ராதையின் கண்ணன் இவன்-2

Advertisement

E.Ruthra

Well-Known Member
M.I.P இருபாலரும் பயிலும் சென்னையின் மிக புகழ்பெற்ற கல்லூரி. பி.டெக், எம்.டெக் மற்றும் எம்.பி.ஏ என பல பிரிவுகளில் இங்கு பயிலும் மாணவர்கள் பெரும்பாலானோர் ராஜா வீட்டு கண்ணு குட்டிகள், (குறிப்பு எடுக்க பயன்படுத்துவது கூட மடிக்கணினி தான்) உடைக்கு, ஆண், பெண் பழகுவதற்கு என்று எந்த வரைமுறையோ, அளவுகோளோ கிடையாது, (இருந்தாலும் யாரும் கடைபிடிக்க போறது இல்ல, அது வேற விசயம்), ஆதே நேரம் வகுப்புகளும், பயிற்சிகளும் சிறப்பாக இருக்கும், எந்த விதமான கட்டுக்கோப்புகளும், விதிமுறைகளும் கிடையாது, சகல வசதிகளும் உண்டு உபயோகப்படுத்தி கொள்வது மாணவர்களின் திறமை, சிம்பிலா சொல்லனும்னா அமஞ்சிக்கரையில் ஒரு அமெரிக்கா தரத்தில் கல்லூரி. எம்.பி.ஏ மாணவர்களுக்கு சிறப்பாக ஒவ்வொரு 6 மாதத்திற்கும் அவர்களின் பிரிவை பொறுத்து அந்த பிரிவில் வல்லுநர்கள், வளரும் இளம் தொழில் அதிபர்கள் தங்களின் அனுபவங்களை, சந்தித்த சவாலான பிரச்சனைகளை ஒரு கலந்தாய்வு மாணவர்களுடன் பகிர்ந்துகொள்வார்கள். இதுவும் ஒரு வலுவான காரணம் ராதிகா இந்த கல்லூரியை தேர்ந்து எடுப்பதற்கு.

ராகவ் இளங்கலை முடித்ததும் இப்போது முதுகலை படிக்கப்போவதும் இதே கல்லூரியில் தான். இளங்கலை பொறியியல் கடைசி வருடத்தின் தொடகத்திலே அவனுக்கு கணினியில் இருந்த அதித ஆர்வமும், திறமையும் கிருஷ்ணா குரூப் எனும் புகழ்ப்பெற்ற பல தொழில்கள் கொண்ட நிறுவனத்தின் மென்பொறியியல் நிறுவனத்தில் பகுதிநேர வேலைக்கு காரணமானது. வேலை சம்மந்தப்பட்ட அனைத்தும் மின்னஞ்சல் வழியாக நடைபெற, முக்கியமாக ஏதேனும் வெளிநாட்டு வாடிக்கையாளர்களுடான அழைப்பு, அவர்களுக்கான தேவைகள், அதற்கேற்றவாறு இவர்கள் வடிவமைத்தவற்றை மாற்றுவது என அவசியத்திற்காக மட்டுமே அலுவலகம் செல்ல வேண்டும். நாளை கல்லூரி முதல் நாள், ஒரு நாள் முன்னடியே வந்தால் நிதானமாக கல்லூரி செல்லலாம் என்பது ராகவின் எண்ணம். விடுதியிலும் ராகவை போல வெகுசிலரே இருக்க, நாளை தான் கல்லூரியின் கேன்டீனும், விடுதியும் வழக்கம் போல் செயல்பட தொடங்கும் என்பதால் தான் ராகவ் அருகில் இருக்கும் உணவு விடுதிக்கு, உணவுக்காக சென்றது.

ஏனோ ராகவின் மனம் கார்கால மேகத்தின் வார்த்தைகளை மீண்டும் மீண்டும் ஆசை போட அதை திசை திருப்பும் விதமாக, ஒரு வாரமாக கிட்டத்தட்ட எல்லாரும் முயற்சிசெய்து என்ன தவறு என்று கண்டறிய முடியாத ஒரு கோடிங் இப்போது அவன் வசமாகி இருக்க அவனும் ஊரில் இருந்த இரண்டு நாட்களாக அதனுடன் போராடி ஓர் அளவு அதன் தவறை கண்டறிந்து இருந்தான், இப்போது மீண்டும் அதனுடன் போராடி அதை சரிசெய்து அவனின் மேல் அதிகாரிக்கு மின்னஞ்சல் செய்து முடித்தான். நெட்டி முறித்தவாறு நேரத்தை பார்க்க அது முன்மாலை பொழுது எனக்காட்ட, காலை உண்ட இட்லி இருந்த இடம் தெரியாமல் போய் இருக்க எதை செய்து வயிற்றை சமாதானம் செய்ய என யோசிக்க சார்ஜ்ரில் இருந்த அவனோட தொலை பேசியின் "கிர்கிர்" என்ற சத்தத்தில் "இது எப்போ சைலேண்ட்ல வச்சேன்" என் யோசிச்சவாறே அழைப்பை பார்க்க மகிழ்ச்சியும், கலவரமும் ஒருங்கே தோன்ற அழைப்பை ஏற்று பேச ஆரம்பித்தான்.

"ஹலோ அம்மா, எப்படி இருக்கீங்க, காலைல எட்டு மணிக்கு தான் வந்தேன், வந்ததும் செம பசியா,போன்ல சார்ஜ் இல்ல அதான் சார்ஜ்ர்ல போட்டுட்டு சாப்பிட போனேன்,போன் எப்போ, எப்படி சைலேண்ட்ல போச்சுனே தெரில, வந்து அப்படியே ஆஃபீஸ் ஒர்க்ல உட்கார்ந்துட்டேன், ரொம்ப தல வலிமா அந்த ஒர்க், ரொம்ப நேரம் போராடி இப்போ தான் முடிச்சேன், மதியம் சாப்பிட கூட இல்லை தெரியுமா, செமையா பசிக்குதுமா" என அந்த பக்கம் பேசவே வாய்ப்பு கொடுக்காமல் ஒரேடியாய் சோககீதம் வாசிக்க,

"நா போன் பண்ணதுக்கு அப்புறம் என்ன நலம் விசாரிக்க வேண்டி இருக்கு, ஹாஸ்டல் போயிட்டு பேசுன்னு சொன்னேன் தானே, நீ தான் பண்ணல உனக்கு தான் அறிவு இல்லைனு தெரியுமேனு நானும் மார்னிங்ல இருந்து போன் பண்ற அதையும் எடுக்கல, தடிமாடு மாதிரி வளர்ந்து இருக்க இதை கூட நா சொல்லனுமா, அறிவுகெட்டவனே, வேலை முக்கியம் தான் உடம்பு அதை விட முக்கியம்னு தெரியாது" என சரமாரியாக அம்மா அர்ச்சிக்க

ராகவோ "இங்க பாரு ராஜமாதா, புள்ள சாப்பிடலனு சொன்னா அம்மா பதறி ஏன் கண்ணு சாப்பிடல, சாப்பிட்டு வேல பாருப்பானு பாசமா சொல்லணும், நீ என்னடான்னா இதான் சான்ஸ்னு அதுக்கும் சேர்த்து என்ன திட்டுற இது எல்லாம் நல்லா இல்ல பாத்துக்கோ" என கதற,

"டேய் நீ யாருன்னு எனக்கு தெரியாது, நீ போன் பண்ணல,நா பண்ணும் போதும் எடுக்கலா, எப்படியும் நா திட்டுவேன் அதுல இருந்து தப்பிக்க சாப்பிடவே இல்லைனு சொன்ன நான் டைவேர்ட் ஆகிடுவேனா, இது எல்லாம் ரொம்ப பழைய ட்ரிக், புதுசா ஏதாவது ட்ரை பண்ணு மகனே, உனக்கே அம்மாடா நா, ஞாபகம் வச்சிக்கோ" என ராகவ் அம்மா அடவுகட்ட ராகவின் நிலை தான் அய்யோ பரிதாபவம்.

ஒரு வழியாய் அம்மாவை கெஞ்சி,கொஞ்சி மலை இறக்கி, அந்த கதை இந்த கதை எல்லாம் பேசி வைக்கும் போது அவனின் ராஜமாதா, "கண்ணா உடம்ப பாத்துக்கோடா, நேர நேரத்துக்கு சாப்பிடு, உன்னை நீ தான் பாத்துகனும், வாய்ப்பு கிடைச்சா நானே வரேன் உன்னை பார்க்க இல்லனா செமஸ்டர் லீவ்க்கு நீ வீட்டுக்கு வா, பாத்து பத்திரம் கண்ணா" என சராசரியான அம்மாவாக குரல் கரகரக்க கூற, அப்படியே விட்டால் அது ராகவ் இல்லையே,

"ஆமா, ஆரம்பிக்கும் போது, ஆடவுகட்ட வேண்டியது, வைக்கும் போது கண்ணானு பாசமா உருக வேண்டியது, போங்க ராஜமாதா" என சிணுங்க,

"விடுறா,விடுறா, கோவம் வந்தா தடி மாடுன்னு உண்மைய சொல்றதும், பாசம் வந்தா கண்ணானு பொய் சொல்றதும் சகஜம் தானேடா" என ராஜமாதாவை மறுபடியும் புல் போர்ம்க்கு கொண்டுவந்தே போனை வைத்தான் ராகவ்.

பறவைகள் எங்கு சுற்றினாலும், மாலையில் கூட்டில் அடைவது போல என்ன வேலை பார்த்தாலும் மனம் மீண்டும் மீண்டும் கார்கால மேகத்தின் வசமே, ஒரு நாளைக்கு எத்தனையோ பேரை வாழ்க்கையில் பார்க்கிறோம், சிலர் திரும்பி பார்க்கவைப்பாங்க, சிலர் நின்று ரசிக்கவைப்பாங்க, சிலர் மட்டும் தான் எதோ ஒரு வகை தாக்கத்தை நம்மகிட்ட ஏற்படுத்துவாங்க, கார்காலமேகம் ராகவுக்கு மூன்றாம் வகை. சில சமயம் நம்மை தூரத்துல இருந்து பார்க்கும்போது ஈர்க்கும் விசயம் பழகி பார்த்த இவ்ளோதான அப்படினு தோணும்.இந்த கார்மேகம் எப்படினு பார்ப்போம், நம்ப கிளாஸ் தானே பேசினா தெரிஞ்சிடும், என தனக்குள் பேசி ஒரு முடிவுக்கு வந்தான் ராகவ். (உண்மையில் கார்கால மேகத்தின் நினைவாய் இருந்த மனதை , நாளையில் இருந்து தினமும் பாக்கலாம், பேசலாம்னு சமாதனப்படுத்தினானோ என்னமோ யாருக்கு தெரியும்).

மறுநாள் அழகாய் விடிந்தது. வழக்கம் போல தான் என நினைச்சாலும் மனதில் ஓரத்தில் இருந்த ஆர்வம் நிஜம். ராகவ் தொட்டாலே சிவந்துவிடும் பொன்னிற மேனியன், நீ கோதி விட்டாலும் சரி, வாரி விட்டாலும் சரி, நான் ஒரே மாதிரி தான் தெரிவேன் என அடம்பிடிக்கும் சுருள் சுருள் கேசம், ஏற்கனவே சிவந்த மேனியில் இருக்கா இல்லையா என ஐயப்படும் வகையில் நெற்றியில் சிறிய சந்தன கீற்று, அம்சமாக அடர்ந்த மீசை, ஆண்களுக்கு அழகாக கருதப்படும் ஆளுமையும், கம்பீரமும் இலவச இணைப்பாக வசீகரமும் நிரம்ப பெற்ற அற்புத கலவை இவன். மணல் நிற காலசட்டை, அதற்கு தோதான வெள்ளை நீற சட்டை என கல்லூரிக்கு கிளம்பி கண்ணாடி பார்க்கையில் கண்ணாடியும் காதலிக்க செய்யும் மாய கண்ணனோ இவன்.

ஏற்கனவே அறிந்த கல்லூரி என்பதால் எதிர்பட்ட ஜூனியர், சீனியர்,ஆசிரியர்கள் என அனைவரின் ஆர்வமான பார்வைகள், நல விசரிப்புகள் என்று அவர் அவர்களுக்கு ஏற்றவாறு பதில் அளித்து அனைத்தையும் சமாளித்து அவன் வகுப்பறையை அடைய அவனுக்கு முன்னரே அவனின் கார்மேகம் வகுப்பறையில்.

வகுப்பில் நுழைந்ததும் இருக்கும் முதல் வரிசையில் முதல் இருக்கை தான் எப்போதுமே ராகவின் இடம், அதே இடத்தில் வெள்ளை நிறத்தில், சாம்பல் வண்ண பூக்கள் தெளித்த அனார்களி உடையில் அவனின் கார்கால மேகம் இருக்க, எந்த விதமான தயக்கமும் இன்றி அவளிடம் சென்று,

"ஹாய்,எனக்கு எப்பவுமே பஸ்ட் ரோல உட்கார்ந்து தான் பழக்கம், உனக்கு பிரச்னை இல்லனா, நானும் இங்கேயே உட்காரலாமா" என கேட்க நிமிர்ந்த அவனின் கார்மேகம் முழுதாக ஒரு நிமிடம் அவனை ஒரு ஆராய்ச்சி பார்வை பார்த்துவிட்டு ஒரு புன்னகையுடன் "பிலீஸ்" என்றவாறே நகர்ந்து பொன்னிற மேனியன் உட்கார இடம்விட்டு அமர்ந்தாள்.

"ஐ அம் கிருஷ்ணா, ராகவ் கிருஷ்ணா, பிரின்ட்ஸ் ஷார்ட் ஆர். கே னு கூப்பிடுவாங்க, பிரின்ட்ஸ்" என அவளின் பெயரை அறிய ஆவல் கொண்டு தன் கைகளை கார்மேகத்தை நோக்கி நீட்டினான் பொன்னிற மேனியன். கண்களில் குரும்புமின்ன நிமிந்து பார்த்த ராதிகா இதழின் ஓரம் அதக்கிய சிரிப்புடன் "நான் ராதிகா, பிரின்ட்ஸ்" என கைகுலுக்கி தன்னை அவனின் தோழியாய் அங்கீகரித்து கொண்டாள்.

ராகவோ "ராதிகாவாம், பேரும் நல்ல இருக்கு இல்ல" என யோசிக்க மனச்சாட்சியோ "குப்பமானு சொல்லி இருந்தாலும் கூட நீ கும்முன்னு இருக்குனு தான் சொல்லி இருப்ப போடா டோமாட்டோ" என சலித்துக்கொள்ள, ராசா ஜொள்ளு அப்புறம் விடலாம், அவ உன்னை பார்த்து ஒரு மார்க்கமா சிரிக்குறா என்னனு கேளு என மனசாட்சி உசுப்பி விட,

"ஏன் ஒரு மாதிரியா சிரிக்கிற" (என்னவாயிருக்கும்)

"ஒன்னும் இல்லையே" என்றவாறே மீண்டும் சிரிக்க,

"இல்ல,இல்ல என்னமோ இருக்கு, அதான் பிரின்ட் ஆகிட்டோம் இல்ல, நா தப்பா எடுத்துக்க மாட்டேன், எதுக்கு சிரிச்ச சொல்லு" (பயபுள்ள என்னமோ கிண்டல் பண்ணி இருக்கு)

"அது வந்து நீ உன்னோட பேர சொன்னது, பாண்ட், ஜேம்ஸ் பாண்ட், ஸ்டைல இருந்ததா அதான்" என சொல்லி சிரிக்க, கொஞ்ச நேரத்துல சந்தேக பட்டுட்டோமே, பயபுள்ள ஜேம்ஸ் பாண்ட் ரேஞ்சுல நினைச்சி இருக்கு என சிலிர்க்க, தொடர்ந்த ராதிகா,

"அப்புறம் எனக்கு தமிழ், ரொம்ப பிடிக்கும்,தமிழ் மேல காதல்னு கூட சொல்லலாம்"

"சரி, இருக்கட்டும் அதனால" (என்ன சொல்ல வரா இவ என சந்தேகமாக பார்க்க)

"ஆர்.கே னு ஏன் இங்கிலிஷ்ல கூப்பிடனும், நான் நல்ல தமிழ்ல ஷார்ட் கூப்பிடட்டுமா" என பவ்யமாக கேட்க, முகத்துல இருக்க குறும்புக்கும், வார்த்தைல இருக்க பவ்யத்துக்கும் சம்பந்தம் இல்லையே என யோசிச்சவாறே சந்தேகமாக "என்னனு கூப்பிடுவ" என ராகவ் கேட்க,

"நா தமிழ்ல ஷார்ட் ராகி னு" முடிக்காமல் இழுக்க, ராகவின் மனசாட்சியோ வடிவேல் ஸ்டைலில் "எப்பா அந்த புள்ள உண்ண கலாய்க்குதுபா" என எடுத்துக்கொடுக்க, அவனின் கார்மேகம் அழகிய பல் வரிசை தெரிய சில மின்னல்களை தெரிக்கவிட்டது. பேசும் போதே அழகா இருக்கே என அவன் ரசித்த கண்ண குழி, சிரிக்கும் போது இன்னும் அழகா ஆழமாய் அவனை ரசிக்க தூண்டியது. தான் அவளை ரசிப்பதை உள்ளத்தில் கண்ணாடியாம் கண்களில் கூட பிரதிபலிக்காமல், "எவ்ளோ அழகான பேர இப்படி கொல்றியே இது நியாயமா, தர்மமா, அடுக்குமா" என நாடக பாணியில் கேட்க "ராகவ் கிருஷ்ணாவை ராகவ்னும் சொல்லலாம், ஆர்.கேனும் சொல்லலாம், நா சொல்ற மாதிரியும் சொல்லலாம்"என செந்தில் பாணியில் சொல்ல மீண்டும் சில மின்னல்கள். இந்த மின்னல் கண்ணை இல்லை உன்னையே பறிக்க போகுது ராகவா உஷார் மனசாட்சி கவுண்டர் குடுக்க,

"என்ன அமைதி ஆகிட்ட, பேரு பிடிக்கலயா???"

"பிடிக்கலனா என்ன பண்ணுவ, ராகின்னு கூப்பிடமாட்டியா???" (ஒரு நப்பாசையில் கேட்க)

"பிடிக்கலனா, புதுசா, வித்தியாசமா இன்னும் வேற ஏதாவது யோசிப்பேன், என்ன சொல்ற ராகி"

"அம்மா,தெய்வமே நீ இதுவரைக்கும் யோசிச்சதே போதும், இனிமே யோசிச்சா நான் தாங்க மாட்டேன் நீ "ராகி"னே கூப்பிடு ஆத்தா, (எதுக்கு வம்பு பயபுள்ள இன்னும் கேவலமா ஏதாவது யோசிக்க போகுது) சரி யூஜி மேஜர் என்ன,எங்க பண்ண"

"அது அந்த பயம் இருக்கட்டும் தம்பி, பி.டெக் ஐடி இன் ஜே.கே காலேஜ், நீ"

"அங்க கோச்சிங் சூப்பர் இருக்கும் இல்ல, கேள்வி பட்டு இருக்கேன், நானும் பி.டெக் ஐடி தான் ஆனா இதே காலேஜ்"

ராகவ் சொல்லி முடிக்கவும், வகுப்பு ஆரம்பிப்பதற்கான மணி அடிக்கவும் சரியாக இருந்தது. அதற்கு பிறகான நேரம் அனைத்தும் ஆசிரியர் மற்றும் மாணவர்களின் அறிமுகப்படலத்திலே சென்றது. மதிய உணவு இடைவேளைக்கான மணி அடிக்கவும், ராகவ், ராதிகாவிடம் " லன்ச் எடுத்துட்டு வந்து இருக்கியா?"

"இல்ல ராகி, இன்னைக்கு தானே முதல் நாள் அதான் எப்படி இருக்கும்னு தெரில, அதனால எடுத்துட்டு வரல"

"சரி அப்போ வா, கேன்டீன் போய் சாப்பிடலாம், இங்க பிரியாணி சூப்பரா இருக்கும் தெரியுமா"

"சரி போலாம், ஆனால் நம்ப பிரின்ட் ஆனதால இன்னைக்கு என்னோட ட்ரீட், ஓகே வா"

"டபுள் ஓக்கே, ராதா"

"ராதாவா"

"ஆமா, ராதிகா ராதையோட பேரு தானே அதனால நா உன்ன ராதான்னு தான் கூப்பிட போறேன், என்ன பாத்து கத்துக்கோ எப்படி அழகா பேர சுருக்கணும்னு, நீயும் வச்சியே ராகி, கோதுமைனு"

"நீ இங்கிலிஷ்ல ஆர்.கேனு சொன்ன, நா செந்தமிழ்ல ராகின்னு சொன்னேன், அவ்ளோ தான் வித்தியாசம், இப்போ சொல்லு தப்பு யாரு மேல"

"உன் கிட்ட பேசி என்னால ஜெயிக்க முடியாது, வா போலாம், பிரியாணி காலி ஆகிட போகுது, சாப்பாடு மிகவும் முக்கியம் அமைச்சரே" கேலி பேசிக்கொண்டே பொன்னிற மேனியன் முன்னே செல்ல கார்மேகம் தன் பர்ஸை எடுத்துக்கொண்டு நிமிரும் போது வகுப்பு வாசலை தாண்டி இருந்தான் ராகவ். அங்கு அவனுக்காக காத்திருந்த நபரை கண்டு ராதிகா வாசலிலே தயங்கினாள் யோசனையோடு.


இவன் ராதையின் கண்ணன்…………………….
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top