ராதையின் கண்ணன் இவன்-14

Advertisement

Chittijayaram

Well-Known Member
Rajamatha pongaluku asai pattu ippadi matikitiye ma, idula vaaram vaaram poi parthu pongal sapta avlo Dan, Amma paiyanum super ah pesikuramga, inda madiri Amma kidaika kuduthu vechirukanum, mudalla sithiya veetai vittu thurathuda da, nice update ruthra dear thanks.
 

Hema Guru

Well-Known Member
"ராஜா மாதா என்ன பண்ணி வச்சி இருக்கீங்க" என பொன்னிற மேனியன் பதற,

"எப்புபுடி" புடவையில் இல்லாத கலரை பெருமையாக தூக்கிவிட்டு கொள்ள,

"எப்படி எப்படி பார்த்தீங்க, அதும் செல்பி வேற, நானே இன்னும் அவ கூட ஒரு போட்டோ கூட எடுக்கல" காதில் புகை வராத குறையாக பேச,

"டேய் பையா, அதுக்கு எல்லாம் ஒரு முக ராசி வேணும்டா, வீட்டுக்கு கூட்டிட்டு வாடா இல்ல நான் காலேஜ் வரேன் ஒரு இன்ரோ குடுடானு சொன்னா அப்படி சிலிர்த்துகிட்ட, அதான் நானே களத்துல குதிச்சிட்டேன்"

"அதான் சீனியர்ஸ் கிட்ட இருந்து அவர்களுக்கே தெரியாம சுட்டு பிரெசர்ஸ் டே போட்டோவ அனுப்புனேன் இல்ல நீங்க பார்க்க, நா அனுப்புலனா தெரிஞ்சி இருக்கும் உங்க பவுசு, ராதா கோவிலுக்கு வருவானு எப்படி தெரியும், எப்படி கரெக்ட் ஆஜர் ஆனிங்க உண்மையை சொல்லுங்க, எல்லாம் உங்க பிளான் அஹ", அவன் சொன்ன முன்பாதியை காற்றில் பறக்கவிட்டார் ராஜமாதா, பதில் சொல்ல முடியாத கேள்விகளை கண்டுகொள்ளாத மாதிரி கடப்பது ராஜதந்திரம் அல்லவா, எனவே பின் பாதிக்கு மட்டும் பதில் சொல்லலானார்,

"உனக்கு இன்னும் ராஜமாதா வை பத்தி தெரில டா, நா பிளான் பண்ணி இருந்தா ஒரு வாரம் முன்னடியே பண்ணி இருக்க மாட்டேன், நீ சொன்னத மதிச்சி, சரி நீயே இன்ரோ கொடுப்பனு வெய்ட் தான் பண்ணேன், ஆனா காட் தான், உன்னோட பையனை நம்பாத, அவன் அதுக்கு எல்லாம் சரி பட்டுவர மாட்டான், அதனால் நானே உனக்கு உன்னோட மருமகளை காட்டுறேனு சொல்லி இன்னைக்கு எங்களை பார்க்க வச்சிட்டாரு, இதுல இருந்து என்ன தெரியுது கடவுள் என் பக்கம் இருக்கான் குமாரு" என பொன்னிற மேனியனை வார,

"ராஜமாதா வயசுக்கு ஏத்த மாதிரியா பேசுறீங்க, சின்ன பசங்க மாதிரி பேசுறது எல்லாம் படம் டயலொக், உங்களை " என பல்லை கடிக்க,

"டேய் நா யூத்டா, யூத் எல்லாம் அப்படி தான் இருப்பாங்க, உனக்கு தான் வயசு ஆகிடுச்சு, அதான் எதுக்கு எடுத்தாலும் கோவம் வருது, பார்த்துடா மகனே பீபி வந்துட போகுது" என ஏகத்துக்கும் பேச,

"ஆமா, ஆமா, 23 வயசுல ஒரு பையன் இருக்குற நீங்க யூத், அந்த 23 வயசு பையனுக்கு ரொம்ப வயசு ஆயிடுச்சி இல்ல இதை எல்லாம் கேட்கணும்னு எனக்கு எழுதி இருக்கு ஆண்டவா" என பொன்னிற மேனியன் கலாய்க்க, அவரோ

"டேய் ஒரு முக்கியமான விசயத்தை சொல்ல மறந்துட்டேன்",

"நீங்க சொன்ன விசயத்தையே என்னால இன்னும் ஜீரணிக்க முடில, இதுல இன்னும் என்னத்த மறந்திங்க, மொத்தமா சொல்லிடுங்க"

"அது வந்து, நானும் ராதிகாவும் இனிமே எல்லா சனி கிழமையும் மீட் பண்ணலாம்னு முடிவு பண்ணி இருக்கோம்" என மகிழ்ச்சியுடன் அறிவிக்க,

"என்னாது" என அதிர்ச்சியாக,

"ஷாக்க குறை, ஷாக்க குறை"

"ராஜமாதா ஒரே ஒரு வேண்டுகோள், தயவுசெஞ்சி உங்களை மாதிரி மட்டும் அவளை மாற்றிடாதிங்க, உங்க புள்ளை பாவம்,அதை ஞாபகம் வச்சிக்கோங்க"

"சரிடா, சரிடா நீ இப்படி சாஷ்டாங்கமா கால்ல விழுந்து கெஞ்சுறதுனால நீ சொன்னதை பற்றி நா யோசிக்கிறேன்" என பெருந்தன்மையாக சொல்ல,

"உங்களுக்கு எல்லாம் புள்ளையா பொறந்துட்டு மானம் ரோஷம் எல்லாம் பார்க்க முடியுமா, உங்களுக்கு பிடிச்சி இருக்கா" ஏற்கனவே மருமகள் என சொல்லி மறைமுகமாக தன் சம்மத்தை சொல்லி இருந்தாலும், உறுதிபடுத்திக் கொள்ள வேண்டி ஒரு தயக்கமும், ஒரு எதிர்பார்ப்பும் போட்டியிட கேட்க, அவரோ,

"எனக்கு ரொம்ப பிடிச்சி இருக்குடா, அவ்ளோ பாந்தமா இருக்கா, நல்ல ஜீரால ஊருன குலாப் ஜாமுன் மாதிரி ஸ்வீட் அஹ இருக்காடா" என வழக்கமான தன் ஸ்டைலில் பதில் தர, அவரின் பதில் நிம்மதியை தர ஒரு ஆசுவாச மூச்சை வெளியிட்டவரே,

"தான்க்ஸ்மா, உங்களுக்கு பிடிக்கும்னு எனக்கும் தெரியும், ஆனா நீங்க எத்தனை ஸ்டைலில் எப்படி கேட்டாலும் உங்களுக்கு ஸ்வீட் கண்டிப்பா கிடையாது, அவ்ளோ சுகர் அஹ வச்சிக்கிட்டு நினைப்பு எல்லாம் குலாப் ஜாமுன் மேல, நீங்க சுகர் மாத்திரை எல்லாம் ஒழுங்கா சாப்பிடுறீங்க தானே" என கேட்க, ராஜமாதாவோ "இன்னும் பயிற்சி வேண்டுமோ, ராஜ தந்திரம் அனைத்தும் வீணாகிவிட்டதே", என யோசித்தாலும் ராதிகாவுடன் உண்ட சக்கரை பொங்கல் ஞாபகம் வர, பேச்சு அபயாகரமான திசையை நோக்கி பயணிப்பதை உணர்ந்தவர் இனிமேல் எதையேனும் பேசினால் தன் வாயால் உண்மையை சொல்லிவிடுமோ என அஞ்சி பேச்சை முடிக்கும் விதமாக,

"ஒழுங்கா சாப்பிடுறேன்டா, என்ன பத்தி கவலை படமா நீ படிக்கிற வேலையை பாரு, நேரத்துக்கு சாப்பிடு என்ன" ஒரு வழியாக பேசி முடித்தவர், வீட்டுக்கு போனதும் ஒரு சுகர் மாத்திரையை போட்டுடனும் முடிவோடு வீட்டை நோக்கி பயணிக்க ஆரம்பிக்க விதியோ அவரை பொன்னிற மேனியனிடம் வசமாக சிக்க வைத்து வேடிக்கை பார்த்தது.

வழக்கம் போல திங்கட் கிழமை கல்லூரிக்கு வந்த ராதிகாவின் கண்கள் எப்போதும் தனக்காக பொன்னிற மேனியன் காத்திருக்கும் மரத்தடியை பார்க்க அது வெறுமையாக காட்சி அளித்தது, என்னவென்று சொல்ல முடியாத உணர்வு அகம் எல்லாம் வியாபிக்க என்ன ஆச்சு, வழக்கமா எனக்கு முன்னடியே வந்துடுவானே என்ற யோசனையோடு அந்த மரத்தடியில் சென்று அவனின் வரவை எதிர்பார்த்து, வாசலை பார்த்த வண்ணமே இருந்தாள். அப்போ ரஞ்சன், இன்னும் இருவருடன் மரத்தடியை நோக்கி வருவது தெரிந்தது. பிரஷர்ஸ் டே பிறகு எங்கேயாவது பார்த்தால் ஒரு நட்புடன் சிரிக்கும் அளவான பழக்கம் இருவருக்கும். அவன் அருகில் வரவும், இவள் மரியாதைகாக, எழுந்து நிற்கவும், அவனே பேச ஆரம்பித்தான்.

"ஹாய் ராதிகா" என அருகில் இருந்த இருவருக்கும் இவளிடம் பேச விருப்பம் இல்லை என்பது அவர்கள் உடல் மொழியிலே தெரிய, அவளும் அவர்களை போலவே அந்த இருவரை கணக்கில் கொள்ளாமல், ரஞ்சனை பார்த்து மட்டுமே பேச ஆரம்பித்தாள்.

"ஹலோ சீனியர்" நம்மிடம் பேச என்ன விசயம் என்ன யோசனையுடன் அவள்,

"ஒன்னும் இல்ல இன்னைக்கு ஆர்.கே வரலையா"

"எப்பவும் இந்த நேரத்திற்கு வந்து இருப்பாங்க, இன்னைக்கு என்னனு தெரில, ஏன் என்ன ஆச்சி சீனியர்" என கேட்க,

"இல்ல ஆர்.கே கிட்ட ஒரு அசைன்மெண்ட் விசயமா கொஞ்சம் டீடெயில்ஸ் கேட்டு இருந்தேன், இன்னைக்கு தரேன்னு சொல்லி இருந்தான், எனக்கு இன்னைக்கு அந்த டீடெயில்ஸ் கண்டிப்பா வேணும், ஆர்.கே ஹாஸ்டல்லையும் இல்ல, அதான் உனக்கு தெரியுமானு கேட்கலாம்னு" என இழுக்க,

"இருங்க நான் போன் பண்ணி பார்க்குறேன்" என கை பேசியை எடுக்க, அந்த இருவர் முகத்திலும் அதிருப்தி அப்பட்டமாக தெரிய அதோடு அந்த இருவரில் ஒருவன் ரஞ்சனிடமும் " நா தான் சொன்ன இல்ல, இந்த பொண்ணுக்கு ஒன்னும் தெரியாதுனு, சும்மா பேசுனா எல்லாத்தையும் இந்த பொண்ணுகிட்ட சொல்லிட்டு தான் ஆர்.கே செய்வான, நாம போன் பண்ணி எடுக்காதவன், இதோ இப்போ இவ பண்ணதும் அப்படியே எடுத்து பேச போறான், நாம டைம் தான் வேஸ்ட் பண்றோம்" என பொறிவது இவள் செவிகளிலும் திவ்யமாக விழ கை தன்போக்கில் பொன்னிற மேனியனுக்கு அழைத்தது. உடனே அவன் அழைப்பை ஏற்கவும், இங்கு இருந்த அந்த மூவரையும் பாத்தவாறே பேச ஆரம்பித்தாள்.

"ஹலோ ராகி" இவளின் அழைப்பே அனைவரையும் திரும்பி பார்க்க வைத்தது, இந்த அழைப்பை கொண்டு அவனிடம் தான் பேசுகிறாளா என புரிந்துகொள்ள முடியாத குழப்பத்துடன் பார்க்க,

"ஹலோ ராதா, நானே உனக்கு போன் பண்ணனும்னு நினைச்சேன், நீயே பண்ணிட்ட"

"ஆமா அதை நா போன் பண்ணதுக்கு அப்புறம் சொல்லு, என்ன ஆச்சு காலேஜ் வரலையா நீ"

"இல்ல ராதா, அம்மாக்கு கொஞ்சம் உடம்பு சரி இல்லை, அதான் வீட்டுக்கு வந்து இருக்கேன்" ஏகமான வருத்தம் அவன் குரலில்,

"என்ன ஆச்சு, இப்போ எப்படியிருக்காங்க"

"சுகர் கொஞ்சம் அதிகம் ஆகி, மயக்கம், இப்போ நல்ல தான் இருக்காங்க, அதான் ஒரு நாள் அவங்க கூட இருந்துட்டு வரலாம்னு இன்னைக்கு லீவ் போட்டுட்டேன்"

"ஓ, அப்புறம் ரஞ்சன் வந்து இருக்காங்க, ஏதோ உன்கிட்ட கேட்டு இருந்தாங்கலாமே" என முடிக்காமல் இழுக்க, அங்கு பொன்னிற மேனியனோ "என்னை பற்றி உன்கிட்ட தான் விசாரிக்கணும்னு தோனி இருக்கு பாரேன், நான் நினைச்சதை விட நம்ப ஜோடி காலேஜ்ல பேமஸ் ஆகிடிச்சு போலவே என் அருமை கார்மேகமே" என மனம் ஆர்ப்பரிக்க, வழக்கம் போல் எதையும் வெளிக்காட்டாத குரலில்,

"ஆமா ராதா, அதை சனிக்கிழமையே முடிச்சிட்டேன், அவசரமா கிளம்பவும் அதை அப்படியே என்னோட டேபிள் மேல வச்சிட்டு வந்துட்டேன், என் ரூம் மேட் கிட்ட கேட்டு வாங்கிக்க சொல்லு" என,

"ஒரு நிமிஷம் இரு ராகி" என்றவள் அந்த மூவரையும் நிமிர்ந்து ஒரு பார்வை பார்த்து விட்டு பார்வையை ரஞ்சனில் நிலைக்க விட்டு "சீனியர் அவங்க நீங்க கேட்டதை முடிச்சி அவங்க டேபிள்ல வச்சி இருக்கங்களாம், அவங்க ரூம் மேட் கிட்ட கேட்டு வாங்கிக்க சொன்னாங்க" என அந்த இருவரின் பாவமும் பார்க்க இவளுக்கு சிரிப்பு பொத்துக்கொண்டு வர வேற பக்கம் தன் முகத்தை திருப்பிக்கொண்டாள், அவர்கள் அங்கிருந்து விடைபெறவும்,

"அம்மா நிஜமா நல்லா இருக்காங்க தானே, ஒன்னும் பிரச்சனை இல்லை தானே" என கேட்க, அவர்கள் முன்னாள் ஏதும் கேட்க விரும்பால் அவர்கள் சென்றதும் கேட்கிறாள் என புரிய,

"நிஜமா டா நல்ல இருக்காங்க"

"அப்புறம் ஏன் உன் வாய்ஸ் இவ்ளோ டல் அஹ இருக்கு", ஒரு ஆராட்சி பாவம் அவளின் குரலில்,

"அது ஒன்னும் இல்ல ரெண்டு நாள் ஹாஸ்பிடல் வீடுனு கொஞ்சம் அலைச்சல், சரியா தூங்கல அதான்",

"சரி சரி அம்மாவை நல்லா பார்த்துக்கோ, நா ரொம்ப கேட்டேன்னு சொல்லு, உன்னையும் பார்த்துக்கோ சரியா" என இழுக்க,

"உத்தரவு மேடம், எதையோ சொல்ல வந்து சொல்லாம விட்ட மாதிரி இருக்கே, என்னனு முழுசா சொல்லி முடி ராதா"

"இல்ல நாளைக்கு வந்துடுவ தானே" அவளின் குரலில் இருந்த பாவம் அவனை மகிழ்ச்சி கடலில் தள்ள, என்னை பார்க்காதது அவளை பாதிக்கிறதா, என்னை அவள் தேடுகிறளா என மனம் ஆர்பரிக்க,

"ஆமா ராதா வந்துடுவேன்" என குரலில் மகிழ்ச்சியை மறைக்காமல் வெளிப்படுத்த, அதை கவனிக்காத அவனின் கார்மேகமோ "பாய்" என அழைப்பை துண்டிக்க, என்ன தான் எதையும் எதிர்பார்க்காமல் செலுத்துவது தான் உண்மையான அன்பு என்றாலும், நாம் செலுத்தும் பாசத்திற்கு பிரதிபலிப்பை நம்மவரிடம் எதிர்பார்ப்போம் தானே, அதை காண்கையில் அகமும் முகமும் மலரும் தானே, பொன்னிற மேனியனும் அதற்கு விதிவிலக்கல்லவே, முகம் முழுதும் மலர்ந்து விகசிக்க திரும்பியவனை பார்த்த அவனின் ராஜமாதாவிற்கு இங்கு வந்த இரண்டு நாட்களில் இன்று தான் சிரிக்கிறான் என நினைக்க மனம் அவன் வந்த நாளிற்கு சென்றது.

அன்று ராதிகாவை பார்த்துவிட்டு வீட்டிற்கு வந்தவர் மகிழ்ச்சியில் சர்க்கரை வியாதிக்கான மாத்திரை எடுக்க சுத்தமாக மறந்து போக, மதிய உணர்விற்கு பிறகு ஓய்வு எடுக்க தனது அறைக்கு சென்றுவிட்டார். மாலை தேனீருடன் இவரின் அறைக்கு வேலையாள் வரவும், படுக்கையில் இருந்த எழுந்த அவருக்கு கண்கள் இருட்டவும் அப்படியே மயங்கினார். இவரின் மயக்கத்தை பார்த்து பயந்து அந்த வேலையாள் தான் பொன்னிற மேனியனுக்கு அழைத்து சொல்ல, அவன் அங்கிருந்தே தங்கள் குடும்ப மருத்துவருக்கு அழைத்து தாயாரின் நிலையை விளக்கி சென்று பார்க்குமாறு பணித்ததோடு அல்லாமல் அடித்து பிடித்து கிடைத்த வண்டியை பிடித்து வீட்டிற்கு கிளம்பினான்.

இவன் பாதி வழியில் இருக்கும் போதே அழைத்த இவர்களின் குடும்ப மருத்துவர் சர்க்கரை அளவு அதிகம் ஆனதால் வந்த மயக்கம் தான், பயப்பட ஒன்றும் இல்லை என்று கூறி மருந்துகள் தந்து உள்ளதாகவும், இன்னும் சில மணி நேரங்களில் மயக்கம் தெளிந்துவிடுவார் என சொல்லவும் தான் உயிரே வந்தது பொன்னிற மேனியனுக்கு. இவளோ கலவரத்திலும் அவனின் சித்தி, சித்தப்பாவிடம் இருந்து எந்த தகவலும் இல்லை.

இவன் வீடு வந்து சேரவும் அவனின் ராஜமாதா கண்முழிக்கவும் சரியாக இருந்தது. இவனை இந்த நேரத்தில் இங்கு எதிர்பார்க்காதவர் மகிழ்ச்சியுடன் அவனை வரவேற்க வாயை திறக்க ,இறுகி இருந்த அவனின் முகமும், தன் அருகில் இருந்த மருத்துவரும் அவனின் திடீர் வரவிற்கான காரணத்தை பறைசாற்ற மாத்திரை சாப்பிட மறந்த தன் மறதியை நொந்தவாறே "சொதப்பிட்டியே ராஜி" என மானசீகமாக தன் தலையில் அடித்துக்கொண்டவர், இவனிடம் இந்த நேரத்தில் வாயை கொடுப்பதும், ஒன்று முதலை வாயில் தலையை கொடுப்பதும் ஒன்று என தன் அனுபவ அறிவு சொல்ல இனி ஏன் வாயை திறக்க போகிறார் ராஜமாதா.

ராஜமாதாவிடம் ஒரு வார்த்தையும் பேசாதாவன், மருத்துவரிடம் மறுபடியும் ஒரு முறை அவரின் உடல்நிலையை பற்றி விசாரித்து அறிந்து கொண்டவன், அவருக்கு நன்றி கூறி வாசல் வரை சென்றி வழியனுப்பி வைத்தான். இருந்த எல்லா வேலைகாரர்களையும் அழைத்து எப்படி சர்க்கரை அளவு அதிகமானது, உணவு முறை ஏதேனும் மாற்றபட்டதா என கேள்விகளால் ஒரு மணி நேரம் அவர்களை ஒரு வழியாக்கியவன், அவருக்கான உணவு பட்டியலை எந்த காரணத்தை கொண்டும் மாற்ற கூடாது என அறிவுறித்தியே அவர்களை அனுப்பினான்.

இரவு தாமதமாக வந்த அவனின் சித்தியும், சித்தப்பாவும் விசயம் அங்கு இருக்கும் அவர்களுக்கு நம்பகமான சில வேலைக்காரர்கள் மூலம் தெரியவர மறுநாள் காலை வந்து நலம் விசாரித்ததோடு, அருகில் இருக்கும் அவர்களுக்கு தகவல் சொல்லாமல் தள்ளி இருக்கும் அவனுக்கு தகவல் சொல்லி தொந்தரவு செய்ததாக வேலையாளையும் குறை சொல்ல, அவர்களை ஒரு பார்வை பார்த்ததோடு சரி ஒரு வார்த்தையும் பேச வில்லை பொன்னிற மேனியன். ஆனால் அவர்கள் சென்றதும், "இங்க பாருங்கமா, கோவத்தில் பேசுனா கண்டிப்பா தப்பா போய்டும்னு உங்களுக்காக தான் அவங்களை எதும் பேசாம இருக்கேன், உங்க தங்கச்சிகிட்டவும், அவங்க வீட்டுகாரர் கிட்டவும் சொல்லி வைங்க, அப்பா இருக்கும் போதே அவங்களுக்கு எல்லாமே நீங்க தான் பண்ணிங்க, இப்போ நல்ல வசதியா இங்கேயே தங்கிக்கிட்டு,நம்ப குடும்ப பேரை, அவங்க அவங்க வசதிக்காக பயன்படுத்துறது எல்லாம் எனக்கு தெரியாதுனு நினைக்குறாங்களா, உங்களுக்கு துணையா இருக்காங்க அப்படின்ற ஒரே காரணத்துக்காக தான் அமைதியா இருக்கேன், ஆனா அதையும் ஒழுங்கா பண்ணாம ஊரை சுத்த தான் அவங்களுக்கு டைம் இருக்கு, சொல்லி வைங்க, அப்புறம் நீங்களே நினைச்சாலும் அவங்களை வீட்டை விட்டு வெளிய அனுப்பறதை தடுக்க முடியாது" என அவனின் ராஜமாதாவிடம் ஆடித்தீர்த்து விட்டான்.

அவனின் ராஜமாதாவை மருத்துவமனை அழைத்து சென்று ஒரு நாள் முழுக்க அவரின் உடல்நிலையை அறிய எல்லா சோதனைகளும் செய்து எல்லாமே நலம் என்று அறிந்த பின் தான் அமைதியானான். "அடேய் ஒரு பொங்கலுக்கு இது எல்லாம் ரொம்ப ஓவர் டா" என நினைத்தாலும் அதை அவனிடம் சொல்லி வாங்கிகட்டி கொள்ள விருப்பம் இல்லாமல் தனது ராஜாதந்திரத்தை கடைபிடித்தார் ராஜமாதா. வந்த போது இருந்து இறுக்கம் திங்கள் கிழமை அவனின் கார்மேகத்திடம் பேசும் வரையும் நீடித்தது. அதற்பிறகு தான் சற்று இலகுவானான், அன்று முழுவதும் தன் தாயுடனே நேரத்தை செலவிட்டவன், தன் ராஜமாதாவை பார்த்துக்கொள்ள ஒரு செவிலியரை அவர் எவ்ளோ தடுத்தும் கேளாமல் வைத்துவிட்டே மாலை தன் விடுதிக்கு கிளம்பி சென்றான்.

இவன் ராதையின் கண்ணன்…………..
தாயில்லாமல் நானில்லை, தானே எவரும் வருவதில்லை, எனக்கொரு தாய் இருக்கின்றாள், அவள் என்றும் என்னை காக்கின்றாள்.
For kaarmegam- உன்னை காணாத கண்ணும் கண் இல்லயே, உன்னை எண்ணாத நெஞ்சும் நெஞ்சில்லையே, நீ சொல்லாத சொல்லும் சொல் லில்லையே, நீ இல்லாமல் நானும் நான் இல்லயே
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top