யாழியின் ருத்ர கிரீசன் - 3

Advertisement

cover (2).jpg

யாழியின் ருத்ர கிரீசன் - 3

சவக்கிடங்கு.

அதன் உள்ளே தனியாக நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் ஸ்டெச்சர். அதன் மேல் வெள்ளை துணியால் சுத்தப்பட்டு இருக்கும் ஒரு உடல்.

அருகில் சென்று பார்த்தால், அது பிரகாஷ்.

பட்டென கண்களை திறந்தான் தமிழ். முகம், உடல் எல்லாம் வியர்த்து, குளித்து வந்தவன் போல் இருந்தான் நனைந்து.

பாப்பு அவன் நெஞ்சில் சாய்ந்து நன்றாய் தூங்கி கொண்டிருந்தாள். அவளை பார்த்து புன்னகை பூத்தவன், அவள் உதட்டில் முத்தமிட தூக்க கலக்கத்திலும் புன்னகைத்தாள் அவனின் ரவா புட்டு.

பக்கத்தில் இருந்த போனை எடுத்து பார்த்தவன் மணி மூன்றை என்பதை அறிந்துக் கொண்டான். அவளை மெல்லமாய் நகர்த்தியவன், எழுந்து நேராய் அலமாரி பக்கம் சென்றான். லாச்சியை திறந்து அதனுள் இருந்த கடிகார பாக்ஸை எடுத்தான்.

தூங்கிக் கொண்டிருந்த பாப்பு லாச்சி திறக்கும் சத்தம் கேட்டு ஓரக் கண்ணால் பார்த்து, கட்டிலில் உருண்டுக் கொண்டு தமிழை பார்த்து கேட்டாள்.

பாப்பு : என்னடா, பண்றே கார முறுக்கு ?!

தமிழ் : தூங்கு புட்டு.

பாப்பு : நான் தூங்க மாட்டேன்,

அவளின் கைகளை அவனை நோக்கி நீட்டி அவனை அழைத்தாள்.

பாப்பு : நீ வா....

கையில் கடிகார போக்ஸோடு திரும்பியவன் மெத்தையில் பாப்புவின் மீது விழுந்தான். அவளின் கன்னத்தை எச்சப் பண்ணி,

தமிழ் : தூங்கமாட்டிய நீ ! தூங்கமாட்டிய நீ !

என்று விளையாடி அவள் அருகில் படுத்துக் கொண்டு அந்த பாக்ஸை திறந்தான் தமிழ்.

பாப்பு : இது பிரகாஷோட வாட்ச் ஆச்சே. இதை ஏன் இப்போ எடுத்து பார்த்துகிட்டு இருக்கே ?

தமிழ் : கனவு கண்டேன் புட்டு. பயங்கரமா.

பாப்பு அவன் நெஞ்சை இறுக கட்டிக் கொண்டாள்.

தமிழ் : நம்ப ஹாஸ்பிடல் mortuary மாதிரி இருக்கு, அங்க ஒரு தனி ஸ்ட்ரெச்சர். அதுல ஒரு ஆள் படுத்துருக்காங்க . கவர் வித் வைட் கிலோத். கிட்ட போய் பார்த்தா நம்ப பிரகாஷ். தூக்கி வாரி போட்ருச்சு புட்டு டக்குனு விழிச்சிட்டேன்.

பாப்பு : என்ன கனவு இது ?! இப்படி பயங்கரமா. இரு வரேன்.

பாப்பு கட்டிலில் இருந்து இறங்கி குடுகுடுவென அறை கதவை திறந்து வெளியே போனாள்.

தமிழ் படுத்துக் கொண்டே கேட்டான்.

தமிழ் : ரவா புட்டு எங்கடி போறே ?!

பாப்பு போன வேகத்தில் திரும்பி வந்தாள். ரூம் விளக்கை தட்டி, தமிழ் பக்கம் சென்று நின்று தன் உள்ளங்கையில் வைத்திருக்கும் திருநீறை அவன் நெற்றியிலும் கழுத்திலும் வைத்து விட்டாள்.

பாப்பு : இனிமே எந்த கெட்ட கனவும் வராது என் கார முறுக்குக்கு. நிம்மதியா படுத்து தூங்கு.

தமிழ் : எனக்கு வெச்சி விட்டியே நீ வெச்சிகிட்டியா ?!

பாப்பு : வெச்சிகிட்டா போச்சி...

நின்றிருந்த பாப்பு அமர்ந்திருந்த தமிழின் இருபக்க தோளை பிடித்து அவன் நெற்றியில் இவள் நெற்றியை ஒற்றி எடுத்தாள்.

தமிழ் நெற்றியில் அவள் வைத்த திருநீறு இப்போது ஒற்றி எடுத்ததில் இவள் நெற்றியிலும் ஒட்டிக் கொண்டது.

தமிழ் அவளின் இடுப்பை அப்படியே சுற்றி வளைத்து அவளை கட்டிக் கொண்டான்.

பாப்பு : என் கார முறுக்குக்கு என்னாச்சி ? எங்க அவன் கெத்துலாம் ? எங்க போச்சி ?! ஏன் இப்படி பண்றான் திடிர்னு ?

தமிழ் அவளின் கேள்விக்கு பதில் சொல்லாமல் விருட்டேன திரும்பி கட்டில் மேல் இருந்த அந்த கடிகார பாக்ஸை கைப்பற்றினான்.

அதை திறந்து பார்த்தவன் பார்வையை எங்கோ ஓட விட்டு கலவரமான முகத்தோடு அவனின் போனை கைப்பற்றினான்.

ஏழு மாதங்களுக்கு முன் சவக் கிடங்கில் பிரகாஷ் இறந்த நாளில் பதிவு செய்யப்பட்ட கேமரா பதிவுகளை உடனே தனக்கு அனுப்புமாறு காவலாளிகளுக்கு உத்தரவிட்டு நேராய் துண்டை தூக்கி தோளில் போட்டு குளியல் அறைக்குள் நுழைந்தான்.

ரவா புட்டு பேந்த பேந்த விழித்தாள்.

விண்வெளி கப்பலில் மிதந்துக் கொண்டிருந்த பிரகாஷ் நொடிக்கு ஒரு தரம் பிளானை பற்றி விளக்கி கொண்டிருக்கும் நிகிலாவை பார்த்து சிரித்தான்.

அவனின் தொடர் பார்வையும் சிரிப்பும் அவளின் கவனத்தை சிதற வைத்தது. சுதாரித்தவள், கைகளை கட்டிக் கொண்டு அவனை பார்த்து கேட்டாள்.

நிகிலா : உங்களுக்கு நிஜமாவே உங்க குடும்பத்தை காப்பாத்தணும்னு எண்ணமில்லையா ?

பிரகாஷ் : ஏன் இல்ல, நிறைய இருக்கு.

நிகிலா : அப்பறம் ஏன் நான் சொல்ற பிளான்னே கேட்காமே என்னையே பார்த்துகிட்டு இருக்கிங்கே ?

பிரகாஷ் : இங்க பாருமா நிகிலா, நான் என்னத்தான் உன்ன சைட் அடிச்சாலும் என் காது கரைட்டா நீ சொல்றத கேட்டுக்கிட்டுதான் இருக்கும்.

நிகிலா : அப்போ, நம்ப பிளான் என்ன சொல்லுங்க ?

பிரகாஷ் : தமிழே எப்படியாவது காராக் காட்டுக்கு வர வைக்கணும். அங்க பட ஷூட்டிங் எடுக்கற கோஸ்த்திக் கூட சேர்ந்து லொகேஷன் முழுக்க சுத்தணும். அதுல நமக்கு வேண்டிய ஆளுங்களும் இருக்காங்க. அவுங்க அப்பப்போ நானும் தமிழும் என்ன பண்ணும்னு எங்களுக்கு இன்ஸ்ட்ருக்ஷன் கொடுத்து கிட்டே இருப்பாங்க. அதை நாங்க அங்க ஒழுங்கா செய்யலைன்னா இங்க இருக்கற எங்கே குடும்பத்த நீங்க கொன்றுவீங்க ! எல்லாம் சரியா இருக்கா ?!

மித்ரா எங்கிருந்தோ பறந்து வந்தாள்.

மித்ரா : பக்காவா இருக்கு டார்லிங். சோ, இப்போ தமிழே அங்க எப்படி வர வைக்கறதுனு யோசிக்கணும்.

நிகிலா : பேசாமே அந்த பாப்புவே கடத்திட்டா ?

பிரகாஷ் : ஏம்மா, உங்க வாயிலெல்லாம் நல்ல வார்த்தையே வராதா ?எப்போ பார்த்தாலும் கடத்தறது, குத்தறது, கொல்றது. மனசு பக்கு பக்குன்னுதுல !

மித்ரா : அந்த பக் பக் ஒரேடியா நின்ற போது பார்த்து !

பிரகாஷ் : என்கிட்டதான் ஷர்பலிங்கம் இருக்கே ?

மித்ரா : எது ?! அந்த இடுப்பு எலும்புகிட்டே இருக்கே அதுவா ?

நிகிலா : பிரகாஷ், நீங்க நிஜமாவே டாக்டர் தானா ? யார் என்ன சொன்னாலும் நம்பிடறதா ?!

மித்ரா : சும்மா இரு நிகி. இளவரசன் ருத்ரனுக்கு கோவம் வந்துட போகுது !

பெண்கள் இருவரும் அவனை நன்றாய் கலாய்த்து எடுத்து விட்டனர். பூமியாக இருந்திருந்தால் கோபத்தில் கார், பைக் எடுத்துக் கொண்டு இதுகளின் முகத்தில் விழிக்காமல் எங்காவது ஓடியிருக்கலாம்.

இப்படி அந்தரத்தில் அல்லவா கடத்தி கொண்டு வந்து அடைத்து வைத்திருக்கிறார்கள் நம் பிரகாஷை .

இந்த விண்வெளியில் எங்கு ஓடுவது.

பிரகாஷ் : அப்போ இந்த ஷர்பலிங்கம் ?

மித்ரா : அது ஒருவித ஆசிட்டால செஞ்ச மார்க்கர். அதுல வரைஞ்ச kind of tattoo தான் இது.

பிரகாஷ் நெற்றியில் அடித்துக் கொண்டான்.

பிரகாஷ் : ஐயா ! ஐயா ! ஐயோ ! படிச்சே முட்டாள்டா பிரகாஷ் நீ ! ஒரு பொண்ணு இந்த அளவுக்கு பக்காவா பிளான் பண்ணி உன்ன எப்படி வெச்சி செஞ்சிருக்க பாரு ! கடவுளே !

ஆனால், மித்ராவாகட்டும் பிரகாஷ் ஆகட்டும் நிஜமாகவே அவர்கள் அறியவில்லை அந்த ஷர்பலிங்கம் படம் பிரகாஷ் பிறந்ததிலிருந்தே அங்கேதான் இருக்கிறது என்று.

மற்றவர்கள் பார்வையில் படாதவாறு தோலோடு தோலாக. அது பிரகாஷுக்கே தெரியாது. அவனின் பெற்றோர்கள் மட்டுமே இந்த ரகசியத்தை அறிவர்.

ஆகையால், மித்ரா நிகிலாவை பொறுத்த வரை அந்த ஷர்பலிங்க படம் இவர்களால் வரையப்பட்டதாகவே இருந்தது.

குளித்து வந்த தமிழ் தியானத்தில் அமர்ந்தான். பிரகாஷின் மரணம் அவனை எதோ ஒரு வகையில் அவனை உறுத்திக் கொண்டே இருந்தது.

அவன் இறந்த போது நடந்த காட்சிகளை மீண்டும் கண் முன் கொண்டு வந்து நிறுத்தினான் தமிழ்.

சரியாக கவனித்தான். ரேயன் கடலின் மணலில் நடக்கிறான். யாரையோ பார்த்த பின்பு நடக்கிறான். பின்னால் திரும்பி துரத்தி வரும் பிரகாஷை பார்க்கிறான். சிரிக்கிறான். மீண்டும் முன்னுக்கு திரும்பி நடக்கிறான்.

கடலின் அளவுகளின் சீற்றத்தை யோசித்தான் தமிழ். அதன் வேகம். திடிரென்று வந்த விதம். எங்கிருந்து வந்தது எப்படி வந்தது. அதுவும் ஏன் அந்த நேரத்தில் வந்தது. நீர்மட்டம் குறையும் நேரமது. அதிகமாக வர வாய்ப்பே இல்லை. இயற்கை பேரிடர் வந்தால் ஒழிய.

தமிழ் அவன் கைகளில் பிரகாஷை ஏந்தி வந்ததை பற்றி சிந்தித்தான். அவன் பிரகாஷை தூக்கி வந்த போது அவனின் அந்த கைக்கடிகாரத்தில் மணி இரவு இரண்டு நாற்பத்தி ஐந்து. தமிழ் அவன் கை கடிகாரத்தில் மணி பார்த்த ஞாபகம்.

மீண்டும் யோசித்தான் தமிழ் ஆழமாக.

ஆம்புலன்சிலும் பிரகாஷின் கையிலேயே இருந்தது அவனின் கடிகாரம். போஸ்ட் மார்ட்டம் செய்யாததால் வெறும் embalming மட்டுமே செய்வதற்காய் அந்த சவக் கிடங்கில் வைக்கப்பட்டது அவனின் உடல்.

எல்லாம் முடிந்து அவனின் பொருட்களை தமிழ் பெற்றுக் கொண்ட போது அந்த கடிகாரத்தில் மணி மூன்று பதினைந்தை காட்டியது.

பிரகாஷின் கையில் இருந்தது Patek Philippe pulse watch. நாடி துடிப்பிற்கேட்ப அதன் செயற்பாடு இருக்கும். அதற்கு பேட்டரி எல்லாம் இல்லை. ஹார்ட் பீட் தான் பேட்டரி.

பிரகாஷ் உயிர் விட்ட போது இரண்டு நாற்பத்தி ஐந்தில் இருந்த கடிகார மணி எப்படி தமிழ் கைக்கு வரும் போது மூன்று பதினைந்தாக இருக்க முடியும் என்று யோசித்தான்.

யோசித்து யோசித்து மண்டை காய்ந்தவன் கண் திறக்க பாப்பு நின்றிருந்தாள்.

அவன் மடியில் அமர்ந்துக் கொண்டவள்,

பாப்பு : எனக்கு ரொம்ப பயமா இருக்கு. நாம கோவிலுக்கு போகலாமா ?! அய்யர் போய் பார்ப்போம். நிராசையோட செத்துப்போன பிரகாஷ் ஆத்மா பாவம் கண்டபடி மோட்சம் கிடைக்காம அலையுது போல. நீங்கதான் பெஸ்ட் பிரெண்டு ஆச்சே அதான் உங்கள டிஸ்டர்ப் பண்ணுது போல. அய்யர் பார்த்து பரிகாரம் பண்ணிட்டா எல்லாம் சரியாயிடும் கார முறுக்கு..

தமிழ் சரியென்று மண்டையையாட்டி அவளின் விரல்களை பிடித்து பார்த்துக் கொண்டேன் கேட்டான்.

தமிழ் : பாப்பு உனக்கு இந்த sudden death and awakening பத்தி எதாவது தெரியுமா ?

பாப்பு : ரொம்ப இல்ல பட் கொஞ்சமா தெரியும். Sudden cardiac arrest தான் மேஜர் ரீசன். Cardiac muscle வீக் ஆகி heart failure caused பண்ணிடும். அவ்ளோதான். ஆமா, ஏன் திடிர்னு இதைப்பத்தி கேட்கறே ?

தமிழ் : கேஸ் ஸ்டடிக்கு.

பாப்பு : சரி வா மணி ஆகுது. கிளம்பனும்.

தமிழ் எழுந்து முன்னே போக இவள் பின்னாலிருந்து கத்திக் கேட்டாள்.

பாப்பு : அவ்ளோதானா ?

தமிழ் : அவ்ளோதான் !

பாப்பு : எட்டு இருக்கு இன்னும் பெண்டிங்ல !

தமிழ் : பழைய கணக்கோட சேர்த்துக்கோ !

பாப்பு : அது முப்பத்தி நாலு இருக்கு ! இதோட சேர்த்தா நாற்பத்தி ரெண்டாயிடும் !

தமிழ் : இருந்திட்டு போட்டும் ! விடு !

பாப்பு : டேய் ! உன்னைப் போய் கல்யாணம் பண்ணேன் பாரு ! கார முறுக்கா ! கில்மாக்கு யாராவது கணக்கு வைப்பாங்களா ?

தமிழ் : (அறைக்குள்ளிருந்து) நான் வைப்பேன் !

பாப்பு : உன்னே........

பாப்பு ஓடி போனாள் அவள் அறைக்கி. அவள் குரல் அடங்கி காலின் மிஞ்சி சத்தம் உரச கேட்டது.

யாழியின் ருத்ர கிரீசன் வருவானா ! யாழியை மீட்டிடுவானா !
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top