ராதையின் கண்ணன் இவன்-25

Advertisement

Saroja

Well-Known Member
இப்பவும் மூத்த பெண்ண பெண்
கேட்டு இருப்பாங்கனு தோணல சண்முகம்த்துக்கு
மாமியார் மருமகள் உறவு அருமை
 

Hema Guru

Well-Known Member
அன்று ஞாயிற்று கிழமை, ராதிகாவிற்கு ஏனோ காலையில் இருந்து சிறு பரபரப்பு ஒட்டிக்கொள்ள, அதிக ஆடம்பரமும் இல்லாத, அதேநேரத்தில் நேர்த்தியான ஒரு சுடிதாரில் அழகாக தயாராகி காத்திருக்க, பொன்னிற மேனியன் கைபேசியில் அழைத்து விட்டான்,

"கிளம்பிட்டியா ராதா" அவளவன் குரல் கேட்டதும் பரபரப்பு கொஞ்சம் மட்டுப்பட, மென்மையாக,

"ம்ம்ம்ம்" என மட்டும் சொல்ல,

"சரி நீ வீட்டுக்கு வெளியே வா, நான் இங்கே தான் இருக்கேன்", ஏனோ முத்து அண்ணவுடன் வேண்டாம், தானே வந்து அழைத்து செல்வதாக பொன்னிற மேனியன் சொல்லி இருக்க,

"இவ்ளோ தூரம் வந்துட்டு ஏன் வெளியவே இருக்க, வீட்டுக்கு உள்ள வா ராகி, ஒரு டீ குடிச்சிட்டு போகலாம்"

"இல்ல பரவாயில்லை ராதா, நேரம் ஆச்சி கிளம்பலாம், நீ வா" என வீட்டிற்கு வருவதை அழகாக தவிர்க்க, ஒரு பெருமூச்சுடன் வெளியே வர, பொன்னிற மேனியன் காரில் அவளுக்காக காத்திருந்தான்.

ஏனோ காரையும் கவனிக்கவில்லை, அதன் தரத்தையும் பார்க்கவில்லை, அவனின் கார்மேகம். அவளின் சிறு பதட்டமும், அவனின் அருகாமையிலும், காரில் கேட்ட மெல்லிய புல்லங்குழல் இசையும் மனதை அமைதியாக்க பயணம் முழுதும் இவளும், அந்த இசையையும், அவனின் அருகாமையையும் ஆழ்ந்து அனுபவிப்பவள் போல மௌனமாக வர, இவனும் அவளை தொந்தரவு செய்யாமல், அமைதியாகவே வந்தான். கோவில் வரவும்,

"நீ உள்ள போடா, நான் கார் அஹ பார்க் பண்ணிட்டு வரேன்", என அவள் இறங்கி உள்ளே செல்லவும், பொன்னிற மேனியன் காரை ஒரு ஓரமாக விட்டு உள்ளே வரவும், அங்கு அவன் கண்டது, அவனின் கார்மேகமும், ராஜமாதாவும் பேசி கொண்டு இருப்பதை தான், மனமோ தன்போக்கில் "இவ அவங்க யாருன்னு தெரிஞ்சி பேசிக்கிட்டு இருக்காலா, இல்லை தெரியாம பேசிக்கிட்டு இருக்காலா" என்ற கேள்வியோடு இவன் அவர்களின் அருகில் செல்ல,

"உங்களை இன்னைக்கு இங்க பார்ப்பேன்னு நா எதிர்பார்க்கவே இல்ல ராஜிமா" குரலில் அவ்ளோ மகிழ்ச்சி இருக்க, பொன்னிற மேனியனோ, "அப்போ என்னோட அம்மான்னு தெரியாம தான் பேசிக்கிட்டு இருக்காலா" என அவன் தன் ராஜமாதாவை பார்க்க, அவரோ இவனை கண்டுகொள்ளாமல்,

"நானும் தான்டா",என ராஜமாதாவும் ஏதிர்பாராமல் சந்தித்ததை போலவே பேசவும், பொன்னிற மேனியனோ மனதிற்குள் இது "உலகமகா நடிப்புடா சாமி" என நினைத்துக்கொண்டு அவனின் ராதாவின் அருகில் சென்று நிற்க, அவளோ உற்சாக மிகுதியில்,

"ராகி நான் சொல்லி இருக்கேன் இல்ல, எனக்கு கோவில்ல ஒரு பிரின்ட் கிடைச்சாங்கன்னு, அது இவங்க தான் ராஜிமா, இவங்க கிட்ட பேசுனா நேரம் போறதே தெரியாது, எதவாது பேசி சிரிக்க வச்சிகிட்டே இருப்பாங்க தெரியுமா, சோ ஸ்வீட்" என அவரை செல்லம் கொஞ்ச, பொன்னிற மேனியனை பார்த்த ராஜமாதா "எப்புடி" என இல்லாத காலரை தூக்கிவிட்டு கொள்ள, அவனோ அவரை கண்டு கொள்ளாமல், தன் ராதாவையே பார்க்க, அவனின் பார்வையை உணர்ந்தவள்,

"என்ன ராகி, அம்மா வந்துட்டங்களா," என தாங்கள் வந்த காரியத்தை பற்றி யோசிக்கவும் சிறு பரபரப்பு வந்து சொல்லாமல் கொள்ளாமல் வந்து ஒட்டி கொள்ள,

"ஹ்ம்ம் வந்துட்டாங்க, வந்துட்டாங்க"

"எங்க இருக்கங்களாம்", பரபரப்பு அடுத்த கட்டமாக பதட்டமாக எட்டிப்பார்க்க கேட்க, அவனோ மிக சாதாரணமாக,

"இதோ உன் முன்னாடி தானே நிக்கிறாங்க, ராதா இது தான் என்னோட அம்மா ராஜேஸ்வரி, எனக்கு மட்டும் ராஜமாதா" என தன் தாயின் தோளில் கைபோட்டு அனைத்தவாறே சொல்ல, அவனின் கார்மேகத்திற்கு தான் என்ன சொல்வதென்றே தெரியாமல்,

"ராஜிமா" என இருவரையும் மாறி மாறி பார்த்து முழிக்க,

"எப்பவுமே உன்னோட ராஜிமா தான், இந்த தடிமாடுக்கு அம்மாவா ஆனதால எதுக்கு இப்படி மிரலுற, உன்னை பார்க்கும் போது எல்லாம் உன்னை மாதிரி ஒரு மருமக வந்தா நல்லா இருக்கும்னு யோசிச்சி இருக்கேன், அந்த கடவுள் உன்னையே எனக்கு மருமகளா கொடுத்துட்டார், வாங்க முதல போய் சாமிக்கு ஒரு நன்றி சொல்லிட்டு வரலாம்" என இருவரையும் அழைத்துக்கொண்டு சாமி தரிசனம் செய்துவிட்டு, பிரகாரத்தையும் வலம் வந்து மூவரும் ஓர் இடத்தில் அமர, அதுவரை ராதிகாவிடம் ஏதாவது பேசியபடியே வந்த ராஜமாதாவால் இயல்பு நிலைக்கு திரும்பி இருந்த ராதிகா,

"ராகி, நீ போய் சக்கரை பொங்கல் பிரசாதம் வாங்கிக்கிட்டு வா" என இப்போது எல்லாம் பல கோவில்களில், அவர்களே சிறிய அளவிலான கடைகளில் கோவிலின் உள்ளே விற்பனை செய்யும் பிரசாத்தை வாங்கி வர சொல்ல,

"உனக்கு பொங்கல் ரொம்ப பிடிக்குமா என்ன" என அவனின் கார்மேகத்திடம் கேட்டவாறே எழுந்திருக்க, அவள் சொன்ன பதிலில் மீண்டும் அப்படியே அமர்ந்துவிட்டான்,

"எனக்கு இல்லை ராகி, ராஜிமாக்கு தான், அவங்களுக்கு தான் பொங்கல் ரொம்ப பிடிக்கும், வார வாரம் கோவிலுக்கு வரும் போது எல்லாம் பொங்கல் சாப்பிடாம நாங்க போனதே இல்லை தெரியுமா" என "உனக்கு உன் அம்மாவை பற்றி இதுகூட தெரியாத" என்ற குற்றம் சாற்றும் பார்வை அவளவனை பார்த்து வைக்க,

ராஜமாதாவோ "பத்த வச்சிட்டியே பரட்டை, ஆனாலும் மருமகளே உனக்கு இவ்ளோ பாசம் ஆகாதும்மா, ஐயோ, ஐயோ, இவன் வேற முறைக்குறனே, அன்னைக்கு கொஞ்சோண்டு பொங்கல் சாப்பிட்டத்துக்கே ஒரு நாள் முழுக்க ஹாஸ்பிடல்ல உட்கார வச்சான், இப்போ என்ன பண்ணுவானு தெரியலையே, ஐயையோ இவன் வேற கண்ணகியோட கசின் பிரதர் மாதிரி பார்வையாலே எறிச்சிடுவான் போலவே, இப்ப என்னா பண்றது, சரி விடு ராஜி எவ்ளோ பார்த்துட்ட, இதை பார்க்க மாட்டியா, அவன் கிடக்கிறான் பொடி பையன்" என நினைக்க, அவரின் மருமகளோ மீண்டும்,

"என்ன ராகி உட்காந்துட்ட, பொங்கல் வாங்க போகல" என மீண்டும் கேட்க, பொன்னிற மேனியனோ, அவனின் ராஜமாதாவை ஒரு பார்வை பார்த்தவன், அவனின் கார்மேகத்தை பார்த்து,

" உன்னோட மாமியாருக்கு எறும்பு வந்து அப்படியே தூக்கிக்கிட்டு போற அளவுக்கு உடம்புல சுகர் இருக்கு, நா வீட்டுல டாக்டர் சொன்ன டையட் படி சாப்பிட கொடுத்த மேடம் வாராவாரம் சக்கரை பொங்கல் சாப்பிட்டுகிட்டு இருந்து இருக்காங்க, இதுல நானே வேற போய் வாங்கிக்கிட்டு வரனுமா" என கோபத்துடனே கேட்க, கார்மேகம் அவளின் ராஜிமாவை பார்க்க, அவரோ முகத்தை பாவமாக வைத்துக்கொண்டு அவளை பார்க்க, அவரின் முகபாவனையில் உருகிய அவளோ,

"நிறைய சாப்பிட்டா தான் பிரச்சனை ராகி, ராஜிமா முதல் வாரம் மட்டும் தான் ஒரு முழு சக்கரை பொங்கல் சாப்பிட்டாங்க, அதற்கு அடுத்தவாரம் எல்லாம் சும்மா கொஞ்சம் தான், வீட்டுலயே ஒழுங்கா கொஞ்சமா கொடுத்தா அவங்க ஏன் வெளிய சாப்பிட்ட போறாங்க, டையட் அஹ கொஞ்சம் மாத்து ராகி" என சொல்ல சொல்ல ராஜிமாவோ தன் பாவமான முக பாவனையை மாற்றாமல், "பக்கி கண்டுபிடிச்சிடுமோ இதனால் தான் அன்னைக்கு உடம்பு சரி இல்லாம போச்சுன்னு" என அவரின் மகனின் முகத்தை ஆராய, அவனோ தன் கார்மேகம் சொன்னதை யோசிப்பவன் போல,

"சரி டாக்டர் கிட்ட கேட்டு பார்க்கிறேன், டாக்டர் ஓக்கே சொன்னா மட்டும் தான், நீ வீட்டுக்கு வந்ததும் நீயே பார்த்துக்கோ உன்னோட மாமியாரை, இரு நான் போய் பொங்கல் வாங்கிக்கிட்டு வரேன்" என்று சொல்லி எழுந்து செல்ல, ராஜமாதாவோ "அடப்பாவி, எத்தனை தடவை, நான் கெஞ்சி இருக்கேன், கதறி இருக்கேன், அப்போ எல்லாம் கல்நெஞ்சு காரன் மாதிரி இருந்துட்டு, இப்போ என் மருமக ஒரு வார்த்தை சொன்னதும் அப்படியே சரின்னு சொல்லிட்டானே" என திறந்த வாயை மூடாமல் அவனை பார்த்தவர், பின்பு தன் மருமகளின் பக்கம் திரும்பி, வாஞ்சையுடன்,

"ராதிகா உனக்கு ராகவ் அஹ கல்யாணம் பண்ணிக்க சம்மதம் தானே டா" என கேட்க, அவளின் கன்னங்கள் நாவல் பழ நிறத்திற்கு மாற, அழகாக வெட்கப்பட்டு கொண்டே,

"ஹ்ம்ம்"என தலை அசைக்க, அவரோ விடாமல்,

"வாயை திறந்து சொல்லுடா" என, இன்னும் கன்னங்கள் சிவக்க,

"எனக்கு சம்மதம் தான் ராஜிமா" என சொல்ல, அவளின் கன்னம் வழித்து கொஞ்சியவர்,

"என் கண்ணே பட்டுடும் போல அவ்ளோ அழகா இருக்கே டா, எனக்கு எப்படா நீ நம்ப வீட்டுக்கு வருவேணு இருக்கு, ராகவ் பன்னிரண்டாவது எழுதி முடித்த நேரம், நாங்க எதிர்பார்க்கவே இல்லை திடீர்னு அவங்க அப்பா ஹார்ட் அட்டாக்ல இறந்துட்டாங்க, நானும் ரொம்ப உடைந்து போய்ட்டேன், ராகவ் தான் பாவம், அந்த வயசுல என்னையும் பார்த்துகிட்டு, பிசினஸ்யையும் பார்த்துகிட்டு ரொம்பவே கஷ்டப்பட்டான், முழுசா ஒரு வருஷம் ஆச்சு பிசினஸ் எல்லாம் இவன் கண்ட்ரோல்க்கு கொண்டு வர, அதுக்கு அப்புறம் தான் காலேஜ்ல சேர்ந்தான், அவங்க அப்பா எப்பவுமே சொல்லுவாங்க, காலேஜ் வாழ்க்கையை உனக்கு ஹாஸ்டல்ல தான், இந்த, குடும்ப பேரு, புகழ், பணம், எதுமே இல்லாம இருக்க போற அந்த வருடங்கள் தான், வாழ்க்கையில் நிறைய படிப்பினைகளை, உண்மையான நண்பர்களை தரும்னு, அவங்க அப்பா இப்போ இல்லை, ஆனாலும் இவன் அவர் சொன்னதை அப்படியே கேட்டான், காலேஜ்ல யாருக்குமே இவன் யாரு, எந்த குடும்பத்து பையன்னு தெரியாது, இங்க சென்னையிலே அவ்ளோ பெரிய வீடு இருக்கு ஆனா, ஹாஸ்டல்ல தங்கி தான் படிக்கிறான்,
இப்பவுமே அவன் தான் எல்லாவற்றையும் பார்த்துக்கொள்கிறான், ஆனா எல்லாமே ஆட்களை வச்சி, இவன் பேரு கூட நிறைய பேருக்கு தெரியாது, இவன் யார்கிட்டயுமே அவ்ளோ சீக்கிரம் ஒட்டவே மாட்டான், ஆனா நீ மட்டும் அதுல விதிவிலக்கு போல, ராகவ் எனக்கு அப்புறம் உன்கிட்ட தான் இவ்ளோ சகஜமா, எப்படி சொல்ல…..அவன் அவனா இருக்கான், நீ தான் அவனை நல்லா பார்த்துக்கணும், எதையுமே அவ்ளோ சீக்கிரம் வாயை திறந்து சொல்லவே மாட்டான், அவனை பார்த்துக்கோடா" என சொல்லும் போதே அவர் கண்கலங்க, ராதிகா பதறி போய் அவரை அணைத்து சமாதான படுத்த, பொன்னிற மேனியன் வந்து சேர்ந்தான்.

"என்ன மாமியாரும், மருமகளும் ஒரே கொஞ்சல்சா இருக்கு, என்ன விஷயம்" என விளையாட்டு போலவே இருவரையும் ஆராட்சி பார்வை பார்க்க, இரு பெண்களுமே நொடிப்பொழுதில் தங்களின் முகத்தை சீராக்கி, அவனை பார்த்து சிரித்து வைக்க, ஏதோ சரி இல்லை என தெரிந்தாலும், கேட்டாலும் சொல்ல மாட்டார்கள் என்று தோன்ற அமைதியாக அமர்ந்தான்.ஒரு பொங்கலை அவனின் கார்மேகத்தின் கைகளில் கொடுத்தவன், மற்றும் ஒன்றில் இருந்து, கொஞ்சமே கொஞ்சம் எடுத்து அவனின் ராஜமாதவிற்கு கொடுக்க, அவரோ அவனையும், அவன் கைகளில் இருந்த பொங்களையும் ஏக்கமாக பார்த்து வைக்க, அவரின் பார்வையை பார்த்து அவனின் கார்மேகம் வழக்கம் போல சில மின்னல்களை சிதற விட, பொன்னிற மேனியனோ கடுப்புடன்,

"இதுவே உங்க மருமக சொன்னான்னு தான், வேணுமா, இல்ல வேண்டாமா" என கேட்க, அவரோ "அள்ளி கொடுப்பானு பார்த்தா, இப்படி கிள்ளி கொடுக்கிறானே, சரி இதையாவது கொடுத்ததானேனு சந்தோஷ படு ராஜி, ஓவரா பர்பாமன்ஸ் பண்ணி அப்புறம் இதுவும் இல்லாம போய்ட போகுது" என அமைதியாக வாங்கிக்கொண்டார். உண்டு முடித்ததும் ராஜமாதா தன் மருமகளின் நெற்றியில் ஒரு தாயின் வாஞ்சையோடு முத்தமிட்டு வழியனுப்ப, அவரின் காரோட்டியை அழைத்து ஆயிரம் பத்திரம் சொல்லி அவரை அனுப்பிவைத்தான் பொன்னிற மேனியன். அதன்பிறகு இவர்கள் இருவரும் கிளம்பவும்,

"என்ன ராதா, இப்பவும் அமைதியா வர" என அவனே பேச்சை ஆரம்பிக்க,

"அம்மா செம இல்ல ராகி, எனக்கு உன்னை விட அம்மாவை தான் ரொம்ப பிடிச்சி இருக்கு" ஏனோ கிளம்பும் போது இருந்த பதட்டம் இப்போது இல்லாமல், ராஜிமா தான் தெரிந்ததும் மனம் இன்னும் மகிழ்ச்சியாக இருக்க, வேண்டும் என்றே அவனை சீண்ட, அவனோ ஏதும் சொல்லாமல் சிரிக்க,

"என்ன சிரிக்குற"

"இல்ல ராதா, என்னோட வாழ்க்கையில் ரொம்ப, ரொம்ப முக்கியமான ரெண்டு பேர் நீங்க தான், உங்களுக்கு ஒருத்தரை ஒருத்தர் பிடிச்சி இருந்தா, அதிகமாக சந்தோஷ படுற முதல் ஆள் நான் தான்" என உணர்ந்து சொல்ல, அவளும் அவனை புரிந்த மாதிரி அவனின் கையை ஆதரவாய் பிடிக்க, இருவரிடமும் ஒரு நிறைவான புன்னகை.

இங்கு சண்முகம் தான் என்ன செய்வது என்று தெரியாமல் திண்டாடி கொண்டு இருந்தார். அவரின் எதிரி இவரின் எதிரிலே வராமல் இத்தனை நாட்கள் போட்டியாக கடையை திறந்து அவரை திணறடித்தவன் இப்போது நேரடியாகவே அவனின் ஆட்கள் மூலமாக இவரின் கடைகளுக்கு ஒரு நல்ல விலை தர தயாராக இருப்பதாக சொல்லி ஒருத்தர் மாற்றி ஒருத்தர் என இவரின் முடிவை கேட்டு படையெடுத்த வண்ணமே இருந்தனர். சண்முகம் ஒரு முடிவு எடுக்க முடியாமல் தீவிர யோசனையிலே இருந்தார், தொழிலோ நட்டத்தில் சென்று கொண்டு இருக்க, இவரும் என்னென்னவோ செய்து பார்த்து விட்டார், தொழில் மீளும் வழியை தான் காணோம், இப்படி நட்டத்தில் செல்வதற்கு விற்றாலும் ஒரு கணிசமான தொகை கிடைக்கும் தான், அதுபோக இவருக்கு ஆண் வாரிசும் கிடையாது, வரும் மருமகன் தொழிலை ஏற்று நடத்துவார் என எங்கனம் எதிர் பார்க்க முடியும், ஆனால் அதேநேரம் இத்தனை வருஷம் தனக்கு ஒரு அடையாளமாக இருந்த தொழிலை, தான் பாடுபட்டு வளர்த்த தொழிலை விட்டுக்கொடுக்கவும் மனம் இல்லாமல் அல்லாடி கொண்டு இருந்தார். அப்போது ஒரு தொலைபேசி அழைப்பு வர பேசி முடித்தவரின் முகத்தில் கலவையான உணர்வுகள்.

சண்முகம் வீட்டுக்கு வரவும், தெய்வா இவருக்கு உணவு எடுத்து வைக்க காத்திருக்க, யோசனையோடு கை, கால் கழுவி விட்டு உடை மாற்றி உணவு மேசைக்கு வந்தார் சண்முகம். தெய்வா உணவு வைத்தும், உண்ணாமல் எதோ யோசனையிலே இருக்க,

"என்னங்க தட்டுல வச்சதை கூட சாப்பிடாமல் அப்படி என்ன யோசனை" என அவரின் யோசனையை கலைக்கும் விதமாக கேட்க,

"கிருஷ்ணா குரூப் ஆப் கம்பனி பத்தி கேள்வி பட்டு இருக்கியா"

"தெரியுமே, அவங்க ரொம்ப பெரிய ஆளுங்க ஆச்சே, நானும் கேள்விப்பட்டு இருக்கேன், இப்போ எதுக்கு அவங்களை பத்தி பேசுறீங்க"

"இல்ல இன்னைக்கு எனக்கு போன் வந்தது, அந்த குடும்பத்து பையன் நம்ப பாப்பா படிக்கிற காலேஜ்ல தான் படிக்கிறாங்க போல, பாப்பாவை பார்த்து இருப்பாங்க போல, அவர்களுக்கு பிடிச்சி இருக்காம், கல்யாணம் பண்ணிக்க கேட்குறாங்க" என சொல்ல, தெய்வாவோ மிக மகிழ்ச்சியாக,

"இதுல யோசிக்க என்னங்க இருக்கு, அந்த குடும்பத்துல ஸ்வேதா வாக்க பட கொடுத்து வச்சி இருக்கணுமே, நீங்க என்ன சொன்னிங்க அவங்க கேட்டதுக்கு" என ஆர்பரிக்க,

"ஹ்ம்ம், ஆனா பாப்பா விருப்பம் தான் ரொம்ப முக்கியம், நாளைக்கு பாப்பா கிட்ட கேட்டுட்டு முடிவு பண்ணிக்கலாம், நா வீட்டுல கலந்து பேசிட்டு சொல்றேன்னு தான் சொல்லி இருக்கேன், அவங்க பாப்பா படிப்பு முடிஞ்சதும் கல்யாணம் உடனே பண்ணனும் அப்படின்ற மாதிரி சொல்றாங்க, அதான் யோசனையா இருக்கு" என அவரே பின்பு தயங்கியவாறே

"ஆமா அந்த பெண்ணுக்கு எப்போ கல்யாணம் பண்ற ஐடியால இருக்காரு உங்க அப்பா" என கேட்க, அவரின் கேள்வியில் அவரை ஆச்சரியமாக பார்த்த தெய்வாவின் முகம் உடனே யோசனைக்கு மாற, இப்போது தான் அவர் ராதிகாவை பற்றி யோசிப்பது புரிய, ஒரு பெருமூச்சுடன் அவரின் பதிலுக்காக இவர் அவரின் முகத்தை பார்க்க,

"தெரியலைங்க, மாப்பிள்ளை ஏதும் பார்த்து வச்சி இருக்க மாதிரி தெரில, இருந்தா அப்பா சொல்லி இருப்பாரு" என, சண்முகமோ பொன்னிற மேனியனின் நினைவில்,

"நீ எதுக்கும், பாப்பாக்கு வரன் வந்து இருக்குன்னு சொல்லி வை" என மனதிற்குள் எப்படியும் மாமா ஏதாவது பண்ணுவாறு, இத்தனை வருஷம் ஒதுக்கிட்டு இப்போ சட்டென மகளே என பாசம் பொழிய எல்லாம் அவருக்கு வரவில்லை என்பதோடு எந்த முகத்தோடு அவளிடம் சென்று பேச முடியும், அவளை பார்க்கும் போது எல்லாம் தன்னை குறுகுறுக்கும் தன் குற்ற உணர்ச்சியை போக்க ஏதோ ஒரு முயற்சி அவ்வளவே தான்.

இவன் ராதையின் கண்ணன்…………………………
What ருத்ரா பாப்பா? Why confusion? Papa நினைக்கற பாப்பா வேற, இன்னும் மனுஷன் திருந்தலியே, அந்த பொண்ணாம்ல, இருக்குடி மகனே உனக்கு, வெச்சு செய்ய PM வர்றார்
Song-kalyana நாள் பார்க்க சொல்லலாமா நாம் கையோடு கை சேர்த்து கொள்ளலாமா
 

Meera kartik

Well-Known Member
யாருப்பா அங்க
ராஜமாதாக்கு திணைபொங்கல் பார்சல்

ஏய் கோபா நீ பொங்கல தரலன்னா என்ன
நாங்க தருவோம்

ராஜமாதாவோட நம்ம பிளாக்கிளவுட் சேர்நதாச்சு

எந்த பாப்பா ன்னு கேட்டுக்காம அய்யகோ இப்படி அவமான பட போறீங்களா

பீப்பாக்கு இல்ல சண்முகம் அது பாப்பாக்கு
 

தரணி

Well-Known Member
நைஸ் ராஜா மாதாவை தான் முன்னவே பிடிக்கும்... இப்போ கூட ராகி பத்தி கேக்கவே இல்ல ராதிகா சோ ஸ்வீட்
 

Prabhasri

Well-Known Member
Parra yerkanave rendu perum close dhan ippo mamiyar marumagala koottani strong ah agittu polaye
Shanmugam sir neenga thappa purinjikittenga pola rk family ku ponnu kettadhu unga Pappa va illa radhika baby ya so neenga romba sandhoshapadaradhu thappu Madhiri thonudhu
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top