யாழியின் ருத்ர கிரீசன் - 6

Advertisement

cover (5).jpg

யாழியின் ருத்ர கிரீசன் - 6

தமிழ் அவனை சுற்றி நடக்கின்ற மாயஜாலங்களை சுதாரிக்கும் முன் எல்லாம் இருட்டாகி போனது.

விண்வெளி கப்பலில் திடிரென்று கேட்ட மிகப்பெரிய சத்தம் ஒன்று அங்கிருந்த அத்தனை பேரின் கவனத்தையும் ஈர்த்தது.

மித்ராவும் நிகிலாவும் ஓட, பின் தொடர்ந்தான் பிரகாஷ்.

அவர்கள் இருவரும் ஓர் அறையில் நுழைய இவன் நுழைவாயிலேயே நின்று பிரமித்துப் போய் அவன் முன் தெரியும் பிரமாண்டத்தை அண்ணாந்து பார்த்தான்.

அகலாத ஆச்சரியத்தோடு உள்ளே நுழைந்தவன். அவர்கள் இருவரும் கலக்கத்தில் பதறி போய் இருப்பதை கண்டுகொள்ளாமல் கேள்விகள் கேட்க தொடங்கினான்.

பிரகாஷ் : ஏய் ! என்ன ரூம் இது ?! இப்படி இருக்கு. எவ்ளோ லேப்டப்ஸ். எவ்ளோ மெஷின்ஸ். என்ன குட்டி குட்டி ரோபோலாம் வேறே இருக்கு. ஒரு நடமாடும் hi tech ரோபோ சென்டர் ஸ்பேஸ்ல ! வாவ் ! எப்படி இது சாத்தியம் ? ஹேய் ! இதுவரைக்கும் நானே மிதந்துகிட்டுதான் இருந்தேன் இப்போ எப்படி நடக்கிறேன் ? இந்த ரோபோஸ்லாம் எப்படி இங்க...

நிகிலா ஆத்திரத்தோடு திரும்பி அலறினாள்.

நிகிலா : ஷுட் ஆப் !

பிரகாஷ் ஆடிப் போய் கண்களை மூடி திறந்து எச்சில் விழுங்கினான்.

மித்ரா அவளின் தோளில் கை வைக்க தலையை மட்டும் அவள் பக்கம் திருப்பியவளிடம் முடியாது என்பது போல் தலையாட்டினாள் மித்ரா.

மித்ரா விருட்டேன திரும்பி நிகிலாவை தள்ளி மீண்டும் அந்த லப்டோப்ஸ் நோக்கி ஓடினாள். அதையும் இதையும் தட்டினாள். பலனில்லை. அலாரம் சமிஞ்சை எரிந்துக் கொண்டே இருந்தது.

பிரகாஷ் மெதுவாக மித்ராவின் காது பக்கம் சென்று கேட்டான்.

பிரகாஷ் : என்ன நடக்குது ?! சொன்னா நானும் அலெர்ட் ஆயிடுவேன்லே.

மித்ரா அவன் முகம் பார்க்கவில்லை. அவள் பார்த்தது எல்லாம் கண் முன் தெரியும் பரந்த வெளி ஸ்பெசை மட்டுமே.

மித்ரா : காராக் காட்டுல புவியீர்ப்பு ஜி.பி.எஸ் செட் பண்ணிருந்தோம். அங்க தமிழ் வந்தா எங்களுக்கு அது தெரியணும்னு.

பிரகாஷ் ஆர்வமாக கேட்டான்.

பிரகாஷ் : தமிழ் வந்துட்டானா ?!

மித்ரா ஆமாம் என்று தலையாட்டினாள்.

பிரகாஷ் வாயில் கை வைத்து மூடி மனதில் நினைத்துக் கொண்டான்.

பிரகாஷ் : மச்சான் நீ கிரேட்டா. எப்படியோ வந்து சேர்ந்துட்டே ! என்ன எப்படியாவது இந்த கிறுக்கிங்க கிட்ட இருந்து காப்பாத்து மச்சான் !

மித்ரா தொடர்ந்தாள்.

மித்ரா : தமிழே ட்ராக் பண்ணே புவியீர்ப்பு ஜி.பி.எஸ் எரிஞ்சி போச்சி ! அந்த ட்ராக்ல தமிழ் சரியா நிக்கும் போது எங்களுக்கு இங்க அலாரம் அடிக்கும். space safety pod நிலத்துலர்ந்து வெளியாகி தமிழே இங்க கொண்டு வரும் . இப்போ, அங்க என்னவோ நடந்துருக்கு. தொடர்பு காணாமே போச்சி. இனி தமிழே ட்ரேக் பண்ண முடியாது.

இவர்களின் பேச்சுக்கு இடையில் இன்னொரு அலாரம் அலற. அந்த சத்தத்தின் திசை நோக்கி அனைவரும் திரும்ப அங்கே space safety pod ஒன்று வந்து விழுந்துக் கிடந்தது.

கண்ணடி போன்ற அறையிலிருந்து அதை பார்த்தவர்கள் அங்கிருந்து அந்த space safety pod அறைக்கு விரைந்தனர்.

மித்ரா கண் முன் காற்று டிவியை வர வைத்தாள். அதில் கைவிரல்களால் அதையும் இதையும் கிறுக்கினாள். அவள் முயற்சி அத்தனையும் தோல்வியில் முடிந்தது.

தூரமாக நின்று இதையெல்லாம் பார்த்த பிரகாஷுக்கு அங்கு என்னவோ தவறாக நடந்து கொண்டிருக்கிறது என்று மட்டும் நன்றாய் விளங்கியது.

மித்ராவின் காதை பிரகாஷ் கதை கேட்க கடிக்கும் முன் அவளே சொல்லி விட்டாள்.

மித்ரா : space safety pod-லே யாரோ இருக்காங்க. அது தமிழா இருக்க கூட வாய்ப்பு இருக்கு. ஆனா, இப்போ அந்த space safety pod-டே auto system வொர்க் ஆகல.

பிரகாஷ் : manual ட்ரை பண்ணலாமே ?!

மித்ரா : முடியாது டார்லிங். அதை திறக்கும் போது அதுக்குள்ள இருந்து ஒருவிதமான கேஸ் வெளியாகும். அது நம்ப மேல பட்டா எரிஞ்சி சாம்பலாகிடுவோம்.

பிரகாஷ் : இவ்ளோ கலவரத்துலையும் உனக்கு டார்லிங் கேட்குது ?! சரி, நம்ப மேல அந்த கேஸ் பட்டா எரிஞ்சிடுவோம். அப்புறம் எப்படி அதுக்குள்ள ஆள் வருவாங்க ?

மித்ரா : இதுல வரவங்க அதுக்குள்ளையே செத்துத்தான் வருவாங்க. நாங்க அவங்க உடம்புல எங்ககிட்ட இருக்கற குளோன் செல்ஸ் பிக்ஸ் பண்ணி மறுபடியும் அதை பூமிக்கு அனுப்பி வைப்போம்.

பிரகாஷ் : அட ! கொலைகார பக்கிங்களா ! பொண்ணுங்களா நீங்க ?! என்ன என்னடி பண்ணீங்க ?!

மித்ரா : மைடியர் நீ ஒன்னும் அந்த போட்ல வரல. நாங்க உன்ன ஹைஜெக் பண்ணிட்டு வந்தோம்.

பிரகாஷ் : இப்போ, தமிழ் அதுக்குள்ள இருந்தா செத்துப் போயிருப்பானா ?

பிரகாஷின் கேள்விக்கு மித்ரா ஆமாம் என்று தலையாட்டிட நிகிலா இல்லை என்று தலையாட்டினாள்.

பிரகாஷ் பார்த்தது என்னவோ மித்ராவின் செய்கையை மட்டும் தான்.

இவர்கள் பேசிக் கொண்டிருக்கையில், அந்த space safety pod லேசாக ஆடியது. மித்ரா பயந்து போய் பிரகாஷின் கையை இறுக்கமாக பிடித்தாள்.

பிரகாஷ் அவளின் கையை பிடித்து, அவனின் நெஞ்சில் வைத்து சொன்னான்,

பிரகாஷ் : இங்க கூட வெச்சுக்கலாம் டார்லிங். நோ ப்ரோப்லம்.

மித்ரா பட்டென அவள் கையை எடுத்துக் கொண்டாள் உதட்டை பிதுக்கி.

இவர்கள் அனைவரும் பத்தடி தள்ளி நிற்க அந்த space safety pod சொந்தமாக திறந்தது. அதிலிருந்து ஒரே கேஸ் புகை.

நிகிலா அவள் கையிலிருந்த ஸ்பேஸ் மாஸ்க்கை மித்ராவிடமும் பிரகாஷிடமும் தூக்கி வீசினாள்.

மறுபக்கத்தில் அலாரம் சிவப்பு சமிஞ்சையோடு அலற, நிகிலா அவர்களை பார்த்து,

நிகிலா : மித்ரா, இங்கையே இருங்க. ஒரு இன்ச் நகர கூடாது.

மித்ரா : ஓகே.

நிகிலா : என்ன creature-னு செக் பண்ணு !

கட்டளைகளை பிறப்பித்து நிகிலா பக்கத்து அறை நோக்கி ஓடினாள்.

அந்த space safety pod உள்ளிருந்து தமிழ் வெளியே வந்தான். அந்த புகை மண்டலத்திலும் ஓரளவு பிரகாஷால் கணிக்க முடிந்தது.

தமிழின் முதுகு அதில் இருக்கும் சிவன் படம் எல்லாம் ஒரு சேர வந்திருப்பது அவனின் ஆருயிர் நண்பன்தான் என்பதை அறிந்துக் கொண்டான்.

அவனை பார்த்த சந்தோஷத்தில் பிரகாஷுக்கு கையும் ஓடவில்லை காலும் ஓடவில்லை.

ஸ்பேஸ் மாஸ்காவது புடலங்காயாவது கழட்டி தூக்கி வீசி ஓடினான் அலறிக் கொண்டே பிரகாஷ் நண்பனை நோக்கி.

பிரகாஷ் : மச்சான் !

பிரகாஷின் குரல் கேட்க கண்களை தேய்த்து விருட்டேன திரும்பினான் தமிழ்.

அவனை பார்த்த மகிழ்ச்சியில் திளைத்த தமிழும் பதிலுக்கு கத்தினான்.

தமிழ் : டேய் ! மச்சான் ! நீ இன்னும் சகலையா ?!

வேகமாய் வந்த பிரகாஷ் காலால் பிரேக் போட்டான்.

பிரகாஷ் : ஏன்டா, இத்தனை நாள் கழிச்சி பார்க்கறியே நல்ல இருக்கியா மச்சான் சாப்டியா மச்சான் இதெல்லாம் கேட்காதா ! போயிரு இன்னும் சாகலையான்னு கேட்க !

தமிழ் : சோரிடா ! சோரிடா ! வாடா !

நண்பர்கள் இருவரும் கட்டிப் பிடித்துக் கொண்டு ஆனந்த தாண்டவம் ஆடினர்.

தமிழ் இதுநாள் வரை இறந்து விட்டான் என்றிருந்த உற்ற உயிர் தோழனை பார்த்த மகிழ்ச்சியில் பிரகாஷின் நெற்றியில் முத்தம் வைக்க, அவனின் கட்டி பிடியில் இருந்த பிரகாஷ்,

பிரகாஷ் : மச்சான் நான் உன் ரவா புட்டு இல்லடா. நெத்தியோட நிப்பாட்டிக்கோ வாயே கியே கடிச்சி வெச்சிறதே !

தமிழ் சிரித்தான்.

பிரகாஷ் திரும்பி மித்ராவை பார்த்து தமிழிடம் கிசு கிசுத்தான்.

பிரகாஷ் : மச்சான், இது உன் தங்கச்சி. பேரு மித்ரா.

தமிழும் பதிலுக்கு கிசுகிசுத்தான்.

தமிழ் : எனக்கு இன்னொரு தங்கச்சி கூட இருக்கு மச்சான். பேரு ரீனா.

பிரகாஷ் அதிர்ச்சியாகி போனது போல் நெஞ்சை பிடிக்க தமிழ் நண்பனின் தோளில் கை வைத்து தடவினான் சமாதானம் செய்வது போல்.

நிகிலா பக்கத்து அறையில் இருந்து வந்தாள். மித்ராவை தாண்டி முன் வந்து நின்றாள்.

தமிழ் அதிர்ந்தான். நிகிலா அதிரவில்லை.

நிகிலா பேசினாள்.

நிகிலா : மிஷன் அபார்ட் ! மித்ரா இன்ட்ரோ யூர்செல்ப் !

பிரகாஷ் மட்டும்தான் விழித்தான். தமிழ் இன்னும் அதிர்ச்சியில் இருந்து மீளவில்லை.

மித்ரா பேசினாள்.

மித்ரா : எஸ் மேடம் ! ஹாய், நான் நிகிலா. நீங்க நினைச்ச மாதிரி நான் மித்ரா கிடையாது. மேடம் தான் மித்ரா. இதுவரைக்கும் மேடமே யாருமே பார்த்ததில்லை. மேடம்க்கு நிறைய கொலை மிரட்டல்கள். அவுங்க பாதுகாப்பு கருதி நான் தான் மித்ராவா எல்லார்கிட்டையும் இன்ட்ரோ ஆவேன். மேடம் சொன்னா மட்டும் தான் இந்த ரகசியத்தை நான் வெளியே சொல்வேன். இப்போ மேடம் பெர்மிஷன் கொடுத்தாங்க நான் உங்களுக்கு உண்மையே சொன்னேன்.

இப்போது இதுநாள் வரை நிகிலாவாக இருந்த உண்மையான மித்ரா பேசினாள்.

மித்ரா : நிகிலா, இதுக்கு அப்பறம் நீ நிகிலாவாவே இருக்கலாம். நான் மித்ராவாவே இருக்கேன். இவங்க ரெண்டு பேருக்கும் மட்டும்.

நிகிலா சலியுட் அடித்து ஓகே மேடம் என்றாள்.

பிரகாஷ் முனகினான்.

பிரகாஷ் : மூஞ்சியே பார்த்தா அஞ்சு வயசு குழந்தை மாதிரி இருக்கு. ஆனா, பண்ற வேலையெல்லாம் கள்ளிப்பால் கொடுக்கற பாட்டி மாதிரி பாரேன்.

தமிழ் அருகில் ரியேக்ஷனே இல்லாமல் இருக்க, பிரகாஷ் சொன்னான்.

பிரகாஷ் : மச்சான் when you stare a சரக்கு overaa...they will spit எச்சி like cobraa !

தமிழ் : இல்லே, மச்சான் ! when you love someone overaa ...they will spit விஷம் like cobraa !

பிரகாஷ் பிதுங்கிய விழியோடு தமிழை திரும்பிப் பார்த்தான்.

யாழியின் ருத்ர கிரீசன் வருவானா ! யாழியை மீட்டிடுவானா !
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top