யாழியின் ருத்ர கிரீசன் - 5

Advertisement

cover (4).jpg

யாழியின் ருத்ர கிரீசன் - 5

பாப்புவின் நெஞ்சில் முகம் புதைத்து படுத்திருந்தவனால் தூங்கவே முடியவில்லை.

பலமுறை திரும்பி திரும்பி படுத்தும் கண்களை மூடினாலோ ஒரு காடு, அதில் பல அகோரிகள், அங்கு பிரகாஷ், காட்டுவாசிகள் என எதுவோ புரியாத பலரின் முகங்கள் வந்து போயின. அதில் தெரிந்த முகம் ஒன்றே ஒன்றுதான் அதுவும் பிரகாஷின் முகம்.

ஏற்கனவே தூக்கம் வராமல் புரண்டுக் கொண்டிருந்தவன் காதில் போனின் நோட்டிபிக்கேஷன் சத்தம் கேட்டது. அதை திறந்து பார்த்தால் ஈவென்ட்டுக்கான காலெண்டர் ஆப்டேட்டை காட்டியது. அதில் காராக் கான்பெரென்ஸ் என்று பதிவு செய்யப்பட்டிருந்தது.

போன வருடம் இது நாளில்தான் பிரகாஷ் காராக் காட்டிற்கு சென்றான் என்ற ஞாபகம் தமிழுக்கு வந்து விட்டது.

வழக்கமாக முடிந்த ஈவென்ட்டுக்களை அழித்து விடுவான் தமிழ். அதுவும் இது போன வருட ஈவென்ட். அது இன்னமும் போனில் இருப்பது, இவனுக்கு இந்த நேரத்தில் நோட்டிவிகேசன் வருவது எல்லாம் நிச்சயமாய் எதோ ஒரு வகையில் நடக்கின்ற விசியங்களுக்கும் இறந்து போன பிரகாஷுக்கும் நூறு சதவிகிதம் தொடர்பை கொண்டிருக்கிறது என்று தமிழ் உறுதியாய் நம்பினான்.

கட்டிலிலிருந்து எழுந்தவன் ட்ரெஸ் செஞ் பண்ணி அறையிலிருந்து வெளியேற ஒரு கணம் திருப்பி பார்த்தான். பாப்பு குழந்தையாய் சுருண்டி தூங்கிக் கொண்டிருந்தாள். அவளிடம் எழுப்பி சொன்னால் ஒன்று தானும் வருவதாய் சொல்லி அடம் பிடிப்பாள் இல்லையேல் போக வேண்டாம் என்று அழுதிடுவாள்.

காதல் முத்தி கல்யாணம் ஆனதிலிருந்து பாப்பு சராசரி பெண்ணாய் மாறிவிட்டாள். அடிக்கடி தாலி செண்டிமெண்ட் பேச ஆரம்பித்து முன்பிருந்த கோபம் வீரமெல்லாம் தமிழின் கடைக் கண் பார்வை பட்டாளே காணாமலே போய் வாலாட்டு நாய் குட்டியாய் ஆகி போயிருந்தாள் பாப்பு.

நேராய் அவன் வீட்டு சாமி மேடைக்கு சென்றவன் கதவை ஒருக்களித்து அந்த மிகப்பெரிய சிவலிங்கத்தை ஐந்து நிமிடங்களுக்கு அமைதியாய் பார்த்தான். பிறகு, என்ன நினைத்தானோ மீண்டும் அவனின் படுக்கை அறைக்குச் சென்றான்.

பாப்புவிற்கு போர்வையை நன்றாய் இழுத்து போர்த்தி விட்டு, அவள் நெற்றி, கன்னம், உதடு என்று முகம் முழுக்க முத்தமிட்டு கிளம்பினான் தமிழ் கார் சாவியைக் எடுத்துக் கொண்டு.

பூசாரியாய் வந்த சித்தர் கொடுத்த குட்டி விநாயகா மேஜையில் குப்புற படுத்தபடியே முதலில் பாப்பு எப்படி வைத்தாளோ அதே போல் இருந்தார். தமிழ் அதை எடுக்கவே இல்லை.

தமிழின் கார் பறந்தது காராக் நோக்கி.

மித்ரா காற்று டிவியின் மூலம் காராக் காட்டில் பிரகாஷ் சந்திக்க வேண்டிய ஒரு சில முக்கியமான புள்ளிகளை படம் போட்டுக் காட்டிக் கொண்டிருந்தாள்.

மித்ரா : பிரகாஷ், இதுதான் டைரக்டர் சம்யுக்தா. ரொம்ப ரொம்ப அமைதி. யார்கிட்டையும் தேவ இல்லாம பேச மாட்டா. அதிகமா பேசறவங்க சொல்றதையும் கேட்க மாட்டா. இவதான் நம்பலோட main target ! இவளை வெச்சுதான் நம்ப காரியத்தை காய் நகர்த்தனும்.

பிரகாஷ் : இவ இன்ச் இன்ச்சா பேசினா நாம எப்படி நமக்கு வேண்டியத கண்டு பிடிக்கிறது ?

நிகிலா : அதுக்குதான் பிரகாஷ். நீங்க இங்க தேவை.

பிரகாஷ் : நான் என்ன பண்ணனும் ?

மித்ரா : அவளுக்கு அஜய்னு ஒரு அசிஸ்டென்ட் டைரக்டர் இருக்கான். அவன என் ஆளுங்க தூக்கிறுவாங்க. சோ, அஜய்கு பதில் நீ தான் டார்லிங் அவளுக்கு அசிஸ்டென்ட் டைரக்டர்.

நிகிலா : ஆனா, நீங்க உங்க வாயிக்கு கொஞ்சம் ஜிப் போடணும். இல்லாட்டி அவ உங்கள விரட்டிடுவா !

பிரகாஷ் : சரி, நான் அவளுக்கு அசிஸ்டென்ட் ஆகி என்ன பண்ணனும் ?

மித்ரா : டார்லிங், நீ அவளுக்கு பிடிச்ச மாறி நடந்துகிட்டா ; அவ உன்கிட்ட லொகேஷன் லிஸ்டலாம் தருவா. அத பத்தி உன்கிட்டே பேசுவா. நீ அந்த இன்போ எல்லா எங்களுக்கு டைம்க்கு டைம் இன்போர்ம் பண்ணிக்கிட்டே இருக்கணும். புரியுதா. அப்போதான் நீங்க அங்க போறதுக்கு முன்னாடியே நாங்க தமிழே அங்க கூட்டிகிட்டு போய் எங்க காரியத்தை முடிச்சிக்குவோம்.

பிரகாஷ் : எல்லாம் சரி, ஆனா என்ன கண்டுபிடிக்கணும்னு சொல்லவே இல்லையே ?!

மித்ரா : ஏ.....கோரோனோ வைரஸ்க்கு மருந்து கண்டு பிடிக்க போறோம்.

நிகிலா : பிரகாஷ், சொன்ன வேலையே செய்ய செய்ய உங்களுக்கு அது தெரியும்.

மித்ரா : உன்னே மாறிய அங்க ஒருத்தன் இருப்பான் டார்லிங். அவன்கிட்ட அடக்கி வாசி. இல்ல உன்ன அவன்தான் டாக்டர் ஆக்குனான்னு சொல்லிருவான்.

பிரகாஷ் : ஏவஅவன் ?

நிகிலா அவள் கையை காற்று டிவியை நோக்கி காட்டினாள்.

அதில் வளர்ந்து வரும் மல்ட்டி ஸ்டார் மகேனின் முகம் தெரிந்தது. அதில் அவன் பண்ணும் அலப்பறையும் சேர்ந்தே தெரிந்தது.

மல்ட்டி ஸ்டார்ட் மகேன் கேரவனுக்குள் அமர்ந்திருக்கிறான்.

அவனை சந்திக்க சம்யுக்தாவின் அசிஸ்டென்ட் டைரக்டர் அஜய் வந்திருக்கிறான்.

அஜய் : சொல்லுங்க மகேன் வர சொல்லிருந்திங்கலாமே ?

மகேன் : ஆமா, ஆமா. என்னங்க கத இது ?! நான் எதோ சகோ,தெறி,விஸ்வாசம் ரேஞ்சிக்கு இருக்கும்னு நெனைச்சா. இது பாகுபாலி பார்ட் த்ரீ மாதிரிலே இருக்கு.

அஜய் : மகேன், அதான் சமி மேடம் ஏற்கனவே சொன்னாங்களே இது ஹிஸ்டரி சப்ஜெக்ன்னு.

மகேன் : சொன்னாங்க, சொன்னாங்க. ஆனா அந்த பாகுபாலிலே கூட ஒரு அயிட்டம் சோங் இருக்கு இதுல எதுமே இல்லையே ?

அஜய் : அய்ட்டம் சோங் தான் உங்க பிரச்சனையா ?

மகேன் : பின்னே, அது இல்லாம இந்த மகேன்னா ?! நோ வேய் ! போய் உங்க மேடம்கிட்ட சொல்லுங்க இந்த மகேன் சொன்னேன்னு ஒரு அய்டம் சோங் அட் பண்ணே சொல்லி !

அஜய் நெற்றி சுருக்கி முகம் சுளித்தான். மனதில் கறுவினான்.

அஜய் : அப்பையே, அதுகிட்ட சொன்னேன். இவன் வேணா. ஓவரா பண்ணுவான்னு. எங்க சொன்னா கேட்குதுங்க. இஷ்டத்துக்கு ஆடுதுங்க. இப்போ இவன் என்னான்னா அய்டம் சோங் வை வெயிட்டான சோங் வைன்னு ஆர்டர் போடறான். இவன்லாம் இந்த படத்துல நடிக்கலன்னு யார் அழுதா !

அஜய்யின் கவனத்தை மகேன் கலைத்தான்.

மகேன் : அஜய், இந்த நேத்து ராத்திரி எம்மா மாதிரி கொஞ்சம் வெயிட்டா சோங் வைங்க. இல்ல, ராத்திரி நேரத்து பூஜையில் அதுவும் இல்லன்னா நாட்டு சரக்கு நச்சுனுதான் இருக்கு இந்த மாதிரி ஏதாவது ஓகேவா ?

அஜய் : சரித்திர படத்துல ?! ராத்திரி நேரத்து பூஜையில் ?!

மகேன் : அப்பறம், அந்த பள்ளியறை நல்ல பெரிய செட்டா போடுங்க. ஒப்புக்கு வெறும் பத்து கேர்ள்ஸ் வைக்காதீங்க. சும்மா ஒரு நாப்பது அம்பது வைங்க. ஒவ்வொரு ரொமான்ஸ்லையும் ஒரு லிப் லோக் வெச்சிடுங்க.

அஜய் : மகேன், நீங்க கத முழுசா படிச்சிட்டிங்களா ?!

மகேன் : அது, எதுக்கு மேன். மகேன் நினச்சா எல்லாம் முடியும். ஷூட்டிங் டேட் மட்டும் சொல்லி அனுப்புங்க. டாங்குன்னு வந்து நிப்பான் இந்த மகேன்.

அஜய் : ரொமான்ஸ் சீன்னு ?! பள்ளியறை ?! சூப்பரா பண்ணிடலாம்.

மகேன் : லிப் லோக் ! லிப் லோக் !

ஹ்ம்ம் என்று சொல்லி அஜய் தலையை ஆடு போல் ஆட்டிவிட்டு கிளம்பினான் சிரித்துக் கொண்டே.

மித்ரா, பிரகாஷின் பக்கம் திரும்பினான்.

மித்ரா : இன்னிக்கி நைட் அந்த புதுப்பட டீம் காராக் காட்டுல கேம்ப் போடறாங்க. அஜய் கடத்தப்படுவான். நீ அங்க பிரீலான்ஸ் போட்டோகிரப்பரா ஆஜர் ஆகணும்.

பிரகாஷ் : டார்லிங் மித்ரா நான் டாக்டர்மா. youngest neurosurgeon.

மித்ரா : அந்த பிரகாஷ் செத்து ஏழு மாசமாச்சி டார்லிங்.

பிரகாஷ் : சரி, அசிஸ்டென்ட் டைரக்டர்க்கும் போட்டோகிராப்பருக்கும் எப்படி சிங்க் ஆகும் ?

நிகிலா : நீங்க இங்கிருந்து போகும் போதே உங்களுக்கு நாங்க ஒரு ஆல்பம் கொடுத்து அனுப்புவோம். அதுல அந்த காராக் காட்டுல இருக்க கூடிய பல அரிதான படங்கள் இருக்கும். இத பார்த்த சம்யுக்தா கண்டிப்பா உங்கள நகர விட மாட்டா காரணம் அவளோட ஷூட்டிங் ஸ்பாட்டத்தான் நாம அவளுக்கே தெரியாம படம் பிடிச்சி அவளுக்கே அதை காட்டி ஏமாத்தே போறோம். அவளை விட உங்களுக்கு அந்த இடம் பத்தி நிறைய தெரியும்னு அவ நம்புவா. நம்பணும். அந்த இடத்துல ஷூட் பண்றது ரொம்ப கஷ்டம்னு நீங்க சொல்ல, அவ மூலியமா பெர்மிஷன் வாங்குவா. அவளை வெச்சி நாம அங்க போவோம்.

பிரகாஷ் : பா..... இந்த சின்ன மூளை இவ்ளோ பிளான் பண்ணுதா ?! நம்பவே முடியல ! சரி, எல்லா வேலையும் நான் செய்றேன். அப்பறம் எதுக்கு தமிழ் இங்க வரணும் ?

மித்ரா : சும்மா, சும்மா யாரும் கேள்வி கேட்க வேணாம். சொன்னதை செஞ்சா போதும்.

நிகிலா : (அத்தட்டலான குரலில்) மித்ரா !

பிரகாஷ் ஆச்சரியமாக பார்த்தான். மனதில் நினைத்துக் கொண்டான். மித்ரா முதலாளி. நிகிலா தொழிலாளி. அப்படி இருக்க இவள் அவளை ஏன் அதட்டிட வேண்டும்.

இதில் ஏதோ குழப்பம் இருப்பதாய் பிரகாஷுக்கு சந்தேகம் வந்தது. அதை வெளி காட்டிக் கொள்ளாதவன், தொடர்ந்தான்.

பிரகாஷ் : நிஜமாவே கோரோனோ வைரஸ்க்குத் தானே மருந்து கண்டுபிடிக்க போறோம் ?! ஒரு டவுட்டாத்தான் இருக்கு !

பெண்கள் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து சிரித்துக் கொண்டனர்.

பிரகாஷுக்கு டவுட் உறுதியானது.

காராக்கின் காட்டு வழி தார் சாலையில் பயணித்த தமிழின் கார் சொந்தமாகவே வழியில் நின்றது. தமிழ் காரின் முன் கண்ணாடி வழி பின்னால் பார்த்தான். யாருமில்லை. சுற்றி முற்றி, எதிரே, முன்னே என்று யாருமற்ற இருட்டிய ரோடு மட்டுமே இருந்தது.

பௌர்ணமி வெளிச்சம் அன்றைக்கு அவனுக்கு உதவியாய் இருந்தது.

போனை எடுத்துக் கொண்டு காரிலிருந்து இறங்கிய தமிழ், காரை லாக் செய்தான்.

பயங்கரமான குளிர் கற்று வீசியது. காடு ஆட்டம் கண்டது. மரம் செடி கோடி எல்லாம் வேரோடு புடிங்கிக் கொண்டு வந்திடும் போல இருந்தது. தமிழ் காட்டு பாதைக்குள் காலடி எடுத்து வைத்தான்.

அவன் காதில் சங்கு ஊதுகின்ற சத்தம் கேட்டது. காட்டுக்குள் சங்கு சத்தமா என்ற குழப்பத்தோடு சுற்றி முற்றி பார்த்தவன் ஒரு நொடி திகைத்தான்.

தமிழ் ஒரு அடி தான் எடுத்து வைத்தான் காட்டுக்குள். ஆனால், இப்போது திரும்பி பார்க்கையில் நடு காட்டில் நின்றிருந்தான்.

கிர்க்க்க்க்க் என்ற சத்தம் கேட்க தலையை கீழே குனிந்து பார்த்தான்தமிழ்.

அவனின் டீ-ஷர்ட் சொந்தமாக கிழிந்தது. அதாவது, எம் சைசில் இருக்கும் அவன் இப்போது எல் சைசாகி விட்டது போல்.

தமிழின் நெஞ்சு மற்றும் கைகள் வழக்கத்திற்கு மாறாக பெரிதாகி போயின. அவனின் நெஞ்சில் தொங்கிக் கொண்டிருந்த ருத்ராட்ச மாலை சிவப்பாகி மின்னியது.

தமிழ் அறியவில்லை அவனின் முதுகிலும் சிவன் கொழுந்து விட்டு எறிகிறார் என்பதை.

யாழியின் ருத்ர கிரீசன் வருவானா ! யாழியை மீட்டிடுவானா !
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top