யஷ்வந்தின் வாழ்க்கை

Advertisement

பகுதி -11

ஹர்ஷிதா தனது நண்பர்கள் அனைவருக்கும் அருணின் நிலைமை குறித்து தெரிவிக்கிறாள், எனவே அனைவரும் மருத்துவமனைக்கு விரைகிறார்கள். அருணுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அழிக்கப்படுகிறது. சிகிச்சையின் பின்னர், மருத்துவர் "அவரை 5 நிமிடங்கள் தாமதமாக அனுமதிக்கப்பட்டிருந்தால் உயிருடன் இருந்திருக்க மாட்டார், இது எல்லாம் கடவுளின் அருள், இப்போது அவர் நன்றாக இருக்கிறார்" என்று கூறுகிறார். மருத்துவரின் வார்த்தைகளைக் கேட்டு எல்லோரும் மிகவும் மகிழ்ச்சியடைகிறார்கள். பின்னர் அவர்கள் அருணைப் பார்க்க அறைக்குள் நுழைகிறார்கள். முதலாவதாக, அகில் அவனை அறைந்து, “இவை அனைத்தும் முட்டாள்தனம். அன்று ஹர்ஷிதா கஷ்டத்தில் இருந்தபோது அவளுக்கு நிறைய அறிவுரை கூறினாய், இப்போது நீயே இப்படி செய்துவிட்டாய். காதலில் ஏதேனும் தவறு நேர்ந்தால் அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவீர்களா? அன்று ஹர்ஷிதா இப்போது நீ். இது சரியல்ல ” என்று திட்டினான். பின்னர் ஹர்ஷிதா அகிலிடம் “அது போகட்டும். எதிர்காலத்தைப் பற்றி விவாதிக்க வேண்டிய நேரம் இது. எனவே அடுத்து என்ன செய்வது என்பது பற்றி பேசுவோம் ” என்று கூறினாள். “நாம் அனைவரும் பிரியாவின் தந்தையிடம் பேசலாம்”, எனகிறான் எவின். அவனது முடிவை அனைவரும் ஏற்றுக்கொள்கிறார்கள். "நாங்கள் திரும்பி வரும்போது பிரியாவுடன்தான் வருவோம்" என்று எவின் அருணிடம் உறுதியளிக்கிறான். அருண் எவினை நம்புகிறான் பின்பு சிறிது புன்னகைக்கிறான். பின்னர் நரேன் "நான் என் மாமனாருடன் பேசக்கூட பயப்படமாட்டேன் என்று நினைக்கிறேன், ஆனால் இவனுடைய மாமனாரிடம் பேச மிகவும் பயப்படுகிறேன்" என்று கேலியாக உரைத்தான்.

யாழினி அருணுடன் மருத்துவமனையில் இருக்கிறாள், மற்றவர்கள் பிரியாவின் வீட்டிற்கு செல்கிறார்கள். அந்த நேரத்தில், ஹர்ஷிதாவுக்கு முன்னதாக ஒரு செய்தி வந்த எண்ணிலிருந்து அழைப்பு வருகிறது. அவள் அழைப்பை எடுக்கிறாள், ஒரு ஆண் குரலைக் கேட்கிறாள். அவள் “இது யார்?” என கேள்வி எழுப்பினாள் “நான் யாசீத்" என்று பதில் வருகிறது. “உனக்கு இப்போது என்ன வேண்டும்?எதற்காக அழைத்தாய்?” எனக் கேட்டாள். அவன் அவளுடன் பேச வேண்டும் என்று கூறுகிறான். எல்லோரும் அவசரமாக பிரியாவின் வீட்டிற்குச் செல்ல இருக்கிறார்கள், அவளுடைய எண்ணம் அருண் மற்றும் பிரியா காதலில் உள்ளது, எனவே அவள் “என்னால் இப்போது உன்னுடன் பேச முடியாது. நான் பின்னர் அழைக்கிறேன்” என்று தொலைபேசியைத் துண்டித்துவிடுகிறாள். மீண்டும் அவன் அழைக்கிறான், அவள் அவனிடம் கோபமாக பேசி அழைப்பை துண்டிக்கிறாள். தன் நண்பர்களிடம் இதைச் சொல்வது இது சரியான நேரம் அல்ல என்று நினைக்கிறாள், எனவே அந்த அழைப்பு யாசித்திடமிருந்து வந்ததாக கூறவில்லை. எல்லோரும் பிரியாவின் வீட்டிற்குச் செல்கிறார்கள்.

யஷ்வந்த் ஹர்ஷிதாவைப் பற்றியே நினைத்துக்கொண்டு இருக்கிறான், சிவப்பு நிற சேலையில் அவளது அழகிய தோற்றம் அவன் மனதில் அலைந்து கொண்டிருக்கிறது. அவன் அவளைப் பார்க்க வேண்டும் என்பதற்காக சீக்கிரம் ஹோட்டலுக்குச் செல்கிறான். ஆனால் அங்கு அவள் இல்லை. அவளுக்காகக் காத்திருக்கிறான், அவன் மனம் “இது நான் அல்ல, நான் ஏன் ஒரு பெண்ணைத் தேடுகிறேன். இல்லை இது நல்லதல்ல” என்று ஒருபுரம் தோன்றுகிறது, ஆனால் அவனது இதயம் ஹர்ஷிதாவைக் காண ஏங்குகிறது. பின்னர் அவன் ஹோட்டலில் நரேனும் இல்லை என்று அறிகிறான், எனவே அவன் நரேனை அழைத்து "நீ எங்கே?" என்று கேட்டான். நரேன் அருணின் விஷயத்தைப் பற்றி கூறினான். யஷ்வந்த் பிரச்சினைகளை சரிசெய்த பின்னர் வரும்படி கூறுகிறான். ஹர்ஷிதாவும் அங்குதான் இருப்பாள் என நினைத்து தனது பணியைத் தொடர்கிறான்.

பிரியாவின் வீட்டில், எல்லோரும் உள்ளே நுழைகிறார்கள். அகில் “பிரியா, வெளியே வா” என்று கத்துகிறான். அவனின் குரலைக் கேட்ட பிரியா அறையிலிருந்து வெளியே வந்து ஹர்ஷிதாவைக் கட்டிப்பிடித்து அழுகிறாள். ஹர்ஷிதா அவளை ஆறுதல்படுத்துகிறாள். பிரியாவின் தந்தை வெளியே வந்து “உங்கள் வருகைக்கு என்ன காரணம்?” என்று கேட்கிறார். அகில் “நீங்கள் ஏன் அவர்களின் காதலுக்கு எதிராக இருக்கிறீர்கள்? உங்கள் மகளுக்கு உங்களின்மேல் ஒரு பெரிய அன்பும் மரியாதையும் இருக்கிறது, மேலும் அருண் ஒரு நல்ல பையன். அருணின் குடும்பத்தினர் அவர்களின் காதலை ஏற்றுக்கொண்டனர். மேலும் அவர்களுக்கு பிரியாவை மிகவும் பிடித்துவிட்டது. அவர்கள் உங்களை விட பிரியாவை மகிழ்ச்சியாக வைத்திருப்பார்கள். தயவுசெய்து அவர்களுடைய காதலை ஏற்றுக்கொள்ளுங்கள். ஏதேனும் தவறு நடந்தால் நாங்கள் அவர்களுக்காகவும் அவர்களுடனும் என்றென்றும் இருப்போம், நீங்கள் எங்களை கேள்வி கேட்கலாம் ” என்று உணர்ச்சி மிக கூறினான். நரேன் எவினிடம் முனுமுனுக்கிறான் “ஆம் அவர்களின் காதலை ஏற்றுக்கொள்ளுங்கள் இல்லையெனில் அவன் மீண்டும் ஏதாவதை குடித்துவிட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவான்" என்று கூறினான். நரேனை அமைதியாக இருக்குமாறும், இது நகைச்சுவைக்கான நேரம் அல்ல. நீ் ஏன் எப்போதும் வேடிக்கையாக பேசுகிறாய்? அமைதியாக இரு" என்று எவின் கூறினான். நரேன் கூறியதை எல்லோரும் கேட்டுவிட்டனர். அகில் திரும்பி அவனை முறைத்துப் பார்க்கிறான். பிரியாவின் தந்தை “என்ன நடந்தது?” என்று கேட்கிறார். பின்னர் நரேன் “நாங்கள் உங்களை பிளாக்மெயில் செய்யவில்லை, நான் உண்மையைச் சொல்கிறேன், அருண் தூக்க மாத்திரைகளை எடுத்துக் கொண்டான், நாங்கள் அவனை மருத்துவமனையில் அனுமதித்தோம். கடவுளின் அருளால் இப்போது அவன் நன்றாக இருக்கிறான். நாங்கள் அவன் சார்பாகவே இங்கு வந்தோம் தயவுசெய்து அவர்கள் காதலை ஏற்றுக்கொள்ளுங்கள்” என்று கூறினான். இதைக் கேட்ட பிரியா அழுகிறாள், கூச்சலிடுகிறாள் அவளது வருத்தத்தை வெளிப்படுத்துகிறாள். அவள் அவளது தந்தையின் காலைப் பிடித்து அவர்களை ஏற்றுக்கொள்ளச் சொல்கிறாள். பிரியாவின் எதிர்காலத்தைப் பற்றி ஆழ்ந்த சிந்தனைக்குப் பிறகு அவள் அழுததையும் வருத்தத்தையும் அவளுடைய நண்பர்களின் ஆதரவையும் பார்த்ததன் மூலம் அவளது தந்தை அவர்களின் காதலை இறுதியாக ஏற்றுக்கொள்கிறார். பிரியா சிரித்துக்கொண்டே அனைவருடனும் அருணைப் பார்க்க மருத்துவமனைக்குச் செல்கிறாள். அங்கு பிரியா அறைக்குள் நுழைந்து அருணைக் கட்டிப்பிடித்து கேள்வி எழுப்புகிறாள் “நீ ஏன் இதைச் செய்தாய்? நீ இல்லாமல் நான் எப்படி வாழ்வேன்? இப்படி மீண்டும் செய்யாதே அன்பே. அருண், அவளின் கண்ணீரைத் துடைத்து, என் அன்பே, கவலைப்பட வேண்டாம், கவலைப்பட ஒன்றுமில்லை. இப்போது நான் நன்றாக இருக்கிறேன். நீ என்னுடன் இருக்கும்போது நான் நன்றாக இருப்பேன்" என்று கூறி அவளை ஆறுதல்படுத்துகிறான். பின்னர் எல்லோரும் உள்ளே வருகிறார்கள் அறையில் மகிழ்ச்சி நிரம்பியிருக்கிறது, இப்போது பிரியா மற்றும் அருணின் வாழ்க்கையை அனைவரும் ஏற்றுக்கொண்டனர். பின்னர் எல்லோரும் தங்கள் வேலைக்குச் செல்கிறார்கள்.
அடுத்த நாள், மீண்டும் யாசீத் ஹர்ஷிதாவை அழைக்கிறான். அவள் அழைப்பை எடுத்து “இப்போது உனக்கு என்ன வேண்டும்?” என்று கேட்கிறாள். அவன் “பதற்றமடைய வேண்டாம். நான் உனக்கு செய்த தவறுக்காக வருந்துகிறேன் என்னை மனித்துவிடு. ஆனால் நான் உன்னை உண்மையாக நேசித்தேன் ஹர்ஷிதா. இப்போது எனக்கு திருமணமாகிவிட்டது, தயவுசெய்து என்னுடன் ஒரு நண்பராக பேசு” என்று கூறினான். இப்போது ஹர்ஷிதா அவனது உண்மையான குணத்தை அறிந்து, "இதை எப்படி இவ்வளவு எளிமையாக உன்னால் கேட்க முடியும். இது மிகவும் தவறானது. எந்த காதலர்களும் எப்போதும் நண்பர்களாக இருக்க முடியாது. நீ என்னை உண்மையாக நேசித்தாய் என்று சொல்கிறாய் உண்மையான காதல் எப்போதும் விட்டுச்செல்லாது. நீ என்னை ஏமாற்றினாய், என்னை உண்மையாக நேசித்தாய் என்று சொல்ல உனக்குக் அசிங்கமாக இல்லையா?” என்று கோபமாக கத்துகிறாள். அவன் அவளிடம் பேசும்படி கெஞ்சுகிறான். ஆனால் அவள் கத்திவிட்டு அழைப்பைத் துண்டிக்கிறாள். இது அடுத்த இரண்டு நாட்களுக்கு தொடர்கிறது. இரண்டு நாட்களுக்குப் பிறகு, அவள் வேலைக்குச் செல்லும்போது, அவளுடைய நிறுவனத்தின் நுழைவாயிலில் மயக்கம் அடைகிறாள். யஷ்வந்தும் யாஷிகாவும் ஹோட்டலுக்குச் சென்றுகொண்டிருக்கிறார்கள், அப்போது நுழைவாயிலில் அவள் மயக்கம் அடைந்திருப்பதைக் கண்டு, அவர்கள் விரைந்து வந்து அவளை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்கிறார்கள்.

மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற பிறகு, யஷ்வந்த் ஹர்ஷிதாவிடம் “உனக்கு என்ன ஆனது? கடந்த இரண்டு நாட்களாக நான் உன்னை கவனித்து வருகிறேன், நீ மகிழ்ச்சியாக இல்லை, நீ ஏதயோ யோசித்துக்கொண்டிருப்பதுபோல் தெரிகிறது. நீ தவறாக எண்ணாவிட்டால், அதை என்னுடன் பகிர்ந்து கொள்ளலாம், அல்லது அதை உன் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்" என்று கூறினான். பின்னர் அவள் யாசீத் பற்றியும், அவர்கள் பிரிந்ததற்கான காரணம் பற்றியும், இப்போது யாசீத்திடமிருந்து வந்த அழைப்பு பற்றியும் சொல்கிறாள். இதைக் கேட்டதும் யஷ்வந்த் அவளுடைய தொலைபேசியைக் கேட்கிறான். ஏன்? என்று அவள் கேள்வி கேட்கிறாள். பின்னர் அவன் “என்னை நம்பு, இந்த பிரச்சினையை தீர்க்கிறேன்” என்று கூறினான். பின்னர் அவனுக்கு தொலைபேசியைக் கொடுக்கிறாள். அவன் யாசீத்தை அழைத்து “சகோதரரே, இப்போது நீங்கள் திருமணம் செய்து கொண்டீர்கள், உங்கள் வாழ்க்கை சரியான பாதையில் உள்ளது, பிறகு ஏன் ஹர்ஷிதாவை தொந்தரவு செய்கிறீர்கள். உங்கள் வாழ்க்கையை மகிழ்ச்சியுடன் வாழுங்கள். அவளை மீண்டும் தொந்தரவு செய்ய முயற்சிக்காதே” என்று கூறினான். யாசீத் “இதைக் கேட்க நீங்கள் யார்?” என்று கேட்டான். பின்னர் யஷ்வந்த் “நான் அவளுடைய இதயத்திற்கு நெருக்கமான நபர்” என்று பதிலளித்தான். இதைக் கேட்ட ஹர்ஷிதா அதிர்ச்சியடைந்து அவர்களின் உரையாடலைக் கேட்கிறாள். பின்னர் யாசீத் கூறுகையில், நான் அவளுடன் வேறு எந்த நோக்கத்துடனும் பேசவில்லை நண்பனாகத்தான் பேசுகிறேன் என்றான். "உங்கள் முன்னாள் காதலியை திருமணத்திற்குப் பிறகு உங்களுடன் ஒரு நண்பராகப் பேசும்படி கூறுகிறீர்கள் இப்போது நீங்கள் கேட்டுக்கொண்டதைப் போலவே உங்கள் மனைவியும் செய்தால் என்ன செய்வீர்கள்?" என்று யஷ்வந்த் கேட்கிறான். யாசீத் “இல்லை நான் அதை ஏற்க மாட்டேன்” என்றான். “அப்படியானால் நீங்கள் எப்படி உங்கள் மனைவியை ஏமாற்ற முடியும்? திருமணத்திற்குப் பிறகு உங்கள் முன்னாள் காதலியுடன் பேசுவது சரியானது என்று நினைக்கிறீர்களா? ஹர்ஷிதா இதுபோன்ற விஷயங்களைச் செய்ய மாட்டாள், நீங்கள் உங்கள் குடும்பப் பெண்களை மட்டுமே கவனித்துக்கொள்கிறீர்கள், ” என்று யஷ்வந்த் கேட்டான். யஷ்வந்த் எழுப்பிய கேள்விகளுக்கு யாசீத் பதிலளிக்க முடியாததால், இறுதியாக “சரி, எனக்கு புரிகிறது, இனிமேல் நான் அவளை தொந்தரவு செய்ய மாட்டேன். அவளுக்கு எனது மன்னிப்பை தெரிவித்துவிடுங்கள்" என்று கூறி அழைப்பை வைத்தான். யஷ்வந்த் ஹர்ஷிதாவிடம் தொலைபேசியைக் கொடுக்கிறான். அவன் அவளுக்கு ஒரு ஹீரோ போல் தெரிகிறான். யஷ்வந்த் “பிரச்சினை இப்போது தீர்க்கப்பட்டது. இந்த சிறிய விஷயத்திற்காக நீ கடந்த இரண்டு நாட்களாக சோகமாக இருந்தாய். உன் எண்ணங்களை நீ அமைதியாக தெரிவித்தால் அவன் புரிந்து கொள்வான். ஆனால் நீ கத்துகிறாய். உனக்கு கத்த மட்டும்தான் தெரியும்” என்றான். பின்னர் ஹர்ஷிதா “அவன் என்னை ஏமாற்றினான், பிறகு நான் எப்படி அவனுடன் அமைதியாக பேச முடியும்?” என்றாள். அவர்களுக்கு இடையே ஒரு சிறிய சண்டை எழுகிறது. திடீரென்று டாக்டர் ஹர்ஷிதாவைச் சரிபார்க்க அறைக்குச் வருகிறார், பின்னர் யஷ்வந்த் மற்றும் டாக்டர் நண்பர்களைப் போல உரையாற்றினர், "அவள் இப்போது சரியாக இருக்கிறாள் நீங்கள் எப்போது வேண்டுமானாலும் செல்லலாம்" என்று கூறினார். அவர்கள் இருவரும் அறையை விட்டு வெளியேறினர். அவள் “யஷ்வந்த், இந்த மருத்துவரை இதற்கு முன் உங்களுக்குத் தெரியுமா?” என்று கேட்டாள். அவன் “நீ ஏன் இப்படி ஒரு கேள்வி கேட்கிறாய்?” என்று கேட்டான். அவள் “நீங்கள் இருவரும் நண்பர்களைப் போலவே பேசிக் கொண்டிருந்தீர்கள், அதனால்தான் நான் கேட்டேன்” என்று பதிலளிக்கிறாள். இப்போது அவன் “ஆம், எனக்கு முன்பே அவரைத் தெரியும்” என்று கூறுகிறான். எப்படி என்று அவள் கேள்வி எழுப்புகிறாள். அவனது அம்மா இந்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக கூறுகிறான். அதைக் கேட்டு அவள் அதிர்ச்சியடைந்து “ஏன்? அவர்களுக்கு என்ன ஆனது? ” என்று கேட்டாள். பின்னர் அவன் உண்மையை வெளிப்படுத்துகிறான் “இதை நான் என் நண்பர்களிடம் கூட சொல்லவில்லை. நான் முதலில் இதை பகிர்வது உன்னிடம்தான். வா நான் என் அம்மாவை உனக்கு அறிமுகப்படுத்துகிறேன். யாஷிகா இப்போது என் அம்மாவுடன் தான் இருக்கிறாள். வா போகலாம் ” என்று கூட்டிச்சென்றான். அவள் “எந்த காரணத்திற்காக அவர்களை இங்கு அனுமதித்திருக்கிறீர்கள்? ” என்று கேட்டாள். அவன் “என் அம்மா ஒரு புற்றுநோய் நோயாளி. அவர் கடந்த 1 ஆண்டாக சிகிச்சை பெற்று வருக்கிறார் ” என உண்மையைக் கூறினான்.

அவனது தாயைப் பார்க்க அவர்கள் அறைக்குள் நுழைகிறார்கள். அவன் தனது தாய்க்கு ஹர்ஷிதாவை அறிமுகப்படுத்துகிறான், “அம்மா இவள் ஹர்ஷிதா, என்…” இதற்கிடையில் செவிலியர் வந்து, சில மாத்திரைகளை வாங்கச் சொல்கிறார், அதனால் அவன் வெளியே செல்கிறான். அவனது தாயார் ஹர்ஷிதாவை அவனது காதலி என்று நினைத்து அவளிடன் “ஹாய் ஹர்ஷிதா, கடைசியாக நான் உன்னை பார்த்துவிட்டேன், உன்னைப் பார்ப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். நான் அவனைப் பற்றி நிறைய கவலைப்பட்டிருக்கிறேன். அவன் எந்தப் பெண்களிடமும் பேசமாட்டான், அதனால் அவனுடைய எதிர்காலத்தைப் பற்றி நான் மிகவும் கவலைப்படுகிறேன். அவன் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று நான் விரும்பினேன், ஆனால் அவன் என் விருப்பத்தை மறுத்துவிட்டான். என் மரணத்திற்குப் பிறகு அவனையும் யாஷிகாவையும் என் இடத்திலிருந்து யார் கவனித்துக்கொள்வார்கள் என்று நான் கவலைப்பட்டேன். இப்போது அவனுடன் உன்னைப் பார்த்ததில் மகிழ்ச்சி அடைகிறேன் ” என்று தனது பாசத்தை வெளிப்படுத்தினார். இதைக் கேட்ட ஹர்ஷிதா, “நான் அவனுடைய…” என்று கூறி அவர்களைப் புரிந்துகொள்ள முயற்சிக்கிறாள். அந்த நேரத்தில் யாஷிகா ஹர்ஷிதாவின் தோளில் கை வைத்து எதுவும் பேசாதீர்கள் என்று செய்கையால் சொல்கிறாள். அவளும் அதைப் புரிந்துகொண்டு அவனது தாயின் ஆசீர்வாதத்தைப் பெறுகிறாள், அவர்கள் இருவரும் பேசுகிறார்கள். அவனது தாய் அவளிடம் மிகவும் பாசமாக இருக்கிறாள், அவளை நிறைய கவனித்துக்கொள்கிறாள்.

அவற்றைக் கேட்டபின், அவள் கண்களில் இருந்து கண்ணீர் வந்தது. அவள் “ அம்மா நான் கிளம்புகிறேன். எனக்கு கொஞ்சம் வேலை இருக்கிறது. விரைவில் உங்களை சந்திப்பேன் ” என்று கூறினாள். ஹர்ஷிதா யாஷிகாவை தன்னுடன் அழைத்துச் சென்று அந்த அறையிலிருந்து வெளியே வருகிறாள். "நீ என்னை ஏன் தடுத்தாய்" என்று ஹர்ஷிதா கேட்கிறாள். "இது நன்றாக இல்லை. நாம் அவர்களுக்கு தவறான நம்பிக்கையை அளிக்கிறோம்" என்று வருந்துகிறாள். யாஷிகா “இல்லை சகோதரி, இது அவர்களுடைய கடைசி ஆசை, ஆனால் என் சகோதரனுக்கு அவற்றில் ஆர்வம் இல்லை. இப்போது என் அம்மா மகிழ்ச்சியாக இருக்கிறார். நீங்கள் இருவரும் அவ்வப்போது பேசிக்கொள்வீர்கள் என்பது எனக்குத் தெரியும். இது உங்கள் வாழ்க்கை, நீங்கள் விரும்பியபடி உங்கள் வாழ்க்கையை வாழலாம். இது என் அம்மாவிற்காக மட்டுமே, மிக்க நன்றி, இப்போது நீங்கள் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் நான் உங்களை தொந்தரவு செய்ய மாட்டேன் ” என்றாள். ஹர்ஷிதா அழுகிறாள், “நான் அதற்கு தகுதியற்றவள், யாஷிகா. உங்கள் அம்மா நல்ல குணமுடைய பெண். நீயும் உன் அம்மாவும் என்மேல் அவ்வளவு அன்பைக் காட்டுகிறீர்கள். நீயும் யஷ்வந்தும் மிகவும் பொருப்பானவர்கள். ஆனால் யஷ்வந்த் இந்த உணர்வுகளையெல்லாம் எப்போதும் வெளிகாட்டவில்லை. நான் அவனை தவறாகப் புரிந்து கொண்டேன். சரி என்னால் என் கண்ணீரை கட்டுப்படுத்த முடியாது. நான் இப்போது புறப்படுகிறேன்” என்று அழுதுக்கொண்டே சென்றால். மாத்திரைகளை வாங்கியபின் யஷ்வந்த் அங்கு வருகிறான், ஹர்ஷிதா அழுதுக்கொண்டே செல்வதைக் கண்டு அவளை அழைக்க முயற்சிக்கிறான், ஆனால் யாஷிகா அவன் கையைப் பிடித்து அவனைத் தடுத்து நிறுத்துகிறாள், "அவர்களை அழைக்க வேண்டாம்" என்று கூறுகிறாள். அவள் சென்றதற்கான காரணம் என்ன என்று அவனுக்குத் தெரியவில்லை. அவன் தனது தாயைக் காண்பிப்பதன் மூலம் அதை தவறான வழியில் எடுத்துக்கொண்டு தனது தாயை காயப்படுத்தி செல்கிறாள் என்று அவன் நினைக்கிறான்.

ஹர்ஷிதா தனது வீட்டிற்குச் செல்கிறாள், அவள் “யஷ்வந்த் ஒரு நல்ல மனிதன், அவன் எப்படி தனது எல்லா உணர்வுகளையும் தனக்குள் வைத்திருக்கிறான். யாசீதிடமிருந்து பிரிந்ததுதான் உலகின் மிக மோசமான வேதனை என்று நான்நினைத்தேன், ஆனால் நான் ஒருபோதும் கடந்து செல்லாத மிக மோசமான உணர்வை அவன் கையாண்டுக்கொண்டுருக்கிறான் , அதை ஒரு நல்ல பாதையில் கையாளுகிறான். திடீரென்று யஷ்வந்த் ஹர்ஷிதாவை தொலைப்பேசியில் அழைத்து “மன்னிக்கவும் என் அம்மாவை உனக்குக் காண்பித்தது என் தவறு. இதை நான் யாரிடமும் சொல்லவில்லை, ஆனால் உன்னிடம் பகிர்ந்து கொண்டேன். என் அம்மாவுக்கு ஏதாவது தவறு நடந்தால் நான் உன்னை ஒருபோதும் மன்னிக்க மாட்டேன். என்னுடன் பேச வேண்டாம். நான் உன்னுடன் ஒருபோதும் பேச மாட்டேன்" என்று கூறி இணைப்பை துண்டித்தான். அவன் ஒருபோதும் ஹர்ஷிதாவை பேச அனுமதிக்கவில்லை.

ஹர்ஷிதா, "அவன் ஏன் இப்படி கத்துகிறான், அவன் சரியான முட்டாள்.. சரி, நாம் நாளை மருத்துவமனைக்குச் செல்ல வேண்டும், இதைப் பற்றி அவனிடம் தெளிவுபடுத்த வேண்டும்" என்று நினைத்துக்கொள்கிறாள் .பின்னர் அன்று இரவு அவன் மருத்துவமனைக்குச் செல்கிறான், அங்கு அவனது அம்மா ஹர்ஷிதாவைப் பற்றியும் அவர்கள் பேசியதைப் பற்றியும் கூறுகிறார். பின்னர் யாஷிகா அவனை வெளியே அழைத்து நடந்தவற்றைக் கூறுகிறாள். பின்னர் அவன் அவளிடம் கோபமாக பேசியதை எண்ணி வருத்தப்படுகிறான். யாஷிகாவிடம் அவன் பேசியதை கூறுகிறான். யாஷிகா “நீ அவளை ஒருபோதும் புரிந்துக் கொள்ளாதே. ஹர்ஷிதா நம் அம்மாவின் விருப்பத்தை நிறைவேற்றியிருக்கிறார்கள். இப்போது நம் அம்மா ஹர்ஷிதாவால் மட்டுமே மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். ஹர்ஷிதாவிடம் பேசி மன்னிப்புக்கேள் ” என்றாள். நான் நாளை அவளை சந்தித்து அவளுடன் பேசுகிறேன் என்று கூறினான்.
அடுத்த நாள் வந்தது, ஹர்ஷிதா யஷ்வந்தைச் சந்திக்க மருத்துவமனைக்குச் செல்கிறாள், யஷ்வந்த் மருத்துவமனையில் இருக்கிறான், ஹர்ஷிதாவைச் சந்திக்க ஹோட்டலுக்குச் செல்லத் தயாராகிறான். ஹர்ஷிதா மருத்துவமனைக்குச் செல்கிறாள்.

அங்கு ஹர்ஷிதா அதிர்ச்சியடைந்து நிற்கிறாள்..அடுத்து என்ன நடக்கும்? ..
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top