யாழியின் ருத்ர கிரீசன் - 1

#1
Maari_2.jpeg

யாழியின் ருத்ர கிரீசன் - 1

காராக் காடு.

அருவமாய் உருவெடுத்திருந்த பிரகாஷும் பகலதியும் உருவம் பெற்று காட்டுக்குள் கால் நடையாய் நடந்து போய் கொண்டிருந்தனர்.

காடென்னே மேடென்னே பிரகாஷுக்கு பாடா விட்டால் தூக்கம் வராதே.

கையில் குச்சி ஒன்றை வைத்துக் கொண்டு முன்னே வழிமறைக்கும் செடிக் கொடிகளை நகர்த்திக் கொண்டே இங்கையும் பாடினான்.

பிரகாஷ் :

குயில புடிச்சி கூண்டில் அடச்சி கூவச் சொல்லுகிற உலகம்
மயில புடுச்சி கால ஒடச்சி ஆடச் சொல்லுகிற உலகம்
அது எப்படி பாடுமைய்யா
அது எப்படி ஆடுமைய்யா
ஓ ஓ ஓ ஓ ஓ !

பகலதி : உன் வாயிக்கு எங்கையாவது ரெஸ்ட் கொடுக்கறியா ?!

பிரகாஷ் : நீ பேச்சே மாத்தாதே ! யாழி கண்டம் அப்படி இப்படிங்கிற கடைசியா கோழி சைஸ்ல ஒரு ஊரே காட்டி இதான் யாழின்றாத !

பகலதி விஷம பார்வை பார்த்து சிரித்தாள்.

மா ! என்ற அலறல் சத்தம் கேட்டது பிரகாஷின் வாயிலிருந்து. தலையை பிடித்துக் கொண்டு கீழே விழுந்தான்.

பகலதியை பார்த்து கைகளை நீட்டி அவளின் பெயரை சொல்லிக் கொண்டே கீழே விழுந்தவன் கண்கள் முழுதும் மூடின.

மயான அமைதி.

கண்களை திறந்தான் பிரகாஷ். தண்ணீர் தொட்டிக்குள் இருந்தான். அவனை சுற்றி தண்ணீர் சலசலத்தது. எழ முயன்றான். முடியவில்லை.

கை கால்கள் கட்டப்பட்டிருந்தன. கால்களை உதைக்கவோ கைகளை அசைக்கவோ கூட இயலவில்லை. லோக் போல் போட்டு பூட்டி வைக்கப்பட்டிருந்தது. ஆறடி பிணப் பெட்டி போல் இருந்தது.

தலையை மட்டும் மேல் தூக்கி சுவாசித்தான். அவனின் செய்கை அவன் எதிரே இருந்த பகலதியின் கவனத்தை ஈர்த்தது.

சுவிட்ச் ஒன்றை தட்டி அந்த படுக்கை பெட்டியை நேராக்கினாள். அது மெல்லமாக நேராக அதனுள்ளிருந்த தண்ணீர் முழுதும் பின்வழியாய் கீழே கொட்டியது.

அன்ன நடை போட்ட பகலதி இப்போது ஆரவார நடையோடு அவனை நோக்கிக் வந்தாள்.

பிரகாஷ் அந்த பெட்டிக்குள் நேராக நின்றுருந்தான்.

அவனை சுற்றி ஒரே கரு நீல வானம். அதில் பல்லாயிர நட்சத்திரங்கள். அந்தரத்தில் நிற்பதை போல் இருந்து அவனுக்கு.

பிரகாஷ், பகலதியைப் பார்த்துக் கேட்டான்.

பிரகாஷ் : ஏய் ! பகலதி ! மதுமிதா மாறி இழுத்து போர்த்திக்கிட்டு இருப்பே இப்போ என்னான்ன சாக்ஷி பேண்ட் போட்டு நிக்கறே ! என்னாச்சி உனக்கு ? ஆமா, ஏன் என்ன இப்படி லோக் பண்ணிருக்கே ஓடிருவேன்னா ?! இதான் உங்க யாழியா ?! நான் பாகுபலி லெவெல்க்குல இமேஜன் பண்ணி வெச்சிருந்தேன். இங்க பார்த்த ஸ்டார் வார்ஸ் மாதிரி இருக்கு !

பகலதி : (வாயில் ஒற்றை விரல் வைத்து ) உஷ் !!!!

என்றபடி அவன் அருகில் வந்தாள் பகலதி. அவன் கன்னத்தை விரல்களால் தடவி,

பகலதி : மைடியர் மச்சான் at last you awaken !

பிரகாஷ் : என்ன பேச்சுலாம் ஓடுது !

பிரகாஷின் கட்டப்பட்டிருந்த கை கால்களின் லோக்குகளை பார்த்து பகலதி அவளின் ஒற்றை விரலை மேலே தூக்க அவைகள் தானாய் திறந்து கொண்டன.

லோக் திறக்க பெட்டிக்குள்ளிருந்து வெளிவந்த பிரகாஷ் லோக் செய்திருந்த கை கால்களை தடவி பார்த்தான். லோக்குகளின் அச்சு அப்படியே அவனின் கை கால்களில் பதிந்திருந்தன.

அதைப் பார்த்து சலித்தவன்,

பிரகாஷ் : பாரு, பகலதி அப்படியே அச்சு விழுந்து போச்சி !

பகலதி : ஏழு மாசத்துக்கு அப்படியே இருந்தா இப்படித்தான் ஆகும் !

அதிர்ச்சியோடு தலையை தூக்கியவன் பகலதி முன் சென்று நின்று,

பிரகாஷ் : ஏழு மாசமா ?! என்ன சொல்றே பகலதி ?!

பகலதி : பகலதி இல்லே மைடியர் ! மித்ரா. மித்ரா திருவாசகன்.

பிரகாஷ் இடுப்பில் கைவைத்து வாயை கோனையாக்கி, அவளை பார்த்தான்.

பகலதி : மைடியர். (நின்ற இடத்திலேயே சுற்றுகிறாள்) இதுதான் என் உலகம். The world's largest research center of Indian ancient history !

பிரகாஷ் : இதான் யாழியா பகலதி ?

பகலதி : (கைதட்டி சிரித்தாள்) பகலதி ! பகலதி !

பிரகாஷ் : இது ஒன்னும் அவ்ளோ பெரிய காமெடி இல்லே பகலதி !

பகலதி : மைடியர், முதல்ல நான் பகலதியே இல்லே. அதை நீ புரிஞ்சிக்கோ.

பிரகாஷ் : நீ பகலதி இல்லேனா ! அப்போ நீ யாரு ?!

மித்ரா : மித்ரா திருவாசகன். உலக பணக்காரர்களில் ஒருத்தி. இந்த மித்ரா அகழ்வாராச்சி மையத்தோடோ சொந்தக்காரி.

பிரகாஷ் : நீ புள்ளியா இரு இல்ல கோலமா இரு ! உனக்கும் எனக்கும் என்ன சம்பந்தம் நான் எப்படி இங்க வந்தேன் ?! என் கூட வந்த பகலதி எங்கே ?! அதை சொல்லு போதும்.

பிரகாஷ் கைக்கு எட்டிய தூரத்தில் இருந்த சாய்வு நாற்காலியை இழுத்து கால் மேல் கால் போட்டு அமர்ந்தான்.

மித்ரா : மைடியர், பகலதின்னு ஒருத்தியே இல்லே ! நான் தான் இத்தனை நாளா பகலதியா நடிச்சேன் !

பிரகாஷ் : ஏன்மா ? மாமா மேலே அவ்ளோ லவ்வா ?! இப்படி நடிக்கற அளவுக்கெல்லாம் போயிருக்கே ?!

மித்ரா : லவ்தான் டார்லிங். ஆனா, உன் மேல இல்லே. உன் capability மேல.

பிரகாஷ் : நான் உன்னே ஒண்ணுமே பண்ணலையே ?! ஒரு வேல நீ தமிழே hijack பண்ண நினச்சியோ ?! தாப்பா நான் மாட்கிட்டேனா ?

மித்ரா : முட்டாளாடா நீ ! நான் உன்னே சொல்றேன் அவனை இல்லே !

பிரகாஷ் : நீதானே capability பத்தி பேசனே. அவன்தான் அந்த மாதிரி விசயத்துல PHD முடிச்சவன். ஒரே நேரத்துல ரெண்டு மூணு வெச்சி ஓட்டுன பெருமையெல்லாம் அவனைத்தான் சாரும். நானும்தான் ஒன்னு லைன் போட்டேன். எங்க அமைஞ்சது அதுக்குள்ளத்தான் யாழி சூழினு இங்க தூக்கிட்டு வந்துட்டே !

மித்ரா : மைடியர் நீ ரொம்ப பாவம். உனக்கு சில உண்மைகளை நான் சொல்ல போறேன். காராக் காடு பார்க்க ரொம்ப அமைதியா பவ்வியமா இருக்கும். ஆனா, அதுக்குள்ள ஏகப்பட்ட ரகசியங்கள் புதைஞ்சி கிடக்கு. அவ்ளோ சுலபத்துல அந்த ரகசியங்களை தெரிஞ்சிக்கவும் முடியாது அங்கிருக்கற பொருட்கள், சிலைகள், ஓலைசுவடிகள்னு இது எதுலயும் கை வைக்கவும் முடியாது ! அவ்ளோ வர முறைகள் மந்திரங்கள் தந்திரங்கள் சூத்திரங்கள் இருக்கு. எனக்கு வேண்டியதை அங்கிருந்து எடுத்து தர போற ஆள்...

பிரகாஷ் : நானா ?!

மித்ரா : (சிரிக்கிறாள் சத்தமாக) தமிழ். தமிழ் செல்வன். உன் பிரெண்டு.

பிரகாஷ் : தமிழா ?!

மித்ரா : ஆமா, அவன்தான் யாழி வம்சத்தை சேர்ந்தவன். அவனால மட்டும்தான் எனக்கு காரியம் ஆக முடியும்.

பிரகாஷ் : அட சண்டாலே சிறுக்கி ! அதுக்கு அவனல்ல நீ தூக்கிருக்கணும் எதுக்கு என்ன கடத்தன ?! கன்னி கூட கழியில நான் ! தெரியுமா ?!

மித்ரா : அவனை தூக்க முடிஞ்சிருந்த தூக்கிருக்க மாட்டேன்னா ! அவனை நெருங்க கூட முடியல !

பிரகாஷ் : நல்ல வேல தப்பிச்சே போ ! இல்லாட்டி நீ எங்க அவனை தூக்கறது. அவன் உன்னையே தூக்கிகிட்டு போயிருப்பான் ரூம்முக்கு. சரி, நீ எதுக்கு பகலதியா வேஷம் போட்டே ?

மித்ரா : சும்மா ஒரு கப் காபி குடிச்சிட்டு வா வந்து இந்த வேலைய எனக்காக பார்த்து குடுன்னா வந்துடிவியா ?! அதுக்குதான் !

பிரகாஷ் : சரி, இப்போ என்ன வெச்சி என்ன பண்ண போறே ?! தமிழ் தான் நீ சொல்ற யாழி இளவரசன்னா நான் எதுக்கு இங்கே ?!

பிரகாஷ் நாற்காலியிலிருந்து எழுந்தான்.

பிரகாஷ் : நீ என்னே வீட்டுக்கு அனுப்பு. நான் போய் அவனை அனுப்பி வைக்கிறேன்.

மித்ரா அவனை பிடித்து மீண்டும் நாற்காலியில் அமர வைத்தாள்.

மித்ரா : அவன் வருவான். இப்போ, நான் கூப்பிடவே வேணா. தன்னால வருவான். உன்னே காப்பாத்த.

பிரகாஷ் : பிளான்லாம் பயங்கரமாத்தான் இருக்கு ! ஆனா, வேலைக்காகுமா ?!

மித்ரா : ஷட் ஆப் மைடியர் ! நான் சொல்றத கேளு. எனக்கு வேண்டியதை நீங்க செஞ்சி கொடுத்தா உங்களுக்கும் உங்க குடும்பத்துக்கும் ஏதும் ஆகமே நான் பார்த்துப்பேன்.

பிரகாஷ் : ஆமா, நீ சொல்றதா நாங்க ஏன் கேட்கணும் ?!

மித்ரா : கேட்டுத்தான் ஆகணும் ! இல்லாட்டி...

மித்ரா அவளின் கையை கொண்டு காற்றில் அசைத்திட அவர்களின் கண் முன் ரேயானும் ரீனாவும் தெரிந்தனர்.

மித்ரா : இது யார்னு தெரியுதுல ! போட்டு தள்ளிட்டு என் ஆளுங்க போய்கிட்டே இருப்பாங்க.

பிரகாஷ் தீவிரமாக யோசித்தான்.

பிரகாஷ் : எனக்கு சில கேள்விகள் இருக்கு !

மித்ரா : மைடியர் என்ன கேள்வி கேட்கற உரிமையெல்லாம் யாருக்கும் இல்லே. பட், எதோ ஒன்னு உன்கிட்ட இருக்கு. உனக்கு நோ சொல்ல தோணல. கேளு பதில் சொல்றேன்.

பிரகாஷ் : நான் உயிரோடத்தானே இருக்கேன் ?

மித்ரா அவனின் நெஞ்சை நகத்தால் கீறினாள். தோல் லேசாய் வலுண்டு ரத்தம் வந்தது மெல்லிய கீற்றில்.

பிரகாஷுக்கு புரிந்தது சொல்லாமல் சொல்கிறாள் அவன் உயிரோடுதான் இருக்கிறான் என்று.

பிரகாஷ் : நான் இங்க உயிரோட இருக்கேன்னா ?! அப்போ அன்னிக்கி அந்த பெரிய அலையிலே நான் சிக்கிக்கிட்டு சாகலையா ?

மித்ரா : சரியான படிச்சே முட்டாள் நீங்கலாம் !

பிரகாஷ் : தோ பாரு, தில்லு முள்ளு பண்ணதெல்லாம் நீ ! நீ எங்கள சொல்றே !

மித்ரா : ஏமாறவன் இருக்கற வரைக்கும் ஏமாத்தறவன் ஏமாத்திகிட்டுதான் இருப்பான் மைடியர்.

மித்ரா அவனின் நாற்காலியின் பின்னால் வந்து அவனின் கழுத்தில் இரு பக்கமும் கை போட்டு,

மித்ரா : ஒரு வருஷம் உன்னே பொலொவ் பண்ணி, பக்காவா பிளான் போட்டு, கடைசியா உன்ன இங்க தூக்கிட்டு வரத்துக்காகவே உன்னே அரை மணிநேரம் சாகடிச்சி திரும்ப அந்த பிணவறையில் இருந்து தூக்கிட்டு வந்து உன்னே examine பண்ணி ஏழு மாசம் கழிச்சி கண்ணு விழிச்சி கதை கேட்கற உன்கிட்ட நான் என்னே சொல்லே ?! உன் பிரெண்டு செஞ்ச நல்ல காரியம் என்ன தெரியுமா ? எனக்கு நல்லது அவனுக்கு உனக்கும் கேட்டது. என்னே தெரியுமா ?! உன்னே போஸ்ட் மோர்டம் பண்ணாததுதான், பண்ணியிருந்தா நீ நிஜமாவே செத்துருப்பே. என் லட்சிய கனவு கலஞ்சிருக்கும் !

மித்ரா. நல்லவள் கேட்டவள் என்று எதுவும் சொல்லிட வேண்டாம். அதிகமாக படித்தவள். மாயா ஜாலமும் கற்று தேர்ந்தவள். விண்வெளி விஞ்ஞானி.

இந்திய பண்டைய வரலாற்றின் உலகின் மிகப்பெரிய ஆராய்ச்சி மையம் அவளுடையது. அவள் அப்பாவிற்கு பிறகு இவள். வெளி உலகத்திற்கு தெரிந்து செய்யும் ஆராச்சிகளை விட ரகசியமாக மேற்கொள்ளும் ஆராச்சிகளே அதிகம்.

யாழி கண்டம் பற்றிய தகவல் அவளின் சமீபத்திய தொண்டல்களில் தெரியவர அதனை தேடும் முயற்சியில் இறங்கியவள் கண்டு பிடித்தாள் தமிழ் அதன் வாரிசுகளில் ஒருவன் என்று.

அவனை நெருங்க நினைத்தவள் நெருங்கிட விடாமல் தடுக்கப்பட்டாள். காரணம் அவனிடம் இருக்கும் தெய்வ சக்தி. பிரகாஷை நெருங்கினாள் பகலதியாக. அவனின் ருத்ராச்சம் காரக்கில் கீகீயிடம் பறிப்போனதும் இவளாலேதான்.

வாவாவின் மீது துர் சக்தியை ஏவி விட்டு பிரகாஷின் கையால் அவனை சாகடித்து அவனின் ருத்ராச்சம் கீகீயிடம் வந்து விழ செய்தவளும் இவளே. பிரகாஷின் திடீர் மாற்றத்தைக் கண்டவள் பிரமித்தாள்.

தமிழை பிடிக்கும் முன் இவனை பிடித்தாக வேண்டும் என்றுதான் பகலதியாக நாடகம் ஆடினாள் மித்ரா. யாழியில் முன்பு வாழ்ந்த ருத்ர கிரிசன் கதையை படித்து, பிரகாஷை இளவரசன் என்று நம்ப வைத்து இவள் திட்டம் ஒவ்வொன்றையும் நிறைவேற்றி கொண்டாள்.

பிரகாஷை கொன்று அவனை இங்கு தூக்கி வர வேண்டும் என்ற திட்டம் அவள் முன்னமே போட்டு வைத்திருந்ததால் செயற்கையான கடல் அலைகளை உருவாக்கி அலைகளுக்கு நடுவில் அவளின் அடியாட்கள் மூலமாய் பிரகாஷின் நெஞ்சில் ஊசியை குத்தி பின்பு அவனை கடலில் மிதக்க வைத்து மற்றவர்கள் பார்வையில் அவனை இறந்த விட்டதாக காட்டிருந்தாள்.

அரைமணி நேரத்தில் பிணவறையில் புகுந்து இவனை தூக்கி அனாதை பிணம் ஒன்றை வைத்து காரியத்தை கண கச்சிதமாக முடித்தாள் மித்ரா.

யாழியின் ருத்ர கிரீசன் வருவானா ! யாழியை மீட்டிடுவானா !
 
Last edited:
#3
:D :p :D
உங்களுடைய "யாழியின் ருத்ர
கிரீசன்"-ங்கிற அழகான
அருமையான புதிய லவ்லி
நாவலுக்கு என்னுடைய
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்,
Deepchanthini டியர்
 
Last edited:

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Sponsored

Advertisement