனின் சித்தி குடும்பம் மட்டும் சென்னை கிளம்ப, மற்றவர்கள் அனைவரும் புதுவையை நோக்கி கிளப்பினர்.

புதுவை வீட்டை அடையவும் மணமக்கள் ஆரத்தி சுற்றி வரவேற்கப்பட, ராஜமாதவே பாலும், பழமும் அளித்து இருவரையும் சிறிது ஓய்வு எடுக்க அனுப்பிவைத்தார். அன்று இரவே சடங்குக்கு நாள் குறிக்கப்பட்டு இருக்க, பெரியவர்கள் அதற்கான ஏற்பாடுகளில் இறங்க, சிறியவர்கள் உறங்கி எழுந்ததும், குளிக்க சொல்லி, புது உடை கொடுத்து, உணவு உண்ண வைத்த அவர்களுக்கான தனிமையை தந்தனர். காதலனாக உருகி, உருகி காதலித்தவன், கணவனாக உரிமையாக காதலை சொல்லி தர, இனிமையான இல்லறம் அங்கு நல்லறமாக.

ஒரு நாள் அங்கு தங்கி மூத்த தம்பதிகள் உடன் காலித் மணமக்கள், சென்னையில் நடைபெறவுள்ள வரவேற்பிற்காக முன்னரே அங்கு சென்றனர் கிறிஸ்ன் துணையுடன். பொன்னிற மேனியன் தனியாக தங்களுக்காக சிறப்பாக வடிவமைத்த உடைகளை அணிந்து, கடற்கரையோரம் அமைக்க பட்ட மேடையில் கடல் கன்னி என கார்மேகமும், அருகில் கடல் வேந்தன் என அவளின் பொன்னிற மேனியனும் நிற்க கண் கொள்ளா காட்சி தான். வீட்டின் பிரம்பாண்டத்தை வைத்து விழாவின் ஏற்பாடு இப்படி தான் இருக்கும் என ராதிகா ஓர் அளவுக்கு எதிர்பார்த்து தான் இருந்தால், ஆனால் அவனின் தொழிலில் அவனின் செல்வாக்கை பார்த்து அவனின் கார்மேகம் மலைத்து தான் விட்டால். ஆர்.கேவின் தொழில்முறையில் அவனை பற்றி கேள்விப்பட்ட போதும் இப்போது தான் அவனை முதல்முறை பார்க்க போவதால், அவனின் முதல் அழைப்பை ஏற்று, அவனின் நட்பை பெற இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ள எண்ணி தொழில்முறையில் எல்லாரும் வந்து இருக்க, அவர்களின் கல்லூரி தோழர்களுக்கும் அப்போது தான் பொன்னிற மேனியனின் குடும்ப பின்னணியும், பண பலமும் தெரிய, அவனின் கார்மேகத்தை பார்த்து பலர் பொறாமை பட, பொன்னிற மேனியனை இழந்துவிட்டதை நினைத்து சிலர் பெருமூச்சு விட கலவையாய் அவர்களின் வரவேற்பு.

இங்கு தெய்வா தான் நித்தமும் கண்ணீரிலே கரைந்தார். அதுவும் கல்யாண நாள் எல்லாம் அவருக்கு இருப்பு கொள்ளவே இல்லை, பெற்ற பெண்ணின் கல்யாண கோலத்தை பார்க்க கொடுத்துவைக்காத தன் நிலையை எண்ணி எண்ணி மறுகினார்.அவள் கூப்பிடவில்லை என்றாலும் அங்கு செல்வதில் அவருக்கு தடை ஏதும் இல்லை தான், ஆனால் நல்ல நாள் அதுவுமாக அவளை கோவப்படுத்தவும் விரும்பால், அவளுக்காக இதையேனும் செய்ய விரும்பி அவள் சொன்ன சொல்லை மதித்து அவளின் கல்யாணத்திற்கு செல்லாமல், அன்று முழுக்க முழுக்க பூஜை அறையிலே தான் கழித்தார், இனியாவது தங்கள் மகள் மகிழ்ச்சியாக அமைய கடவுளை தொழுதபடியே. கொட்டிய பாலை நினைத்து வருந்தி என்ன செய்ய முடியும், எல்லாவற்றையும் கொட்டி கவிழ்த்தது அவர் தானே, இப்போது வருந்தி என்ன பயன். இந்த கொஞ்ச நாளிலே உடல் இளைத்து, ஜீவன் எல்லாம் வற்றி ஆளே பாதியாகி விட்டார் தெய்வா, ஒரு பொறுப்பில் மிக மோசமாக தோற்று இருக்க, இன்னொரு பெண்ணையாவது நல்ல முறையில் திருமணம் செய்து வைக்க வேண்டிய பொறுப்பை உணர்ந்து, கடமைக்காக எல்லாவற்றையும் செய்தார் தெய்வா. சண்முகமோ கடைகள் எல்லாமே"ராதே கிருஷ்ணா" என்ற புதிய பெயருடன் திறக்கப்பட்டு இருக்க, அந்த வேலைகள், அதோடு பெண்ணின் கல்யாண வேலைகள் என அலைந்து கொண்டு இருந்தார். ஸ்வேதாவோ கல்யாணத்திற்கு தேவையான உடைகள், நகைகள், அழகு நிலையம் என அலைந்து கொண்டு இருக்க, வீட்டில் பெற்றோரின் நிலையை கவனிக்கவே இல்லை. அவளுக்கு ராகவ், ராதிகா கல்யாணம் தெரிந்தாலும் பெரிதாக எடுத்துக்கொள்ள வில்லை, அவளை பொறுத்தவரை அவள் ராதிகாவை வெற்றி கொண்டுவிட்டால் என்பதால் தன் கல்யாண வேலைகளில் முழுமூச்சாக இருந்தால். இடையில் ஒரு தடவையேனும் தன் நண்பர்களிடம் பேசி இருந்தாலும், ராகவ் பற்றிய உண்மைகள் தெரிந்து இருக்கும், விதி சதி செய்ய கல்யாண நாள் வரை அவளுக்கு தெரியாமலே போனது.

முதல் நாள் நிட்சயம் முடிந்து இருக்க, மறுநாள் கல்யாணம், ஸ்வேதா ஏற்கனவே அழகி, இன்று அழகுநிலைய பெண்களின் கை வண்ணத்தில் இன்னும் பேரழகாக ஜொலிக்க, ஐயர் மந்திரம் சொல்ல சொல்ல, மணமக்கள் இருவரும் அதை திருப்பி சொல்லியபடி, கண்களால் கதை பேசிக்கொண்டு இருக்க, தில்லை,சிவகாமி முதல் வரிசையில் அமர்ந்து தங்கள் பேத்தி கல்யாணத்தை கண்டு களிக்க, சண்முகம், தெய்வா இன்று தான் கொஞ்சம் உயிர்ப்போடு வந்தவர்களை உபசரித்து கொண்டு,பரபரப்பாக இருந்தனர். தாலி கட்டும் நேரம் நெருங்க, திடிரென்று வாசல் பரபரப்பாக மாப்பிள்ளை பெற்றோர் வாசலுக்கு விரைய, என்னவோ ஏதோவென்று பெண்ணை பெற்றவரும் அவர்களுடன் விரைய, அந்த கருப்புநிற ஜாகுவார் பளபளவென கண்ணை பறிக்கும் விதமாக வந்து நிற்க, அதிலிருந்து பொன்னிற மேனியனும், அவனின் கார்மேகமும் இறங்க, மாப்பிள்ளை பெற்றோர் குழைந்து வரவேற்க அவனோ ஒரு மிடுக்குடன் அதை ஆமோதித்து, சண்முகத்தை ஒரு பார்வை பார்க்க, மாப்பிள்ளையின் பெற்றோர் அவனின் பார்வையை உணர்ந்து, சண்முகத்திடம்,

"சம்பந்தி இது ராகவ் கிருஷ்ணா, கிருஷ்ணா குரூப் ஆப் கம்பனிஸ் சேர்மேன், என்னோட அக்கா பையன்" என பொன்னிற மேனியனின் சித்தி பெருமையாக அறிமுகப்படுத்தி வைக்க, சண்முகம் பிரம்பிப்பு விலகாமல் " வாங்க" என வரவேற்க பதிலுக்கு ஒரு தலையசப்பை பதிலாக கொடுத்து, காதல் கணவனின் அன்பில் முக்குளித்து, பூரித்து முன்னைவிட மெருகுடன் இருந்த கார்மேகம் அவனின் அருகில் வந்து இருக்க அவளை தன் கைவளைவிலே வைத்தபடியே மண்டபத்தில் நுழைய, எல்லார் பார்வையும் இவர்களிடம் தான், சிறிதும் அலட்டிக்கொள்ளாமல் வந்து தாத்தா, பாட்டியிடம் நலம் விசாரித்துவிட்டு, தன் அம்மாவின் அருகில் சென்று அமர்ந்தனர் தம்பதி சகிதம்.

முகூர்த்த நேரம் நெருங்கவும், மேடையில் இருந்து இறங்கி வந்த ராகவின் சித்தி, தன் மருமகளிடம் வெகு சுவாரசியமாக உரையாடி கொண்டு இருந்தா ராஜமாதவிடம் வந்து,

"அக்கா வாங்க, வந்து உங்க கையால தாலி எடுத்து கொடுத்து ஆசிர்வாதம் பண்ணுங்க, அப்போ தான் பசங்க நல்லா இருப்பாங்க"

"நான் எதுக்கு சுபா, பெரியவங்க எல்லாம் இருக்காங்க, அவங்க யாரையாவது கூப்பிடு" என்றவாறே தில்லை, சிவகாமி தம்பதியரை பார்க்க, அவரின் தங்கையோ,

"அவங்க அவங்க வீட்டுக்கு பெரியவங்க, நீங்க தானே நம்ப வீட்டில் பெரியவங்க, நீங்க வாங்க அக்கா" என விடாமல் அழைக்க,

"நல்ல காரியம் நான் பண்றது சரியா வராது, இனிமே எல்லாம் என்னோட மகன்,மருமக தான்,பேசாம நீ அவங்களை கூட்டிகிட்டு போ"என அசால்ட்டாக சொல்ல, ராதிகா தான் பதறி போய்,

"ராஜிமா நாங்க வயசுல சின்னவங்க, நாங்க எப்படி தாலி எடுத்து கொடுக்க முடியும்,அது எல்லாம் வேண்டாம் ராஜிமா, நீயாவது சொல்லு ராகி" என தன் கணவனை துணைக்கு அழைக்க, அவனோ

"நேரம் ஆகுது வா ராதா, போய் தாலி எடுத்து கொடுத்திட்டு வந்துடாலாம்" என மிட்டாய் கொடுக்க அழைப்பதை போல விளையாட்டாய், விடப்பிடியாய் அழைக்க, அவளோ பாவமாக அவளின் ராஜிமாவை பார்த்து வைக்க, அவளின் அருகில் வந்தவர், அவளுக்கு மட்டும் கேட்கும் விதமாக "இனிமே எல்லாம் இப்படி தான்" என நாயகன் பட ஸ்டைலில் சொல்ல, பக்கென ராதிகா சிரிக்க, அந்த வாய்ப்பை பயன்படுத்தி அவளின் ராகி அவளை மேடைக்கு அழைத்து சென்றுவிட்டான், ஐயரும் நல்ல நேரம் போக போவதாக அறிவிக்க ,அதற்குமேல் யோசிக்க நேரம் இல்லாமல் இருவரும் சேர்ந்து மாங்கல்யம் எடுத்துக்கொடுக்க, சஞ்சீவ் கிருஷ்ணா அதை ஸ்வேதாவின் கழுத்தில் அணிவித்து தன் மனைவியாக்கி கொண்டான்.

இவன் ராதையின் கண்ணன்……………………….

பி.கு:
மக்களே இன்னும் கொஞ்ச நேரத்தில் இறுதி அத்தியாயத்துடன்.....................
 
#5
ராதிகா ராகவ் கிருஷ்ணா கல்யாணம் நல்லபடியா நடந்துருச்சு
சும்மாவே ராதிகாவுக்கு கிறிஸ் அவ்வளவு வாங்குவான்
இப்போ அவளோட கல்யாணத்துக்கு கேட்கணுமா?

ஹா ஹா ஹா
ராதிகாவின் கல்யாணத்துக்கும் ரிசப்ஷனுக்கும் பெற்றோர் சண்முகம் தெய்வானைக்கு அழைப்பில்லையா?
இவங்களுக்கு நல்லா நல்லா வேணும்

சொந்தமாக இருந்த பத்து கடைகளும்
கையை விட்டுப் போய் சண்முகம் மாமாவுக்கு சம்பளத்துக்கு வேலை பார்க்கும் நிலைமையா?
ஹா ஹா ஹா
மாமனாரை பொன்னிற மேனியன் நல்லா வைச்சு செஞ்சிட்டான்

ஹோ ஜாக்குவார் காரா?
ஆர் கே கல்யாணம் செஞ்சது ராதிகாவைத்தான்னு இப்போத்தான்
சம்மு மாமாவுக்கு தெரியுதா?
ஹா ஹா ஹா
இது கூட நல்லாத்தானிருக்கு

சஞ்சீவ்வின் அம்மா ஒரு கணக்கு போட்டு ராஜமாதாவை தாலி எடுத்துக் கொடுக்க சொன்னால் மகன் மருமகளை அவங்க
கை காட்டுறாங்க
ஹா ஹா ஹா
இதுவும் சூப்பராத்தான் இருக்கு
ராதிகாவை ஜெயித்ததாக நினைக்கும் ஸ்வேதாவுக்கு நல்ல செருப்படி
ஆணவம் பிடித்த இவளுக்கு நல்லா
வேணும்
 
Last edited:

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Sponsored

Advertisement