யாழியின் ருத்ர கிரீசன் - 8

Advertisement

View attachment 6350

யாழியின் ருத்ர கிரீசன் - 8

முதலில் வெளியாகி பறந்த பிரகாஷின் space safety pod இறுதியாக காராக் காட்டின் எதோ ஒரு மரத்தின் மேல் தரையிறங்கியது.

அவனின் போட்டை தொடர்ந்து நிகிலாவின் போட்டும் கொஞ்சம் தூரம் தள்ளி இருந்த மரத்தின் உச்சியில் தரையிறங்கி இருவரும் அவரவர் போட்டிலிருந்து வெளியேறினர்.

மித்ரா மற்றும் தமிழ் ஏறிக் கொண்ட போட் தரையிறங்கும் சமயம் பார்த்து மக்கர் செய்தது. அந்த நவீன ஊர்தியின் பின் பகுதில் நெருப்பு பிடித்து கொள்ள அவர்கள் இருவரும் அதிலிருந்து உடனடியாக வெளியேற வேண்டி ஏற்கனவே செட் செய்யப்பட்டிருந்த பெண் ரோபோ அறிவிப்பு செய்தது.

கொஞ்சமும் தாமதிக்காத தமிழ் போட்டின் கதவை திறந்து மித்ராவை கீழே தள்ளிவிட ஏதோ அப்படி இப்படி என்று சமாளித்து ஒரு மரத்தில் தரையிறங்கிய அவளின் பறக்கும் பாராசூட் அங்கேயே நிக்காமல் மரத்தின் உச்சியிலிருந்து டாங் டாங் என்று மரக்கிளைகளில் விழுந்து அதன் நைலோன் துணி கிழிந்ததில் அவளும் மொத்தமாய் கீழே விழுந்து போனாள்.

மித்ரா இப்படி என்றாள். தமிழ் போட்டில் இருந்து வெளி வருவதற்குள் அவனின் போட் முற்றிலும் செயலிழந்து பிரகாஷின் போட் மீது இடித்தது. நவீன் ஊர்தி வெடித்தது.

அதில் ஆட்டம் கண்ட பிரகாஷின் போட்டும் கீழே மரைக்கிளைகளில் சரிந்து விழ தமிழ் அவனுக்கு முன்னாடியே கீழே விழுந்துக் கிடந்தான்.

புஸ் என்று சத்தம் கேட்க நண்பர்கள் இருவரும் ஒன்றாய் திரும்பி சத்தம் வந்த திசை நோக்கி பார்க்க மேலே இருந்த தேனீ கூட்டம் இவர்களை குறி வைத்திருந்தது.

அதனை பார்த்த இருவரும் ஒரு சேர ஓட, எங்கே ஓடுகிறோம் என்று யோசிக்காமல் நேராய் ஓடிக் கொண்டே இருக்க மலையின் உச்சியை இருவரும் தொட்டிட வேகமாய் ஓடி வந்தவர்களால் பிரேக் போட்டு நிற்க முடியவில்லை. உச்சியின் மேலிருந்து கீழே விழுவதை தவிர வேறு வழியும் இல்லை.

டைரக்ட்டர் சம்யுக்தா படத்தின் முக்கியமான சீன் ஒன்றிற்காக மலை மேல் நின்று அழகான ஷோட்டை எங்கிருந்து எப்படி எடுக்கலாம் என்று யோசித்துக் கொண்டிருந்தாள்.

மேலிருந்து கீழே தெரியும் நீர்வீழ்ச்சியை பார்த்து ரசித்தவள் அதையே லொகேஷனாக வைக்கலாம் என்று முடிவு பண்ணி திரும்பிட, வேகமாய் ஓடி வந்த தமிழ் அவளை இடித்து அவள் உதட்டோடு உதடு ஒட்டி அவளையும் சேர்த்து கீழே பரந்து விரிந்து ஓடிய நீர்வீழ்ச்சியில் விழுந்தான்.

குருவி பட சீனுக்கு எல்லாம் இங்கு வாய்ப்பே இல்லை. இருவர் விழுந்ததும் தெரியவில்லை எழுந்ததும் தெரியவில்லை.

தமிழ் பின்னால் ஓடி வந்த பிரகாஷும் நீர்விழ்ச்சியில் விழுந்து தத்தளித்து ஒருவழியாய் கற்பாறைகளை பிடித்து எழுந்து கரை வந்து சேர்ந்தான்.

தூரத்தில் தமிழும் சம்யுக்தாவும் பேசிக் கொண்டிருப்பதை பார்த்தான் பிரகாஷ்.

தமிழின் முகத்தைக் கூட சம்யுக்தா சரியாய் பார்க்கவில்லை. முகத்தை உம்மென்று வைத்துக் கொண்டு இருக் கைகளையும் தேய்த்துக் கொண்டு நின்றாள்.

தமிழ் அவளின் முகம் பார்த்து கேட்டான்.

தமிழ் : ஆர் யூ ஓகே ?!

சம்யுக்தா ஒப்புக்கு தலையை மட்டும் ஆட்டினாள்.

இருவர் பேசுவதையும் பார்த்தா பிரகாஷ், வாயை சிலுப்பிக் கொண்டு தமிழை நோக்கி சத்தமாய் கத்தினான்.

பிரகாஷ் : டேய் ! உன் பேண்டே கழட்டுடா !

பாவம் தமிழுக்குத்தான் பிரகாஷ் என்ன சொன்னான் என்று விளங்கவில்லை. அவனை திரும்பி பார்த்தவன் கையை மட்டும் தூக்கி இங்கே வா என சொன்னான்.

பிரகாஷ் நகரவேயில்லை. அவனை பார்த்து திரும்பிய தமிழ் சம்யுக்தாவை பார்த்து, மீண்டும் கேட்டான்.

தமிழ் : ஆர் யூ ஓகே ?!

அவளும் தலையை ஆட்டிட. தமிழும் தலையை ஆட்டி, பிரகாஷை நோக்கி ஓடினான்.

தமிழ் : என்னடா, மச்சான் ?! பைத்தியக்காரன் மாதிரி இங்க நின்னு கத்திக்கிட்டு இருக்கே ? அங்க வர வேண்டியதுதானே ?

பிரகாஷ் : உன் பேண்டே கழட்டுடா !

பிரகாஷ், தமிழின் பேண்டை பிடித்து இழுக்க, தூரமாய் நின்றிருந்த சம்யுக்தாவை திரும்பி பார்த்த தமிழ்,

தமிழ் : டேய் ! என்னடா பண்றே ! விடுடா ! மண்டே ஓடி !

பிரகாஷ் : முடியாதுடா ! நான் இன்னிக்கி பார்த்தே ஆகணும். உனக்கு நிஜமாவே எத்தனை மச்சம் இருக்குன்னு ! நானும் பார்க்கறேன் உனக்கு மட்டும் எப்படி இப்படி வரிசையா சரக்கு மாட்டுதுனே தெரியல. பிரவீனா, மோகினி, பாப்பு அதோட நிறுத்திணியா எனக்கே தெரியாமே அந்த மித்ராவே எப்ப கரைட் பண்ணேன்னு தெரியல ! பத்தா குறைக்கு இப்போ இது வேறே ! என் ரெண்டு கண்ணால பார்த்தேன் நீ அந்த பொண்ண லிப் லோக் பண்ணே !

தமிழ் : மச்சான் அது எதார்த்தமா நடந்துருச்சி ! பிளான் பண்ணிலாம் பண்ணல.

பிரகாஷ் : ஆமா ! ஆமா ! நீ பிளான் பண்ணாமத்தான் பண்ணுவே ! நான் கண்ணே கண்ணு ஒண்ணே ஒண்ணுனு லவ் தான் பண்ணேன். அது கூட பொறுக்காம என்ன அவ கிட்ட இருந்து பிரிச்சி சாகடிச்சி கடைசியா இந்த நடு காட்டுல கொண்டு வந்து நிக்க வெச்சுருக்குங்க அந்த கிறுக்கு முண்டங்க ! இதுல நீ வேறே ! வெறுப்பேத்திக்கிட்டு !

தமிழ் : நான் என்னடா பண்ணே ? அது தானா அமையுதுடா மச்சான் !

பிரகாஷ் : ஊரே செஞ்சி உள்ளுசுலுவார்லே போடாதடா ! நானும் உன் பின்னால தானே வந்தேன். நீ நினைச்சிருந்த மச்சான் பின்னால வாரான் அவன் இந்த சரக்க தள்ளிக்கிட்டு கீழே விழட்டும்னு நினைச்சியா ?!

தமிழ் : இப்போ, என்னே உனக்கு நீ அந்த பொண்ணு கண்ணுக்கு ஹீரோவா தெரியணும். அவ்ளோதானே இரு வரேன் !

சம்யுக்தாவை நோக்கி நடந்தான் தமிழ். அவளை அடைந்தவன்,

தமிழ் : எனக்கொரு உதவி பண்றிங்களா ? தயவு பண்ணி நீங்க திரும்பவும் அந்த மலை மேலே போய் நின்னு கீழே குதிக்கிறிங்களா. என் பிரெண்டு. (அவனை கை காட்டி) பேரு பிரகாஷ் அவன் தான் உங்கள காப்பாத்தணுமா. சோ, இந்த உதவி மட்டும் பண்ணிடுங்களேன்.

சம்யுக்தா : அவர, இங்க வர சொல்லுங்க. பேசி பண்ண வேண்டியத பண்ணிடலாம்.

தமிழ், பிரகாஷை கை நீட்டி அழைக்க அவன் இவனை நோக்கி ஓடி வந்தான்.

தமிழ் : மச்சான், பேச வேண்டியதெல்லாம் பேசிட்டேன்.அவுங்களுக்கு ஓகே. ஆனா, உன்கிட்ட ஏதோ கொடுக்கணுமா. நீ போய் வாங்கிக்கோயேன்.

பிரகாஷ் பாடிக் கொண்டே போனான் சம்யுக்தாவை நோக்கி.

பிரகாஷ் : தொ, மாமா வந்துட்டேன் செல்லம்.

என் இனிய பொன் நிலாவே
பொன்நிலவில் என் கனாவே
நினைவிலே புது சுகம் த ர ர தா த தா
தொடருதே தினம் தினம் த ர ர தா த தா

சம்யுக்தாவை பார்த்தவன் அவளை நன்றாய் உற்று பார்த்தான். அவ்வளவு நேரம் பிரகாஷ் கவனிக்கவில்லை. இதுதான் மித்ரா சொன்ன டைரக்டர் சம்யுக்தா என்பதை.

அவன் பேச்சை ஆரம்பிக்கும் முன்னமே சம்யுக்தா அவனின் கையை பிடித்து உள்ளங்கையில் இரண்டு கரப்பான் பூச்சிகளை வைத்தாள்.

அவளையே பார்த்தவன் சம்யுக்தா உள்ளங்கையில் என்ன வைத்தாள் என்பதை பார்க்கும் முன்னமே அவனின் கையில் ஏதோ ஊர்வதை உணர்ந்தான். ஊறும் இடத்தை பார்த்தவன் கொஞ்ச நேரத்தில் பரதநாட்டியமே ஆடி விட்டான் அலறி.

பிரகாஷுக்கு கரப்பான் பூச்சி என்றால் அலர்ஜி. அலர்ஜி என்பதை விட போபியா எனலாம். இனி அவனுக்கு ஒரு நாள் முழுக்க தூக்கம் வராது. பாறை மீது அமர்ந்திருந்த தமிழ் அவனின் செய்கையை கண்டு சிரிக்க பிரகாஷ் அவனை நோக்கி ஓடினான் அடிக்க.

கட்டி புரண்ட நண்பர்கள் இருவரும் பாறையின் மீது கிடந்தனர்.

தமிழ் : நினைச்சே பார்க்கலடா....

பிரகாஷ் : செத்துப்போனவ எப்படி திரும்பி வந்தான்னா ?!

கால்களால் நண்பனை எத்தினான் தமிழ்.

தமிழ் : வாயி ! வாயி !

பிரகாஷ் : பாப்பு எப்படி இருக்கா ?! நான் இல்லைன்ற தைரியத்துல ஓட்டி ரூம்ல குடும்பமே நடத்திருப்பியே ! அந்த mortuary ரூம்பையாவது விட்டு வெச்சியா ?

தமிழ் : மச்சான் எனக்கும் பாப்புக்கும் கல்யாணம் ஆகி ஆறேழு மாசமாச்சி.

பிரகாஷ் : பிலேடி ராஸ்கோல் ! ஏண்டா என்கிட்ட சொல்லலே ?!

தமிழ் : நீ அப்போ செத்துட்டேடா மச்சான் !

பிரகாஷ் : அதுவும் ரைட்டுதான் ! ஹன்சலம், அனுஷ்யா,வாசு, லத்தி எல்லார் பத்தியும் சொல்லுடா ?! எல்லாம் எப்படி இருக்காங்க ?

தமிழ் : கிலாரா வெள்ளைக்காரி. லவ். கல்யாணம். வாசு வெளியூர்ல செட்டல் ஆயிட்டான். லத்தி கல்யாணம் இப்போ வேணா சொல்லிட்டா. அப்பா பிஸ்னஸ் முழுசா அவதான் பார்த்துக்கறா. ஹன்சலம் பிராண்ட் டெஸ்க் கேர்ள் காயத்ரியை கல்யாணம் பண்ணியாச்சு. மோகினிக்கு சர்ஜரிலாம் பண்ணி இப்ப ஓகே. ஜி.ஜெதான் எனக்கு டெம்போரரி பிரகாஷ்.

பிரகாஷ் : ஒருவழியா எல்லார் வாழ்க்கையும் செட்டில் ஆச்சில.

தமிழ் : எல்லாரையும் கேட்டியே முக்கியமான ஒரு ஆள பத்தி கேட்கவே இல்லையே ? நீ கேட்கலனா என்ன நானே சொல்றேன். அவன் ரொம்ப மோசம்டா. நிறைய ஓர்டர். பாவம் ரீனா.

பிரகாஷ் டக்கென்று எழுந்தான் பாறையின் மீதிருந்து.

பிரகாஷ் : ரீனா மேல கை வெச்சானா ?!

தமிழ் : ஹ்ம்ம்.... எது சொன்னாலும் கேட்கறது இல்லடா !

பிரகாஷுக்கு கோபம் வந்துவிட்டது. பல்லை கடித்தவன் கேட்டான்,

பிரகாஷ் : யாரு ?!

தமிழ் : பேரு என்னவோ ரேயனா !

பிரகாஷ் : டேய் ! உன்னே !

தமிழை துரத்தி ஓடிய பிரகாஷ், சம்யுக்தாவை காணாது நண்பனிடம் சொல்ல, இருவரும் சேர்ந்து காட்டுக்குள் புகுந்து அவளை தேடி அலைந்தனர்.

உண்மையில் சம்யுக்தா கிளம்பி போய் ரொம்ப நேரம் ஆகிவிட்டது. நண்பர்கள் இருவரும் மெய்மறந்து பேச அவள் சென்றதை கவனிக்க தவறி விட்டனர்.

இவர்கள் சம்யுக்தாவை தேட இவர்களை தேடி வந்த சேர்ந்தனர் நிகிலாவும் மித்ராவும். நிஜமாகவே மித்ராவையும் நிகிலாவையும் இவர்கள் இருவரும் மறந்திருந்தனர்.

தமிழை பார்த்த மித்ரா வேகமாய் ஓடி வந்து அவனின் முகம் வெற்றுடல் என எல்லா இடத்திலேயும் தொட்டு தடவி அவனைக் கட்டிக் கொண்டாள் பதற்றத்தோடு.

யாழியின் ருத்ர கிரீசன் வருவானா ! யாழியை மீட்டிடுவானா !
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top