மை டியர் டே(டெ)டி - 3

Advertisement

Kamali Ayappa

Well-Known Member
"நான் சொல்றேன் இளா!" என்று நிலா எழுந்து வர, "சரி சொல்லு குட்டி இளா" என்றான் மாறனும். "சார். அந்த விஷயம் இருக்கட்டும். உங்க பொண்ணுக்கு கொஞ்சமாவது மேன்னர்ஸ் இருக்கா? பிரின்சிபால் ரூம்ல டீச்சர்ஸ் கூட நான் சொல்ற வரை உக்கார மாட்டாங்க. ஆனா, உங்க பொண்ணு எப்படி ஜம்முன்னு உக்காந்துட்டு இருக்காங்க பாருங்க. என் போஸ்ட்க்கு மதிப்பு தரலன்னாலும் பரவால்ல. என் வயசுக்கு மதிப்பு தரலாம்ல" என்றார் அந்த நாற்பதுகளின் தொடக்கத்தில் இருந்த பிரின்சிபால்.

மாறன் நிலாவை பார்க்க, "அட பார்றா! அப்போ தோ இந்த பாட்டிக்கு உங்கள விட வயசு அதிகம் தானே! என்னைச் சொல்லுற மேடம், அந்த பாட்டியை உக்கார வைக்காததேனோ! மேடம்க்கு மேனரிசம் தெரியாதோ?" என்று இரு கைகளையும் இடையில் வைத்து முறைத்துக்கொண்டு, அங்கு வாசல் அருகில் நின்றிருந்த தூய்மை பணியாளர் ஒருவரை காண்பித்து கேட்டாள் நிலா.

"அது... அது..." பதில் சொல்ல முடியாமல் தயங்கிய பிரின்சிபால் மேடம், மூளையை கசக்கி, ஒரு பதில் அளித்தார். "அது வந்து. அவங்க என்கிட்ட வேலை செய்யுறவங்க. என்கிட்ட சம்பளம் வாங்குறவங்க. நான் தான் அவங்களுக்கு சம்பளம் கொடுக்கறேன்" அதனால நான் உக்காரலாம்.

"அய். அய். அய். அப்போ நாங்க கூடத் தான் ஃபீஸ் கட்டுறோம். அதுல தான உங்களுக்கு சம்பளம். அப்போ நானும் உக்காருவேனே! இப்போ என்ன பண்ணுவீங்க. வெவ்வெவ்வேவ்வேய்" என்று நாக்கை துருத்தி பழித்துகாமித்தாள் நிலா.

மாறனுக்கோ, அந்த பிரின்சிபால் பேந்த பேந்த முழிப்பதை பார்த்துச் சிரிப்பதா? இல்லை குட்டி இளாவின் பேச்சை ரசிப்பதா? இல்லை அங்கு இருந்த மற்றவர்கள், முகத்தில் ஒரு ரியாக்ஷனும் காமிகாமல் நிற்பதுபோலத் தானும் நிற்க வேண்டுமா? என்று ஒன்றும் புரியவில்லை.

இதழ்வரை வந்த புன்னகையையும் கஷ்டப்பட்டு அடக்கிக்கொண்டு இருந்தான் அவன். அனால், அவன் புதல்வியோ, அவன் காதருகில் வந்து, அவள் உயரத்திற்கு குனிய வைத்து, "இளா! இந்த சோஃபா இல்ல. செம சாஃப்ட் சாஃப்டா இருந்துச்சு. அதான் உக்காந்து பாத்துட்டேன்" என்று கிசுகிசுக்க, இத்தனை நேரம் அடக்கி வைத்ததெல்லாம் வீணாகி, அத்தனை பற்களும் தெரிய சிரித்துவிட்டான் அவன்.

இவர்கள் இருவரும் ஏதோ கிசுகிசுத்து சிரிப்பதை பார்த்து, அந்த பிரின்சிபால் மேடமுக்கு தான் பி.பி எக்குத்தப்பாய் எகிறியது.

பிரின்சிபால் முறைத்ததை பார்த்த மாறன் கப்பு சிப்பென்று சிரிப்பதை நிறுத்திக்கொண்டு, "குட்டி இளா! பிரின்சிபால் மேடம் முறைக்கறாங்க" என்று மாறன் கூற, "அட விடு இளா! ஜெர்சி கௌ மேடம் அப்டி தான் முறைக்கும்" என்றாள் குட்டி இளா.

"நிலா! என்ன சொன்ன?" என்று பிரின்சிபால் அதட்ட, "என்ன? ஜெசிக்கா மேடம்ன்னு சொன்னேன். உங்க காதுல என்ன விழுந்தது?" என்றாள் இந்த வாண்டு.

அவள் பொறுமையாய் சொன்னதை, இப்பொழுது அவரே சொல்லி, அறையில் உள்ள அனைவருக்கும் அமபலமாக்குவாரா என்ன? "ஒண்ணுமில்லயே!" என்று சமாளித்து விட்டார் அந்த ப்ரின்ஸி.

மாறனுக்கு என்ன இவள் இப்படி வாயாடுகிறாள் என்று ஒரு பக்கம் ஓடிக்கொண்டிருந்தாலும், இவனே 'ரய்னா சார்'ஐ ரைனோசர் என்று மாற்றியவன் தானே. இப்பொழுது அவன் வித்து, 'ஜெசிக்கா'வை, ஜெர்சி கௌ(cow) என்று மாத்தியதை கண்டிக்கவா முடியும். தன்னை போலவே மகள் என்று நினைத்துக்கொண்டான்.

"இளா...இளா... இன்னைக்கு என்ன தெரியுமா ஆச்சு!" என்று அங்கு இருப்பவர் யாரையும் கண்டுகொள்ளாமல், தன் தந்தையிடம் கதைக்க தொடங்கிவிட்டாள் நம் இளநிலா. அவள் கதைகளில் உலகையே மறப்பவனாயிற்றே அவன் தான்! சுற்றுப்புறத்தை மறந்து, சுற்றி இருப்பவர்களை மறந்து, அங்குயே மண்டியிட்டு, பஞ்சின் மேன்மை கொண்ட, அவள் பிஞ்சி விரல்களைப் பிடித்துக் கேட்கத் தொடங்கினான் மாறன்.

"இன்னைக்கு நானு! லஞ்ச் சாப்பிட்டு, வாஷ்ரூம் போனேனா! இன்னைக்கு ஷர்மி வேற லீவா! எனக்கு ஒரே போரிங் போரிங்கா இருந்துச்சு. என்ன பண்றதுன்னு தெரியல. வாஷ்ரூம் வாசல்ல தோ இந்த ரெண்டு ஆண்ட்டியும் வாஷ்ரூம் வெளிய உக்காந்துட்டு இருந்தார்களா?" என்று அங்கு நின்றிருந்த தூய்மை பணியாளர்கள் இருவரை காமித்தாள்.

"ஏன் ஆண்ட்டி இங்க உக்காந்துட்டு இருக்கீங்கன்னு கேட்டனா... அவங்க. எப்போவும் இங்க தான் கண்ணு உக்காருவோம். தோ. இப்போ நீங்கலாம் லஞ்ச் பிரேக் முடிஞ்சி கிளாஸ்க்கு போனதும், இந்த வாஷ்ரூம் எல்லாம் தொடைப்போம்'ன்னு சொன்னாங்க. நானு அதுக்கு. அப்போ வந்து தொடச்சிக்கலாம் ல. அதுவரை ஸ்டாஃப் ரூம்ல இருக்கலாம்லன்னு கேட்டன். அவங்க அதுக்கு, எங்களுக்குத் தனியா ரூம்லாம் இல்ல பாப்பா. இங்க தான் இருப்போம்'ன்னு சொன்னாங்க. சரி எங்க போயி சாப்பிடுவீங்கன்னு கேட்டேன். அவங்க அதுக்கு, தோ, இந்த இந்த படிக்கட்டுல தான் உக்காந்து சாப்பிடுவோம்னு சொன்னாங்க. நான் அதுக்கு, ஆண்ட்டி, இங்க ஜெர்ம்ஸ் லாம் இருக்குமே. எல்லாரும் கால் வச்சி நடந்து போற படிக்கட்டு. இங்க நெறையா ஜெர்ம்ஸ் இருக்கும். அப்டி தான் மிஸ் சொன்னாங்க அப்டினு சொன்னேன்" என்று அவள் நிறுத்த, "அப்புறம் என்ன ஆச்சு குட்டி இளா !" என்று கேட்டான் மாறன்.

"அப்புறம் வந்து. இவங்க ரெண்டு பேரையும் கூப்டுட்டு, நம்ப மிஸ் லாம் இருப்பாங்கல்ல. அந்த ரூம்க்கு கூட்டிட்டு போனேன்" என்று குட்டி இளா சொல்ல, "அங்க ஏன் குட்டி கூப்ட்டு போனீங்க?" என்று கேட்டான் இளமாறன்.

"தோ. இந்த மிஸ் இருக்காங்கல்ல" என்று பிரின்சிபால் அருகில் நின்றிருந்த ஆசிரியர் ஒருவரை காட்டி, "இவங்க தான் சொன்னாங்க. தரையில தானா எல்லாரும் கால் வச்சி நடந்து போறாங்க. அதனால ஜெர்ம்ஸ்லான் இருக்கும். அதனால காரிடா ல கை வைக்கக் கூடாது, உக்கார கூடாதுன்னு சொன்னாங்க. இந்த மிஸ் அந்த ரூம்ல தான் இருப்பாங்க. அதான் அங்க கூட்டிட்டு போனேன். அந்த மிஸ் கிட்ட சொல்லலாம்ன்னு" என்றாள் நிலா.

"சரி. அங்க போயி மிஸ் கிட்ட சொன்னீங்களா?" என்று மாறன் கேட்க, "ஹான். சொன்னேனே. நான் அந்த மிஸ் கிட்ட கூட்டிட்டு போயி, இவங்க காரிடார், அப்புறம் படிக்கட்டுல எல்லாம் உக்காந்துட்டு இருக்காங்க. நீங்கத் தான சொன்னீங்க! அங்கலாம் எல்லாரும் கால் வச்சி நடந்து போகுற இடம். அங்க ஜெர்ம்ஸ்லாம் இருக்கும்'ன்னு சொன்னீங்கல்ல. அங்க ஏன் உக்கார்ந்திருக்கீங்கeன்னு கேட்டேன், அவங்க உக்கார வேற எங்கயும் இடம் இல்லைன்னு சொன்னாங்க. அதான் இங்க கூட்டிட்டு வந்தேன். நீங்க உங்க ரூம்லயே உக்கார வச்சிக்கோங்கன்னு சொன்னேன்" என்று அவள் கூற, மாறனுக்கு அய்யய்யோ என்றானது.

இவன் அமைதியாகவே இருக்க, அவளே தொடர்ந்தாள். "மிஸ் வந்து அதுக்கு. இங்கலாம் உக்கார வைக்க முடியாது. இது ஸ்டாஃப் ரூம். இங்க டீச்சர்ஸ் தான் உக்காரனும்னு சொன்னாங்க. இவங்களும் இந்த ஸ்கூல்ல தானே வேலை செய்யுறாங்க? இவங்களுக்கு ஸ்டாஃப் ரூம் எங்க'ன்னு கேட்டேன். அதெல்லாம் இல்லன்னு சொல்லிட்டாங்க. அப்போ, இவங்களுக்கு வேலை இல்லாத நேரம், இந்த ரூம்லயே உக்கார வச்சிக்கோங்கன்னு சொன்னேன். அதெல்லாம் முடியாது, இங்க இடம் இல்ல, நாங்க ஆல்ரெடி 10 டீச்சர்ஸ் இங்க உக்காந்துட்டு இருக்கோம்ன்னு சொல்லிட்டாங்க" என்றாள் நிலா.

"அப்புறம் என்ன பண்ணீங்க குட்டி இளா!" என்று மாறன் ஆசையாய் கேட்க, "அதுவா! அந்த ரூம் ல 10 மிஸ் இருக்காங்க. ஆனா, இந்த ரூம்ல எப்போவும் இந்த ஜெர்சிகௌ மேம் மட்டும் தான இருக்காங்க. அதான் இந்த ஆண்ட்டியெல்லாம் இங்க கூட்டிட்டு வந்தேன். அதுமட்டும் இல்லாம, இந்த ஸ்கூலேயே இவங்க தான பெரிய மிஸ். இவங்களுக்கு ஜெர்ம்ஸ் பத்தி நெறையா தெரியும்ன்னு நெனச்சன். அப்புறம், இவங்க இங்க தனியா தான் இருக்காங்க. போர் அடிக்கும்ல. இந்த ஆண்ட்டி எல்லாம் இங்க இருந்தா பேசிட்டு இருப்பாங்க ல. அதான் நான் இவங்கள எல்லாம் பிரின்சிபால் ரூம்க்கு கூட்டிட்டு வந்தேன். நான் சரியா தான செஞ்சேன். இந்த ஆண்ட்டியெல்லாம் வேலை இல்லாத நேரத்துல இங்க இருந்தா, அவங்களும் தரைல இருக்கும் ஜெர்ம்ஸ் கிட்ட இருந்து தப்பிச்சிடலாம். அப்புறம் இந்த ப்ரின்சிபாலுக்கும் பேச்சு துணை இருக்கும்ல.

ஆனா இந்த பிரின்சிபால் மேம், என்ன திட்டுறாங்க இளா!" என்று முகத்தை தொங்கபோட்டுக்கொண்டு, மண்டியிட்டு தன் முன் நின்றிருந்த தந்தையை கட்டிக்கொண்டாள்.

"இவ்வளவு நேரம், தன் முன் காச் மூச்சென்று கத்திக்கொண்டிருந்த பிள்ளையா இது?" என்றாகி போனது ஜெசிக்கா மேமிற்கும். நிலா அங்கு வந்து, இந்த தூய்மை பணியாளர்களுக்கு அமர இடம் தந்தே ஆகவேண்டும், என்று இவ்வளவு நேரம் அடம்பிடித்து நின்றிருந்ததால், நீ என்ன சொல்வது, நான் என்ன கேட்பது என்ற மனநிலையில் இருந்துவிட்டார் அந்த தலைமை ஆசிரியர். இவர்கள் இங்கு இருக்க அனுமதிக்காவிட்டால், இந்த இடம் விட்டு செல்லமாட்டேன் என்று அடம் பிடித்து இங்கேயே அமர்ந்து கொண்டதால் தான், அவசரமாக மாறனை அழைத்தது.

அவளைச் சமாளித்து வகுப்பறைக்கு அனுப்புவதில் குறியாக இருந்தாரே தவிர, அவள் ஏன் அப்படி அடம் பிடிக்கிறாள் என்று கேட்கவே இல்லை. கேட்கத் தோணவும் இல்லை.

இப்பொழுது, அனைத்தையும் உரைத்து, நான் என்ன தவறா செய்தேன், என்று தந்தையை கட்டிக்கொண்டு கேட்கும் பிள்ளையைப் பார்த்ததும், "அவள் என்ன தவறா செய்தாள்?" என்று அவர் உள்மனதிடம் கேட்க,"இல்லை" என்று பதிலளித்தது அதுவும்.

பள்ளியில் அத்தனை ரகளை செய்தாலும், நிலாவை பிடிக்காது என்றில்லை, அந்த ப்ரின்சிபாலுக்கு. அவள் சிறு சிறு குடும்புகளை ரசிப்பவர் தான். அதிலும், தாய் இல்ல பிள்ளை என்று, சற்று அதிக அக்கறை என்றே கூறலாம். ஆனால், சமயத்தில் இப்படி, காரணம் கூடச் சொல்லாமல், தான் சொன்னதை செய்தே ஆக வேண்டும் என்று தாம் தூம் என்று குதிக்கும்போது, குட்டி தேவதை, அவர் கண்களுக்குக் குட்டி சாத்தான் அவதாரம் எடுத்தார் போலத் தான் தெரியும். ஒரு கல்வி நிறுவனத்தைக் கட்டி ஆள்வது, அவ்வளவு சுலபமா? அத்தனை அலுவல்கள் இருக்குமே! அவருக்கு இருக்கும் பணி சுமைக்கு நடுவில், இப்படி ஜிங்கு ஜிங்கென்று வந்து ஆடினால், "அதெல்லாம் செய்ய முடியாது. உன்னால் முடிந்ததை பார்த்துக்கொள்" என்று விட்டுவிடுவார். அப்டி விடுபவள் அல்லவே நம் குட்டி இளா. சொன்னதை செய்தே ஆகவேண்டும் என்று இவளும் பிடிவாதமாய் நிற்க, இருவருக்கும் நன்றாகவே முட்டிக்கொள்ளும்.

அந்தச் சமூக அந்தஸ்தை எப்படி உரைப்பார் அந்த சிறு பிள்ளைக்கு. படிப்புடன் சேர்த்து, நல்லெண்ணங்களை கற்பிக்க வேண்டிய நாமே, சமூக பாகுபாடு காட்டவிட்டோமே. "ஆசிரியர்கள் போல, இந்த தூய்மை பணியாளர்களும் நம் நிறுவனத்தில் பணிபுரிபர்கள் தானே! அவர்களைப் பற்றி, நாம் யோசிக்கவே இல்லையே!" என்ற எண்ணம் ஓடிக்கொண்டிருந்தது அந்த தலைமை ஆசிரியருக்குள்.

அவரின் முகமாறுதலை வைத்தே, அவரில் எண்ண ஓட்டத்தைப் புரிந்துகொண்டான் மாறன்.

அவரிடம் ஒன்றும் பேசாமல், "மணி இப்போ 2.30 ஆயிடுச்சு. ஸ்கூல் டைம் முடிஞ்சிடுச்சு. நான் குட்டி இளாவை கூப்டு போகிறேன். இன்னைக்கு பஸ் வேண்டாம்" என்று தலைமை ஆசியரிடம் கூற, அவரும் 'சரி'யெனத் தலை மட்டும் அசைத்தார். வாய் வார்த்தை ஏதும் வரவில்லை! எண்ணவோட்டம் வார்த்தைகளை முழுங்கிவிட்டதோ என்னவோ!

இளமாறன் நிலாவை தூக்கவும், "இளா! நில்லு. என்ன எங்க தூக்கிட்டு போற? விடு. இந்த பிரின்சிபால் மேம் இன்னும், எனக்குப் பதிலே சொல்லல. என்ன விடு. நான் வரமாட்டேன்" என்று அடம் செய்தவளை, குண்டுக்கட்டாகத் தூக்கிக்கொண்டு செல்ல, அவன் பிடியிலிருந்து விடுபட அத்தனை பிரயத்தனம் செய்தும் முடியவில்லை நிலாவால்.

கார் பார்க்கிங்கிற்கு சென்று தான் அவளைக் கீழே இறக்கி விட, "என்ன எதுக்கு தூக்கிட்டு வந்த இளா! நான் இவ்ளோ சொல்றேன். அந்த பிரின்சிபால் மேம், இன்னும் அந்த ஆண்ட்டிக்கெல்லாம் உக்கார இடம் தரேன்னு சொல்லவே இல்ல. நீ ஏன் அதுக்குள்ள என்ன தூக்கிட்டு வந்த? நீயும் நான் செஞ்சது சரி தான்னு அவங்க கிட்ட சொல்லவே இல்லையே!" என்று குதித்துக்கொண்டிருக்க, "நீ செஞ்சது தப்புன்னு அந்த மேம் கூட சொல்லவே இல்ல குட்டி இளா. மேம் நீ சொன்ன மாதிரி, அந்த ஆன்ட்டிக்கெல்லாம் ஓய்வு நேரத்துல உக்கார இடம் குடுப்பாங்க. இப்போ நீ வா. வீட்டுக்குப் போகலாம்" என்றான் மாறன்,

"நான் இந்த இளாவுக்கு ஒரே புள்ள.
இந்த அப்பாவால எனக்குத் தான் ஒரே தொல்லை"


என்று அங்கிருந்த செக்யூரிட்டி இடம் கூற, இவள் சொன்னதற்கும், சொல்லும்போது, இவள் முகம் சென்ற கோலத்தையும் பார்த்து குபீரெனச் சிரித்துவிட்டார் அந்த செக்யூரிட்டி.

"குட்டி இளா! ஒழுங்கா உள்ள வந்து உக்காரு" என்று சற்று அதட்டும் தொனியிலே கூற,

"சாப்பாட்டுல ஒழுங்கா போடத் தெரியாது காரம்.
என்கிட்ட மட்டும் காமிப்பாரு வீரம்!" என்று அந்த செக்யூரிட்டியிடம், மாறனுக்கும் கேட்கும் அளவிற்கு சத்தமாகக் கூறிவிட்டு, மகிழுந்தின் முன் இருக்கையில் வந்து அமர்ந்துகொண்டாள். அவள் சாத்தும்போது, 'டம்'மென அலறிய அந்த கார் கதவு கூறியது, அவள் கோவத்தின் அளவை.


கதவைச் சாத்திவிட்டு, கைகளை இறுக்கமாக வைத்துக்கொண்டு, இதழ்களைக் குவித்து வைத்து, அவனைப் பார்க்காமல் நேராகப் பார்த்து முறைத்துக்கொண்டிருந்தாள்.

"இப்டி மொறச்சிகிட்டு இருந்த... இந்தக் குண்டு கண்ணத்தை கடிச்சி வச்சிடுவன்" என்று அவன் கண்ணத்தை கிள்ள, "ஹ்ஹ்ம்ம்" என்று முகத்தைத் திருப்பிக்கொண்டாள் இளநிலா.

அவளை சமாதானம் செய்ய அவனுக்கா தெரியாது? இல்லை, அவன் சமாதானத்திற்கு மயங்காமல் தான் அவளால் இருந்துவிட முடியுமா!

அவளதிகாரம் நிறைந்த புதினத்தில் சில பக்கங்களில் மட்டுமே துளிர்விடும் அவனதிகாரம் இது.
 
Last edited:

Saroja

Well-Known Member
அருமையான பதிவு
நல்ல கேள்வி
பதில் இருக்கா ஜெசிகா மேம்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top