யாழியின் ருத்ர கிரீசன் - 7

Advertisement

cover (6).jpg

யாழியின் ருத்ர கிரீசன் - 7

பிரகாஷ் மற்றும் தமிழ் எதிரே நின்றிருந்த நிகிலா பேச ஆரம்பித்தாள்.

நிகிலா : ஓகே டார்லிங்ஸ்.

பிரகாஷ் : டார்லிங்ஸ்சா ?! ஏய் ! அதெல்லாம் முடியாது ! டார்லிங்க்ல எஸ்யே கட் பண்ணு !

பிரகாஷின் உளறலை யாரும் கேட்கவில்aலை. நிகிலா தொடர்ந்து பேசினாள்.

நிகிலா : நம்ப கப்பை விண்கல் பட்டு சேதமாச்சி. இன்னும் நாற்பத்தி அஞ்சி நிமிஷத்துல நெருப்பு பிடிச்சி எரிஞ்சிடும். சோ, நாம இப்போ இங்கிருந்து தப்பிச்சாகனும். உண்மையிலயே, நீங்க மட்டும் தான் காராக் போகறாத பிளான். நாங்க இங்க இருந்து உங்கள வாட்ச் பண்றதுனு எல்லா பக்காவா பிளான் பண்ண வெச்சிருந்தோம். பட், இப்போ இந்த விண்கல்லால எல்லாம் பிளானும் நாசமா போச்சி. எங்களுக்கு வேறே வழியும் இல்ல. நாங்களும் இப்ப உங்க கூடத்தான் வந்தாகனும்.

பிரகாஷ் : அப்பறம் ஏன் இன்னும் பேசிகிட்டு வாங்க கிளம்பலாம்.

தமிழ் இவர்கள் பேசுவதை கேட்டுக் கொண்டே அங்கிருக்கும் ஒவ்வொரு பொருட்களையும் வலது புறமாய் நடந்தவாறே நோட்டமிட்டான்.

தமிழின் பார்வை எங்கெல்லாம் மேய்கிறதோ அங்கெல்லாம் மித்ராவின் பார்வையும் சென்றது இடது பக்கம் நடந்தவாக்கில்.

நிகிலா : அதுல சின்ன சிக்கல்.

பிரகாஷ் : அதுல என்னமா பிரச்சனை ?

நிகிலா : பூமிக்கு போகிற space safety pod மூணுதான் இருக்கு. ஒரு ஆள் ஷேர் பண்ணிக்கணும்.

பிரகாஷ் : அதுக்கு என்ன ? நீயும் நானும் ஷேர் பண்ணிக்கலாம் டார்லிங்.

நிகிலா : அதுலையும் பிரச்சனை இருக்கே !

பிரகாஷ் : பிரச்சனை இல்லாத சொலுஷன் ஏதாவது சொல்றியா நீ ?!

நிகிலா : ஒரு space safety pod ரிப்பேர் பண்ணனும். அதுவும் உடனே பண்ணனும்.

பிரகாஷ் : எங்க சீக்கிரம் அதை காட்டித் தொலை !

பிரகாஷ் நிகிலாவுடன் அந்த space safety pod நோக்கி சென்றான். பிரகாஷ் அந்த space safety pod உள் தலையை விட்டு பார்க்க, அவனை பிடித்து வெளியில் இழுத்தான் தமிழ்.

தமிழ் : ஏண்டா, இப்ப தான் ஒரு பெரிய கண்டத்துலர்ந்து தப்பிச்சுருக்க அதுக்குள்ள இன்னொரு தடவ சாக போறியா ?!

பிரகாஷ் அவனின் முப்பத்தி ஆறு பல்லையும் காட்டிட,

தமிழ் : இந்த தடவ சாகணும்னா உங்க எல்லாரையும் காப்பாத்திட்டு நான் சாகறேன்.

சொன்னவன் தலை தூக்கி மித்ராவை பார்த்தான்.மித்ராவின் பார்வை தமிழின் கூர்மையான கண்களை எதிர்நோக்கிட முடியாமல் கீழே குனிந்து மூடிக் கொண்டன.

தமிழ் மீண்டும் கவனத்தை space safety pod மீது திருப்பினான். அந்த space safety pod கைடன்ஸ் புத்தகத்தை புரட்டி என்ன செய்ய வேண்டுமோ அதை தெரிந்துக் கொண்டு நிகிலாவை மெக்கானிக்கல் டூல்ஸ் எடுத்து வர சொல்லி பிரகாஷின் உதவியோடு அதை பிக்ஸ் பண்ணினான்.

இடையில் டிஸ்டப் செய்த அவனின் கிழிந்த போன டி-ஷிர்ட்டை கழட்டி தூக்கி எறிந்தான் தமிழ். வெற்றுடல் தமிழை பார்த்தவள் அவனை பார்க்க முடியாமல் திரும்பி நின்றுக் கொண்டாள். இரு கை நகங்களும் மேஜையில் அழுத்தி ஊனப்பட்டது.

பிரகாஷ் இருவரையும் மாறி மாறி கவனித்தான். சிரித்தான். வழக்கம் போல் சிட்டுவேஷன் சோங் பாடினான்.

உயிரே உன் பார்வையால் இந்நேரம் நெஞ்சோரம் வைத்தாயே தீயே
உயிரே கண்ணோரமாய்
தீராத கார்காலம் தந்தாயே நீயே
விழியே கண்ணீரிலே
முழ்காதே முழ்காதே நீ ஓடம் போல

கவிதை என் காதலே
வீசாதே வீசாதே நீ காலின் கீழே

தேனே தேனே செந்தேனே
நான் நொந்தேனே மனம் நோகுதே
மானே மானே பொன் மானே
நான் வெந்தேனே உயிர் போகுதே !

மித்ரா அங்கிருந்து பக்கத்துக்கு அறைக்கு ஓடிவிட்டாள்.

அதை பார்த்த பிரகாஷ்,

பிரகாஷ் : அவ்ளோ கொடூரமாவா படுச்சேன் ?!

தமிழ் : ரொம்ப சரியா படிச்சே !

பிரகாஷ் : என்ன சொல்றிங்கே மை சன் ?!

தமிழ் : போட் ரெடி !

போன மித்ரா திரும்பி வந்திருந்தாள். பிரகாஷும் நிகிலாவும் அது எனக்கு இது உனக்கு என்று சொல்ல. தமிழும் மித்ராவும் மட்டும் அமைதியாய் நின்றனர் கைகட்டி.

தமிழ் வம்பு பண்ணிக் கொண்டிருந்த பிரகாஷின் தொழில் கைபோட்டு அவனை ஓரமாய் கூட்டி போய் காதில் ஓதினான்.

தமிழ் : மச்சான், உனக்கு நல்ல டைம் இது. பேசாமே அந்த சரக்கு கூட ஒண்ணா ஒரு போட்ல ஜாலியா ட்ராவல் பண்ணு !

பிரகாஷ் : ஐ ! அஸ்க்கு ! புஸ்கு ! முடியாது ! எனக்கு சரக்கும் வேணாம் ஒன்னும் வேணாம். நான் தனியா போக போறேன் இந்த ராக்கெட்லே.

நண்பனின் பிடியிலிருந்து விலகி ஓடி ஒரு போட்டில் கை வைத்து லாவாக நின்றுக் கொண்டான் சிரித்தவாறு.

தமிழ் நிகிலாவின் பக்கம் திரும்ப, அவளும் ரெடியாய் இருந்தாள் அவளுக்கான பதிலோடு.

நிகிலா : சோரி தமிழ். எனக்கு ஷர் பண்றது uncomfortable-ல இருக்கும்.

தமிழ் ஒன்றும் பேசவில்லை. உதட்டை சப்பி தலையை தொங்க போட்டான் தமிழ்.

வேறு வழியில்லை. கப்பல் வெடிக்க இன்னும் பத்து நிமிடங்கள் தான் இருந்தது.

பிரகாஷ் முதல் space safety pod-டில் ஏறி அமர்ந்தான். மித்ரா அவனுக்கான பாதுகாப்பு விசயங்களை விளக்கி பெல்ட் போட சொல்லி போட்டின் கதவுகளை மூடி அதனை ரிலீஸ் செய்தாள்.

பிரகாஷ் அவனின் போட்டில் விண்வெளி கப்பலிலிருந்து வெளியாகி பறந்தான். இரண்டாவதாக நிகிலாவை அனுப்பி வைத்தனர். அனைவரின் space safety pod-டிலும் காராக் காட்டையே லொகேஷனாக செட் செய்து வைத்திருந்தாள் மித்ரா.

மித்ரா கிளம்பும் முன் ஒருதரம் அவளின் விண்வெளி கப்பலை சுற்றி முற்றி பார்த்தாள். அவளின் மூன்று வருட உழைப்பு. அவளின் சோகம் துக்கம் கண்ணீர் அனைத்தையும் பார்த்த கப்பல் அது. அவளின் சிறு வயது கனவது.

புத்தகத்தில் கிறுக்கிய விண்வெளி கப்பலை நிஜத்தில் உருவாக்கிட பல தோல்விகளை சந்தித்து இறுதியில் வெற்றி பெற்ற மித்ரா சித்தியின் வளர்ப்பில் வளர்ந்தவள்.

சித்தி கொடுமை எல்லா இல்லை இருந்தும் அப்பா என்னவோ மிகவும் பிடிவாதக்காரர். ஜாதி, மதம், குலம் கோத்திரம் பார்க்கும் ஆள்.

அலாரம் இன்னும் எட்டு வினாடிகளே உள்ளன என சொல்லிட, அவளின் ரோபோக்களை ஒரு சேர பார்த்து பிளையிங் கிஸ் கொடுத்து டிஸ்ட்மெண்டல் யூர்செல்ப் என்று மித்ரா சொல்ல அவைகள் தானாக உடம்பில் இருந்த பட்டன் ஒன்றை அழுத்தி கீழே விழுந்தன.

தமிழோ இது எதையும் பார்க்கவில்லை. அவன் எண்ணம் முழுக்க அவனின் ரவா புட்டுவின் மீதே இருந்தது. என்ன செய்வாள், இவனை தேடி இருப்பாளா,உணவு உண்டு இருப்பாளா, அழுதிருப்பாளா என்று இப்படிப் பல சிந்தனைகள் அவன் எண்ணத்தில் ஓடின.

விசும்பியவளை திரும்பி பார்த்தான் தமிழ். கலங்கிய கண்களை தமிழுக்கு காட்டிடாதவள் அவளின் space safety pod-டின் முன் சென்று நின்று கையை நீட்டினாள் தமிழிடம்.

அவன் அமைதியாகவே நிற்க, மித்ரா பேசினாள்.

மித்ரா : god sake !

தமிழ் உள்ளே ஏறிட மித்ரா அவன் மீது ஏறி அமர்ந்துக் கொண்டாள். இருவர் அதில் அமர முடியாத அளவுக்கு முன் பக்கம் கொஞ்சம் சின்னதாக இருக்கும். ஆதலால், தமிழ் அமர்ந்திட மித்ரா அவனை கட்டிக் கொள்வது போல் அமர்ந்துக் கொண்டாள்.

இவர்களும் ஜோடியாய் பறக்க, மித்ராவின் விண்வெளி கப்பல் சுக்கு நூறை வெடித்து சிதறியது.

இந்த space safety pod நவீன ஊர்தியில் ரேடியோ பிரேகுவென்ஸிகள் நன்றாய் வேலை செய்யும். அடுத்த போட்டில் இருப்பவர்களுடன் பேச முடியும். அவர்கள் பேசுவதும் நன்றாய் கேட்கும்.

பிரகாஷ் அனைவருக்கும் வணக்கம் வைத்து, பாட ஆரம்பித்தான். மற்றவர்களின் போட்டிலும் அது நன்றாகவே கேட்டது.

பிரகாஷ் :

வலியென்றால் காதலின்
வலிதான் வலிகளில் பொிது
அது வாழ்வினும் கொடிது
உன்னை நீங்கியே உயிா் கரைகிறேன்
வான் நீளத்தில் என்னை புதைகிறேன்

தமிழ் அவனின் கழுத்தை இருகைகளால் கட்டிக் கொண்டு அமர்ந்திருக்கும் மித்திராவை பார்த்தான். அவள் பார்வை வலது பக்கம் தெரிந்த விண்வெளியை பார்த்திருந்தது.

இல்லை. இல்லை. அவன் பார்க்கிறான் என்று அவளுக்கு தெரியும் இருந்தும் அவள் தமிழை பார்க்கவே இல்லை.

பிரகாஷுக்கு தெரியும் என்னவோ இருக்கிறது தமிழுக்கும் மித்ராவுக்கும் என்று. என்கிறோ ஆரம்பித்து எப்படியோ முடிந்திருக்கிறது என்பது அவனுக்கு புரியாமல் இல்லை.

ஒரு பெண்ணின் மனசு இன்னொரு பெண்ணுக்கு மட்டும் தான் தெரியுமா என்னே. ஒரு ஆணின் மனசு இன்னொரு ஆணுக்கும் தெரியும். பிரகாஷ் தமிழை போல்.

அதனால் தான், வேண்டுமென்றே நிகிலாவிடம் சொல்லி அவளையும் தனி போட் கேட்க சொன்னான் பிரகாஷ். இவனும் தனி போட் கேட்டான். வேறு போட் இல்லாத காரணத்தால் எப்படி முறுக்கி நின்றாலும் இருக்கின்ற ஒரு பொட்டில் தான் இருவரும் சேர்ந்து வந்தாகணும்.

சோ, இது அவர்களுக்கான நேரம் என்று அந்நேரத்தை ஏரேஜ் பண்ணி கொடுத்தான் பிரகாஷ். பாவம் பிரகாஷ் இறுதியில் தமிழுக்கு மாமா வேலையும் பார்த்தாச்சு.

பிரகாஷ் பாடி நிறுத்த, நிகிலா பாடலை முடித்து வைத்தாள்.

நிகிலா :

சிறுபொழுது பிாிந்ததற்கே
பல பொழுது கதறி விட்டாய்
ஜென்மங்களாய் பெண் துயரம்
அறிவாயோ நீ !

மூடியிருந்த தமிழ் கண்கள் திறக்க மித்திராவின் கண்களிலிருந்து வழிந்த கண்ணீர் தமிழின் கண்ணில் பட்டு அவன் கன்னத்தை நனைத்திருக்க, அவளின் சிவந்த அதரங்கள் தமிழின் நெற்றியில் பதிந்திருந்தன.

யாழியின் ருத்ர கிரீசன் வருவானா ! யாழியை மீட்டிடுவானா !
 

Attachments

  • cover (7).jpg
    cover (7).jpg
    65 KB · Views: 1
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top