யாழியின் ருத்ர கிரீசன் - 9

Advertisement

cover (8).jpg

யாழியின் ருத்ர கிரீசன் - 9

மித்ராவின் அணைப்பு தமிழுக்கு பிடிக்கவில்லை. அவளின் பிடியை விலக்கி நகர்ந்து நின்றான்.

மித்ரா அவனை ஏக்கம் கலந்த கோபத்தோடு பார்த்தாள்.

இந்தப்பக்கம் இப்படி என்றால் அந்தப்பக்கம் நிகிலா முன் பிரகாஷ் இரு கைகளை அகலமாக திறந்து நீட்டி நின்றான்.

அவனின் செயலை கேள்வியோடு பார்த்தவள்,

நிகிலா : என்னே டார்லிங் ?

பிரகாஷ் : நீ கட்டிலாம் பிடிக்க மாட்டியா டார்லிங் ? பாரு உன் மேடம் மித்ராவே. என்னமா தமிழே கேரிங் பண்றாங்க. என்ன ஒரு ஹூக்கு. கத்துக்கோ நிகிலா ! கத்துக்கோ !

நிகிலா : அவருக்கு அடி பட்டிருக்கு டார்லிங். அதான், மேடம் வெரி பண்றாங்க. உங்களுக்கு அடிலாம் படுமா என்னே ?! மைடியர் எவ்ளோ பெரிய ஆளு நீங்க !

பிரகாஷ் : ஆஹ்...தேங்க்யூ, தேங்க்யூ, தேங்க்யூ. மச்சான், உனக்கு என்னமோ அடிபட்டிருக்காமே எங்க காமி ?

காயத்தை தேடினான் பிரகாஷ். மித்ரா விரல்களை தமிழின் தோள்பட்டையை நோக்கி காட்டினாள்.

சம்யுக்தாவுடன் நீர்விழ்ச்சியில் விழும் போது மரக்கிளை ஒன்று அவனின் தோள்பட்டையை நன்றாக குத்தி ஆழமாக கிழித்திருந்தது. அதைத்தான், இப்போது மித்ரா கை காட்டினாள்.

தமிழ் வெற்றுடலில் இருப்பதும் அவனின் காயத்திற்கு ஒரு காரணம் தான்.

மித்ரா அவளின் பேக்பேக்கை திறந்து ரவுண்ட் நெக் டி-ஷர்ட் ஒன்றை எடுத்து அவனிடம் தந்தாள்.

அந்த சிவப்பு நிற டி-ஷிர்டை பார்த்த தமிழ் அதை கைகளில் வாங்குவதற்கு முன் மித்ராவிடம் கேட்டான்.

தமிழ் : you still have it ?!

மித்ரா அவன் மேல் கேவலாமா பார்வை ஒன்றை வீசி விட்டு அந்த சட்டையை தமிழின் நெஞ்சில் வீசி முன்னே நடந்து சென்று விட்டாள்.

தமிழ் அதை அணிந்துக் கொண்டு நடக்க, பிரகாஷ் தலையை ஆட்டினான் என்னவோ புரிந்தது போல் சிட்டுவேஷன் சோங்கோடு.

பிரகாஷ் :

காதல் வந்து தீண்டும் வரை
இருவரும் தனித் தனி
காதலின் பொன் சங்கிலி
இணைத்தது கண்மணி
கடலிலே மழை வீழ்ந்த பின்
எந்தத் துளி மழைத் துளி
காதலில் அது போல நான்
கலந்திட்டேன் காதலி
திருமகள் திருப்பாதம் பிடித்து விட்டேன்
தினமொரு புதுப் பாடல்.....

தமிழ் : மூட்றா வாயே !

பிரகாஷின் வாயில் கை வைத்து பொத்தி அவனை பாட விடாமல் தடுத்தான் தமிழ். பிரகாஷ் எப்படியோ திமிறிக் கொண்டு விட்ட இடத்திலிருந்து பாடினான்.

பிரகாஷ் :

திருமகள் திருப்பாதம் பிடித்து விட்டேன்
தினமொரு புதுப் பாடல் வடித்து விட்டேன்
மித்ரா மித்ரா என்னுயிர் காதலி...

தமிழ் நெற்றியில் அடித்து கொண்டு நின்றான். முன்னே சென்ற மித்ரா பின்னே வந்தவர்களில் தமிழை திரும்பி பார்த்து முறைத்த வண்ணம்,

மித்ரா : don't ever try to flirt me again with same song !

சொன்னவள் நடையை தொடர, பிரகாஷை பார்த்தான் தமிழ் கொன்று விடுவது போல.

தமிழ் : பாடாதனு சொன்னேனா இல்லையா ! எங்கையாவது வாயே வெச்சிக்கிட்டு சும்மா இருக்கியா ! இப்போ பார்த்தியா !

தமிழ், பிரகாஷின் தலையில் குட்டிக் கொண்டே கடிந்துக் கொண்டிருக்கும் போது, நிகிலா அவர்களின் பெயர் சொல்லி அலறினாள்.

சண்டையை நிறுத்தி தமிழும் பிரகாஷும் அவளை நோக்கி ஓட, எரிந்து போன காகிதத்தின் பாதி ஒன்று கண் முன் அந்தரத்தில் அப்படியே நின்றுக் கொண்டிருந்தது.

அலர்ட் ஆகிய பிரகாஷ் சுற்றி முற்றி பார்த்தான்.

பிரகாஷ் : எல்லாரும் அப்படியே இருங்க. நம்பள சுத்தி ஆள் இருக்காங்களான்னு நமக்கு தெரியாது. நான் ஒரு கண்ணு வெச்சிக்கறேன். அப்படி யாராவது அட்டெக் பண்ண வந்த தயவு பண்ணி யாரும் பிரிஞ்சிடாதிங்க. பார்ட்னர்ஸ் கைய எல்லாம் இறுக்கமா பிடிச்சிக்கோங்க. நாம எங்க ஓடுனாலும் குரூப்பாத்தான் இருக்கனும். புரியுதா. Don't ever dare to split !

நிகிலா : டார்லிங், மேடம் மட்டும் தான் ஓர்டர்ஸ் கொடுப்பாங்க.

பிரகாஷ் : ஷட் ஆப் நிகிலா ! இது உனக்கு மட்டும் இல்லே உங்க மேடம்க்கும் சேர்த்துதான் ! இந்த காராக் காடு பத்தி உங்க எல்லாரையும் விட கரைச்சி குடிச்சவன் நான். இங்கையே ராத்திரி பகலா மாட்டிகிட்டு நாலஞ்சி நாள் இருந்திருக்கேன். so don't be too smart to teach me the way how to secure our self over here !

இவ்வளவு நேரம் சிரித்து பேசி குறும்பு பண்ணிக் கொண்டிருந்த பிரகாஷ் கொஞ்ச நேரத்தில் இப்படி சீரியஸாக பேசியது மற்றவர்களுக்கு அதிர்ச்சியானாலும் தமிழ் எதையும் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.

அவனுக்கு தெரியும் பிரகாஷ் எந்த நேரத்தில் குறும்புத்தனம் செய்வான் எப்போது கட் எண்டு ரைட்டாக இருப்பான் என்று.

நிகிலா : நான் நினைக்கறேன், நாம சாமானிய மனுஷங்க கண்ணனுக்கு தெரியாத காராக் காட்டோட ரகசிய பாதைக்கி வந்துட்டோம்ன்னு.

நிகிலா சொல்லும் போதே அவர்கள் நால்வரையும் சுற்றி நெருப்பு வளையம் ஒன்று கொழுந்து விட்டு எரிந்தது.

மித்ரா தடுமாற்றத்தில் தமிழின் கைவிரல்களை பிடிக்க, அவனோ அவனின் விரல்களை தளர்த்தி கையை விலக்கி கொண்டான். முடிந்த வரையில் தமிழ் மித்ராவிடமிருந்து விலகியே சென்றான்.

மித்ரா அவனை திரும்பி பார்த்தாள். அதை தவிர்க்க நினைத்த தமிழ் பார்வையை அந்தரத்தில் விழாமல் நின்றுக் கொண்டிருக்கும் காகிதத்தின் மீது செலுத்தினான்.

பிரகாஷ், தமிழின் காதின் ஓரம் வந்து,

பிரகாஷ் : சீ ! நடிக்காதடா நாயே ! நீதான் எப்போ எப்போன்னு அலைவியே ! நீ என்னே பிரகாஷ் மாதிரியா ரொம்பதான் கெத்து காட்றே ! இப்படி தாண்ட அவ நினைச்சிருப்பா அவ மனசுல !

தமிழ் : அவ பேர் சொல்லி உன் மனசுல இருக்கறத நீ டப்பிங் பேசறே ! நடத்து நடத்து !உங்களுக்கு நேரம் ரொம்ப நல்லாருக்கு தம்பி. எனக்கும் நேரம் வரும். அப்போ இருக்கு உனக்கு !

மித்ரா அவளின் கைகளால் அந்த காகிதத்தை இழுக்க அவள் கையோடு வந்தது அது. கொழுந்து விட்டு எறிந்த அந்த நெருப்பு வட்டமும் காணாமல் போனது.

பாதி காகிதத்தில் அப்படி என்னதான் இருக்கிறது என இவர்கள் நால்வரும் பார்க்க அதில் ஏறக்குறைய வரைப்படம் போல் சில குறியீடுகள் இருந்தன.

மித்ரா : இதுல என்னமோ இருக்கு ! ஆனா, நமக்கு தான் இதே சரியா ரீட் பண்ண தெரியல நினைக்கறேன். எகிப்தியன் ஸ்டைல இருக்கு.

பிரகாஷ் : எது இந்த காராக் காட்டுல எகிப்தியன் மம்மி வந்து மேப்பு போட்டு வெச்சிட்டு போயிருக்கு !

தமிழ் : பிரகாஷ் !

பிரகாஷ் : பின்ன என்னடா, சும்மா லூசு மாதிரி உளறிக்கிட்டு ! கொஞ்சமாவது சென்ஸ் வேணாம் ! எகிப்த் எங்க இருக்கு காராக் எங்க இருக்கு !

மித்ரா : உனக்கெல்லாம் தெரியுமா ?! தெரிஞ்ச மாதிரி பேசறே ?!

மித்ரா பின்னால் நிக்கும் பிரகாஷை நோக்கி அவளின் விரலை பிரகாஷின் முன் நீட்டி ஆட்டி பேச தமிழ் அவளின் விரலை பிடித்து மடக்கினான். அவனின் கூர்மையான பார்வை அந்த அழகான கண்கள் மித்ராவை ஒரு கணம் அப்படியே நிறுத்தி வைத்தது. பேச்சை பாதியிலே நிறுத்தி திரும்பிக் கொண்டாள் முன் பக்கமாய்.

நிகிலா : யார்கிட்ட மேடம் நாம ஹெல்ப் கேட்கறது ?

பிரகாஷ் : இங்க குடு (பிடிங்கினான் வரைப்படத்தை)

பிரகாஷ் அந்த காகித்தை மேலே தூக்கி பார்த்தான். தலைகீழாக வைத்து பார்த்தான். நேராக வைத்து பார்த்தான். திருப்பி பார்த்தான். ஒன்றும் புலப்படவில்லை. அவனுடன் சேர்ந்து அந்த காகித வரைப்படத்தை பார்த்த தமிழ்,

தமிழ் : என்னடா மச்சான் ஒண்ணுமே தெரியல ?!

பிரகாஷ் : மேப்புலே படம் தெரியறதாடா முக்கியம் நம்ப பக்கத்துல நமீதா நயந்தாரா மாறி ரெண்டு சரக்கு இருக்கறது தாண்டா முக்கியம் !

பிரகாஷின் தலையில் கூட்டினான் தமிழ்.

தமிழ் : அடங்கரியா ! அடங்கரியா !

ஆ ! என்று அலறினான் பிரகாஷ்.

தமிழ் : வலிக்குதா ! வலிக்கட்டும் !

பிரகாஷ் : தலை இல்லே ! கால்லே என்னமோ கடிச்சே மாறி இருக்கு.

கீழே குனிந்து பார்த்தான் பிரகாஷ். அப்போது அவன் கழுத்தில் இருந்த ருத்ராட்ச மாலை அந்த காகிதத்தில் பட அது மீண்டும் அவன் கைகளிலிருந்து நழுவி அந்தரத்திற்கு போனது.

இம்முறை அதில் எழுத்துக்கள் தெரிந்தன. பொன்னாய் மின்னின தகதகவென. தமிழ் அதை வாசித்தான்.

தமிழ் : ஏழு ஊமத்தை பூக்கள் வேண்டும். அவைகளை தனித்தனியாக ஏழு கிண்ணங்களில் சேகரித்தல் வேண்டும். அதோடு, ஊமத்தை செடியின் இலைகளின் வாடையை அந்த ஏழு கிண்ணிகளில் நிரப்பிட வேண்டும். கிண்ணியை மூடிவிட கூடாது.

பிரகாஷ் : என்னடா மச்சான் இதெல்லாம் ?! என் வாழ்க்கையில இந்த மாதிரி பேர்லாம் நான் கேட்டாதே இல்லையேடா ! எவனோ நம்பள நல்லா வெச்சி செய்றாண்டா !

தமிழ் யோசித்தான். என்ன காகிதம் இது. இது எப்படி அந்தரத்தில். காகிதத்தை மாற்றி மாற்றி பார்க்கும் போது ஒன்றுமே தெரியவில்லையே. இப்போது, திடிரென்று ஊமத்தை பற்றி எழுதியிருக்கிறதே. முதலில் தெரியதா எழுத்து இப்போது எப்படி தெரிந்தது.

யார் இதை எழுதியது ? யாருக்காக இதையெல்லாம் சேகரித்திட வேண்டும் ? ஆமாம், முதலில் நாம் ஏன் இந்த காட்டில் இருக்கிறோம். இறந்துப் போன பிரகாஷ் எப்படி மீண்டும் உயிரோடு வந்தான். அப்பப்பா கேள்விகள் அடுக்கடுக்காய் ஓடிக் கொண்டிருந்தன அவனின் மூளையில்.

யாழியின் ருத்ர கிரீசன் வருவானா ! யாழியை மீட்டிடுவானா !
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top