யாழியின் ருத்ர கிரீசன் - 10

Advertisement

Sillunu Oru Kadhal - Munbe Vaa.JPG

யாழியின் ருத்ர கிரீசன் - 10

பாப்புவின் வீட்டிற்கு ஹன்சலம் வந்திருந்தான்.

நடந்தது என்ன ?

தமிழ் காலையில் தனக்கு முன்பே வேலைக்கி சென்றிருப்பான் என்று நினைத்திருந்தாள் பாப்பு. நேற்று நடந்த அட்டகாசங்களை நினைத்து தனக்குத் தானே வெட்கப்பட்டு குளித்து முடித்து மருத்துவமனை சென்றாள் பாப்பு.

தமிழை அங்கு தேடியவள் அவனை பார்க்க முடியாத காரணத்தால் ஏதாவது சர்ஜரியோ அல்லது மீட்டிங்கிலோ இருப்பான் என்று நினைத்து கொண்டு அவனை தொந்தரவு செய்ய வேண்டாம் என எண்ணி வெறும் வாட்ஸ் ஆப் மட்டும் அனுப்பி வைத்தாள்.

போன் அடித்தும் எடுக்கவில்லை என்றவனை வீட்டுக்கு வந்து அவளை கட்டிலில் கொஞ்சும் போது கவனித்து கொள்ளலாம் என்று நினைத்தவளுக்கு நேரம் ஆக ஆக நெஞ்சு பக்கு பக்கு என்று அடித்தது.

தமிழ் மருத்துவமனையில் தான் இருக்கிறான் என்று பாப்புவே நினைத்துக் கொண்டாலே ஒழியே அவள் யாரிடமும் அங்கு விசாரிக்கவே இல்லை. மனசு எதோ சரியாக படாத பட்சத்தில் வேலை முடிந்து வீடு வந்த பிறகும் திரும்பவும் மருத்துவமனை நோக்கி ஓடினாள் பாப்பு.

அங்கே போனால் தமிழ் வந்ததற்கான தடையமே இல்லை என அங்கிருப்போர் கூற அவளுக்கு தலையில் இடி விழுந்தது போல் ஆயிற்று. ஓடினாள் அவளிடம் இருந்த எக்ஸ்ட்ரா பிணவறை சாவிக் கொத்தை தூக்கி கொண்டு. பலனில்லை. தமிழ் அங்கு இல்லை.

காரை பிரவீனாவின் கல்லறை நோக்கி விட்டாள் பாப்பு. தமிழ் அங்கும் இல்லை. முழுதாய் ஒரு நாள் முடிந்தும் விட்டது. பிரகாஷின் இறப்பில் அதிக மன உளைச்சலுக்கு தமிழ் ஆளாகி போயிருந்தது அனைவரும் அறிந்ததே.

அதனால் எங்காவது சொல்லிக் கொள்ளாமல் போயிருப்பானோ என்றொரு சந்தேகமும் இருந்தது பாப்புவிற்கு. யாரிடம் சொல்லி உதவி கேட்பது. தமிழ் என்றால் பிரகாஷ். பிரகாஷ் என்றால் தமிழ். அப்படியிருக்க யாரிடம் போய் சொல்லி அழ முடியும் அவளால்.

ஜி.ஜெவிற்கு அழைத்து கேட்டதில் தமிழ் பற்றி எந்த தகவலும் தெரியவில்லை என அவனும் கை விரிக்க பாப்பு ஹான்ஸ்லமை அழைத்தாள்.

விசியம் தெரிந்தவன் பதறிப் போய் பாப்புவின் வீட்டை நோக்கி ஓடி வந்தான்.

ஹன்சலம் : நீ கவலை படாத பாப்பு. நாளைக்கி மோர்னிங் வரைக்கும் பாப்போம். எதுவும் சரியா தெரியலனா நான் திலக்கிட்டே பேசறேன். ரகசியமா விசாரிக்க சொல்லி. ஓகே வா.

பாப்பு : எனக்கு பயம்லாம் இல்லே அண்ணா. கவலை தான். எங்க இருக்காரு என்னப் பண்றாருனு. பசி தாங்கா மாட்டாறு அண்ணா. சாப்டாரா இல்லையானு கூட தெரியல.

டைனிங் மேஜையில் முகம் புதைத்து அழுபவளை சமாதானம் செய்தான் ஹன்சலம்.

ஹன்சலம் : பாப்பு வா வீட்டுக்கு போலம். நீ இங்க தனியா இருக்க வேணாம். நான் அம்மாகிட்ட சொல்றேன். தமிழ் வர வரைக்கும் நீ அங்கையே தங்கிக்கோ.

பாப்பு : வேணான்னா. திடிர்னு தமிழ் வந்தா என்ன தேடுவான். நான் இல்லன்னா துடிச்சிருவான். நான் இங்கையே இருக்கேன்னா.

ஹன்சலம் : உன் விருப்பம். நான் சொல்றதுக்கு ஒன்னும் இல்லே. கதவை பத்திரமா சாத்திக்கோ. எதாசம்னா உடனே கோல் பண்ணு. புரியுதா.

பாப்பு : அண்ணா, நீங்களும் தமிழ் பத்தி தெரிஞ்சா உடனே கோல் பண்ணுங்க.

ஹன்சலம் தலையாட்டி கிளம்பினான்.

பாப்பு கையில் குட்டி விநாயகரோடு மெத்தையில் சாய்ந்தாள். தமிழ் இறுதியாக உடுத்தி கழட்டிய அந்த சட்டையை எடுத்து நெஞ்சோடு வைத்துக் கொண்டு ஒரே அழுகை. அவனை நினைத்து நினைத்து அழுதாள். முகமெல்லாம் வீங்கி போய் கிடந்தது.

பாப்புவாள் ஒரு நிமிடம் கூட அந்த கட்டிலின் மேல் படுக்க முடியவில்லை. எந்த பக்கம் சாய்ந்தாலும் தமிழின் தொடுதலே அவளின் ஞாபகத்திற்கு வந்தது. போர்வையை இழுத்து போர்த்திக் கொண்டு அழுதாலும் அதிலும் அவன் உஷ்ணம் கலந்து அவளை பாடாய் படுத்தியது.

கதறினாள் பாப்பு குட்டி விநாயகரை கையில் வைத்துக் கொண்டு.

பாப்பு : குட்டி விநாயகா, எங்க என் கார முறுக்கு ?! எங்க போனான் அவன் ? சொல்லு விநாயகா ! பிளீஸ் சொல்லு ! என்னால அவன் இல்லாம இருக்க முடியாது விநாயகா. பிளீஸ் விநாயகா அவனை என்கிட்ட திரும்ப கொடுத்துரு ! பிளீஸ் ! நான் உனக்கு 108 தேங்காய் உடைக்கறேன். உன் தம்பிக்கு பால் குடம் எடுக்கறேன். உங்க அப்பாக்கு விரதம் எடுக்கறேன். உங்க அம்மாக்கு வேப்பிலை சாத்தறேன். என் புருஷன என்கிட்ட கொண்டு வந்து சேர்த்துரு விநாயகா.

அழுது அழுது அலுத்து போய் ஒரு வாய் கூட சாப்பிடாமல் சோறு தண்ணீ இன்று கொலை பட்டினியாய் கிடந்தாள் பாப்பு.

காட்டிலோ அந்த பாதி காகித வரைப்படத்தை மீண்டும் அந்தரத்திலிருந்து கைகளில் இழுத்தாள் மித்ரா.

மித்ரா : காய்ஸ், நமக்கு பேச நேரம் இல்லை. நாம உடனே அந்த சினிமா கூட்டத்த தேடி அவுங்க கூட ஜோய்ண்ட் ஆகணும்.

தமிழ் : வெயிட் ! வெயிட் ! முதல்ல என் சந்தேகத்துக்கு எல்லாம் பதில் சொல்லுங்க.

மித்ரா : தமிழ் நமக்கு அதுக்கு நேரம் இல்லே. அந்தி சாயிது !

தமிழ் : நிகிலா, நீ சொல்லு நான் எப்படி ஸ்பைஸ்க்கு வந்தேன் ? ஏன் வந்தேன் ? செத்து போன பிரகாஷ் எப்படி உயிரோட இருக்கான் ? எல்லாத்துக்கும் மேல நாம ஏன் இங்க இருக்கோம் ? என்ன நடக்குது ?

பிரகாஷ் : அதைத்தாண்ட நானும் கண்ணு விழிச்சதுலர்ந்து கேட்டுகிட்டு இருக்கேன். அசால்ட்டா சொல்லுதுங்கடா ஆறு மாசத்துக்கு முன்னாடி செத்து போய்ட்டேன்னு !

மித்ரா : தமிழ், அப்போ உன்னே நெருங்க நினைச்ச போது முடியல. இப்போ நெருங்க நினைக்கவே இல்லை எல்லா தன்னால நடக்குது. கொஞ்சம் பொறுமையா இரு நானே உனக்கு எல்லா விசியத்தையும் சொல்றேன்.

தமிழ் : என்னால யாரையும் நம்ப முடியாது ! நிகிலா ! இப்போ எனக்கு ......

பிரகாஷ் : ஒரு உண்மை தெரிஞ்சாகணும் சாமி !

தமிழ் : டேய் !

பிரகாஷ் : இல்லே, மச்சான் எப்படி இருந்தாலும் நீ அடுத்து அதானே சொல்லுவே. அதான் எடுத்து கொடுத்தேன்.

மித்ரா : தமிழ் உன் ஈகோ காட்றே டைம் இது இல்லே ! சொன்னா கேட்டுக்கோ ! பிளீஸ் !

தமிழ் : நிகிலா !

பிரகாஷ் : தம்பி நீங்க உங்க லைன்னே ரொம்ப குரோஸ் பண்றிங்க. நிகிலா நம்ப ஆள. சீ ! என் ஆளு ! நீங்க இப்படி அடிக்கடி இந்த பேர சொல்லக் கூடாது ! அது தப்பு !

தமிழ் : சும்மா இருடா ! நீ வேறே !

மித்திராவின் பக்கம் திரும்பினான் தமிழ்.

தமிழ் : இங்க பாரு என் நெத்திலே என்னா இளிச்சவாயின்னு எழுதிருக்கா ?! உன் ஆட்டத்துக்கு வேறே ஆள பாரு ! பொய் பித்தலாட்டாம் பண்றவங்கள நான் நம்பறது இல்லே !

மித்ரா ஆத்திரத்தோடு தமிழின் சட்டையை கொத்தாக பிடித்துக் கேட்டாள்.

மித்ரா : நான் நம்பலே ! சொல்லு நான் நம்பலே !

தமிழ் தெரியாதது போல் நிற்க, மித்ராவின் கண்கள் கலங்கிப் போயின. அவனின் முகத்தில் கை வைத்து தள்ளி, கண்களின் கண்ணீரை துடைத்துக் கொண்டு,

மித்ரா : வந்தா வாங்க. வராட்டி போங்க. நான் இனி யாரையும் கட்டாயப்படுத்தல. நிகிலா வா நாம போலாம். இனி யார் உதவியும் நமக்கு தேவே இல்லே. மனசாட்சி இருக்கறவங்கள இருந்த பரவால்ல. கல்லு என்னைக்குமே கல்லுதான் !

நிகிலாவுக்கு ஒன்றுமே புரியவில்லை. மித்ராவின் பின்னாலே போனாள்.

தமிழ் சளித்துக் கொண்டான் உச்சுக் கொட்டி.

தமிழ் : மித்ரா நில்லு !

நிகிலா போவதை பார்த்த பிரகாஷ் அவளை துரத்தி கொண்டே,

பிரகாஷ் : போகாதே ! போகாதே ! நீ இருந்தால் நான் இருப்பேன் !

தமிழ் கீழே கிடந்த கல்லை தூக்கி பிரகாஷை நோக்கி அடித்தான். கல் மேலே பட ஆ ! என்றவன் அவனை திரும்பி பார்த்து,

பிரகாஷ் : டேய் ! என்ன கல்லால அடிக்கிறியா ! நீ பேசேனே பேச்சுக்கு நான் கூட இப்படியே கிளம்பி வீட்டுக்கு போய்டுவோம்னு நினச்சேன் ! இப்போ என் நிலைமைக்கி என்ன பாட்டு பாடணும்னு தெரியுமா ?!

பிரகாஷ் :

வாழ்க்கை நாடகமா
என் பொறப்பு பொய் கணக்கா
தினந் தோரும் வெறும் கனவா
ஏன் விதியை எழுதையிலே
அந்த சாமியும் உறங்கியதையே !

தமிழ் : வாயே மூடிக்கிட்டு அதுங்கள ஸ்டாப் பண்ணுடா !

தமிழ் ஓடி வந்து மித்ராவின் முன் போய் நின்றான். அவள் முகத்தை கூட பார்க்கவில்லை. அவன் பார்த்து நிகிலாவின் முகத்தை தான்.

தமிழ் : இட்ஸ் ஓகே ! நான் இனி கேட்கவே இல்லே ! நீங்களாவே சொல்லுங்க ! தோணும் போது.

இதைப் பார்த்த பிரகாஷ்,

பிரகாஷ் : ஐயோ ! கடவுளே எனக்கு தலையே வெடிச்சிரும் போல இருக்கு ! எனக்கு தலையே வெடிச்சிரும் போல இருக்கு ! ஒன்னு என்ன குருடாக்கு இல்லே செவிடாக்கு !

நிகிலா : சோரி மேடம். அஜய்யே கடத்தர பிளான் எப்படி ?

பிரகாஷ் : நாம கடத்த வேணா. ஆடே வருது தானா ! நீங்க ரெண்டு பேரும் இங்கையே இருங்க. நாங்க போய் பேசிட்டு வரோம்.

பிரகாஷ் தமிழை அழைத்துக் கொண்டு அஜய்யை நோக்கி சென்றான்.

யாழியின் ருத்ர கிரீசன் வருவானா ! யாழியை மீட்டிடுவானா !
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top