ராதையின் கண்ணன் இவன்-26

Advertisement

E.Ruthra

Well-Known Member
மறுநாள் சண்முகம், தெய்வா ஸ்வேதாக்காக வரவேற்பறையில் காத்திருக்க, ராதிகா உணவு மேசையில் உணவு உண்டு கொண்டு இருக்க, ஸ்வேதா கிழே இறங்கி வரவும்,

"வா பாப்பா, உன் கிட்ட கொஞ்சம் பேசணும்டா" என சண்முகம் சொல்ல, ஸ்வேதாவும்

"சொல்லுங்கப்பா" என்றவாறே தன் தந்தையின் அருகில் வர, அங்கு தாயும் இருக்கவே முக்கியமான விசயமோ என்ற யோசனையோடு தன் தந்தையின் அருகில் அமர, அங்கு உணவு மேசையில் இவர்கள் பேசுவது காதில் விழுந்ததாலும், கருமமே கண்ணாக உணவில் மட்டுமே கவனமாக ராதிகா இருக்க,

"உனக்கு ஒரு சம்பந்தம் வந்து இருக்குடா" என சொல்ல, அவளும் யோசனையோடு,

"யாரு அப்பா" என கேட்க,

"கிருஷ்ணா குரூப்ஸ் குடும்பம்ல இருந்து வரன் வந்து இருக்குமா" என சொல்லி, தன் கை பேசியில் இருந்த புகைப்படத்தை காட்டவும், வாங்கி பார்த்த ஸ்வேதாவின் முகம் வெற்றி களிப்பில் பிரகாசமாக, அதை கவனமாக தன் பெற்றோரிடம் இருந்து மறைத்தவாறே,

"எனக்கு பிடிச்சி இருக்குப்பா, சரின்னு சொல்லிடுங்க" எனவும் பெரியவர்கள் இருவரும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்க்க, சண்முகமோ

"என்ன பாப்பா எதுமே கேட்காம சரின்னு சொல்லிட்ட"

"அப்பா எனக்கு ஏற்கனவே சஞ்சீவ் அஹ தெரியும், எங்க காலேஜ் தான், என்கிட்ட லவ் பண்றேன்னு சொன்னாங்க, நான் தான் வீட்டுல பேச சொன்னேன், எனக்கு ஓக்கே அப்பா, உங்களுக்கும் ஒக்கே வா இருந்தா சம்மதம் சொல்லிடுங்க" என நல்ல பிள்ளை போல சொல்லிவிட்டு, ராதிகாவை நோக்கி, "உன்கிட்ட எப்பவுமே நான் தோற்க மாட்டேன், உன்னை விட நான் எப்பவுமே ஒரு படி மேல தான் இருப்பேன்" என மனதில் நினைத்தபடி ஒரு வன்மான புன்னகையை அவளை நோக்கி சிந்தியபடி வெளியே சென்றாள்.

பெற்றோர் பூரித்து தான் போய் விட்டனர், இந்த காலத்தில் இப்படி ஒரு பிள்ளையா என, அந்த பையனுக்கு இவள் அழகின் மீது இருந்த வெறும் ஈர்ப்பை, முனைப்புடன் திட்டமிட்டு தன் செயல்களால் காதலாக மாற்றி, இன்று இவள் மீது பித்தாக்கி, கல்லூரி முடிந்ததும் மாப்பிள்ளை பார்த்து விடுவார்கள் என அவனை மறைமுகமாக அவசரப்படுத்தி, இன்று பெண் கேட்கும் வரைக்கும் கொண்டு வந்த தங்கள் சீமந்த புத்திரி சாகசம் எல்லாம் பாவம் அவர்களுக்கு தெரிந்திருக்கவில்லை.

ஸ்வேதா சம்மதம் சொன்னதும் சண்முகம் கால தாமதம் செய்யாமல், உடனே மாப்பிள்ளை வீட்டாருக்கு கைபேசியில் அழைத்தவாறே பேச ஏதுவாக தனியே செல்ல, தெய்வாவோ தில்லைக்கு சொல்ல தன் கைபேசியை எடுத்தார்,

"அப்பா எப்படி இருக்கீங்க, அம்மா எப்படி இருக்காங்க"என மகிழ்ச்சியில் முக்குளித்த குரலில் பேச,

"நாங்க நல்லா இருக்கோம் தெய்வா, சொல்லு என்ன காலையிலே போன் பண்ணி இருக்க" என தன் கம்பீர குரலில் தில்லை பேச,

"ஒன்னும் இல்ல அப்பா, உங்க பேத்தி ஸ்வேதாக்கு ஒரு பெரிய இடத்தில் இருந்து வரன் வந்து இருக்கு" என தெய்வா சொல்ல, தில்லைக்கோ வார்த்தைகளில் அடங்கா கோவம், மூத்தவள் இருக்கும் போது இளையவளுக்கு எப்படி மாப்பிளை பார்க்க முடியும், அது தானாகவே வந்ததாகவே இருந்தாலும், ராதிகா காதல் விஷயம் அவர்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பு இல்லை எனும் போது, தன் இரண்டாவது மகளுக்கு பெரிய இடத்து மாப்பிள்ளை என அவர் மகிழ, ஆக இப்போதும் அவர்களுக்கு ராதிகாவை பற்றி எந்த அக்கறையும் இல்லை என புரியவும், இன்னும் இன்னும் கோவம் அதிகமாக, ஒரே வார்த்தையில்,

"சந்தோஷம் மா" என அந்த "பெரிய இடத்தை" பற்றி ஏதுமே விசாரிக்கமல் ஒரே வார்த்தையில் தில்லை முடிக்க, தெய்வாக்கு தான் சப்பென ஆகவிட்டது, நேற்று இரவு தன் கணவன் பேசியது அந்நேரம் நினைவுக்கு வர,

"அப்பா கேட்கணும்னு நினைச்சேன், நம்ப ராதிகாவுக்கு வரன் ஏதும் பார்த்து வச்சி இருக்கீங்களா" என கேட்க, தில்லைக்கு கோவத்தை கட்டுப்படுத்துவதே பெரும் பாடாக இருந்தது, இப்பவும் நாங்க பார்க்கட்டுமா என கேட்காமல், ஏதோ மூணாவது மனிதரை போல கேட்கவும்,

"என் பேத்தியை பற்றிய கவலை உங்களுக்கு வேண்டாம், என் தாயிக்கு எப்போ என்ன பண்ணனும்னு எனக்கு தெரியும், எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு, நான் அப்புறமா பேசுறேன்" என தில்லை அழைப்பை துண்டிக்க, தெய்வாவோ இப்போ எதுக்கு இவ்ளோ கோவம் என தன் தவறு புரியாமல் யோசித்தவாறே இருக்க, சண்முகம் மகிழ்ச்சியோடு வந்து,

"தெய்வா, மாப்பிள்ளை வீட்டுல எல்லாருக்கும் ரொம்ப சந்தோஷம், வர சன்டே வராங்கலாம் பொண்ணு பார்க்க" என, இருவரும் சேர்ந்து வரும் வாரம் அவர்கள் வருவதற்காக என்ன, என்ன ஏற்பாடுகள் செய்ய வேண்டும் என பேசி முடிவெடுக்க ஆரம்பித்தனர். ராதிகாவோ இங்கு நடந்த எதிலும் தலையிடாமலும், எதாலும் பாதிக்கபடாமல் தன் உணவை முடித்து தன் அறைக்கு சென்று விட்டாள்.

எப்பவுமே அதிகாலை ஊருக்கு செல்வது தான் ராதிகாவின் வழக்கம், அதேபோல அந்த வாரம் சனிக்கிழமை புதுவைக்கு செல்ல தயாராகி கொண்டு இருக்க, அவளின் கைப்பேசி இசைத்து அவளின் கவனத்தை தன் பக்கம் திருப்ப, இந்த நேரத்தில் யாராக இருக்கும் என்ற யோசனையுடனே கைபேசியை எடுக்க, அழைத்தவரை பார்த்தவுடன் சொல்லாமல் கொள்ளாமல் ஒரு அழகான புன்னகை முகத்தில் ஒட்டி கொள்ள,

"சொல்லு ராகி"

"என்ன ஊருக்கு கிளப்பியாச்சா"

"ரெடி ஆகிக்கிட்டே இருக்கேன் ராகி, சொல்லு என்ன விஷயம்"

"அப்படியே போற வழில என்னையும் பிக்அப் பண்ணிக்கோ ராதா" என அசால்ட்டாக சொல்ல, ஜெர்க் ஆன அவனின் கார்மேகம்,

"நீ எங்க வர ராகி" என கேட்க, அவனோ

"பாண்டிக்கு தான்,நீ ஊருக்கு நம்ப காதல் விஷயத்தை சொல்லி சம்மதம் வாங்க தானே போற, உன்னை தனியா எப்படி அனுப்ப, நானும் கூட வரேன், நான் வந்த உனக்கு கொஞ்சம் மாரல் சப்போர்ட் அஹ இருக்கும் இல்ல" என சிறுபிள்ளை போல அடம்பிடிக்க, அவனின் மனசாட்சியோ,"டேய் டேய் அடங்குடா, அவ தாத்தா, பாட்டி ஏற்கனவே நீ வந்து பேசி சம்மதம் வாங்கிட்டனு சொல்லும் போது அவ ரியாக்ஷன் அஹ உனக்கு பார்க்கணும், அதுக்கு தானே இவ்ளோ பேச்சு" என கேட்க, தன் மனசாட்சியை அப்படியே டீலில் விட்டவன் தன் கார்மேகத்தின் பதிலுக்காக காத்திருக்க, அவளும்

"சரி வா ராகி" என அவன் வர சம்மதித்து இருந்தால்,ஏனோ மனம் அவன் வந்தால் நன்றாக இருக்கும் என்று தோன்ற உடனே அங்கீகரித்து
இருந்தால் அவனின் கார்மேகம், வழியில் பொன்னிற மேனியனும், அவனின் கார்மேகத்துடன் இணைந்து கொள்ள, முத்து அண்ணாவுடன் இருவருக்கும் முதல் நெடுந்தூர கார் பயணம், விடிந்ததும் விடியாததுமான அந்த ஏகாந்த காலை பொழுதில், விரலோடு விரல் கோர்த்து, அவனின் நெற்றியில் புரளும் குழலை கடல் காற்று கலைத்து உரிமையாய் விளையாட, தான் செய்ய நினைத்து, முடியாமல் வெட்கம் வந்து தடுக்க, அந்த கடல் காற்றோ உரிமையையாய் அவளவளின் தலை கோத அவளுக்கு அந்த நிமிட எதிரியாக, அவனுக்கோ அவனவளின் சுகந்தத்தை அவனிடம் சேர்க்கும் நண்பனாக, நீண்ட நெடிய கடற்கரை சாலை பயணம், இருவருமே அதை ஆழ்ந்து அனுபவிக்க, பேச்சுக்கள் அற்ற மௌனம் அங்கு கவிதையாய்.

ஒரு வழியாக இருவரும் வீட்டிற்கு வந்து சேர, இருவரும் உள்ளே நுழையவும், வரவேற்பறையில் அமர்ந்து இருந்த தில்லை முதலில் கவனித்தது தன் தாயியை தான்,

"வாங்க தாயி" என அவளை அன்பாக வரவேற்றவர், திரும்பி உள்ளே அவரின் மனைவிக்கு குரல் கொடுக்க போனவர், அவளின் பின்னால் வந்த பொன்னிற மேனியனை காணவும், தன் வயதையும் மறந்து, எழுந்து வர, பொன்னிற மேனியன் அவரிடம் ஆசிர்வாதம் வாங்க,

"அடடே பேராண்டி நீ வரனு சொல்லவே இல்லையேயா" என்ற படி அவர் பொன்னிற மேனியனை கட்டி அணைத்து இருந்தார், இவர்களின் பாசத்தை பார்த்த ராதிகாவோ "என்னங்கடா நடக்குது இங்க" என விழி விரித்து பார்க்க, தில்லையோ அவளை கண்டுகொள்ளாமல்,

"சிவா தாயி வந்துட்டாங்க, கூடவே யாரு வந்து இருக்கானு பாரு, சீக்கிரமா வா" என உள்ளே குரல் கொடுக்க, கையை துடைத்து கொண்டே வந்த சிவகாமி அம்மையாரும், பொன்னிற மேனியனை காணவும்,

"என் ராசா, நல்லா இருக்கியாயா, வரேன்னு ஒரு வார்த்தை சொல்லி இருந்தா பிடிச்சது எல்லாம் செஞ்சி வச்சி இருப்பனே" என அவர், அவர் பங்குக்கு அவனை செல்லம் கொஞ்ச, பொன்னிற மேனியனோ அவர்களின் பாச மழையில் ஆனந்தமாக நனைந்த வண்ணம் இருந்தான். அன்று புதுவை வந்து சென்ற பொன்னிற மேனியன், தினமும் மூத்த தம்பதிகளுடன் பேசியபடியே தான் இருந்தான். அந்த மாய கண்ணனை இருவருமே தங்கள் சொந்த பேரனாக நினைக்க ஆரம்பித்து இருந்தனர்.
ராதிகா தான் மூவரையும் பார்த்தவாறே ஒரு இருக்கையில் அமர்ந்து,

"என்ன தில்லை என்ன நடக்குது இங்க, உங்களுக்கு ராகியை முன்னாடியே தெரியுமா" என கேட்க, மூத்த தம்பதிகள், நிமிர்ந்து பொன்னிற மேனியனை ஒரு பார்வை பார்த்துவிட்டு, பின்பு அவனின் கார்மேகத்தை நோக்க, தில்லை தன் தொண்டையை செருமி கொண்டு பவ்யமாக,

"அது வந்து தாயி கொஞ்ச நாள் முன்னாடி தம்பி உங்களை பிடிச்சி இருக்கு, கல்யாணம் பண்ணிக்க ஆசைப்படுறேனு சொல்லி எங்க சம்மதம் கேட்டு வந்துச்சி தாயி" என தவறு செய்த சிறுவன் என சொல்ல,

"ஓ நீங்க என்ன சொன்னிங்க" என கூர்மையுடன் பார்க்க, அவளின் பார்வையில் தன் வயது, அனுபவம் எல்லாம் மறந்து சிறு பாலகன் என எச்சில் முழுங்கி கொண்டே,

"உங்க கிட்ட அப்புறம் கிறிஸ் கிட்ட கேட்கணும்னு சொன்னேன் தாயி" என அவர் பவ்யமாக சொல்ல அவரின் பாவனையில் பொன்னிற மேனியன் பக்கென சிரித்துவிட, அவனை திரும்பி ஒரு பார்வை பார்க்க, டக்கென வாயை மூடிக்கொண்டான், ஆனால் மனசாட்சியோ "கையில் ஒரு குச்சி மட்டும் கொடுத்தா போதும் அப்படியே டீச்சர் தான், என்னா மிரட்டு மிரட்டுறா, ராகவா பின்னாடி நீ தப்பு செஞ்சா பெஞ்ச் மேல நிக்க வைப்பா போலவே" என நினைக்க, அந்த காட்சி அப்படியே மனக்கண்ணில் விரிய, கொஞ்சம் மிரண்டு தான் போய்விட்டான் நம் பொன்னிற மேனியன், அங்கு அவளோ தன் விசாரணையை தொடர்ந்த வண்ணம்,

"அதுக்கு இவரு என்ன சொன்னாரு" என அவளின் நாயகனை கை காட்டி கேட்க,

"ரெண்டு பேருமே சம்மதம் சொல்லிட்டாங்க, உங்க முடிவை கேட்க தான் வந்தேன்னு சொன்னாரு தாயி" என சொல்ல, அவள் டக்கென திரும்பி பொன்னிற மேனியனை பார்க்க, அவனோ அக்மார்க் அப்பாவி லுக்வுடன் , கிறிஸ் இடமும் பேசியாச்சா, இந்த தகவல் அவளுக்கே புதியது, "இன்னும் என்ன எல்லாம் பண்ணிவச்சி இருக்கடா" என மனம் செல்லமாக அலுத்து கொண்டாலும், வெளியே விரைப்பாக,

"இவரு சொன்னதும் நீங்க அப்படியே நம்பிட்டீங்களாக்கும்" என கேட்க,

"புள்ளை பார்த்தா பொய் சொல்ற புள்ளை மாதிரியா இருக்கு, அதுபோக அவங்க அம்மா வேற பேசுனாங்க தாயி" என புட்டுப்புட்டு வைக்க, ராதிகாவோ

"இவ்ளோ நடந்து இருக்கு ஏன் என்கிட்ட சொல்லல" என கேட்க,

"இல்ல பேராண்டி தான் உங்களுக்கு சர்பரைஸ்னு சொல்லுச்சி தாயி" என ஒரு உற்சாகத்தோடு சொல்ல, இப்போது பொன்னிற மேனியன் அவளை தவிர மற்ற எல்லாவற்றையும் பார்த்து வைக்க, இந்நேரம் அங்கிருந்து நழுவி சமையலறை போயிருந்த சிவகாமி, இரண்டு கப்களுடன் வர, ஒன்றை ராதிகாவுக்கு கொடுத்துவிட்டு, இன்னொன்றை பொன்னிற மேனியனிடன் கொடுக்க போக, அவரை தடுத்த ராதிகா,

"சிவா அவங்க டீ தான் குடிப்பாங்க" என சொல்ல, மூத்த தம்பதிகள் பார்வை ஒரு நிமிடம் இணைந்து மறுநிமிடமே பிரிய, சிவகாமி அம்மையாரோ ஒரு புன்னகையுடன்,

"டீ தான்டி என் மாமியாரே, எங்களுக்கும் தெரியும் பேராண்டி காபி குடிக்க மாட்டங்கன்னு" என நொடித்து கொள்ள, சிவந்த முகத்தை அவள் காபி குடிக்கும் சாக்கில் குனிந்து மறைத்துக்கொள்ள, பொன்னிற மேனியன் முகமோ முழுக்க புன்னகையின் சாயல், பெரியவர்கள் இருவரும் சிரியவர்களுக்கு பேச தனிமை அளித்து விலகி செல்ல,

"கிறிஸ் கிட்ட எப்போ பேசுன" என தன்னவனிடமும் விசாரணையை ஆராம்பிக்க,

"நான் எதும் பேசல, என்ன பர்ஸ்ட் டைம் பார்க்கும் போதே அவன் கண்டுபிடிச்சிட்டான், ஆனா எதுமே கேட்கலை, நானும் ஏதும் சொல்லல, அப்புறம் நம்ப காலேஜ்ல கிளாஸ் எடுக்க வந்து இருந்தான் இல்ல அப்போ தான் அவனுக்கு சம்மதம்னு சொன்னான்" என, "அப்போவேவா" என அவளின் மனசாட்சி வாய் பிளக்க, அவளோ திருவாய் மலர்ந்து,

"அடப்பாவி அப்போ நீ என்கிட்டயே சொல்லலேயே" என தன் வாயில் கைவைக்க,

"அது எல்லாம் உனக்கும் என்ன பிடிக்கும்னு எனக்கு தெரியும், அந்த நம்பிக்கை தான்" என இவளை அறிந்தவனாக சொல்ல,

"எவ்ளோ வேலை பார்த்து இருக்க நீ,கிறிஸ் கிட்ட பேசி இருக்க, இங்க வந்து இவங்க கிட்ட பேசி இருக்க, நான் பண்ண வேண்டியது எல்லாமே நீயே பண்ணி இருக்க, ஆனா என் கிட்ட ஒரு வார்த்தை கூட சொல்லவே இல்லை" என அவனிடம் செல்லமாக முறுக்கி கொள்ள, இவ்வளவு நேரம் தில்லையிடம் நடத்திய விசாரணைக்கும், இவனிடம் பேசும் தோரணைக்கும் தான் எவ்ளோ வித்தியாசம்,

"இத்தனை நாள் தான் எல்லாமே நீயே பண்ண, இப்போ தான் நான் வந்துட்டேன் இல்ல, இனிமே உனக்கு தேவையானதை எல்லாம் நான் மட்டும் நான் மட்டும் தான் பண்ணுவேன், என்னை மட்டும் நீ பார்த்துக்க என்ன" என அவள் அருகில் நெருங்கி, அவளின் கையோடு கை கோர்த்து,கண்ணோடு கண் நோக்கி சொல்ல, மன்னவன் மொழியில் மங்கை அவள் மயங்கி தான் போக, மீண்டும் ஒரு அழுத்தமான அச்சாரம் அவளின் கன்னத்தில், இருக்கும் இடமும், இருக்கும் விதமும் உரைக்க, பொன்னிற மேனியனின் கார்மேகம் பொங்கி எழுந்து,

"டேய் உனக்கு எப்பபாரு இதே வேலையா போச்சி" என மரியாதை எல்லாம் காற்றில் பறக்க, பக்கத்தில் வகையாய் உட்கார்ந்து இருந்தவனை, மெத்தென்ற தன் பூக்கரங்களால் மொத்தி எடுக்க, அவனோ,

"ஐயையோ என்னோட பொண்டாட்டி அடிக்கிறா, யாராவது வந்து காப்பாத்துங்க" என கவனமாக வலிக்காமல் அவள் அடித்த அடிகளை, இடிகளாக உருவகப்படுத்தி வீடே அதிரும் அளவு கத்த, அவனின் விளிப்பிலே விழி விரித்து ஒரு முழு நிமிடம் அசையாமல் அவனை அவள் பார்க்க, அந்த நேரத்தை பயன்படுத்தி இவன் அவளிடம் இருந்து தப்பித்து ஓட, சுதாரித்து இவளும் அவனை விரட்ட, பொன்னிற மேனியனின் சத்தம் கேட்டு வந்த மூத்த தம்பதியரின் கண்களில் ஆனந்த கண்ணீர், சிறு பிள்ளைகள் என இருவரும் ஓடி விளையாட, அந்த நிமிடம் இருவருக்குமே இவனை விட அவளை யாராலும் மகிழ்ச்சியாக பார்த்துக்கொள்ள முடியாது என்பது புரிய, இவர்கள் எப்போதும் இப்படியே இருக்க ஆண்டவனிடம் ஒரு அவசர வேண்டுதல் வைக்க, வீடெங்கும் சிரிப்பொலி மட்டுமே.

இருவரும் சேர்ந்து வந்து இருக்கவும், இருவருக்கும் பிடித்த உணவு வைகளாக பார்த்து பார்த்து செய்து காலை, மதியம் என விருந்து செய்து அசத்த, மாலை வரை இருந்து அவர்களுடன் லூட்டி அடித்துவிட்டு, மூவரும் அவனை அங்கு தங்க எவ்ளோ வற்புத்தியும், அது முறையாகது என சொல்லி விடைபெற்றான் பொன்னிற மேனியன்.

இவன் ராதையின் கண்ணன்……………………….
 

banumathi jayaraman

Well-Known Member
யக்கோவ் ருத்ரா யக்கோவ்
இப்பிடி எங்களுக்கு செம பல்ப் கொடுக்கக் கூடாது, யக்கோவ்

கிருஷ்ணா க்ரூப் கம்பெனியிலிருந்து திருவாளர் ராகவ் கிருஷ்ணா அவர்கள் செல்வி ராதிகாவைப் பெண் கேட்டு வருவான்னு ஆவலோடு எதிர்பார்த்தால் அவள் தங்கச்சியை பொண்ணு கேட்டு இப்பிடி அவனோட சித்தி மவனை வர வைச்சுட்டீங்களே
வெரி பேடு வெரி பேடு, ருத்ரா டியர்

ஆனாலும் இந்த ஸ்வேதா சரியான ஜெகஜ்ஜாலக் கில்லாடிதான்
அந்த சஞ்சீவ்வை காலேசுல நல்லாக் குல்லாப் போட்டு மடக்கி நீலிக் கண்ணீர் வடித்து இவளை பெண் கேட்டு வர வைத்து விட்டாளே
பயங்கரமான ஜில்லாக் கேடியா ஸ்வேதா இருக்கிறாள்
அப்பனுக்கு ஏற்ற பொண்ணு

ஆனாலும் இந்த தெய்வானைக்கும் அவளுடைய புருஷனுக்கும் இவ்வளவு கொலஸ்ட்ரால் ஆகாது, ருத்ரா டியர்
இப்போக் கூட ராதுவை இவங்களுடைய பெண்ணாக ஏற்றுக் கொள்ள மனசு வரலையே
படுபாவிங்க
ராதிகாவுக்கு மாப்பிள்ளை பார்த்தியான்னு அப்பாவிடம் கேட்கும் கொழுப்பெடுத்த தெய்வாவுக்கும் அவளுடைய காதல் கணவன் சண்முகத்துக்கும் ஆணவம் பிடிச்ச அந்த ஸ்வேதாவோடு சேர்த்து பிஞ்சி போன பழைய ரூ.299.95-வாலேயே நல்லா நாலு கொடுக்கணும்னு அவ்வளவு ஆத்திரமா வருது

இந்த தில்லை சரியில்லைப்பா
தாயி தாயின்னு ராதிகாவிடம் பம்முறது எல்லாம் சும்மா
ஏண்டி மூத்தவளுக்கு பார்க்காமல் இளையவளுக்கு எப்படி நீ மாப்பிள்ளை பார்க்கலாம்ன்னு பெற்ற பொண்ணை நல்லா நாக்கைப் பிடிங்கிக்கிற மாதிரி கேள்வி கேட்கத் தில்லைக்கு துப்பில்லையே
மகளை எதுவும் கேட்காமல் சிவாவும் ஏன் சும்மா இருக்கிறார்?
ஒண்ணும் புரியலையேப்பா
 
Last edited:

chitra ganesan

Well-Known Member
கொஞ்சம்கூட மனசாட்சியே இல்லையே தெய்வாவிற்கு...
பெரிய பொண்ணு இருக்கும் போதே சின்ன பெண்ணிற்கு கல்யாணம் என்பதை கொஞ்சம் கூட வெக்கமே இல்லாமல் சொல்றரே..இவரின் பாவ கணக்கு கூடிகொண்டே போகுது..
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top