யாழியின் ருத்ர கிரீசன் - 4

Advertisement

cover (3).jpg

யாழியின் ருத்ர கிரீசன் - 4

பாப்பு ரோட்டில் சமிஞ்சைக் விளக்கிற்காக அவள் காரை மறைத்து நின்ற தமிழின் பைக்கை பார்த்து ஹான் அடித்தாள். தள்ளி போ என்று அவள் சைகை செய்ய, தமிழ் பைக்கை பின்னால் தள்ளிக் கொண்டு அவள் காரின் பக்கம் வந்து நின்றான்.

ஜன்னலை கீழே இறக்கினாள் பாப்பு. தலையிலிருந்து ஹெல்மட்டை கழட்டிய தமிழைப் பார்த்து கேட்டாள் கிண்டலாக வேண்டுமென்றே,

பாப்பு : யோவ் ! இது என்ன உங்கப்பன் வீட்டு ரோடா வழிய மறைச்சிகிட்டு நிக்கறே ?!ஓரம்போ ! ஓரம்போ ! ரவா புட்டு வண்டி வருது !

தமிழ் : ஆமாங்க, எங்க மாமனார் போட்ட ரோடுதான் !

பாப்பு : அடிங் !

என்று கையை தூக்கியவளை இழுத்து வழக்கம் போல் ரோடு என்றும் பார்க்காமல் பாப்புவின் அதரங்களை கொய்தான் தமிழ்.

அந்த முத்த வேளையில் அவன் மூளையில் பட்டென்று ஒரு விசியம் வந்து போனது.

ஆம். இதேபோல் ரீனா பிரகாஷுக்கு சீ.பி.ஆர். செய்த போது ஒருவேளை அவன் ஹார்ட் அப்போது வேலை செய்யாமல் சிறிது நேரம் கழித்துக் கூட செய்திருக்கலாம் என்ற விடயம் தோன்ற, பாப்புவை விலகி ஹெல்மட்டை ஒரு கையால் தலையில் கவிழ்த்து பைக்கில் பறந்து சென்றான் தமிழ் அங்கிருந்து.

போனில் காலையில் வந்த கேமிரா பதிவுகளை தாண்டி தமிழே சீ.சீ.டிவியின் முன் அமர்ந்து பிளே செய்தும் போர்வர்ட் செய்தும் பார்த்ததில் அவனால் எதையுமே கண்டுபிடிக்க முடியவில்லை.

நொந்து போனவன் கோவத்தில் சீ.சீ.டிவி கணினிகளை உடைத்தது தான் மிச்சம்.

தமிழை போலவே பிரகாஷ் தியானிக்க ஆரம்பித்தான். ஆனால், அவனால் முழுமையாக கவனத்தை செலுத்திட இயலவில்லை. பிரகாஷ் எப்படியாவது தமிழை தியானித்தின் வழி தொடர்புக்கு கொள்ள பார்த்தான். அது நடக்கவே இல்லை.

கடுப்பாகி போன பிரகாஷ் தலையில் கை வைத்து உட்கார்ந்திருக்க, மித்ரா வந்தாள்.

வழக்கமாக பிரகாஷ் தானே பாடுவான் இம்முறை மித்ரா பாடினாள்.

மித்ரா : மைடியர் மச்சான், நீ மனசு வெச்சா

ஏற்கனவே சூடாகி போயிருந்தவன், கடுப்பில்

பிரகாஷ் : நீ மாசமாயி மோசம் போயிருவே ! போறியா ! உன்னோட ஒரே தலைவலி. எப்பத்தான் என்ன அந்த காட்டுல கொண்டு போயி விட போறே ?!

மித்ரா : அது, உன் பிரெண்டு தமிழ் கையிலத்தான் இருக்கு, அவன் இல்லாம உனக்கு அங்க வேல இல்லே டார்லிங்.

பிரகாஷ் : உனக்கென்ன இப்போ தமிழ் அந்த காராக் காட்டுக்கு வரணும் ! அவ்வளவுதானே ?! வெயிட் பண்ணு வருவான் ! வந்து உன்னே ரேப் பண்றானா இல்லையான பாரு !

மித்ரா : அரைஞ்சேன் ! அப்படியே செத்துருவே !

பிரகாஷ் : ஸ்ஹா... அடிச்ச கை அணைக்குமா ?! அணைக்காமலே நெஞ்சம் தவிக்கின்றது ! நீ மட்டும்தான் பாடுவியா நன் கூடத்தான் பாடுவேன்.

மித்ரா ஆத்திரத்தில் அங்கிருந்து விருட்டென்று காணாமல் போனாள்.

பாப்பு வீட்டுக்கு வர கட்டிலில் தமிழ் படுத்திருப்பதைக் கண்டாள். அவன் பக்கம் போய் தலையை நீவி,

பாப்பு : என்னாச்சிடா கார முறுக்கு ? ஏன் கண்ணெல்லாம் சிவந்துருக்கு ? யார் அடிச்ச என் ஹீரோவே ?

தமிழ் அவளின் மடியில் சுருண்டு படுத்துக் கொண்டான்.

தமிழ் : புட்டு, எனக்கு தெரியுது பிரகாஷுக்கு என்னமோ நடந்திருக்கு. ஆனா, என்னானுதான் என்னால கண்டுபிடிக்க முடியல. என்னால அதை நல்லா உணர முடியுது புட்டு. எதோ ஒரு விசியம் இருக்கு நடுவுல. சிக்க மாட்டுது.

பாப்பு அவனின் முகத்தை இருக் கைகளால் பற்றிக் கொண்டாள். சிவந்திருந்த அவன் கண்களை விரல்களால் துடைத்து,

பாப்பு : ஒன்னும் இல்லே முறுக்கு பையா. எல்லாம் சரியாயிடும். நாம குளிச்சிட்டு கோவிலுக்கு போய் பூசாரி பார்ப்போம் சரியா. இப்போ, வா ரெண்டு பேரும் சேர்ந்து ஒண்ணா குளிச்சிட்டு ரெடி ஆவோம்.

அவனின் மூக்கை பிடித்து மெல்லமாய் ஆட்டினாள் பாப்பு.

தமிழ் : ஒண்ணா குளிக்கறதுக்கு முன்னாடி ஒண்ணா எதுவும் பண்ண வேணாமா ?!

பாப்பு : (தமிழின் மூக்கை திருகி) கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி பிரெண்டு செத்த கவலன்னு ட்ராமா போட்டுட்டு இப்போ உனக்கு கில்மா கேட்குதா ?!

தமிழ் : அவன் நேரம் அடிவாங்கிருக்கு அதான் அவன் போய் சேர்ந்துட்டான். என் நேரம் இன்னிக்கி நல்லா இருக்கு புட்டு சீக்கிரம் வந்துட்டா.

புட்டுவை இழுத்து கட்டியணைக்க அவளின் கைவிரல்கள் தமிழின் முதுகில் பட வெடுக்கென்று விரல்களை எடுத்தாள் பாப்பு. சுட்டு விட்டது அவள் விரல்கள்.

தமிழின் முதுகில் இருந்து லேசான புகை வர கலவரமாகி போனவள், அவனின் முதுகின் பின்னால் பார்க்க ஆடி போனாள்.

தமிழ் முதுகில் இருக்கும் சிவன் பச்சை நெருப்புக் குழம்பாய் ஆங்காங்கே திட்டு திட்டாய் எரிமலையை போல் புகைந்தது.

தமிழை கண்ணாடி முன்னாடி நிறுத்தி அதை காட்டியவள் அது அவனுக்கு எந்த விதமான வலியையும் கொடுக்கவில்லை என்றதும் இன்னும் பயந்துப் போனாள் பாப்பு.

சின்னதாய் கை சுட்டுக் கொண்டாலே நம்மால் தாங்காது இதில் இவன் முதுகில் நெருப்பு பட்டா போட்டல்லவா அமர்ந்திருக்கிறது. இருந்தும் இவன் ஒன்றுமே தெரியவில்லை என்கிறானே.

இருவரும் குளித்து கோவில் சென்றனர். பூஜை முடிந்து பூசாரியை பார்த்தனர்.

பூசாரி : வாங்க, உட்காருங்க. நீங்க கொடுத்த ஜாதகத்த பார்த்தேன். இப்போ, என்ன தெரிஞ்சிக்கணும் நினைக்கறீங்க இந்த ஜாதகத்த பத்தி ?

பாப்பு : சாமி, அத விட முக்கியமான விசியம் என் ஹஸ்பண்ட் முதுகுல சிவன் டேட்டு இருக்கு. இன்னிக்கி ஈவினிங் அந்த டேட்டுலர்ந்து நெருப்பு புகை வந்துச்சி. ஆனா, காயம் ஏதும் ஆகல. பட், பயமா இருக்கு சாமி. இவர்க்கு ஒன்னும் ஆயிடாதுலே ?

பாப்புவின் கண்களிலிருந்து கண்ணீர் கீழே கொட்டிவிட்டது.

தமிழ் : ஏய், புட்டு என்னது இது சின்ன பேபி மாறி.

தமிழ் அவளை சமாதானம் செய்து கண்களை துடைத்து விட்டான்.

பாப்பு : பூசாரி, இந்த ஜாதகத்துல இருக்கற பிராக்ஷும் என் வீட்டுகாரும் ரொம்ப நெருங்கிய பிரெண்ட்ஸ். அவர் இறந்ததுலர்ந்து இவரால சரியா தூங்க முடியல. ஒரே கெட்ட கனவு . இந்த பிரகாஷ் ரொம்ப டார்ச்சர் பண்றான் என் புருஷனை. கன்னி கழியாத ஆத்மா வேறே அதான் வெறி பிடிச்சி அலையுது போல ஏதாவது பரிகாரம் சொல்லுங்க சாமி ! நாங்க நிம்மதியா இருக்க !

பூசாரி தமிழை பார்த்தார். பிரகாஷின் படத்தையும் ஜாதகத்தையும் பார்த்தார். சிரித்தார்.

பாப்பு : ஏன், சாமி சிரிக்கிறீங்க ?

பூசாரி : உயிரோட இருக்கிற ஆளுக்கு என்னமா பரிகாரம் பண்ண போறிங்க ?!

பாப்பு : என்ன சாமி இப்படி சொல்றிங்க ? இவரு செத்து ஏழு மாசமாச்சி.

பூசாரி : தொ, உன் வீட்டுக்காரர் இருக்காரே அவரு போக வேண்டிய இடத்துக்கு இந்த பையன் போனதுனால எல்லாமே அவனை சுத்தி நடந்து போச்சி. இப்பையும் ஒன்னும் கெட்டு போகலமா , விட்ட இடத்துலர்ந்து தொடங்கன்னா எல்லாம் சரியாயிடும். ஓம் நமசிவாய. நீங்க போகலாம்.

கை கூப்பி வணங்கி பூசாரி இடத்தை விட்டு எழுந்தார்.

பாப்பு : என்ன, இவரு இப்படி...சாமி முதுகுல அந்த சிவன் படம்....

தமிழ் : விடுமா, அவர் போய்ட்டாரு. இங்க இல்லன்னா என்ன. வேறே கோவிலுக்கு போய் பார்ப்போம். என் ரவா புட்டு போதும் திருப்தியா இருக்குன்னு சொல்ற வரைக்கும் எத்தனை கோவிலுக்கு வேணுன்னாலும் போகலாம். ஓகே வா ?!

பாப்பு சிரித்துக் கொண்டே காரில் ஏறி அமர,

பாப்பு : அச்சச்சோ ! தமிழ் பூசாரிக்கு தட்சனையே கொடுக்கல நீ போய் கொடுத்துட்டு வந்துடுறியா ?

தமிழ் தட்சனை கொடுக்க மீண்டும் கோவில் உள்ளே நுழைய, பூசாரி அவனின் கையை பற்றி ஒரு குட்டி விநாயகர் சிலையை கொடுத்தார்.

பூசாரி : எல்லாத்துக்கும் மூலக் கடவுள். இவரை வணங்கிட்டு உன் தேடலை ஆரம்பி தம்பி. உனக்கு அந்த சிவன் கடாச்சம் அப்படியே இருக்கு. நீ தொட்டது துலங்கும். ஆனா, உயிர் சேதம் ஏற்படும். கோவம் வேண்டாம். தணிஞ்சி போ. வனவாசம் போன ராமன் மாறி நீயும் போக போற ஆனா, உன் சீதா உன்கூட வர மாட்டா. வரவும் கூடாது. உன்ன சுத்தி எதோ தப்பா நடக்குது. அதான் சிவன் உனக்கு அதை இப்படி காட்டிருக்கான். பார்க்க கூடாதவங்கள பார்க்க போறே. மனச திடமாக்கிக்கோ. நல்லதோ கேட்டதோ உன் நண்பன் உனக்காக நிற்பான். மனச தளர விடாதே தமிழ் ! ஓம் நமசிவாய !

தமிழ் கண்கள் மூடி திறப்பதற்குள் காணாமல் போயிருந்தார் பூசாரி. இவன் சுற்றி முற்றி பார்க்க பின்னாலிருந்து யாரோ முதுகை தட்டிட திரும்பினான்.

அதே பூசாரி நின்றிருந்தார்.

பூசாரி : தம்பி நீங்க இன்னும் கிளம்பலையா ?

தமிழ் : நீங்கதானே சாமி பேசிகிட்டு இருந்தீங்க.

பூசாரி : நானா ?! இல்லப்பா. நான் இப்போதான் ஐயனுக்கு பூஜ போட்டுட்டு வரேன். நீங்க நான்னு நினைச்சி வேறே யார்கிட்டையோ பேசிறிக்கிங்க போல.

தமிழ்க்கு புரிந்தது. வந்து பேசியது எதோ ஒரு தெய்வ சக்தி என்று. தட்சனை பணத்தை அவர் கையில் திணித்து அங்கிருந்து கிளம்பினான்.

காரில் அந்த குட்டி விநாயகரை வைக்க பாப்பு அதை கையில் எடுத்து வைத்துக் கொண்டு கொஞ்சினாள்.

பாப்பு : தமிழ், எவ்ளோ கியுட்டா இருக்கான் பாரு இந்த விநாயகா ?! எப்போ வாங்கனே நான் பார்க்கவே இல்லே.

தமிழ் : விளையாடாம அதை அங்க வை புட்டு.

பாப்பு : தமிழ், நம்ப பேபி இந்த விநாயகா மாறி நல்ல கொழுகொழுனு இருந்தா நான் என்ன பண்ணுவேன் தெரியுமா ?

தமிழ் : என்னடி பண்ணுவே, புட்டு ?

பாப்பு : பாடுவேன் இப்படி. சின்ன விநாயகா, குட்டி விநாயகா, குண்டு விநாயகா, செல்ல விநாயகா !

சிவப்பு விளக்கு. ட்ராபிக் லைட்டில் நின்றான் தமிழ்.

தமிழ் : இப்படிலாம் பாடி கொஞ்சறதுக்கு பாப்புக்கு ஒரு பாப்பா வேணும்னா என்ன பண்ணனும் தெரியுமா ?

பாப்பு : அதெல்லாம் எனக்கு தெரியும் நீங்க ஒன்னும் பண்ண வேண்டாம்.

புன்னகையின் ஊடே தமிழ் அவளை நெருங்க லைட் விழுந்தது. கார் வீட்டை அடைந்தது. பார்க் செய்த காரிலிருந்து இறங்க போனவள் கையை இழுத்தான் தமிழ்.

தமிழ் : புது காடி, புது சீட்டு, உன் கார முறுக்கு நான், என் செல்ல ரவா புட்டு நீ... ஹ்ம்ம்....ஹ்ம்ம்....

பாப்பு : சீ, போடா ! கார்ல கேட்க்குதா கில்மா உனக்கு !

பாப்பு குட்டி விநாயகாவை கையில் தூக்கிக் கொண்டு வீட்டுக்குள் ஓடி சோபாவில் சரிந்தாள். தமிழ் அவளை கொஞ்சம் கொஞ்சமாய் நெருங்க விநாயகாவை மேஜையில் தலைக் கீழாக திருப்பி வைத்து அவளின் கழுத்து மடலில் முத்தம் வைத்த தமிழை வெட்கத்தில் தள்ளி விட்டவளை அழகாய் தூக்கி கொண்டு கட்டிலுக்கு போனான் தமிழ்.

கட்டில் மெத்தையும் போர்வையும் கூச்சத்தில் கண்கள் மூடிக்கொள்ள முழுதாய் தமிழுக்குள் அடைக்கலமானாள் பாப்பு.

பாவம் பாப்பு அவள் அறியவில்லை இதுவே அவளின் கடைசி இரவு தமிழுடன் என்று. இனி அவனை எப்போது காண்பாள் என்பது அந்த சிவனுக்கே வெளிச்சம்.

யாழியின் ருத்ர கிரீசன் வருவானா ! யாழியை மீட்டிடுவானா !
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top