யாவும் நீயாக - 20

Aadhiraa Ram

Well-Known Member
#1
images (26).jpg

அத்தியாயம் 20:
மும்பை வந்து இறங்கிய இருவரையும் அழைத்துச் செல்ல ரகு வந்திருந்தான். ஆராதியாவை பார்த்தவுடன் “சாரிமா என்னால வர முடியல. அப்போ ஒரு முக்கிய வேலையா நான் டெல்லி போக வேண்டியதாயிருந்தது. அங்கிருந்த என்னால வர முடியல. நீ எதுக்கும் கவலை படாதே நாங்க இருக்கோம்” என்று ஆறுதல் கூறினான்.

அதற்கு ஆராதியா “ பரவாயில்லை அண்ணா. எந்த பிரச்சனையும் இல்லை” என்று கூற,

பைகளை காரில் வைத்தவன் இருவரையும் பின்சீட்டில் அமருமாறு கூறிவிட்டு தானே காரை ஓட்டினான்.

அரை மணி நேர பயணத்திற்கு பின் கார் ஒரு பெரிய பங்களாவின் முன் வந்து நின்றது. அந்த வீட்டை பார்த்ததும் அவள் மலைத்து தான் போய்விட்டாள். அவ்வளவு அழகாய் இருந்தது அந்த வீடு. சுற்றி மரங்களும் செடிகளும் இருக்க பார்க்கவே ரம்மியமான சூழ்நிலையை தந்தது.அவர்களின் பண செழுமை அந்த வீட்டில் நன்றாக தெரிந்தது. விஜய் வசதி படைத்தவன் என்று அவளுக்கு தெரியும் தான் ஆனால் இவ்வளவு வசதி படைத்தவன் என்று அவளுக்குத் தெரியாது. அவன் உயரம் தெரியாமலேயே அவளை விரும்பியவள் அல்லவா. இப்பொழுது கூட அவள் பணத்தை பார்க்கவில்லை ஆனால் தான் இங்கு பொருந்துவேனா என்ற எண்ணம்தான் அவளுக்கு இருந்தது.

எனினும் தேன்மொழி விதார்த் மற்றும் விஜயின் துணையிருந்தால் எந்தவித தடையையும் தாண்டி விடலாம் என்று அவளுக்குத் தோன்றியது. விஜய் 'அவனுடைய துணை இருக்குமா' ? அவள் மனதுக்குள் அந்த கேள்வி தான் வந்து சென்றது.

திருமணம் ஆகி சுமார் ஒரு மூன்று மாதங்கள் கடந்தும் அவர்கள் இருவருக்குள்ளும் பேச்சுக்கள் சரியாக இல்லை. ஆனால் அப்போதைய சூழ்நிலையை வேறு. இங்கு மும்பையில் அதே சூழ்நிலை இருக்குமா என்று சொல்ல முடியாது. அவன் எவ்வளவு கோபப்பட்டாலும் அதை தாங்கிக் கொள்ள வேண்டும் என்று முடிவு செய்து கொண்டாள்.

இவர்கள் வருவதைப் பார்த்தவுடன் வாசலுக்கு வந்த தேன்மொழி இருவரையும் ஒன்றாக நிற்க வைத்து ஆரத்தி எடுத்தார். பின் அவளை வலது காலை எடுத்து வைத்து உள்ளே வருமாறு கூறியவர் அவர்கள் இருவரையும் ரெப்ரெஷ் ஆகி வருமாறு சொன்னார்.

விஜய் உடனே தனது அறைக்கு செல்ல ஆராதியா கீழிருந்த ஒரு அறையில் குளித்துவிட்டு உடை மாற்றி வெளியே வந்தாள். அதேநேரம் விஜயும் வர சரியாக இருக்க, இருவரையும் அங்கிருந்த சாமி அறைக்கு அழைத்துச் சென்றவர் ஆராதியாவை விளக்கேற்ற சொன்னவர், அவள் விளக்கேற்றிய பின் விஜயை அழைத்து அவளுடைய நெற்றியில் குங்குமம் இட சொன்னார்.

விஜயம் தாய் சொல் படி அவள் நெற்றியில் குங்குமம் இட அப்பொழுது நிமிர்ந்த அவனைப் பார்த்தவள் கண்கள் கலங்கி சொல்லொண்ணா உணர்வை வெளிப்படுத்தியது. விஜய்க்கும் அவளது பார்வையின் அர்த்தம் புரியத்தான் செய்தது. ஏக்கம் மகிழ்ச்சி கவலை அனைத்தும் ஒருங்கே நிறைந்து இருந்தது அவள் பார்வையில். அவனும் அவள் மனம் ஒரு நிலை இல்லை என்பதை புரிந்து கொண்டான்.

இருவரையும் அழைத்துக் கொண்டு உணவு உண்ணும் இடத்திற்கு சென்று தேன்மொழி இருவருக்கும் சாப்பாடு பரிமாறினார் ஆராதியா சரியாக சாப்பிடாமல் இருக்க அவளை கட்டாயப்படுத்தி உணவு உண்ண வைத்தவர் அவர்கள் உண்டபின் ஹாலுக்கு அழைத்து வந்தார்.

பின் இருவரிடமும் பொதுவாக உங்களிடம் கொஞ்சம் பேச வேண்டும் என்றார்.

இருவரும் என்ன என்பது போல் பார்க்க “விஜய் , ஆராதியா நீங்கள் இருவரும் இப்போது திருமணம் ஆனவர்கள். அதுவும் காதலித்து மணம் புரிந்தவர்கள் உங்கள் முகத்தைப் பார்த்தால் அப்படி தெரியவில்லை. ஆராதியா இனி நீங்கள் இருவரும் கணவன் மனைவி. இருவரும் ஒரே அறையில் தான் தங்க வேண்டும். உனது உடைமைகள் யாவையும் விஜயின் அறைக்கு அனுப்பி விட்டேன் இனி நீ அங்குதான் தங்கவேண்டும். “

“ விஜய், ஆராதியா உன்னுடைய சரிபாதி. உங்களுக்குள் என்ன கோபதாபங்கள் இருந்தாலும் அதை பேசித் தீர்த்துக் கொள்ளுங்கள். ஒரு தாயாக என்னால் சில அறிவுரைகள் மட்டும் தான் கூற முடியும். இது உங்கள் வாழ்க்கை. இருவரும் திருமணம் முடித்து விட்டீர்கள் இனி உங்கள் வாழ்க்கையை நீங்கள் தான் பார்த்துக் கொள்ள வேண்டும் எல்லாவற்றிர்க்கும் நாங்கள் வந்து உங்களுக்கு சமரசம் செய்ய முடியாது. புரியும் என்று நினைக்கிறேன்” என்று விஜயைப் பார்த்துக்கொண்டு கூறியவர்,

ஆராதியாவிடம் “ஆராமா நடந்தது நடந்து முடிந்துவிட்டது. இனி உங்கள் வாழ்க்கையைப் பாருங்கள். இது உங்களுக்கு புதிய தொடக்கமாக இருக்கட்டும். சீக்கிரம் எனக்கு ஒரு பேரன் பேத்தி பெற்று கொடுத்தீங்கன்னா அதை பார்த்துவிட்டு நான் என் வேலையை பார்ப்பேன். நீங்க உங்க வேலைய பாக்கலாம் இல்லன்னா உங்க ரெண்டு பேருக்கும் நடுவுல பஞ்சாயத்து பண்றது என்ன வேலையா பண்ண வைக்காதீங்க ப்ளீஸ்” என்று கூறிய முடித்துவிட்டார்.
அப்பொழுது ஆராதியா தான் பேச வேண்டும் எனக் கூற, அவனை பேசுமாறு கூறியவர் “அத்தை நான் என்னோட பழைய வேலையை இன்னும் விடவில்லை. லீவுதான் போட்டு இருந்தேன் இப்ப நான் என்ன பண்ணட்டும் வேலைய விட்டு விடட்டுமா இல்லை அதனுடைய கிளை அலுவலகம் இங்கு மும்பையில் உள்ளது அங்கே தொடர்ந்து சொல்லட்டுமா” எனக்கேட்டாள்.

விதாந்த மற்றும் தேன்மொழி விஜயை பார்க்க அவனும் சற்று நேரம் யோசித்து விட்டு “அந்த வேலையை ரிசைன் பண்ணிவிட சொல்லுங்கள். இனிமேல் அந்த கம்பெனிக்கு போக வேண்டாம். அவளுக்கு வேலை பார்த்தே ஆகணும் என்றால் நம்ம கம்பெனியிலேயே ஜாயின் பண்ணி கொள்ளட்டும் “ என்று கூறினான்.
ஆராவிற்க்கும் அது சரியென பட தான் வேலையை விடுவதாக கூறினாள். பின் ரகுவிடம் திரும்பிய விஜய் " ரகு ஆபீஸ்ல இப்போ என்ன ஜாப் வேக்கன்சி இருக்கு" என்று கேட்க ரகுவும் சற்று நேரம் சிந்தித்துவிட்டு " இப்போது ஓரளவுக்கு எல்லா வேலைக்கும் ஆள் இருக்கிறார்கள். உன்னுடைய பர்சனல் செக்ரட்டரி வேலை மட்டும் மீதம் உள்ளது. அதற்கு தான் ஆட்களைத் தேடிக் கொண்டிருக்கிறோம் .அதை வேண்டுமானால் ஆராவுக்கு கொடுத்து விடலாமா" என்று கேட்டான்.

தேன்மொழி " சாப்ட்வேரில் வேலை பார்த்தவள் எப்படி செக்ரட்டரி வேலை பார்க்க முடியும் "என்று கேட்க, விஜய்யோ " ஏன் முடியாது. விருப்பம் இருந்தால் எந்த தொழிலை வேண்டுமானாலும் புதுசாக கற்றுக்கொள்ளலாம். அதே போல் தான் பர்சனல் செக்ரட்டரி வேலை என்பது. என்னுடைய அனைத்துமாக இருக்க வேண்டிய வேலை. அதை வெளியாட்கள் இல்லாமல் நமது குடும்பத்தில் உள்ள ஒருவரை பார்த்துக் கொண்டால் எந்த பிரச்சனையும் இருக்காது. எந்த தகவலும் வெளியே கியது. அதனால் ஆராதியா என்னுடைய செக்ரட்டரி வேலைக்கே வரட்டும் "எனக் கூறினான்.

விதார்த்க்கும் அதுவே சரி எனப்பட்டது. அது விஜயின் கூடவே இருக்கும் வேலை .ஒருவேளை ஒரு தொழிலை விஜய் பார்த்துக் கொண்டாலும் ஆரா கூடவே இருந்து கற்றுக் கொண்டால் மற்ற தொழில்களில் ஏதோ ஒன்றை அவளும் பார்த்துக் கொள்ளலாம் அல்லவா வருங்காலத்தில். அதனால் அவரும் சரி என்று கூறினார்.

ஆராதியாவிற்கு மனதில் பெரும் குழப்பமாக இருந்தது. அவனுக்கு ஏற்கனவே தன்னை பிடிக்கவில்லை. இதில் நாள் முழுவதும் அவருடன் இருந்தால் என்னென்ன பாடுபட வேண்டும் என்பதை யோசித்தால். இருந்தும் இப்போது எதுவும் கூற முடியாத நிலையில் இருப்பதால் அவளும் சரி என்றாள்.

பின் தனது பார்ட்டிக்கு அழைத்து பேசியவள் அவரது சுகத்தை கேட்டுவிட்டு தாங்களும் இங்கு வந்துவிட்டதாக கூறினாள். பின் அவருடன் வேறு சில விஷயங்களைப் பேசிவிட்டு வைத்து விட, ரகு அதற்க்கு கிளம்பி இருந்தான். அனைவரும் தூங்கப் போகலாம் என்ற தேன்மொழி "நீங்க ரெண்டு பேரும் போய் தூங்குங்க எதையும் மனசுல போட்டு குழப்பிக்காதிங்க " என்று கூறியவர் விஜயிடம் " அவள் புதிய வேலைக்கு ஒரு ஒரு வாரம் கழித்து வரட்டும் உடனே வேண்டாம். வீட்டுப் பொறுப்புகள் சில அவளுக்கு தெரிய வேண்டிய அவசியம் உள்ளது. அதை இந்த ஒரு வாரத்தில் நான் அவளுக்கு சொல்லிக் கொடுத்து விடுகிறேன். அதற்குப் பிறகு அவள் அலுவலக வேலைக்கு வரட்டும்" என்று கூறினார்.

விதார்த்துக்கு " ஆமா விஜய் இன்னொரு விஷயமும் இருக்கு. இன்னும் தொழில்முறை நண்பர்கள் பலருக்கு உன்னுடைய திருமணம் நடந்த விஷயம் தெரியாது. அதனால் நாம் ஒரு ஒரு ரிசப்ஷன் ஏற்பாடு செய்து விட்டால் நன்றாக இருக்கும் என்று எனக்கு தோன்றுகிறது. நீ என்ன கூறுகிறாய் "என்று சொல்ல அவனும் "சரி பண்ணிடலாம் நான் அதற்கான ஏற்பாடுகளை பண்ண சொல்கிறேன் "என்று கூறினான்.

ஆராதியா " அதை உடனே செய்ய வேண்டுமா. பின்னாளில் செய்து கொள்ளலாமே" என்று கூற அவளை முறைத்துப் பார்த்த விஜய் " இது என் கவுரவ பிரச்சனை. நாளைக்கு உன்னை ஆபீஸ்க்கு கூட்டிட்டு போயி இது யாருன்னு கேட்டா நான் என்ன சொல்லுவேன். அதனால் இன்னும் ஒரு வாரத்தில் நீ வேலைக்கு வருவதற்கு முன்னர் நமது ரிசப்ஷன் நடைபெறும் "என்று உறுதியாக கூறிவிட்டார். அவளும் வேறு வழியில்லாததாலும் அவன் சொன்ன காரணங்களும் சரியாக பட்டதால் சரி என்று கூறிவிட்டாள் .
அனைவரும் தூங்க செல்ல ஆராதியாவிற்கு தான் கால்கள் அந்த இடத்தை விட்டு நகர மறுத்தது . இவ்வளவு நாள் அவளிடம் தனியாக எதுவும் பேச வாய்ப்பு கிடைக்காமல் இருந்தவள் இன்று அவனிடம் தனியாக சிக்கிவிட்டால் என்ன செய்வானோ , என்று கூறுவானோ, மொத்த கோபத்தையும் தன்னிடம் காண்பித்து விடுவானோ என்று பலவாறு யோசித்துக் கொண்டே மெதுவாக மாடி ஏறினாள்

அவள் கதவைத் தட்டிவிட்டு உள்ளே செல்ல அங்கு தனது லேப்டாப்பில் வேலை செய்து கொண்டிருந்தவன் அவள் உள்ளே வந்ததை கண்டுகொள்ளாமல் அவன் வேலையை பார்த்து கொண்டு இருந்தான். ஆரா கதவை சாத்திவிட்டு வந்தவள் அவன். பேசும் முன் தூங்கி விட வேண்டும் என படுக்கச் செல்ல அவளை பார்த்து கை கைகள் சுடக்கிட்டவன் " ஒரு நிமிஷம் "என்று கூறினாள்

அவள் என்ன என்பது போல் பயத்தை மறைத்துக் கொண்டு பார்க்க "உன்கிட்ட கொஞ்சம் பேசணும் "என்றான். "இங்க பாரு எனக்கு உன்ன பிடிக்கல உன் மேல ரொம்ப கோபமா இருக்கேன் நீ எப்ப உன் அப்பாவுக்காக என்னை தூக்கி எறிஞ்சு பேசுனியோ அப்பவே நான் உன்னை வெறுத்துட்டேன். இந்த கல்யாணம் ஒரு நாடகம் மட்டும்தான். நான் வேண்டாம் நினைச்சேன் எந்த பொருளையும் நான் அதுக்கப்புறம் வெச்சுக்க நெனச்சது இல்ல ஆனா வேற வழி இல்லாம உன்னை நான் கல்யாணம் பண்ணிக்கிட்டேன் அதுக்கு காரணம் என் அம்மா அப்பா தான். அவங்க வார்த்தையை மீற முடியாமல் தான் இந்த கல்யாணத்துக்கு நான் சம்மதம் தெரிவித்தேன். அதனால வெளியுலகத்துக்கு வேணும்னா நாம் கணவன் மனைவியாக இருக்கலாம் .ஆனா இந்த ரூமுக்குள்ள நீ யாரோ நான் யாரோ தான். அதுக்காக உன்ன சும்மா விட்டு வேண்டும் மட்டும் நினைச்சுக்காத உன்னை எப்படி லவ் பண்ணினேன் என்று எனக்கு தான் தெரியும். ஆனால் ஒரே நிமிஷத்தில் அதை தூக்கி எறிஞ்சுட்டு போய்விட்டாய் அதற்கான இனி அனுபவிப்ப. உன்னையே பர்சனல் செகரட்டரி ஆக நான் ஏன் ஒத்துக்கிட்டேன் தெரியுமா. கூடவே வைத்து பழி வாங்குவதுதான். " என்றான் குரூரமான குரல்களில்.
அவளுக்கு அந்த குரல் சற்று பயத்தை தந்தாலும் இனி வேறு வழியில்லை எல்லாத்தையும் நம்ம தாங்கித்தான் ஆகணும் என்று மனதை தேற்றிக் கொண்டவள் தலையாட்டிவிட்டு படுக்கச் சென்றாள் .அவள் எதாவது சொல்லுவாள் என்று நினைத்தவன் அவள் எதுவுமே சொல்லாமல் படுக்கச் சென்றதை பார்ப்பதுதான் சப்பென்று ஆனது.
லேப்டாப்பை மூடி வைத்து கட்டிலின் மறு புறம் வந்து படுத்தவன் அவளை பார்க்க அவளோ அவனுக்கு முதுகு காமித்து படுத்திருந்தாள். அன்றைய நாள் களைப்பில் அப்படியே அசதியாக அவன் தூங்கி விட அவளுக்குத்தான் தூக்கம் வராமல் இருந்தது. நடந்தவற்றை நினைத்துக் கொண்டே இருந்தவள் விடியற்காலை நேரத்தில் கண் அசந்து தூங்கினாள்.
காலை அவள் எழுந்த போது மணியை பார்க்க மணி ஏழரை என்று காட்டியது. உடனே அடித்து பிடித்து எழுந்து , அவள் அருகில் பார்க்க அவனோ பக்கத்தில் இல்லை. வேகமாக குளியலறைக்கு சென்று அவள் குளித்து உடை மாற்றி விட்டு வெளியே வர அப்போதுதான் அவன் தனது ஜிம் ரூமில் இருந்து வெளியே வந்தான்.
ஆர்ம் கட் பனியனில் அழகாய் இருந்தவனை பார்த்தவள் கண்கள் அவனை விட்டு அசையவில்லை. அவள் பார்வையை பார்த்தவன் ஒரு நக்கல் கலந்த சிரிப்புடன் " ஏன் இப்படி திறந்த வாய் மூடாமல் பார்க்க உங்க அப்பாட்ட பர்மிஷன் கேட்டியா. அவர் பர்மிஷன் கொடுத்தா தான் நீ எதையும் பண்ணுவியே " எனக்கேட்க , அவனை ஏறிட்டுப் பார்த்தாள் , இனி இவனிடம் வாயை மூடிக்கொண்டு சும்மா இருக்கக்கூடாது என்று நினைத்து "அவர் பர்மிஷன் கொடுத்தால் தான் இன்னைக்கு உங்க பொண்டாட்டிய பக்கத்துல நிக்கிறேன். அதை நீங்க மனசுல வச்சுக்குங்க" என்று கூறிவிட்டு சென்றாள் அவள் கூறியதைக் கேட்டு பெருங்கோபம் கொண்டவன் 'அவர் பர்மிஷன் தந்ததால் தான் நீ கல்யாணத்துக்கு ஒத்துக்கிட்ட. சரி பாத்துக்கலாம் நீயா நானா என்று. இப்ப கூட நீ எனக்காக கல்யாணம் பண்ணிக்கல அவருக்காகத்தான் பண்ணியிருக்க ' என்று மனதில் நினைத்துக்கொண்டு வேதனையோடு சென்றான்

கீழே வந்த ஆரா அங்கு சமையலறையில் சமைத்துக் கொண்டிருந்த தேன்மொழியை கண்டு அவரிடம் போய் ம" அத்தை ஏதாவது உதவி செய்ய வேண்டுமா " என்று கேட்க அவரோ "வேண்டாமா நீ ரெஸ்ட் எடு நான் எல்லா வேலையும் பார்த்து முடித்து விட்டேன் . அ எல்லாம் டேபிள் மேல் கொண்டுபோய் வைத்தால் முடிஞ்சது. இந்தா காபி" என்று அவளுக்கு கொடுத்தவர் இன்னொரு கப் காபியும் கொடுத்து " இதை விஜயிடம் கொண்டு போய் குடு " என்று கூறினார்.

அவளோ தயக்கத்துடன் "நானா" என்க, அவள் முகத்தை பார்த்தவர் " அவன் உனக்கு புருஷன். நீ தான் அவனுக்கு கொடுக்க வேண்டும். இனி அந்த பொறுப்பு உன்னுடையது தான். காபி கொடுப்பது மட்டுமல்ல உணவு பரிமாறுவது அவனுக்கு தேவையான அனைத்தையும் எடுத்து வைப்பது என இனிமேல் அவனின் மொத்த பொறுப்பையும் நீ தான் ஏற்றுக்கொள்ள வேண்டும்" என்று ஒரேடியாக கூறிவிட்டார் .அவளுக்கு தான் என்ன செய்வதென்றே புரியவில்லை. தேன்மொழியே பாவமாக பார்க்க " ஆராமா நான் சொல்றதை கொஞ்சம் கேளு அவன் கண்ணு முன்னாடி நீ அவன்கூட இருந்தால் தான் அவனுக்கு உன் மேல திரும்பு ஒரு பிடிப்பு வரும் கோபம் கொஞ்சம் குறையும். நீ தள்ளி தள்ளி போனால் உன்னை தள்ளித் தள்ளி தான் வைத்திருப்பான். இப்ப சொல்லு என்ன பண்ணலாம். அதுமட்டுமில்லாம இப்படி நீங்க பிரிந்து இருந்தால் உங்க அப்பா மேல இருந்து பார்த்து வருத்தப்பட மாட்டார் அவர் கடைசி ஆசை என்ன என்று உனக்கு நல்லா தெரியும் . நீ சந்தோஷமா வாழலாம்னு நினைத்தார். அதுக்காகவாவது நான் சொல்றதெல்லாம் செய் அவன் மனசை மாத்த முயற்சி பண்ணு. அவன் ஏன் இவ்வளவு கோவமா இருக்கான்னு கண்டுபிடி."

"எனக்கு தெரிஞ்சு நான் நினைக்கிறது கரெக்ட்டு அப்படினா அவ மனசுல வேற ஏதோ இருக்கு இது மட்டும் காரணம் இல்லை "எனக் கூறினார். அதை கேட்டவர் அப்பொழுதுதான் மனம் சற்று தெளிவையும் " சரி அத்தை. நான் பாத்துக்குறேன் " எனக் கூறி காபியுடன் தன்னவனை நோக்கி சென்றாள்.
அவள் வருவதை பார்த்தவன் கண்டும் காணாதது போல் இருக்க, அவனருகே சென்றவள் " விஜய் இந்தாங்க காபி எடுத்துக்கங்க" என்று கூற அதை அங்கு வைக்குமாறு கை காட்டியவர், வேலையை தொடர சில நிமிடங்களுக்கு பின் காபியை எடுக்க திரும்பியவன் ஆராதியா அங்கேயே நிற்பதைக்கண்டு என்ன என்பதுபோல் புருவம் உயர்த்தி கேட்டான்.
"உங்ககிட்ட கொஞ்சம் பேசணும்" என்று அவள் கூற " என்கிட்ட பேச என்ன இருக்கிறது ஆராதியா" என வினவினான்.
'ஆராதியாவா 'என்று சற்று நேரம் அமைதியாக இருந்தவள் "உங்கள் தியா எப்ப ஆராதியா ஆச்சு"
"உன் விசு எப்போ விஜய் ஆச்சோ அப்போ. அது மட்டும் இல்லாமல், செல்லப்பேரு வச்சுக்கிற அளவுக்கு நம்ம ஒன்னும் அவ்வளவு நெருக்கமில்லை என்று நினைக்கிறேன்"
அவளுக்கு அவன் விஜய் என கூறியதை சுட்டிக்காட்டிய போது தான் தன் தவறு புரிந்தது. . பின் "அப்படி நான் என்ன பண்ணினேன் விஜய் எங்க அப்பாவ விட்டுட்டு வந்தா நான் சந்தோஷமா இருந்திருப்பேன் என்று நினைக்கிறீர்களா. இல்லவே இல்லை இப்ப இப்படி சொல்கிற நீங்கள் அப்போ நான் படுற கஷ்டத்தை பார்த்துட்டு உங்க அப்பா கிட்ட வா பேசலாம் என்று சொல்லி இருப்பீர்கள். இருபத்தி மூன்று வருஷம் எனக்காகவே வாழ்ந்த ஒருவரை ஒரே நிமிஷத்துல எனக்கு நீங்க தான் முக்கியம் இல்லை அப்படின்னு என்னால சொல்ல முடியாது விஜய். அந்த அளவிற்கு நான் மனசாட்சி இல்லாதவள் கிடையாது. என் அம்மா இறந்ததுக்கு அப்புறம் எனக்கு எல்லாம் இருந்து அவர்தான் பார்த்துக் கொண்டார். எனக்கு நீங்க முக்கியம்தான் ஆனால் அவரும் முக்கியம் எனக்கு ரெண்டு பேரும் என்னோட ரெண்டு கண் மாதிரி ஒருத்தர் இல்லாம ஒருத்தர் எனக்கு கிடையாது. இதோ இப்ப இறந்த அப்பா நான் உன் கூட அப்போ வந்திருந்தால் அடுத்த நாளே இறந்து இருப்பார். அந்த குற்ற உணர்ச்சியை வாழ்க்கை முழுக்க நாம் தாங்கிட்டு இருந்திருக்கணும். நான் சொல்றதை சொல்லிட்டேன் அதுக்கு அப்புறம் உங்க இஷ்டம்" என்று கூறிவிட்டு சென்று விட்டாள்.
இதை கேட்ட விஜய்க்கு ஒரு பக்கம் தனது தவறு புரிந்தாலும் ஆனால் மறு நிமிடமே அவள் சித்தார்த்துக்கு சம்மதம் சொன்னது அவனை மறுபடியும் கோபமூட்டியது. என்னதான் தந்தை சொன்னார் என்றாலும் கல்யாணத்துக்கு கூடவா சரி என்று சொல்வாள். அதுவும் 'அவள் பெரியம்மா ' என்று ஏதோ நினைத்தவன் சரியாக அவன் கைபேசி அலைக்க அந்த நினைப்பு அத்தோடு விட்டு அழைப்பை ஏற்றன். ஆனால் அவன் மனதில் நினைத்ததை அவளிடம் நேரிடையாக கேட்டிருந்தால் பின்னாளில் இருவருக்கும் இடையேயான விரிசலை அவன் தடுத்து இருந்திருக்கலாம்.
 
Last edited:

Advertisement

Sponsored