ராதையின் கண்ணன் இவன்-21

E.Ruthra

Well-Known Member
#1
மக்களே என்னால் முடிந்த அளவுக்கு சண்முகத்தின் மனதின் போக்கை கொடுக்க முயற்சி செய்து இருக்கிறேன், சரியா சொல்லி இருக்கனானு படித்துவிட்டு உங்கள் கருத்துக்களை சொல்லுங்கள் மக்களே

அத்தியாயம்-21
முத்துவேல் ஒரு சாதாரண குடும்பத்தில் பிறந்த சராசரியான உருவம் கொண்டு நாம் அன்றாடம் சந்திக்கும் மனிதர்களில் ஒருவர். தன்னை போல ஒரு குடும்பதில் பிறந்து பிழைப்பு தேடி வந்த இடத்தில், உறவு என்ற ஒரே காரணத்தினால் சகல வசதிகளுடன் வளரும் சண்முகத்தின் மீது எப்போதுமே பொறாமை உண்டு அவருக்கு. தில்லையின் மருமகன் என்ற பெயரால் கிடைக்கும், மரியாதையும், கல்லூரியில் அவருக்கு இருக்கும் மதிப்பையும் பார்த்து உள்ளுக்குள் வெந்தாலும், எதையுமே வெளிக்காட்டி கொள்ளாமல் நண்பன் என்ற போர்வையிலே பழகி வந்தார்.

ஒரு நாள் ஒரு வேலை விஷயமாக சண்முகத்தை பார்க்க அவரின் வீட்டிற்கு முத்துவேல் வர, வாசலோடு வேலையாட்களால் நிறுத்தப்பட பொருமி கொண்டே நிமிர்ந்தவர் ஒரு நிமிடம் உறைந்து தான் போனார் அங்கு வீட்டின் உள்ளே சண்முகத்திடம் பேசி கொண்டு இருந்த தெய்வாவின் அழகை பார்த்து. பிறகு சண்முகம் வந்ததும் நண்பர்கள் இருவரும் வெளியே சென்று விட, இயல்பாக கேட்பது போல் தெய்வாவை பற்றி விசாரிக்க, சண்முகமோ அதே போல இயல்பாக, தன் மாமன் மகள் என்றும், தான் அவளை தான் மணம் முடிக்க போவதாகவும் தெரிவிக்க,அவரின் பதிலில் எப்போதும் இல்லாத அளவு சண்முகத்தின் மீது வன்மமும், பொறாமையும் மலை அளவு உயர அதை வெளிக்காட்டி கொள்ளாமல் இருக்க பெரிதும் திணறி தான் போனார் முத்துவேல்.

சண்முகமும், முத்துவேலும் மருத்துவமனைக்கு உள்ளே வரவும், செவிலி வந்து குழந்தையை சிவகாமி கையில் தரவும் சரியாக இருந்தது. தன் குழந்தை என பரவசத்துடன் சண்முகம் சிவகாமியை நெருங்கவும், இவரை பார்த்த சிவகாமியும் மகிழ்ச்சிடனே குழந்தையை இவரின் கையில் வாகாக வைத்தார். மருத்துவர் வரவும் அவரிடம் தங்களின் மகளின் நலனை பற்றி அறிய தில்லை, சிவகமி விரையவும், தன் கையில் இருந்த குழந்தையை பார்த்த சண்முகம் அதிர்ந்து தான் போனார். இவரின் அருகில் இருந்த முத்துவேலும் குழந்தையை பார்த்துவிட்டு ஒரு குரூர திருப்தியுடன் சண்முகத்தின் முகத்தை தான் பார்த்தார்.

தெய்வா, சண்முகம் இருவருமே நல்ல நிறமாக இருக்க, தங்கள் குழந்தை என கையில் கொடுக்கப்பட்ட குழந்தையோ கண்ணனின் நிறத்தில் இருக்க, ஒரு வேளை குழந்தையை மாற்றி கொடுத்துவிட்டனரோ என சண்முகம் யோசிக்க, முத்துவேலோ, அவரை அவமானப்படுத்தி, குத்திக்கிழிக்க கிடைத்த தனக்கு கிடைத்த வாய்ப்பை முழுதாக பயன்படுத்தி இத்தனை நாள் கொண்ட வன்மத்தை தீர்த்து கொள்ளும் விதமாக,

"என்ன சண்முகம் உனக்கு குறை சரி ஆகிடுச்சின்னு சொன்ன, ஆனா பார்த்தா அப்படி தெரியலையே, நீயும் சரி தெய்வாவும் சரி நல்ல நிறம், அப்போ குழந்தை மட்டும் எப்படி கருப்பா இருக்கும், உனக்கு தான் குறைன்னு தெரிஞ்சியும் உன்னோட பொண்டாட்டி அமைதியா இருக்கும் போதே நீ யோசிச்சி இருக்கணும், பெரிய இடம்னா அப்படி இப்படி தான் இருக்கும் போல, நீயே இந்த விசயத்தை ஜீரணிக்க முடியாம வருத்ததுல இருக்க, நான் வேற பேசி உன்னை வருத்த விரும்பால, வரேன் சண்முகம்" என இப்போதும் தன் வேசம் கலையாமல், அவரின் மனதை கலைத்து தன்னால் முடிந்த வரை விஷத்தை ஏற்றிவிட்டு சென்றான்.

அதிர்ச்சியில் உறைந்து போன சண்முகம் தன் காதல் மனைவி தனக்கு தவறு இழைத்து இருப்பாள் என யோசிக்க கூட விரும்பாமல் , தன் கையில் இருக்கும் குழந்தையை தன் குழந்தை தான் என நம்பவும் முடியாமல், தான் நிவர்த்தி ஆகிவிட்டதென நினைத்த தன் குறை அந்த நிமிடம் பூதாகரமாக தெரிய, ஏற்கனவே தாழ்வு மனப்பான்மையில் இருந்த சண்முகம்
இன்னும் மனஉளைச்சளுக்கு உள்ளானார். மருத்துவரிடம் பேசிவிட்டு வந்த சிவகாமியிடம் குழந்தையை கொடுத்தார் சண்முகம், அது தான் ராதிகாவை அவர் முதலும் கடைசியுமாக தீண்டியது. பேத்தி பிறந்த மகிழ்ச்சியில் இருந்த தில்லையும், சிவகாமியும் தன் மருமகனின் மாற்றத்தை கவனிக்க தவற, பிரசவம் கொஞ்சம் சிக்கலானதால் உடல் நிலை சரி இல்லாத தெய்வாவும் தன் கணவனின் மாற்றத்தை கவனிக்க தவறினார்.

அடுத்த இரண்டு நாட்களிலே ஒரு முக்கிய வேலை, அவசரம் என எல்லாரும் தடுத்தும், வேற யாரையாவது அனுப்பலாம் என எவ்ளோ சொல்லியும் பிடிவாதமாக சென்னை சென்றார் சண்முகம். அந்த தனிமை இன்னும் இன்னும் அவரை மனஉளைச்சளுக்கு உள்ளாக்க, தெளிவற்ற காண சகியாத, விரும்பாத காட்சிகள், மன அழர்ச்சியை கொடுக்க, தூக்கம் தொலைத்து, உடல் இளைத்து, கண்ணில் கருவளையம் என ஆளே அடையாளம் தெரியாமல் மாறினார் சண்முகம். அடுத்த மூன்று மாதமும் ஏதாவது சாக்கு சொல்லி ஊருக்கு போவதை தவிர்க்க, தில்லையே நேரில் வந்தார் இவரை அழைத்து செல்ல. வந்தவர் இவரை பார்த்து அதிர்ந்து, ஏதோ பிரச்சனை என ஊகித்து என்ன என எவ்ளோ கேட்டும் அவர் வாயை திறக்கவே இல்லை. வெறித்த பார்வையுடன் அவரை பார்த்த சண்முகத்தின் நிலை மனதில் கலக்கத்தை தர உடனே ஊருக்கு அழைத்து சென்றார்.

தெய்வா சண்முகத்தை பார்த்து அதிர்ச்சியாகி, இந்த நிலையில் காண சகியாமல் கண்ணீர் சிந்த,வேலை பளு என தில்லை ஏதோஏதோ சொல்லி சமாளித்து குழந்தையை காட்ட சொல்லி அனுப்பினார், ஏனோ குழந்தையை பார்த்தாலாவது மனதின் பாரம் குறையாதா என்று, அவருக்கு தெரியவில்லை பாரமே அந்த குழந்தை தான்.

அது வரை எல்லாம் மறந்து தன் காதல் மனைவியை கண்ணில் நிரப்பி கொண்டு இருந்தவர், குழந்தையை பார்த்ததும் எல்லாம் சட சட வென்று நினைவுக்கு வர, வெறி பிடித்தவர் போல,

"நீயும், வெள்ளையா இருக்க, நானும் வெள்ளையா இருக்கேன், குழந்தை மட்டும் எப்படி கருப்பா பொறக்கும்" என தெய்வாவின் இரண்டு தோள்களையும் பிடித்து உலுக்க, அவரின் கேள்வியிலும், அதில் இருந்த வெறியிலும் விக்கித்த தெய்வா, தொண்டை அடைக்க,

"என்னை சந்தேகப்படுறிங்களா" என கேட்க, உடனே சண்முகம்,

"உன்னை போய் நா சந்தேகப்படுவனா, ஹாஸ்பிடல்ல குழந்தை மாறி இருக்கும், இது நம்ம குழந்தை இல்ல, இது நம்ப குழந்தை இல்லை, இது நம்ம வீட்டில இருக்க வேண்டாம், இருக்க வேண்டாம்" என சொன்னதையே திரும்ப திரும்ப சொல்லியவாறே குழந்தையை நெருங்க, தெய்வா அவரின் முன்னுக்கு பின் முரணான பேச்சில் பயந்து போய், அவரை குழந்தையிடம் நெருங்க விடாமல் தடுத்தவாறே,

"அவ நம்ப குழந்தைதாங்க" என அவருக்கு புரியவைத்து விடும் எண்ணத்தில் பேச, சண்முகத்துக்கோ இன்னும் வெறி அதிகமாகி உச்சஸாதியில் "இது நம்ப குழந்தை இல்லை, இது நம்ம வீட்டில இருக்க வேண்டாம்" என கத்தியவாறே, ரத்த அழுத்தம் ஏகத்துக்கும் எகிற மூக்கில் ரத்தம் வழிய மயக்கம் ஆனார். சண்முகம் கத்திய கத்தலில் அறை வாசலுக்கு வந்த தில்லை அவனின் நிலை கண்டு பயந்து போய் மருத்துவமனைக்கு தூக்கிக்கொண்டு போக தன் மூணு மாத குழந்தையும் மறந்து கணவனுடன் சென்றார் தெய்வா.

மருத்துவனையில் அனுமதிக்கப்பட்ட போதும், தொடர்ந்து ஒரு வாரம் தீவிர சிகிச்சை பிரிவில் தான் இருந்தார் சண்முகம். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் தீவிர மனஉளைச்சலில் இருப்பதாக சொல்லி, உறக்கம் தான் தீர்வு என சொல்ல பாதி தூக்கமும், மீதி மயக்கம் என சுயநினைவு இல்லாமல் இருந்தார் சண்முகம். அந்த ஒரு வாரமும் தெய்வா, சண்முகம் பேசிய பேச்சை நினைத்தவாறே, எது அவரை அப்படி தன்னை பார்த்து கேட்க வைத்தது, எந்த இடத்தில் ஒரு மனைவியாக என் கடமையில் இருந்து நான் தவறினேன், இவரை எப்படி கவனிக்காமல் விட்டேன், என தீவிர சிந்தனையில் சுற்றம் மறந்து மருத்துவமனையே கதி என கடக்க, சிவகாமி ராதிகாவின் பொறுப்பை ஏற்றுகொண்டார்.

ஒரு வாரம் கழித்து அன்று தான் சண்முகத்தை வீட்டிற்கு அழைத்து வந்தனர் தில்லையும், தெய்வாவும். ஓர் அளவுக்கு இயல்பாக பேசியபடியே இருக்க, அந்த நேரம் சிவகாமி கையில் குழந்தையுடன் வர, குழந்தையை பார்த்தவுடன் அவ்வளவு நேரம் இருந்த இயல்பு மாறி உடல் விறைக்க, கோபம் அதிகமாக வெறித்தனத்துடன் சிவகாமியை நெருங்கி அவரிடம் இருந்து குழந்தையை பிடுங்க முயற்சி செய்தவாறே, "இது, இது, எங்க குழந்தை இல்ல, எங்க குழந்தை இல்ல" என கத்த, குழந்தையும் வீறிட்டு அலற, அவரிடம் இருந்து குழந்தையை காப்பாற்ற முயற்சி செய்ய, மீண்டும் மூக்கில் ரத்தம் வர மயக்கம் ஆனார் சண்முகம். வந்த சிறிது நேரத்திற்கு எல்லாம் மீண்டும் மருத்துவமனைக்கு செல்ல வேண்டிய சூழல்.

மருத்துவமனையிலோ மருத்துவர்கள், போராடி அவரின் ரத்த அழுத்தத்தை குறைத்து மருந்தின் உதவியால் மீண்டும் உறக்கத்தில் ஆழ்த்தினர். தெய்வாவையும், தில்லையும் அழைத்த மருத்துவர்,

"மிஸ்டர். சண்முகம் மனரீதியாக ரொம்ப பாதிக்கப்பட்டு இருக்கிறார், ஏதோ ஒரு விசயம் அவரை ரொம்ப பாதித்து இருக்கு,எதை பார்க்கும் போது ரொம்ப கோவப்படுறாரோ, இல்லை அப்நார்மலா நடக்குறாரோ அந்த விஷயத்தை கொஞ்ச நாள் அவர்கிட்ட இருந்து தள்ளி வைங்க, ஏதாவது புது இடத்திற்கு அழைச்சிக்கிட்டு போங்க, அவரோட கவனத்தை அவருக்கு பிடிச்ச விசயத்துல திசை திருப்புங்க, இந்த அளவு ரத்த அழுத்தம் அதிகம் ஆகுறது அவருக்கு நல்லது இல்லை, அதனால் மூளைல இருக்குற நரம்பு எல்லாம் பாதிக்கப்படும், இன்னொரு தடவை மூக்குல இருந்து ரத்தம் வந்தா அவரை காப்பாற்ற முடியாமல் கூட போகலாம்,பார்த்துகோங்க" என சொல்ல, இருவருக்குமே நிலைமையின் தீவிரம் மிக நன்றாக புரிந்தது.

தன் காதல் மனைவியை சந்தேகப்பட விரும்பாத சண்முகத்தின் மனம், அதே நேரம் அந்த குழந்தையை தன் குழந்தையாக ஏற்றுக்கொள்ளவும் தயாராக இல்லை. விசித்திரமான மனம் தனக்கு தானே "குழந்தை தங்களுடையது அல்ல" என்று அவரோடு சேர்த்து தெய்வாவுக்கும், அந்த குழந்தைக்கும் சம்பந்தம் இல்லை, தெய்வா தனக்கு தவறு இழைக்க வில்லை என்று தனக்கு சாதகமான எண்ணத்தை அவரின் மனதில் விதைக்க அதன் வெளிப்பாடு தான் சண்முகத்தின் அந்த செயல். சண்முகத்தின் உயிருக்கே ஆபத்து என மருத்துவர் சொல்ல, தெய்வாவையும் சண்முகத்தையும் கொஞ்ச நாளைக்கு சென்னைக்கே அனுப்ப நினைத்தார் தில்லை. சண்முகத்திற்கு துணி கடைகளின் மீதான ஆர்வம் அவர் அறிந்தே, கெட்டதிலும் ஒரு நல்லதாக அவர் தெய்வாவை ஒதுக்க வில்லை, எனவே தெய்வாவின் அன்பு அவரை சீக்கிரம் மாற்றும் என நம்பி, அதுவரை தங்கள் பேத்தியை தங்கள் கவனிப்பில் வைத்துக்கொள்ள முடிவு செய்தார். பாவம் அவர் அறியவில்லை கடைசி வரை அவர்களின் பேத்தி அவர்களின் பொறுப்பு தான் என.

ஒரு தாயாக தன் குழந்தையை பிரிவது துயரம் தான் என்றாலும், தன் குழந்தை தன் தாயிடம் தானே, அவர் நன்றாக கவனித்து கொள்வார், தன் கணவனின் உயிர் எல்லாவற்றையும் விட முக்கியமாக பட துணிந்து தன் கணவனுடன் சென்னை சென்றார். சண்முகம் தங்கி இருந்த சிறிய வீட்டிலே தெய்வாவும் தங்கினார். உதவிக்கு ஒரு ஆளை ஏற்பாடு செய்துவிட்டு வந்தார் தில்லை.முதல் மூன்று மாதங்கள் மாத்திரைகளின் உதவியால் பெரும்பாலும் பொழுதுகள் உறக்கத்திலே கழிய, கொஞ்சம் கொஞ்சமாக தெளிவானார் சண்முகம். மறுபடியும் கடைக்கு சென்று வியாபாரம் பார்க்கும் அளவுக்கு தேறினார், ஆனால் எல்லாவற்றிற்கும் தெய்வாவை தேடினார், எங்கேயும் அவரை நகர விடாமல் தன்னுடனே இருக்க வைத்தார். இடையில் பரிசோதனைக்காக புதுவை மருத்துவமனைக்கு வர, சிவகாமி, ராதிகாவை அழைத்து வந்தார் தெய்வா பார்ப்பதற்காக. இப்போது தான் ஓர் அளவுக்கு தேறி இருக்கும் அவரை மீண்டும் பழைய நிலைமைக்கு கொண்டு செல்ல விருப்பம் இல்லாமல், சண்முகத்திற்கு தெரியாமல் குழந்தையை கொஞ்சிவிட்டு மறுபடியும் தாயிடமே கொடுத்துவிட்டு மீண்டும் சென்னை சென்றார் தெய்வா.

இப்படியே நாட்கள் செல்ல மூன்று மாதம்,ஆறு மாதம் ஆன போதும், தெய்வா புதுவை செல்ல சண்முகம் அனுமதிக்கவே இல்லை. இவர் எப்போதும் போல இயல்பாக இருப்பதாக தோன, தங்கள் குழந்தையை பற்றி பேச்சு எடுக்க, அவர் கத்திய காத்தலில் மீண்டும் ராதிகாவை பற்றி பேச தெய்வாவிற்கு தைரியம் வரவில்லை. ஏனோ சண்முகத்தின் மனம் அங்கு நடந்த விரும்ப தகாத நினைவுகளை மொத்தமாக அழிக்க விரும்புவது போல புதுவை சம்பந்த பட்ட அனைத்தையும் ஒதுக்க ஆரம்பித்து, தங்கள் வாழ்க்கையே இங்கு சென்னையில் தான் ஆரம்பித்தது போல நடந்துகொள்ள ஆரம்பித்தார். பிடிக்காத விஷயங்களை அவரின் மனம் மொத்தமாக ஒதுக்க, அதில் இவர்களுக்கு பிள்ளையாக பிறந்ததை தவிர ஒரு பாவமும் அறியாத ராதிகாவும் ஒரு விஷயமாகி போனது தான் விதியின் கொடுமை.

இவன் ராதையின் கண்ணன்…………………………
 
Last edited:
#4
சண்முகத்தைப் பார்க்கும் பொழுது உண்மையிலேயே கொஞ்சம் பாவமாத்தான் இருக்கு
ஏற்கனவே தன்னிடம் என்ன குறையோன்னு கழிவிரக்கத்தில் இருந்தவரை அந்த பொறாமை பிடிச்ச படுபாவி முத்துவேல் இன்னும் கொஞ்சம் குழப்பி விட்டுட்டான்
ஒருவகையில் கணவன் மனைவி பிரியணும்ன்னு நினைச்ச அந்த டாக்கின் எண்ணம் ஈடேறவில்லை
சண்முகம் காதல் மனைவியை சந்தேகப்படலை
தெய்வானையும் பாவம்தான்
புருஷன் உயிருக்கு ஆபத்துங்கிறப்போ அவள் என்ன செய்வாள்?
எல்லாம் ராதிகாவின் விதின்னுதான் சொல்லணும்
அந்த நாதாரி முத்துவேல் அப்புறம் சண்முகத்தின் கண்ணில் படவில்லையா?
தெய்வானையுடன் சண்முகம் சந்தோஷமாக வாழ்வதைப் பார்த்து அந்த நாய்யின் வயிறு எரியவில்லையா?
எது எப்படி இருந்தாலும் ராதிகாதான் ரொம்பவே பாவம்
ராதிகாதான் தன்னோட மூத்த பெண் என்று சண்முகத்துக்கு இன்னுமே தெரியாதா?
 
Last edited:

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Sponsored

Advertisement

New Episodes