யாழியின் ருத்ர கிரீசன் - 2

Advertisement

802106-dhanush-sai-pallavi-rowday-baby.jpg

யாழியின் ருத்ர கிரீசன் - 2

பிரகாஷ் கால் தரையில் நிற்கவில்லை. மிதந்துக் கொண்டிருந்தான் காற்றில். கைகளை அந்த சாளர மேற்பரப்பில் வைத்து தொட்டு தொட்டு பார்த்துக் கொண்டே சோகமாக பாடினான்.

பிரகாஷ் :

எனக்கென யாருமில்லையே
உனக்கது தோணவில்லையே
எனக்கென யாரும் இல்லையே
உனக்கது தோணவில்லையே

கடல் தாண்டி போகும் காதலி
கை மீறி போகுதே என் விதி
நகராம நின்று போகுமே
என் வாழ்கையின் கதி !

கண்ணாடியில் தலையை முட்டிக் கொண்டவனை கத்திக் கொண்டே நோக்கி வந்தாள் மித்ரா.

மித்ரா : ஹேய் ! ஹேய் ! லூசாடா நீ ?! என்ன பண்றே ?!

பிரகாஷ் : ஏ ! அங்கப்பிரதோஷம் பண்றேன் ! பார்த்தா தெரியல !

மித்ரா : நீ என்ன கன்றாவி வேணும்னாலும் பண்ணு ஆனா, அத இங்க பண்ணாத நீ போக போற காராக்ல போய் பண்ணு ! இப்ப ஒழுங்கா இங்க வா !

அவனின் கையை பிடித்து அவள் இழுத்து போக, பாடினான் பிரகாஷ்.

பிரகாஷ் :

தொட்டால் பூ
மலரும் தொடாமல்
நான் மலர்ந்தேன் சுட்டால்
பொன் சிவக்கும் சுடாமல்
கண் சிவந்தேன்

மித்ரா : நான் விட்டா உன் கன்னம் கூட சிவக்கும். வாய மூடிக்கிட்டு வா இல்லே ஊமையாக்கிடுவேன் !

அவள் ஏசிவிட்ட சோகத்தில் அவள் இழுத்த இழுப்பில் போக யோசித்தான் பிரகாஷ். இவன் இவ்வளவு நேரம் மிதந்துக் கொண்டிருந்தான்.

ஆனால் , இவள் மட்டும் எப்படி நடந்து வந்தாள். இப்போது தன்னையும் சேர்த்து நடக்க வைத்தல்லவா போகிறாள் என்று.

அவள் கையை உதறியவன்,

பிரகாஷ் : மித்ரா, நாம இப்போ எங்கே இருக்கோம் ?!

மித்ரா : அதை தெரிஞ்சிக்கிட்டு நீ என்ன பண்ண போறே டார்லிங் ?!

பிரகாஷ் : இங்கிருந்து ஓடத்தான் !

மித்ரா : வாய்ப்பில்லே ராஜா ! வாய்ப்பில்லை ! நான் என்ன உங்கள மாதிரி 1.5 கிலோ மூளைய சாதாரணமா யூஸ் பண்ற சாமானிய மனுஷியா ?! I'm a astronaut ! உன்ன மாதிரி விஷ ஜந்துவையெல்லாம் நிலத்துல கடத்தி வெச்சிருக்கறது எனக்கு நானே குழி தோண்டிக்கார மாதிரி ! அதான், உன்ன இப்படி ஸ்பேஸுக்கு கூட்டிகிட்டு வந்துருக்கேன். சோ, நீ எங்க சுத்துனாலும் இங்கதான் வந்து நிக்கணும். மீறி வெளியே போன ஆக்சிஜென் இல்லாமா மார்கையா சாலா ஆயிடுவே ! சம்ஜா டார்லிங் ?!

பிரகாஷ் : உண்மையிலயே உனக்கு மூளை ஜாஸ்திதான் !

மித்ரா : சரி தமிழே எப்போ இங்க கூட்டிகிட்டு வர போற ?!

பிரகாஷ் : அவனை ?! அதுவும் செத்துப்போன நானு, இங்க கூட்டிகிட்டு வரணுமா ?! நான் போய் அவன் முன்னுக்கு நின்னாலே ஆவி திருப்தி அடையாம வந்திருக்கின்னு சொல்லி என் மேல விபூதி அடிச்சி அவனுக்கு வேப்பலையே கட்டி விட்ருவாங்க பரவலையா ?!

மித்ரா : டார்லிங் ! உனக்கு பிளான் என் பி.ஏ நிகிலா சொல்லுவா. அதுப்படி கேட்டு சமத்து குட்டியா நடந்துக்கோ இல்லே என் கையில இருக்கற உன் பிரெண்ட்ஸ் குடுமியே ஆட்டி வெச்சிருவேன் !

பிரகாஷ் எக்கி எக்கி பார்த்தான், மித்ரா சொன்னதைக் கேட்டு.

மித்ரா : வாட் ?!

பிரகாஷ் : நிகிலா எங்கே ?

மித்ரா : நான் சொன்ன எல்லா விசியத்தையும் விட்டுட்டு இது மட்டும் தான் நீ focus பண்ணிருக்கே !

வழக்கமாக படும் பிரகாஷ் இம்முறை பாடிக் கொண்டே ஆடினான்.

பிரகாஷ் :

அவ என்ன என்ன
தேடி வந்த அஞ்சல அவ
நெறத்த பாா்த்து செவக்கும்
செவக்கும் வெத்தல அவ
அழக சொல்ல வாா்த்த
கூட பத்தல அட இப்போ
இப்போ எனக்கு வேணும்
அஞ்சல அவ இல்ல இல்ல
நெருப்பு தானே நெஞ்சில

ஓ ஒண்ணுக்குள்ள
ஒண்ணா என் நெஞ்சிக்குள்ள
நின்னா ஓ கொஞ்சம் கொஞ்சமாக
உயிா் பிச்சி பிச்சித் திண்ணா அவ
ஒத்த வாா்த்த சொன்னா அது மின்னும்
மின்னும் பொன்னா ஓ என்ன சொல்லி...

மித்ரா அவள் கைகளை நீட்ட பாடிக்கொண்டிருந்த பிரகாஷின் வாய் உதடுகள் ஒன்றாய் ஒட்டிக் கொண்டன. அவன் உதடுகளை பிரிக்க முடியாமல் தவித்து போனான்.

சைகையில் மித்ராவிடம் கைகளை காட்டி வாயை திறந்துவிட கெஞ்சினான், கொஞ்சினான்.

மித்ரா சிரித்தாள் கைத்தட்டி.

அந்நேரம் பார்த்து நிகிலா வந்தாள். பிரகாஷின் நிலையை கண்டவள் சிரித்துக் கொண்டே சொன்னாள்.

நிகிலா : பாவம் மேடம் ! விட்ருங்கே !

நிகிலாவை பார்த்து அவள் அழகை வர்ணிக்கும் வகையில் பா ! என்றான் பிரகாஷ். அதே வேளையில் அவன் உதடுகள் பிரிந்து சத்தமாய் கேட்டது அவனின் பா !.

நிகிலா வந்த வேலையை முடித்து அங்கிருந்து கிளம்பினாள். பிரகாஷ் மித்திராவை நெருங்கினான்.

மித்ரா : நீ கேட்கவே வேணாம் நானே சொல்லிடறேன். நிகிலா. இருவத்தி அஞ்சி வயசு.சிங்கள்.வேணும்னா நீ ட்ரை பண்ணலாம். ஆனா, என் வேலைய முடிச்சுக்கொடுக்காம எங்கையும் நகர முடியாது. கொஞ்சம் கூட கருணையே இல்லாமே டக் டக்ன்னு போட்டுட்டு போய்கிட்டே இருப்பேன் டார்லிங் !

பிரகாஷ் : எனக்கு நிகிலாவும் வேணா கோகிலாவும் வேணாம் போ ! இப்போ, நான் என்ன பண்ணனும் ? அதை சொல்லு முதல்ல ?!

மித்ரா : தமிழே எப்படியாவது காராக் காட்டுக்கு கூட்டிக்கிட்டு வரணும். இப்போ என்ன பண்ணிக்கிட்டு இருப்பான் ?!

பிரகாஷ் : அவனா ?! ஊருக்கே தெரியும் அவன் என்ன பண்ணுவான்னு . அதை தவிர வேறே என்ன பண்ணிட போறான் என் ஆருயிர் நண்பன்.

மித்ரா கைகளால் காற்றில் சைகை செய்ய திரையில் தமிழ் தெரிந்தான்.

பாப்பு தலையணைகள், போர்வை என அத்தனையையும் தூக்கி விசிறிக் கொண்டிருந்தாள் தமிழ் மேல்.

அதை காற்பந்து போல் சரியாக பிடித்து பிடித்து கீழே போட்டான் தமிழ்.

தமிழ் : அடியே, ரவா புட்டு ஏண்டி இப்படி வந்ததும் வராததுமா இவ்ளோ கோவம் உனக்கு எம்மேல ?

பாப்பு : நான் பார்த்தேன் ! நீ பார்த்ததே நான் பார்த்தேன் !

தமிழ் : அச்சோ இல்லமா. நான் பார்க்கலமா !

பாப்பு : உனக்கெப்படி தெரியும் நான் பாக்கறது. நீதான் அங்க பார்க்கறியே !

தமிழ் : ராவ குட்டி நம்புடா செத்துப்போன பிரகாஷ் மேல சத்தியமா நான் அந்த பொண்ணா ஒரக்கண்ணால கூட பார்க்கலமா !

தமிழ் சொன்னதை கேட்ட பிரகாஷ், பக்கம் நிக்கும் மித்ராவை திரும்பி பார்த்தான்.

பிரகாஷ் : பார்த்தியா ! நீ பண்ண வேலையே ! நான் செத்துட்டேன். அதனால, என்ன பொய் சொன்னாலும் காட்டிக்கொடுக்கா மாட்டேங்கற தைரியத்துல எப்டிலாம் நடிக்கறான்னு ! இவன் எந்த பொண்ணையும் பார்க்க மாட்டானா. பாப்பு நம்பாத ! தமிழ் பொய் சொல்றான் ! பாப்பு !

பிரகாஷ் இங்கிருந்து கத்தினான். கைகளை தூக்கி ஆட்டி பாப்புவின் கவனத்தை அவன் பக்கம் திருப்ப நினைத்தான். அது வெறும் திரை என்பதை மறந்து.

மித்ரா விழுந்து விழுந்து சிரித்தாள்.

மீண்டும் இருவரும் தமிழ் பாப்புவின் சண்டையை கவனிக்க ஆரம்பித்தனர்.

தாலியின் நுனியை கையில் பிடித்திருந்த பாப்பு,

பாப்பு : நிஜமா நீ யாரையும் பார்க்கலையா ?!

தமிழ் வாசலிலிருந்து நடந்துக் கொண்டே அவளை நெருங்கினான்.

தமிழ் : இல்லடா ரவா புட்டு ! உன்னைத்தவிர வேற யாரை பார்த்தா எனக்கு மூடு வரும் நீயே சொல்லு !

கையிலிருந்த தாலியை பல்லால் கடித்து இழுத்து அவளை தன் பக்கம் இழுத்தான் தமிழ். அவன் நெஞ்சில் பொத்தென்று இடித்தவள்,

பாப்பு : இதெல்லாம் நாங்க அலைபாயுதேல பார்த்துட்டோம்.

தமிழ் : ஆமாவா, அப்போ இது ட்ரை பண்ணுவோமா ?

தமிழ் அவளின் உதட்டை கடித்து இழுத்தான்.

பாப்பு குறும்பு பார்வை பார்த்து சிரித்து,

பாப்பு : இது நயன்தாரா சிம்பு பண்ணியாச்சு.

தமிழ் : அப்போ, நம்ப பழைய டெக்னிக்கத்தான் !

பாப்பு என்ன என்று கேட்பதற்குள் அவளை திருப்பியிருந்தான் தமிழ். அவளின் முதுகில் தொங்கிக் கொண்டிருந்த ரவிக்கை கயிறுகளை பல்லால் கடித்து இழுத்து அவளின் முதுகில் முத்தம் வைக்க, சொக்கி போனாள் பாப்பு.

தமிழ், பாப்புவை கொஞ்சும் காட்சிகளை ரொம்ப ரசித்து பார்த்துக் கொண்டிருந்த மித்ராவை திரும்பிப் பார்த்தான் தமிழ்.

பிரகாஷ் : ஏய் ! அவன் என்ன எப்படி சாமி கும்பிடணும்னா சொல்லிக் கொடுக்கிறான் ! அதைப் போய் இப்படி பாக்றே ! இந்த டிவியே ஆப் பண்ணு !

மித்ரா அவனை கண்டுக் கொள்ளவில்லை. அவர்களின் முத்தக் காட்சியை பார்த்துக் கொண்டுருந்தவளை பார்க்க விடாமல் அந்த திரைக்கு முன் சென்று தடுத்தான் பிரகாஷ்.

பிரகாஷ் : (வலது பக்கம் சாய்ந்தான்) நோ !

மித்ரா : சீ ! பெ ! (இடது பக்கம் சாய்ந்தாள்).

பிரகாஷ் : இது தப்புமா ! (இடது பக்கம் சாய்ந்தான்)

மித்ரா : ம்ச்.... (வலது பக்கம் சாய்ந்தாள்)

பிரகாஷ் : (வலது பக்கம் சாய்ந்தான்) சென்சார் போர்ட்டு செக்சன் மா !

மித்ரா அவனை பிடித்து ஓரமாய் தள்ளிவிட்டாள்.

பிரகாஷ் : அட ! கசம் பிடிச்சவனே ! அது ஹால்டா ! இவன் வேறே நிறுத்தி தொலையவும் மாட்டான் !

பிரகாஷ் இப்படியே கையை ஆட்டி ஆட்டி மித்ராவின் காற்று டிவியை ஒரு வழியாய் காணாக்கி விட்டான். அப்பாடா என்று திரும்பியவனை பார்த்து முறைத்திருந்தாள் மித்ரா.

பிரகாஷ் : (மனதில் நினைத்தான்). ஐயோ ! போச்சுடா முதல்ல வாயே தெச்சிட்டா. இப்போ கைய தெக்க போறா போலிருக்கே !

பிரகாஷ் : என்ன இப்படி பார்க்றே ?!

காற்று டிவியை காணாமல் போகச் செய்தது தப்பு. கேள்வி கேட்டது தப்பு என்பதை உணர்த்திட மித்ரா, பிரகாஷின் காலரை இழுத்து பிடித்து முரட்டுத்த தனமான முத்தம் ஒன்றை வைத்தாள் பிரகாஷின் உதட்டில்.

இதை சற்றும் எதிர்பார்த்திடாத பிரகாஷ் திக்கி தடுமாறி போனான். இவன் என்ன தமிழா முத்தத்தின் கொடுக்கல் வாங்கலில் பேர் போடே.

முத்தமிட்ட மித்ரா அவனை தாண்டிப் போக, பிரகாஷ் கேட்டான் அவளிடம்.

பிரகாஷ் : என்ன பண்ணே ?

மித்ரா : தமிழ் என்ன பண்ணான் ?

பிரகாஷ் : அவன் என்னென்னமோ பண்ணான்.

மித்ரா : முதல்ல என்ன பண்ணான் ?

பிரகாஷ் : கிஸ் பண்ணான்.

மித்ரா : நானும் அதான் பண்ணேன்.

பிரகாஷ் : அவன், அவன் பொண்டாட்டிக்கு பண்ணான்.

மித்ரா : அப்போ, நீயும் என்ன உன் பொண்டாட்டியா நினைச்சிக்கோ !
சொல்லி காற்றில் மிதந்து செல்பவளை அதிர்ச்சியின் ஊடே பார்த்து நின்றான் பிரகாஷ்.

யாழியின் ருத்ர கிரீசன் வருவானா ! யாழியை மீட்டிடுவானா !
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top