ராதையின் கண்ணன் இவன்-11

Advertisement

E.Ruthra

Well-Known Member
மக்களே நீங்க எல்லாரும் ஆவலோடு எதிர்பார்த்த கிறிஸ் யாருன்னு இன்னைக்கு தெரிஞ்சிடும். கொஞ்சம் பெரிய எபி தான் இன்னைக்கு, படிச்சிட்டு சொல்லுங்க மக்களே.

அத்தியாயம் -11

இங்கு கார்மேகம் கிறிஸ் பற்றி பொன்னிற மேனியனிடம் சொல்ல துவங்கிய அதே நேரம், அங்கு கிறிஸ் அவனும், அவன் டாலியும் சிறுவயதில் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பார்த்து தங்களின் முதல் சந்திப்பை அசைப்போட்டு கொண்டு இருந்தான்.

தாரணி புதுவையை சொந்த ஊராக கொண்ட ஒரு பணக்கார குடும்பத்தில் வேதநாயகம், நீலவேணி தம்பதியருக்கு ஒரே பெண்ணாக பிறந்து செல்வ செழிப்போடு வளர்ந்தவர். மேல் படிப்புக்காக அமெரிக்கா சென்றவர் படிப்போடு சேர்த்து காதல் பாடத்தையும் படிக்க, வீடே போர்க்களம் ஆனது. வீட்டை எதிர்த்து தான் காதலித்த ஜேம்ஸ் ஸ்மித் என்ற அமெரிக்கரையே மணம் புரிந்தார். அடுத்த வருடமே அவர்களின் காதலுக்கு பரிசாக பிறந்தவன் தான் கிறிஸ் என ராதிகாவால் அழைக்கப்படும் கிறிஸ்டோபர் ஸ்மித். வழக்கமான இந்திய பெற்றோர்களாக குழந்தை பிறப்பதற்காகவே காத்திருந்ததை போல் தாரணியின் பெற்றோரும் தங்கள் பெண்ணை ஏற்றுக்கொண்டனர்.

எட்டு வருடங்கள் திகட்ட திகட்ட தன் காதல் கணவரோடும், காதல் பரிசோடும் வாழ்ந்த தாரணி மீண்டும் இரண்டாவது காதல் பரிசை தன் மணிவயிற்றில் கொண்டிருந்த நேரம் அது. ஜேம்ஸ் ஸ்மித் பெற்றோரை சிறு வயதிலே இழந்து தன் பாட்டியிடம் வளர்ந்தவர்.தன்னிடம் இருந்த முதல் முழுவதும் போட்டு ஆரம்பித்த தொழிலில் கடந்து சென்ற எட்டு ஆண்டுகளில் அபார வளர்ச்சி. அதுவே அவருக்கு நிறைய எதிரிகளையும் பெற்று தந்தன. அவரின் வளர்ச்சி பிடிக்காத தொழில் எதிரிகள் அவரை கொலை செய்ய அவர் தன் குடும்பத்துடன் வெளியே செல்லும் நேரத்தை தேர்ந்தெடுத்து கொடிய விபத்தை அரங்கேக்கேற்ற அந்த விபத்தில் தாரணியும்,இரண்டு ஸ்மித்ம் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

விசயம் கேள்விப்பட்டு தாரணியின் பெற்றோர் அங்கு செல்வதற்குள் தாரணி பூவுலகை விட்டு விடைப்பெற்று இருந்தார்.மருமகனும், பேரனும் உயிர்க்கு ஆபத்தான நிலையில் இருக்க இரு வயதானவர்களும் திண்டாடி தான் போயினர். கிறிஸ் கண்முழிக்க ஒரு வாரம் ஆனது என்றால் ஜேம்ஸ் கண்விழிக்க இரண்டு வாரம் ஆனது. இருவருமே முதலில் கேட்டது தாரணியை தான், குழந்தை அழுது ஆர்ப்பாட்டம் பண்ண, ஜேம்ஸ் தன் காதல் மனைவிக்காகவும், தன் மனதளவில் சுமந்த பிறக்காத தங்கள் குழந்தைக்காகவும் உள்ளுக்குள் உடைந்து வாய் மூடி கதறினார். அது வரை நடந்தது விபத்து என நினைத்து இருந்த ஜேம்ஸ் இது திட்டமிட்டு நடத்தப்பட்ட கொலை முயற்சி என்று அறிந்து, இரண்டு நாட்கள் தீவிர சிந்தனை வசம் இருந்தார். தன் எட்டு வருட உழைப்பு, ஆசை மகனுக்காக அவர் உருவாக்கிய சாம்ராஜ்யம், அதை அவனிடம் ஒப்படைக்க வேண்டிய பொறுப்பு அவருக்கு உள்ளது. இங்கு இருக்கும் வரை என் நேரமும் உயிருக்கு ஆபத்து தான், தொழில் போட்டியில் தன் காதல் மனைவியையும், ஒரு குழந்தையும் இழந்த ஜேம்ஸ் இருக்கும் ஒரே மகனையும் இழக்க விரும்பாமல், உரிய வயது வந்து அவன் வியாபார பொறுப்பை ஏற்கும் வரை அவனை தன் மனைவியின் பெற்றோரின் பொறுப்பில் விட முடிவு செய்து அவர்கள் அனைவரும் இந்தியா செல்ல ஏற்பாடு செய்தார்.

தன் தாய்வழி தாத்தா, பாட்டியுடன் புதுவை வந்த ஏழு வயது கிறிஸ்கு முதலில் சில மாதங்கள் ஏற்பட்ட எலும்பு முறிவுகளுக்கான சிகிச்சை என மருத்துவமனையிலேயே கழிய, இங்கு உள்ள சூழ்நிலையில் ஒன்ற ரொம்பவே சிரமப்பட்டான். தன் தாயுடன் தமிழ் உரையாடுவதால், தமிழ் நன்கு புரியும் ஆனால் தமிழ் அவனுக்கு சரளமாக பேச வராது, பட்லர் தமிழ் தான். தன் தாய், தந்தை, அதோடு புது வரவாக அவன் எதிர் பார்த்து இருந்த அவன் தங்கை என பாசகூட்டில் இருந்தவன், ஒரே நாளில் தன் தாயை இழந்து, இருக்கும் தந்தையும் பிரிந்து பிறந்ததில் இருந்து பார்த்தே இராத புதிய தேசத்தில், எப்போதாவது தன்னை காண வந்து சில நாட்கள் மட்டுமே உடன் இருக்கும் வெகுவாக அறிமுகமான உறவுகளுடன். சூழ்நிலை மிக கனமாக இருந்தது அந்த சிறுவனுக்கு. அவனின் உயிரை பற்றி கவலை கொண்டவர்கள் அந்த சிறுவனின் மனநிலையை புரிந்துகொள்ள தவறினர்.

அடுத்து வந்த கல்வியாண்டில் கிறிஸ்யை புதுவையில் உள்ள புகழ்பெற்ற இரு பாலரும் பயிலும் தனியார் பள்ளியில் நிறைய நன்கொடை கொடுத்து அவனின் வயதிற்கு ஏற்றவாறு மூன்றாம் வகுப்பு சேர்த்தனர். ஒரே மகள் இறந்த சோகத்தில் நீலவேணி அம்மையார் படுத்த படுக்கையாக, தொழிலை கவனிக்க வேண்டிய கட்டாயம் வேதநாயகம் அய்யாவுக்கு. கிறிஸ்யை கவனித்துக் கொள்ள என தனியே ஆள்வைத்தனர். உடல் நிலை சரியாக அவன் எடுத்து கொண்ட நாட்கள், வெகுவாக அறிமுகம் ஆன சொந்தங்களும் இல்லாமல் தனிமையில் கழிந்த நாட்கள் அவனை மூர்க்கனாக மாற்றியது.

பள்ளி சேர்ந்து ஒரு மாதம் முடிந்து இருந்த நேரத்தில், கூட பயிலும் மாணவன் இவனின் தமிழை கிண்டல் பண்ண, வாய் வார்த்தையில் ஆரம்பித்து ஒரு கட்டத்தில் இருவரும் கட்டிபுரண்டனர். மற்ற மாணவர்கள் இருவரையும் விளக்க, வீட்டிற்கு செல்லும் நேரத்தில் நடந்ததால், ஆசிரியர்களின் கவனத்திற்கு செல்லாமல் போனது. வீட்டுக்கு அழைத்து செல்ல டிரைவர் வந்து இருப்பார் என தெரிந்தும், நின்று பேச கூட நேரம் இல்லாத தாத்தா, பேச நினைத்தாலும் உடல் ஒத்துழைக்காத பாட்டி என வீட்டிற்கு சென்றால் மிரட்டும் தனிமை, அதிலிருந்து தப்பிக்க நினைத்து பள்ளியில் உள்ள மரத்தடியில் அமர்ந்து போவோர் வருவோரை பார்க்க ஆரம்பித்தான்.

அதே நேரம் சோகமே உருவாய், தனியாய், வெள்ளை வெளேரென அமர்ந்து இருந்த கிறிஸ் ராதிகாவின் கவனத்தை கவர, அவனிடம் பேச எண்ணி அருகில் வர அப்போது தான் ரத்தம் வருவதை கவனித்து, குழந்தைகளுக்கே உண்டான இயல்பான தன்னலமற்ற குணம் தலை தூக்க, அவனின் வலியை தன் வலி போல் பாவித்து பதறி, "அச்சச்சோ ரத்தம் வருது, உனக்கு வலிக்கலையா" என்ற சிறு பெண்ணின் குரலில் திரும்ப, கொளுக் மொழுக் என இரட்டை சடையில் அடர்ந்த நிறத்தில் கண்களில் முட்டிய கண்ணீருடன் ஒரு பெண் இவனின் அருகில் நிற்கவும், குனிந்து அந்த பெண் காட்டிய இடத்தை அப்போது தான் கவனிக்க, தான் செய்த போரின் விழுப்புண் முட்டியில் ரத்தத்துடன்,

"எனக்கு வலிக்கல நீ அழாதா", ஏனோ அவள், இவன் வலியை தன் வலி போல பாவித்து தனக்காக கண்ணீர் சிந்த அதை அனுமதிக்க மனம் இல்லாமல் அவளை சமாதானப்படுத்த முயற்சிக்க, இங்கு வந்து இத்தனை மாதத்தில் அன்புடனும், தனக்காக கண்ணீர் சிந்தும் ஓர் உயிர், ஏனோ அழையா விருந்தாளியாய் அவன் தாயின் நினைவு, அந்த குட்டி பெண் மீண்டும்,

"தண்ணி போட்டு வாஷ் பண்ணட்டுமா, எனக்கு அடிப்பட்டா தில்லை இப்படி தான் செய்யும்,வலி குறையும்" என்றவாறே தன் தண்ணீர் பாட்டிலை எடுத்து அவனின் காயத்தை தனக்கு தெரிந்த அளவில் சுத்தம் செய்தாள். இவ்வளவு செய்யும் போது அவளின் கண்களில் இருந்து கண்ணீர் வந்த வண்ணமே இருக்க, அவளை திசைதிருப்ப,

"எல்லாரும் வீட்டுக்கு போய்ட்டாங்களே, நீ போகல"

"தில்லை வரல இன்னும்"

"தில்லை யாரு" அவளின் அப்பாவோ எனும் யோசனையுடன்,

"என்னோட தாத்தா", அவ்ளோ பெருமிதம் அவளின் குரலில்,

"அப்பா இல்ல அம்மா உன்னை கூட்டிகிட்டு போக வர மாட்டாங்களா", அவன் பார்த்தவற்றை வைத்து அவனுக்கு புரிந்ததை அவன் கேட்க,

"எனக்கு தான் அப்படி யாரும் இல்லையே", சோகம் அப்பிய குரலில் அவள் கூற,தன்னை போலவா இந்த குட்டிப்பெண்ணும் எனும் போது தன்னியல்பாய் ஓர் பாசம் பிரவாகம் எடுக்க,

"இந்த மாதிரி தில்லை வர லேட்டா ஆன எனக்கு பசிக்கும்னு சாப்பிட சிவா பிஸ்கட் கொடுத்து இருக்கு, இந்தா நீயும் சாப்பிடு", அந்த குட்டி பெண் தன்னிடம் இருந்த பிஸ்கட்டை தானும் எடுத்துக்கொண்டு அவனிடமும் நீட்டினாள். இவனும் ஏதும் பேசாமல் எடுத்து உண்ண தில்லை வந்தார்.

"மன்னிச்சிடுங்க தாயி தாமதம் ஆகிடுச்சு", என்றவாறே வந்தவர் தன் பேத்தியின் கண்களில் கண்ணீரும், அருகில் சற்று பெரியவனாக ஒரு புதியவனும் இருக்க பதறி போய்,

"என்ன ஆச்சு தாயி ஏன் அழறிங்க" என கேட்க, இவ்வளவு நேரம் மறந்து இருந்தது நினைவு வர, மீண்டும் தேம்பலுடன்,

"அடிபட்டு அவ்ளோ ரத்தம் தெரியுமா, வலிக்கும் தானே" என பதறி போய்,

"எங்க அடிபட்டு இருக்கு காட்டுங்க" என கேட்க, ராதிகா, அந்த புதியவனை கை காட்டினாள். தன் பேத்திக்கு ஏதும் ஆகவில்லை என சிறிது ஆசுவாசப்பட்டு கொண்டே,

"உங்களுக்கு தான் அடிப்பட்டுடிச்சா, இது யாரு உங்க பிரின்ட் அஹ தாயி" பார்த்த பெரிய பையனா தெரியுதே என்று எண்ணியவாறே கிறிஸ்ன் காயத்தை பரிசோதித்தார். காயம் கொஞ்சம் ஆழம் தான், ஆனால் அசையாமல் அமர்ந்து இருந்த அவன் அவரின் கவனத்தை கவர, அவனை பற்றி அறியும் பொருட்டு,

"உங்க பிரின்ட் பேரு என்ன, எந்த கிளாஸ் இவங்க" என தில்லை கேட்க,

"ஆமா, உன்னோட பேரு என்ன, நீ எந்த கிளாஸ்", தலை சாய்த்து, தன் பெரிய கண்களை உருட்டி ராதிகா கேட்க,

"கிறிஸ்டோபார் ஸ்மித், தேர்ட்", மிடுக்குடன் கூற, இவ்வளவு பெரிய அவனின் பெயரை எப்படி உச்சரிக்க என ராதிகா தடுமாற,

"நீ என்ன கிறிஸ்னு கூப்பிடு டாலி"

"ஹ்ம்ம் சரி கிறிஸ்" என்றவாறே கிளுக்கி சிரித்தால் ராதிகா. அவளின் சிரிப்பு அவனையும் தொற்ற,

"எதுக்கு சிரிக்கிற"

"என் பேரு டாலி இல்ல ராதிகா"

"நீ பார்க்க டால் மாதிரி தான் இருக்க, அதனால நான் உன்னை இப்படி தான் கூப்பிடுவேன்" என்றவாறு இருவரும் வழக்கடிக்க தில்லை இருவரையும் சுவாரசியமாக பார்த்துக்கொண்டு இருந்தார். அழுத்தமாக தெரிந்த அந்த சிறுவன் தன் பேத்தியுடம் சகஜமாக பேசவும் சற்று ஆச்சர்யம் தான் அவருக்கு,

"தில்லை, கிறிஸ் நாம ஹாஸ்பிடல் கூட்டிகிட்டு போலாம்"

"அவங்க வீட்டுல சொல்லணுமே, அவங்க தேடுவாங்க இல்ல தாயி, யாரு வீட்டு பையன் நீங்க, யாரு வருவாங்க உங்களை கூப்பிட" என ராதிகாவிடம் ஆரம்பித்து கிறிஸ்யிடம் முடித்தார், இது புகழ்பெற்ற பள்ளி என்பதால் படிப்பவர் அனைவரும் பெரிய இடத்து பிள்ளைகள் தான், இவரும் ஊருக்குள் பெரிய மனிதர் என்பதால் கிட்டத்தட்ட அனைவருமே அறிமுகம் தான் என்பதால் கேட்க,

"மிஸ்டர்.வேதநாயகம் பேரன்,டிரைவர் வெளிய இருப்பாரு" என்றவாறே எழுந்து நடக்க முயற்சிக்க, வலியில் அவன் முகம் சுருங்க, தில்லையே அவனை தூக்கிக்கொண்டு ராதிகா பின்தொடர அவன் காரை நோக்கி சென்றனர். அவன் டிரைவரிடம் தான் அவரின் முதலாளியிடம் சொல்லி கொள்வதாக சொல்லி கிறிஸ் அழைத்து சென்றார். டிரைவர்கு தில்லையை தெரிந்து இருந்தால் கிறிஸ்யை அழைத்து செல்வதில் சிக்கல் ஏதும் ஏற்படவில்லை. வேதநாயகம் தில்லைக்கு நெருங்கிய நண்பர்.வேதநாயகம் குடும்பத்தில் நடந்தது எல்லாம் தில்லைக்கு தெரியும் என்பதால், அவரே அவனை மருத்துவமனைக்கு அழைத்து சென்று காயத்திற்கு மருந்து வைத்து, தன் வீட்டில் உணவு உண்ண வைத்தே அவனின் வீட்டிற்கு அழைத்து சென்றார்.

ஒற்றை குழந்தையாக இருந்த இருவரும் தனிமைக்கு துணையாக ஒருவரை ஒருவர் அதிகம் தேடினர். அதற்கு பிறகான நாட்களில் பள்ளியிலும் சரி, வார இறுதி நாட்களையும் சரி இவரும் ஒன்றாகவே செலவிட்டனர். தொடர்ந்த சில நாட்களிலே நீலவேணி அம்மையார் இறைவனடி சேர, வேத நாயகம் இன்னும் மனதளவில் உடைந்து போக, இயல்பாக சிவகாமி அம்மையார் கிறிஸ் பொறுப்பை ஏற்றுக்கொண்டார். கிறிஸ் தூங்க மட்டுமே அவனின் வீட்டிற்கு செல்ல என மற்ற நேரம் எல்லாம் ராதிகாவுடன் தானும் ஒரு பிள்ளையாக வலம் வர ஆரம்பித்தான். ஒரு முறை வெளியே விளையாட சென்ற கிறிஸ் உம் ராதிகாவும் அடிபட்டு வீட்டுக்கு வர, சிவா பதறி போய்,

"என்ன ஆச்சு ரெண்டு பேருக்கும், இப்படி அடி பட்டு வந்து இருக்கீங்க", என இருவரையும் திட்டிக்கொண்டே இருவரின் காயத்தையும் சுத்த படுத்த,

"நாங்க ஒன்னுமே பண்ணல, அந்த பையன் தான் என் கிட்ட சண்டைக்கு வந்தான், டாலி ரெண்டு பேரையும் தடுக்க நடுவுல வந்தா அவன் புடிச்சி தள்ளிவிட்டுட்டான் அதான் அவளுக்கும் அடி பட்டுடுச்சி" என கிறிஸ் புகார் வாசிக்க,

"ஏண்டா, அவன் உன்னை விட பெரிய பையன் அவன் கிட்ட போய் சண்டை போட்டுட்டு வந்து இருக்க, இவ அப்படியே பெரிய மனுஷி தடுக்க போனாலாம்,நீ தானே பெரியவன், இவளை நீ தானே பத்திரமா பார்த்துக்கனும், இவளை பக்கத்துல வச்சிக்கிட்டு எதுக்கு சண்டைக்கு போன, நீயே இப்படி ஒல்லியா காத்து அடிச்சா பறந்து போற மாதிரி இருக்க, நீ எங்கே அவளை பார்த்துக்க" என சிவா இருவருக்கும் சரமாரி அர்ச்சனையுடன் காயத்தை சுத்தப்படுத்தி மருந்து வைத்தார்.

சிவகாமி அம்மையார் பேசியதும், சம்பந்தமே இல்லாமல் கிறிஸ்கு அவனின் தாயார் பேசியது தான் நினைவுக்கு வந்தது. கிறிஸ்கும், பிறக்க இருந்த குழந்தைக்கும் அதிக வயசு வித்தியாசம் என்பதால், அந்த குழந்தையை கவனிக்கும் போது இவன் ஏங்கி போக கூடாது என, இவனை மனதளவில் தயார் செய்வதின் அவசியத்தை உணர்ந்து தான் கருவுற்றது தெரிந்த தினத்தில் இருந்து கிறிஸ் இடம் பிறக்க போகும் குழந்தையை பற்றி பேசுவதை வழக்கமாக கொண்டு இருந்தார் தாரணி. அதும் பெண் குழந்தை தான் மாதாந்திர ஆய்வின் போது மருத்துவர்கள் தெரிவித்ததும்," இங்க பாரு கிறிஸ், உன் கூட விளையாட ஒரு குட்டிபாப்பா வர போரா, அவளை நீ தான் பத்திரமா பார்த்துகனும், அவ முழுக்க முழுக்க உன்னோட பொறுப்பு தான், பார்த்துக்குவ தானே" தன் தாய் கேட்பது போல் அப்போதும் அவன் காதில் ஒலிக்க, ராதிகாவை அவனின் மனது அவனின் தங்கை இடத்தில் வைக்க, அவள் தன் பொறுப்பு என அவனின் இளம் மனதில் ஆழமாக பதிந்தது. சிவா அவனின் உடலை பற்றி கூறியதும் நினைவுக்கு வர அதிலிருந்து தன் உணவில் கவனம் செலுத்தி உடலை வளர்க்க ஆரம்பித்தான். அன்றே மறைந்து இருந்து, அவனின் டாலியை தள்ளி விட்டவனின் மண்டையை உடைத்தது தனி கதை.

ராதிகாவை கிண்டல் செய்பவர்களின் பல்லை தட்டுவது,பின்னால் சுற்றுபவர்களின் காலை உடைப்பது, காதல் கடிதம் எழுதுபவர்களின் கையை உடைப்பது என ராதிகாவின் விசயத்தில் கிறிஸ்ன் வாய் பேசும் முன் கை தான் பேசும். அதே நேரம் தன்னை அலட்சியப்படுத்துவர்களை ஒரு பொருட்டாய் மதிக்காமல் கடக்கவும், நிறத்தை கொண்டு தாழ்வாக நினைப்பவர்களுக்கு தக்க பதில் அளிக்கவும் என ராதிகாவினுள் மிளிரும் தன்னம்பிக்கை விளக்கை ஏற்றி வைத்து அந்த சுடரை அணையாமல் காத்தது கிரிஷ் என்றால் அது மிகையில்லை.

ராதிகாவின் பதினைந்து வயதில், அவளின் பெற்றோர் பற்றி தில்லை பேசணும் என சொல்லும் போது ராதிகா, அந்த கணத்தை தனியாக தங்க முடியாது என்ற எண்ணத்தாலோ அல்லது தன்னை பற்றி எல்லாம் அவனுக்கு தெரிந்திருக்க வேண்டும் என்பதலோ என்னவோ பதினெட்டு வயதான கிறிஸ்யை தன் அருகில் வைத்து கொண்டாள். தில்லை பேச பேச தன் மன அழுத்தத்தை எல்லாம் மொத்தமாக தன் பிடியில் இருந்த அவனின் கையில் வெளிப்படுத்த, அவனின் கை கன்றி சிவந்தது தான் மிச்சம், ராதிகாவோ மகா அழுத்தமாக முகத்தில் எந்த மாறுபடும் இன்றி தில்லை சொன்ன விசயத்தை ஜீரணிக்க முயல, ராதிகாவிற்கும் சேர்த்து கிறிஸ் தான் கோவம்,வெறுப்பு, என உணர்ச்சிகளின் குவியலாய் கொந்தளிக்க, அவனை சமாதானப்படுத்துவது தான் தில்லைக்கு பெரும்பாடனது.

பள்ளி முடிந்து கல்லூரி சேரும் போதும், கிறிஸ்ன் தாத்தா அவனை அமெரிக்கா சென்று அவனின் தந்தையுடன் தங்கி படிக்க சொல்ல அவனோ சென்னையில் தான் படிப்பேன் என சேர்ந்து, ஒவ்வொரு வார இறுதிக்கும் அவனின் டாலியை பார்க்க ஓடி வந்து விடுவான். ராதிகாவும் பள்ளி படிப்பை முடித்ததும், அதே கல்லூரியில் சேர்த்து தன்னுடனே வைத்து பார்த்துக்கொண்டான் கிறிஸ்.

அவனின் இறுதியாண்டில் அவனின் தந்தைக்கு உடல் நிலை மோசம் ஆகவும், அவரை பார்த்து கொள்ளவும், நிர்வாக பொறுப்பை ஏற்கவும் என, இவன் அமெரிக்கா செல்ல வேண்டிய சூழல். அவரின் தந்தை சில மாதங்களாகவே உடல் நிலை குறைவால் அவதிப்பட நிர்வாகத்தில் ஏகப்பட்ட குளறுபடிகள், அதை சரி செய்யும் பொருட்டே அவனின் இந்த இரண்டு வருட அமெரிக்கா வாசம்,அப்போதும் ராதிகா தான் அவனை சமாளித்து அனுப்பி வைத்தாள். ஏனோ கிறிஸ்கு ராதிகா தான் முதலில் கண்ட ஆறு வயது டாலியாகவே தெரிய, இந்த உலகத்தை அவள் எப்படி தனியே சமாளிப்பாள் என்னும் எண்ணம், எந்த பிரச்னை என்றாலும் தன்னிடம் மறைக்க கூடாது இப்படி ஆயிரம் பத்திரம் சொல்லியே விடைபெற்றான் அவன். கிறிஸ் அமெரிக்கா சென்ற ஒரு வருடத்திலே அவனின் தாத்தா இறைவனடி சேர, இங்கு வந்து அவருக்கான காரியங்களை முடித்து சொத்துகளை தில்லையின் பொறுப்பில் விட்டு மீண்டும் அமெரிக்கா சென்றான். ராதிகாவின் படிப்பு முடிஞ்சதும் மேற்படிப்புக்கு அவன் அங்கு வருமாறு அழைக்க இவளோ தில்லை, சிவாவின் முதுமையின் காரணமாக தனியே விட்டு செல்ல மனம் இல்லாமல் இங்கவே படிக்க அவனிடம் போராடி தான் அனுமதி வாங்கி இருந்தாள். தினமும் பேசினாலும் அடிக்கடி அவளை வந்து பார்க்கவும் அவன் தவறவில்லை.

எல்லாவற்றையும் மீண்டும் அசைபோட்டு மனம் அந்நாளிலே சிக்கி தவிக்க, இது சரி வராது என கிறிஸ் அவனின் டாலிக்கு அழைக்கவும், இதை எல்லாம் கார்மேகமும், பொன்னிறம் மேனியனிடம் சொல்லி முடிக்கவும் சரியாக இருந்தது. அவள் அதை ஏற்று பேச ஆரம்பிக்கவும், இங்கு பொன்னிற மேனியனின் நிலைமை தான் பரிதாபவம். அவனின் கார்மேகத்திற்கு நெருங்கியவன் என நினைக்க அவன் இவனுக்கும் நெருங்கிய உறவினன் ஆவான் போலவே, பின்ன மச்சான் உறவு நெருங்கிய உறவு தானே. முதல் சந்திப்பில் அவனிடம் நல்ல பெயர் வாங்க வேண்டியதன் அவசியத்தை உணர்ந்தான். குனிந்து தன் உடையை ஒரு முறை பார்த்துக்கொண்டான், பரவாயில்லை நல்ல தான் இருக்கோம் என தன்னை தானே தேற்றி கொண்டு நிமிர, மடிகணிணியின் வழியே இரண்டு கூரிய கண்கள் அவனை துளைக்க இவனும் சளைக்காமல் அந்த பார்வையை எதிர்கொண்டான்.

இவன் ராதையின் கண்ணன்…………
 

banumathi jayaraman

Well-Known Member
ராதிகாதான் பாவம்ன்னு நினைத்தால் கிறிஸ்டோபர் ஸ்மித்தின் வாழ்க்கை அதை விட கொடுமையா இருக்கே, ருத்ரா டியர்
இந்தியாவில்தான் தொழில் போட்டின்னா வெளிநாட்டிலுமா?
கிறிஸ் அவனுடைய டாலியின் ராகியை நல்லாவே களி கிண்டுற மாதிரி பார்க்கிறானே
ஏதும் குத்தம் கண்டுபிடிச்சியா, கிறிஸ்?
 
Last edited:

SINDHU NARAYANAN

Well-Known Member
Nice update...

கிறிஸ் & டாலிக்காக...

நண்பன் ஒருவன் வந்த பிறகு
விண்ணை தொடலாம் உந்தன் சிறகு
வாணுக்கும் எல்லை உண்டு நட்புக்கில்லையே
இன்பம் வரலாம் துன்பம் வரலாம்
நண்பன் ஒருவன் பங்கு பெறலாம்
கல்லூரி நட்புக்கில்லை முற்றுப்புள்ளியே....
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top