மௌனங்கள் மொழி பேசாதடா-2

Advertisement

buvik

Well-Known Member
மௌனங்கள் மொழி பேசாதடா கதையை ஆரம்பிச்சு ஒரு பகுதியோட போனவதான். என்ன ஆச்சுன்னே தெரியலைன்னு நிறைய பேர் நினைச்சிருப்பீங்க?! நானும் ஒவ்வொரு கதையை ஆரம்பிக்கும் போதும் வாரம் இரு பதிவாவது கொடுக்கணும்னு நினைச்சுதான் ஆரம்பிக்கறேன். ஆனா அது என்னமோ தெரியலை இந்த கடவுள்னு ஒருத்தர் இருக்கார்ன்னு இத்தனை நாள் நினைச்சுட்டு இருந்தேனே அவர்க்கு மட்டும் என்னை அழவச்சு கஷ்டப் படுத்தி பார்க்குறதுல அவ்ளோ சந்தோஷம்! பன்னிரண்டு வயசுல ஆரம்பிச்ச என்னோட கஷ்டங்கள் இதோ இன்னிக்கு முப்பத்திஏழு வயது வரைக்கும் வஞ்சமில்லாம தொடருது.
பதினைஞ்சு வயசுல என்னோட ஆரோக்கியத்தை பறிச்சி என்னை சக மனிதர்களைப் போல் இயங்கவிடாம நடக்க விடாம பண்ண கடவுள், அதே வருடத்திலயே என்னோட அம்மாவையும் பறிச்சிக்கிட்டாரு. அதுல இருந்தே மீண்டு வர முடியாத போது, வீடு சொத்துன்னு எல்லாம் போச்சு! ஆனாலும் நம்பிக்கை மட்டும் இருந்தது நானும் அண்ணனும் ஜெயிப்போம் அப்பாவை மறுபடியும் தலைநிமிர வைப்போம்னு! ஆனா அதுக்கு அப்புறம் நடந்த விஷயங்கள், திருமணம்கிற பேர்ல வாழ்க்கையும் போக, அந்த வாழ்க்கை இன்னிக்கு இல்லன்னாலும் என்னிக்காவது மாறும்னு நம்பி இருந்த காலகட்டத்துல அவரும் ஒரேயடியாக போயிட்டார்! அதுக்கப்புறம் வாழ்க்கையே வேண்டாம் என்னை எடுத்துக்கோ இறைவா தற்கொலை செஞ்சுக்க போனவளை மட்டும் காப்பாத்தி இன்னும் வச்சு செய்யுது விதி.
சரி போகும் வரை போகட்டும்னு வாழத் துவங்கின அடுத்த வருடமே அண்ணனையும் இழந்தேன்! அதுக்கப்புறம் அண்ணன் குழந்தைகளுக்காக என்று மனதைத் தேற்றிக் கொண்டு வாழ ஆரம்பிச்சேன். ஆனா இப்படி அடுக்கடுக்கா வந்த எல்லா கஷ்டங்களின் போதும் தெய்வம் எனக்குத் துணை இருந்ததோ இல்லையோ என் அப்பா என்னோட வாழும் தெய்வமா என் தாய்க்கும் மேலா என்னைப் பார்த்துக்கிட்டார்.
சரி இதெல்லாமும் போகட்டும்னு அண்ணன் பிள்ளைகளுக்காக வாழுற வரைக்கும் வாழ்வோம்னு அப்பா சொன்னது போல நான், என் அப்பா, என் அண்ணன் குழந்தைங்க, என் டியுஷன் பிள்ளைங்கன்னு வாழ்க்கை அட்லீஸ்ட் பெரிசா பிரச்சனை இல்லாம போயிட்டு இருந்தது கொஞ்ச நாள். ஆனா அதுக்கும் இடைஞ்சலா நட்புங்கிற பேர்ல ஒருத்தி. அவ பேசிய வார்த்தைகள்! ஆனாலும் அதையும் சில வருஷம் சகிச்சுக்கிட்டேன் நாங்க அவங்க வீட்ல வாடகை இருந்ததுனால்!
ஆனா ஒருநாள், அவ விளையாட்டா பேசுறதா நினைச்சு, ‘உனக்கெல்லாம் என்ன இருக்கு! இருக்குற வரைக்கும் இருந்துட்டு போய்ச் சேரு! என்ன இருந்தாலும் நீ வேஸ்ட்தானேன்னு!’ ஊசி ஏத்துற மாதிரி சொல்லிட்டு சிரிச்சிக்கிட்டே கடந்து போன போது, என்னால நிச்சயமா தாங்க முடியலை! ஒருத்தர் நடக்க முடியாத நோயாளியா இருந்தா அவங்களுக்கு கணவன் குழந்தை இல்லாம இருந்தா அவங்க வேஸ்டா! இவங்கல்லாம் இறந்த பிறகு இவங்க பிள்ளைகளோட பேருக்குப் பின்னாடி இவங்க பேர் இருக்கும்னு தானே இப்படிச் சொல்றாங்க! நான் இறந்த பிறகும் என்னோட பேர் இருக்கணும் அப்படி எதையாவாது சாதிக்கணும்னு ஒரு வெறி வந்தது. அப்போதான் ஒருநாள் என்னோட டியுஷன் பிள்ளையோட அம்மா நான் எழுதி இருந்த ஒரு கதையைப் படிச்சிட்டு,
‘நீங்க ஏன் புத்தகமா இதை வெளியிடக் கூடாது ரொம்ப நல்லா இருக்குங்கன்னு எப்போவோ சொன்னது மனசுல ஆணி அடிக்க, லைப்ரரில வாடைக்கு எடுத்து வந்து படிக்குற புத்தகத்துல இருந்த அன்பு இல்லம் பதிப்பகத்துக்கு ஃபோன் நம்பர் எடுத்து லஷ்மணன் அய்யாகிட்ட பேசி, என் கதையைப் புத்தகமா போட முடியுமான்னு கேட்டேன். அப்படி வெளி வந்ததுதான் இதயராகம் நான் எழுதின மூணாவது கதை.
சரி நான் சாதிக்க ஆசைப்பட்டதுல ஒரு சின்னத் துளியாவது சாதிச்சேன்னு ரொம்ப சந்தோஷத்தோட என் அப்பா கால்ல விழுந்து ஆசீர்வாதம் வாங்கினேன். அப்போ என் அப்பா முகத்துல வந்த சந்தோஷம் இருக்கே! அப்பா இஸ் ஆல்வேஸ் அப்பா...!!
அதுக்கப்புறமும் என்னோட பிரச்சனைகளும் முடியல, அவளோட கேலிப் பேச்சுக்களும் முடியலை! ஒருநாள் அவ எங்க வீட்டுக்கு வந்து பேசும் போது, அவகிட்ட அந்த புக்கைக் காண்பிச்சேன். அவளால் நம்பவே முடியலை!
உண்மையா சந்தோஷப் பட்டான்னு தான் நினைக்கிறேன்!
அப்போ நான் சொன்னேன், ‘நீ தெரிஞ்சு பேசுறியோ இல்லைத் தெரியாம பேசுறியோ, ஆனா இனி யாரையும் அப்படிப் பேசாதேன்னு! ஆனா நீ அப்படி அன்னிக்கு பேசினதாலதான் இந்த புக் வந்தது. இருந்தாலும் இனி யார் மனசையும் கஷ்டப் படுத்தாதன்னு! ஆனா அந்த நிமிஷத்துக்கு அவ கேட்டுகிட்டா அவ்ளோதான். ஆனாலும் அவளோட பெருமிதமான பேச்சுக்களும், மத்தவங்களைத் தாழ்த்திப் பேசுற பேச்சுகளும் ஓயவே இல்லை!
ஒருநாள் வெளில போயிட்டு வரும் போது, அதாவது, மே மாசம் என்னோட முதல் புத்தகம் வெளி வந்த அடுத்த வருடம் நானும் சவீயும் இன்னும் சில எழுத்தாளரும், வாசகரும், புக் பேர்ல சந்திச்சுட்டு திரும்பி வீட்டுக்குப் போகும் போது, அவ வெளி வாசல்ல வெளில நின்னுட்டு இருந்தா.
“அப்போ அவ ஒரு கேள்வி கேட்டா சிரிச்சிகிட்டே, “என்ன டேட்டிங்கான்னு?!” சத்தியமா சட்டுன்னு அவ கேட்ட கேள்விக்கு அர்த்தம் புரியலை!
‘என்ன என்ன கேட்குறா இவன்னு தான் தோணுச்சு?’ ஆனா அதுக்கான அர்த்தம் புரிஞ்ச நொடி, நிஜமா வெறுத்துட்டேன்!
அன்னிக்கே அவளை நாலு கேள்வி கேட்டுட்டு அந்த வீட்டை விட்டுப் போகணும்னு மனசு துடிச்சது. ஆனா அப்பா, அப்பாக்கு இவ இப்படி எல்லாம் என்ன பேசுறது தெரிஞ்சா ரொம்ப வருத்தப் படுவாறேன்னு எல்லா கோபத்தையும் வருத்தத்தையும் அழுதே தீர்த்தேன்.
இப்படி அழுது அழுதே இன்னும் சில வருஷங்கள் ஓடிச்சு! வாடகை எங்களுக்கு கம்மியா விட்டிருந்தாங்ககிற நன்றி உணர்ச்சியும், பல சந்தர்ப்பங்கள்ல அவங்க வீட்டினர் எங்க குடும்பத்துக்கு உதவியா இருந்தாங்கங்கிற நன்றி உணர்ச்சி ஒருபக்கமும் அவளைச் சட்டுன்னு எதிர்த்துப் பேச முடியலை! அதுவும் தாண்டி அப்பாகிட்டயும் அவ பேசுற பேச்சுக்களை சொல்ல முடியலை! அதனால் எல்லாத்தையும் சகிக்சுக்கிட்டேன்.
ஆனா அதுக்கும் ஒரு முடிவா, எங்க பக்கத்து வீட்டில் குடி வந்த ஒரு பெண்ணால் மீண்டும் பெரிய பிரச்சனை எழுந்தது. சொன்னா சிரிப்பாதான் இருக்கும். சண்டை எனக்கும் அந்தப் பெண்ணுக்கும் அல்ல. அந்தப் பெண்ணுக்கும் என் அப்பாவுக்கும்! ரொம்ப சில்லியான விஷயம்தான் அப்பாவுக்கும் எனக்கும், யாரும் யாருக்கும் இடைஞ்சல் கொடுக்காம வாழணும்கிற கொள்கை. ஆனா பலரும் அப்படி இருப்பதில்லையே!
பக்கத்துக்கு வீட்டுப் பொண்ணு ஏசி தண்ணிய அப்படியே நடந்து போற வழியில வழிய விடுறது, அதுல எங்க அப்பா வழுக்கி விழுந்தும் இருக்கார்! ஆனாலும் நாங்க பொறுத்துக்கனும்! அதோடு, தலை முடி வாருவதை எங்க வீட்டு வாசல்ல போடுறது, குப்பைகளைப் போடுறது, எச்சில் துப்புறது. ஸ்லிப்பர்ஸ் வழியில் கண்டபடி விடறதுன்னு, இன்னும் சொல்ல போனா பால்கனிய டாய்லேட்டாவே யூஸ் பண்ண ஆரம்பிச்சிட்டாங்க அவங்க பையனும் சில ரிலேடிவ்சும்!
இதை எல்லாம் தாங்க முடியாம, ஹவுஸ் ஓனர் ஆன என் நல்ல நட்பிடம் நானும் என் அப்பாவும் சொல்ல, அவளும் அந்த பெண்ணுக்கு அட்வைஸ் பண்ணினாள்தான். ஆனாலும் அதே பிரச்சனை தொடர்ந்தது.
என் அப்பா பழைய காலத்து ஆள் இல்லையா ஒருமுறை இருமுறை நல்லபடியாய் சொல்லிப் பார்த்து, பிறகு நல்ல வார்த்தைகளால் அர்ச்சனை செய்ய ஆரம்பித்துவிட்டார்.
அவள் செய்தது எல்லாம் இப்போது பெரிதாகப் படாமல், என் அப்பா அந்தப் பெண்ணைத் திட்டியது மட்டும் ஹவுஸ்ஓனர் வீட்டில் கம்ப்ளைன்ட் ஆகிவிட, ஹவுஸ் ஓனர் அதாவது என் தோழி, எங்களிடம் வந்து பேச,
“நானும் ச்சே! இந்தப் பக்கத்துக்கு வீட்டுப் பொண்ணு பண்ற டார்ச்சர்கு என் கால் நல்லா இருந்தா ஆவடில இருக்க எங்க இடத்துல ஒரு கிட்சன், ரூம்ன்னு கட்டிகிட்டு போய்டுவேன். ரொம்ப லாங்கா இருக்கிறதுனால என்னால எதுவும் செய்ய முடியலைன்னு” என்று ஆதங்கத்தோடு சொல்ல, அவளோ, மிகவும் அன்பாய்,
“ச்சே ஏன் கீதா அப்படி எல்லாம் பேசுற? நீயும் உங்க அப்பாவும் இருக்குற வரைக்கும் நீங்க இங்க இருந்துக்கலாம். நாங்களே உங்களை எடுத்துப் போட்டுடுவோம்னு தான் நாங்க நினைச்சுட்டு இருக்கோம்! நீ ஏன் இப்படிப் பெரிய வார்த்தை எல்லாம் சொல்லுறன்னு சொன்னா. ஆனா அப்போகூட எனக்குத் தவறா படலை! இவ்ளோ பாசம் இருக்கா எங்கமேலன்னுதான் நினைச்சேன்! ஆனா அடுத்து அவ சொன்ன வார்த்தைகள்,
“ஒருவேளை உனக்கு அப்படி வீடு கட்டிட்டு போகணும்னு ஆசை இருந்தா உன்னால் என்ன முடியும், ஒத்தைக் கல்லு சுவர் வச்சு கட்டிட்டு, அதோ எங்க தொத்தா வீட்டுல இருந்து பிரிச்ச பழைய ஓடுங்க இருக்குல்ல அதை எடுத்துப் போட்டுட்டு போய் இருன்னு!” அப்படியே மனசு நொறுங்கிப் போச்சு!
“ச்சே ஒரு மனுஷனுக்கு வசதியும் கைகாலும் நல்லா இல்லைன்னா யார் என்ன வேணா நினைக்கலாம்ல! என்னோட தகுதி இவ்ளோதான் போலன்னு இவ எப்படி நினைக்கலாம்னு ஒரு குருட்டு தன்னம்பிக்கை!
என் அப்பாவும் அந்தப் பொண்ணு பேசியதைக் கேட்டு மனசு ஒடிஞ்சி, ‘ச்சே இனி நாம இந்த வீட்ல இருக்கக் கூடாதும்மா! ஒரு ஓலைக் குடிசையா இருந்தாலும் பரவா இல்லை நம்ம வீடுன்னு ஒன்னு இருக்கணும் என்று சொல்ல,
நீ ஏன்ப்பா கவலைப் படுற நான் இருக்கேன்! ஓலை வீடு என்ன தளம் வீடே கட்டுறேன்னு இருந்த கொஞ்சுண்டு நகையை மனசுல வச்சிக்கிட்டு வீராப்பா வசம் பேசினேன்! ஆனா ஷப்பா நான் வீடு பட்ட கஷ்டம் அதெல்லாம் ஹைலைட்!!
அந்த வீடு கட்டி முடியறதுக்குள்ள, கடவுளே நான் அட்லீஸ்ட் அந்த வீடு கட்டிக் குடியேறுற வரைக்குமாவது உசிரோட இருக்கணும் இந்த வீட்ல என் உசிர் போகக் கூடாதுன்னு நினைக்கிற அளவுக்கு ஆகிடுச்சு!
இதற்கு நடுவில் மீண்டும் ஹவுஸ் ஓனர் பஞ்சாயத்து. அதாவது இப்போது ஹவுஸ் ஓனர் பெண்னின் கணவர், அதாவது என் பெரியப்பா மகன் என் அண்ணனின் செவிகளுக்கு பக்கத்து வீட்டுப் பெண்ணை என் அப்பா திட்டியது எட்ட, அவரும் வந்து, அவர் பங்கிற்கு,
‘ஏம்மா கதை எல்லாம் எழுதுற, உனக்கு அட்ஜஸ்ட் பண்ணிட்டு போகத் தெரியாத! எத்தனையோ பேர் பிளாட் பார்ம்ல எல்லாம் இருக்காங்க! நமக்கு,’ என்று நிறுத்தி விட,
எனக்கு வந்துது பாருங்க கோபம், “நியாயமா அந்தப் பொண்ணு செய்யிற விஷயத்துக்கு ஹவுஸ் ஓனர் நீங்கதான் கேள்வி கேட்டிருக்கணும்! ஆனா என் அப்பா கேள்வி கேட்டது தப்புதான்! இதெல்லாம் ஒருவிஷயம்னு வீட்டு ஆண்கள் வரைக்கும் கொண்டு போகக் கூடாதுன்னு உங்ககிட்ட சொல்லலை! இனி அப்பா எதுவும் பேச மாட்டாருனு சொல்லிட்டேன்.” அதுக்கப்புறம் அந்த மனிதரும் அமைதியா போயிட்டார்.
அதாகப் பட்டது ஒருவழியா போராடி வீடு கட்டி குடியேற அப்போவும் நாங்க யாருக்கும் சொல்லாம வீடு கட்டிட்டோம்னு குற்றச்சாட்டு சரமாரியா பொழிந்தது. நான் என்னமோ மாளிகையைக் கட்டிட்ட மாதிரி. ஆனா இதுல ஹைலைட் என்னன்னா என் ரிலேடிவ்ஸ் யாருமே அவங்க வீடு கட்டும் போதேல்லாம் எங்ககிட்ட சொல்லவே இல்லை! அவங்க செஞ்சா எதுவுமே தப்பில்லையா!! எல்லாமே நியாயம்தான்.
சரி அங்க வந்து வாழ்ந்தவாவது நிம்மதியா விடுறாங்களான்னு பார்த்தா, “எப்படி இவங்க வாழ்ந்துடறாங்கன்னு பாத்துடலாம்னு சாபம் வேற! அவங்க சொன்னதுக்கு ஏற்றார் போலவே அடிமேல் அடி! அவங்க எல்லோர் முன்னாடியும் ஜெயிச்சுக் காட்டணும்னு ஆசையா வந்தவளுக்கு, புது இடம் என்பதால் என்னுடைய டியுஷன் வருமானமும் நின்று போக, யாருக்காக அந்த வீட்டைப் பார்த்து பார்த்துக் கட்டினேனோ என் தாய்க்குத் தாயாய் தகப்பனுக்குத் தகப்பனாய் உயிருக்கு உயிராய் இருந்த என் தெய்வத்தையும் இதோ இன்று பறி கொடுத்துவிட்டு நிற்கிறேன் நான் மட்டும் உயிரோடு! {அது என்னன்னே தெரியலை நான் மட்டும் சகா வரம் பெற்று வந்துட்டேனா எவ்ளோ நோய் இருந்தாலும் எவ்ளோ இழப்புகள் வந்தாலும், எவ்ளோ அவமானம் வந்தாலும் தாங்கிட்டு உயிர் மட்டும் இருக்குது! தற்கொலை பண்ணிக்கனும்னு பல நேரம் தோணுது! அதுவும் அப்பா இல்லாம அப்பாவைப் பார்க்காம, அப்பா வேணும் அப்பா வேணும்னு குழந்தை மாதிரி அடம்பிடிக்குது மனசு! என் கண்கள்ல மட்டும் கண்ணீர் நிக்கவே மாட்டேங்குது! கண்ணீருக்காகவே பிறப்பெடுத்தவ போல}
இதிலிருந்து என்ன கற்றுக் கொண்டேன் என்றால், இனி யார் என்ன சொன்னாலும் பொறுத்துக் கொள்ள வேண்டும், எதற்கும் கோபப்படக் கூடாது முக்கியமா மான ரோஷமே இருக்கக் கூடாது! எல்லா இடத்திலும் உண்மையை மட்டுமே பேசக் கூடாதுன்னு!
என் உறவினரைப் பொறுத்தவரை உதவி செய்வார்கள்தான். ஆனால் செய்துவிட்டு அவர்கள் பேசும் பேச்சுதான் தாங்க முடியவில்லை! ஆனால் இனி அதையும் பொறுத்துக் கொள்ள வேண்டும் ஏனெனில் நான் இல்லாதவள் இயலாதவள், இதுதான் என் விதி.
இப்போ உங்ககிட்ட இதையெல்லாம் ஏன் சொல்றேன்னு எனக்குத் தெரியலை! ஆனா ரொம்ப நாளா மனசுல இருந்ததைக் கொட்டணும்னு தோணுச்சு! என் மனசுல இப்போல்லாம் அடிக்கடி தோணுறது கடவுள்னு ஒருத்தர் இருந்தா அவரைப் பொறுத்தவரை நான்தான் மிகவும் கெட்டவளோ?! அதனால் தான் இப்படி நடக்குதோன்னு! தெரியலை! ஆனா எது வந்தாலும் எதிர்கொண்டுதான் ஆகணும்னுகிற துணிச்சல் இப்போ வந்திருக்கு! ஏதோ உங்ககிட்ட எல்லாம் பகிர்ந்துக்கனும்னு தோணுச்சு பகிர்ந்துக்கிட்டேன்.

என் அப்பா என்னோடு இல்லாம மனசும் சரி வீடும் சரி வெறிச்சோடி போயிருக்கு! ஆனால் அப்பா மாதிரி பார்த்துக்க அவர் இடத்தில நான் வளர்த்த என் அண்ணன் மகன் இருக்கான்கிறது நினைக்கும் போது அவனுக்காகவும், தன் மகனும், மகளும் நிச்சயமா ஒருநாள் பெருசா சாதிப்பாங்ககிறதா நம்பிட்டு இருந்த என் அப்பாவோட கனவை நிறைவேத்துறதுக்காகவும் நிச்சயமா நான் இந்த உலகத்தில் வாழும் வரை ஜெயிக்க முயற்சி செய்வேன்!

இப்போ என்னோட மன ஆறுதலுக்காக மறுபடியும் கதைப்பக்கம் என்னோட கவனத்தைத் திருப்பி இருக்கேன். இதோ பலரும் எதிர்பார்த்துக் காத்துகிட்டு இருந்த மௌனங்கள் மொழி பேசாதடா கதையின் அடுத்த பகுதியோட உங்களுக்காக...

தயவு செய்து படிப்பவர்கள் தங்களின் கருத்துக்களை தவறாமல் பதியுங்கள். என்போன்றர்களுக்கு உங்கள் விமர்சனம்தான் மிகப் பெரிய ஆறுதலும், தன்னம்பிக்கையும் கொடுக்கும். நன்றி...

Geethanjali's Mounangal Mozhi Pesaathada -2
Ellam sari agum siss.......don't worry.......nice ud sis
 

Lalithavasu

Active Member
ethanai than keezhe vizhunthalum meendum phoenix paravai mathiri ezhundhu vazhndhu kattuven nu life la lead panreengale athuku salute. kadavul suppportive ah appavai koduthiukar. so thank to him. self pity vendam. athu nammai keezhe than thallum. dont mistake me for this line. melum melum vetri pera vazhtukkal!!!
 

Geethanjali

Writers Team
Tamil Novel Writer
ethanai than keezhe vizhunthalum meendum phoenix paravai mathiri ezhundhu vazhndhu kattuven nu life la lead panreengale athuku salute. kadavul suppportive ah appavai koduthiukar. so thank to him. self pity vendam. athu nammai keezhe than thallum. dont mistake me for this line. melum melum vetri pera vazhtukkal!!!

Thank you ma. Appa irandhutanga ma. Adhudhan post la sonnen. But he still lives in my heart and blesses me still my breath:love:
 
வாழ்க்கையே போர்க்களம் வாழ்ந்து தான் பார்க்கணும் போர்க்களம் மாறலாம் போர்கள் தான் மாறாது... இதுவும் கடந்து போகும் கீதா .. நம்புங்கள்..
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top