மை டியர் டே(டெ)டி-1

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
ஹா ஹா ஹா
"ராமலிங்க இசைபாடி நக்கன்"-ங்கிற அழகான பெயரை நக்கி நக்கி ன்னு கூப்பிட்டால் ரய்னா அண்ணனுக்கு கோபம் வரத்தானே செய்யும்
யக்கோவ் இளநிலா யக்கோவ்
மூணு வயசுலேயே எல் கே ஜி படிக்கும் பொழுதே உங்கள் அரிய பெரிய சாதனைகள் என்னை வியப்பில் ஆழ்த்துது, நிலாக்கா
 
Last edited:

Kamali Ayappa

Well-Known Member
ஹா ஹா ஹா
"ராமலிங்க இசைபாடி நக்கன்"-ங்கிற அழகான பெயரை நக்கி நக்கி ன்னு கூப்பிட்டால் ரய்னா அண்ணனுக்கு கோபம் வரத்தானே செய்யும்
யக்கோவ் இளநிலா யக்கோவ்
மூணு வயசுலேயே எல் கே ஜி படிக்கும் பொழுதே உங்கள் அரிய பெரிய சாதனைகள் என்னை வியப்பில் ஆழ்த்துது, நிலாக்கா


நம்ப ரய்னா சார்க்கு கோவம் வருவது நியாயம் தான். ஆனா, நக்கியே பரவால்ல. இப்போ அவரை ரைனோசெரஸ் ஆகிட்டாங்களே!

நம்ப நிலா அக்காவோட அட்டகாசம்லான் இன்னும் சொல்லவே இல்லையே! அதுக்குள்ளேயேவா?

அழகான comment'க்கு நன்றி பானுமா.:love:
 

Hema Guru

Well-Known Member
காலையிலும், மாலையிலும் தன்னை வர்ணித்து கவிகள் புனைவோர் கூட, மதியத்தில் தன்னை கண்டு ஓடுகின்றனர் என்ற கோவமோ என்னவோ அந்த ஆதவனுக்கு! மற்ற நாட்களை விட, இன்று கொஞ்சம் அதிகமாகவே மக்களை வாட்டிக்கொண்டிருந்தான்.

அந்த அனலும் கொதிப்பும் சற்றும் தெரியாமல், கொடைக்கானல் போல குளுகுளுவென இருந்தது, அந்த ஆபிஸ். "உணவு இடைவேளை எப்பொழுது தான் வருமோ!" என்று தன் கணினி திரையிலே மணி ஒரு ஓரத்தில் இருந்தாலும், நொடிக்கு ஒரு முறை, தன் கை கடிகாரத்தை பார்த்துக்கொண்டே காத்திருந்தான் இளமாறன்.

"என்ன சார். என்ன ஆச்சு? ஏதோ எச்.ஐ.வி டெஸ்ட் குடுத்துட்டு, ரிசல்ட்க்கு வெயிட் பண்ற மாதிரி ஒரே பரபரப்பா இருக்கீங்க? என்ன சார் ஆச்சு?" என்று சற்று கேலியாய் கேட்டாலும், மெய்யாகவே ஒன்றும் புரியாமல் தான் கேட்டான் நிஷாந்த்.

"நீ சொல்ற மாதிரி, டெஸ்ட் குடுத்துட்டு ரிசல்ட்காக காத்திருந்தா கூட, இவளோ பரபரப்பா இருக்க மாட்டேன்! அதைவிட முக்கியமான சமாச்சாரம்யா" என்றான் இளமாறன், அதே போல், கை கடிகாரத்தை பார்த்தவாரே.

"அப்படி என்ன சார், சம்சாரம். சாரி சாரி. சமாசாரம்" என்று நிஷாந்த் உலர, "என்ன மேன் நீ! பேசும் போதே ஸ்பெல்லிங் மிஸ்டேக் பண்ணுற? இந்தா இதை எடுத்துக்கோ" என்று தன் மேஜை கீழ் ஒளித்துவைத்துருந்த வேர்க்கடலை பர்பியை எடுத்து நீட்டினான் இளமாறன்.


நிஷாந்த் வினோதமான பார்வை ஒன்றை வீச, "என்ன மேன்? அப்புடி பாக்குற. உனக்கு நான் என்ன கொக்கைனா(cocaine) குடுத்தேன். கடலைமிட்டாய் தான மேன் கொடுக்கறேன்! எடுத்து சாப்பிடு. பசி இருந்தா நீ நீயா இருக்க மாட்ட. இந்தா எடுத்துக்கோ" என்று நீட்ட, "சார். இந்த டயலாக் ஸ்நிக்கர்ஸ் விளம்பரத்தில் இருந்து தான சுட்டுடீங்க?" என்று அவன் சிரித்துக்கொண்டே, கையில் ஒரு கடலை மிட்டாயை எடுத்தான் நிஷாந்த்.

"மெல்லமா பேசுடா. ரைனோசர் வந்துடப்போறான். இப்போ நான் அந்த டயலாக் திருடுனது தான் பிரச்சனையா? அந்த ஸ்நிக்கர்ஸ்காரன் திருட்டு உனக்கு பெருசா தெரியலையா. ஐயோ மணி வேற ஒன்னு ஆக மாட்டுதே!" என்று அவன் ஒரேடியாக கூற, மனதில் மூன்று கேள்விகள் உதிக்க எதை முதலில் கேட்பது என்று தெரியாமல் திக்குமுக்காடினான் நிஷாந்த்.

"சார். எனக்கு மனசுல இப்போ மூணு கேள்வி இருக்கு. எதை முதல்ல கேக்குறது?" என்று கேட்க, "எதை வேணா கேளு. எதை கேட்டாலும் சத்தம் போடாம கேளு மேன்" என்று ஹஸ்கி குரலில் பேசினான் இளமாறன்.

"ஏன் சார் மணி ஒன்னு ஆகணும்? ஒரு மணி ஆகுறதுக்கு எதுக்கு இவ்ளோ ஆவல்?" என்று முதல் கேள்வியை முன்வைக்க, "டேய். நீயெல்லாம் எங்க இருந்துடா வந்த? ஸ்கூல் புள்ளையை கேட்டா கூட தெரியும், ஒரு மணி லஞ்ச் பிரேக். அதுக்கு தான் வெயிட் பண்றேன்" என்றான் இளமாறன்.

"சார். நீங்க டீம் லீடர் சார். என்ன சார், இப்டி பண்றீங்களே சார்" என்று நிஷாந்த் சிரித்துக்கொண்டே கேட்க, "அட எவன் டா இவன். டீம் லீடர்க்கு பசி எடுக்காதா?" என்று கேட்டுக்கொண்டே, கையில் இருந்த வேர்க்கடலை பர்பியை ஒரு கடி கடித்தான் மாறன்.

"சரி அடுத்த கேள்வி. ஸ்நிக்கர்ஸ்காரன் என்ன சார் திருடுனான்?" என்று கேட்க, "ஓஹ் அதுவா. தோ. இந்த கடலைமிட்டாய் இருக்கே. இந்த ரெசிபியை இங்க இருந்து சுட்டுட்டு போயி, அதுல கொஞ்சம் மானே, தேனே, பொன்மானே மாதிரி, கொஞ்சம் கேரமல், சாக்லேட் எல்லாம் சேர்த்து பாக்கெட்ல போட்டு விக்குறான். என்ன இருந்தாலும் உள்ள இருக்க வேர்க்கடலை ஒன்னு தான மேன்!" என்று அதற்கும் அசராமல் விடை அளித்தான்.

"சரி. லாஸ்ட் கேள்வி. யாரு சார் அது ரைனோசர்?" என்று கேட்க, "நம்ப மேனேஜர் ரய்னா சார் தான்" என்றால் அசால்டாக. "என்னது. மேனேஜர் சாரா?" என்று நிஷாந்த் வாயை பிளக்க, "அட ஆமாம் மேன். அந்த சோறு தான்" என்றான்.


நிஷாந்த் இந்த தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் சேர்ந்து ஒரு வாரம் தான் ஆகிறது. இளமாறன் அதே நிறுவனத்தில் டீம் லீடராக பணிபுரிகிறான். மாறனின் டீமில் தான் நிஷாந்த் பணியமர்த்தப்பட, இந்த ஒரு வார காலத்திலே, மாறனை மிகவும் பிடித்துவிட்டது அவனுக்கு. மாறன் அனைவரிடமும் ஜாலியாக பேசுவது ஒரு காரணம் என்றாலும், தனுக்கு கீழ் வேலை செய்பவர்களையும் நண்பர்கள் போல், நடத்துவது தான் முக்கியகாரணம். அதற்காக வேலையில் கோட்டை விடுபவன் அல்ல என்பதையும், இந்த ஒரு வார காலத்தில் நன்கு அறிந்துக்கொண்டான் நிஷாந்த்.


ரய்னா, இவர்களின் ப்ராஜெக்ட் மேனேஜர். வயது நாற்பதை கடந்து நாலு மாதம் ஆகிவிட்டது. ஆனாலும் யூத் என்று எண்ணம். அனைவருக்கும் குடைச்சல் கொடுத்து, ஆஃபிஸில் தான் தான் டெரர் என்று சுத்திவருபவர். அதிலும் நம் மாறனை கண்டால் ஆகவே ஆகாது அவருக்கு. ரய்னா என்றால், ஏதோ வடநாட்டுக்காரர் போல என்று நினைத்துக்கொள்ள வேண்டாம். 'ராமலிங்க இசைபாடி நக்கன்' என்பது தான் அவர் இயற்பெயர். தொடக்கத்தில் பலர் 'நக்கி நக்கி' என்று நிக் நேம் வைத்து அழைத்ததால் கடுப்பானவர், தன் பெயரில் ஆங்காங்கு சில எழுத்துக்களை கொய்து, அவரே செதுக்கியது தான் இந்த புது பெயர் ரய்னா.


"என்னது? நம்ப ப்ராஜெக்ட் மேனேஜர் தான் ரைனோசரா?" என்று மறுபடியும் நிஷாந்த் கேட்க. "அட. ஆமாம் மேன். அந்த மனுஷன் காண்டாமிருகம் மாதிரி ஏதாவது கத்திகிட்டே இருப்பாரு. அப்போ உன் ஆசை தீர, அவரை ரைனோசர்'ன்னு கூப்டுக்கோ. அவரு என்னன்னு கேட்டா, 'உங்க காதுல ரைனோசர்ன்னா கேட்டுது. நான் ரய்னா சார் ன்னு தான கூப்பிட்டேன்னு சொல்லிடு" என்று அவனுக்கு ஐடியா குடுக்க, பலமாக சிரித்துவிட்டான் நிஷாந்த். பலமாக என்றால், அவன் சிரிப்பு சத்தம் கேட்டு, ரய்னாவே வந்துகொண்டிருந்தார்.

"அடேய். ரைனோசர் காமெடி கேட்டு சிரிக்கிற, அது அந்த ரைனோசர்க்கே கேக்குற மாதிரியா சிரிப்ப?" என்று நிஷாந்த்தை கேட்டான் மாறன்.

"அய்யயோ. இப்போ என்ன சார் பண்றது. அந்த ரைனோசர் நம்பள நோக்கி தான் வருது" என்று நிஷாந்த் பதற, "ரிலாக்ஸ் மேன் ரிலாக்ஸ்! இப்படி ஒரு ஆபத்தான மிருகம் உன்னை நோக்கி வரும்போது பயமா தான் இருக்கும். இருந்தாலும், நீ பயப்பட வேணாம்" என்று இவன் சொல்லிக்கொண்டிருக்க, இவர்கள் இடத்திற்கு வந்துவிட்டார் ரய்னா.

"என்ன இங்க சிரிப்பு சத்தம்? வேலை செய்ய வாரீங்களா, இல்லை இப்படி கதை பேசி, சிரிச்சி கும்மாளம் அடிக்க வரீங்களா?" என்று அவர் கத்திக்கொண்டிருக்க, "காண்டாமிருகம் காண்டாகிட்டான். இப்போ நான் எப்படி சரி பன்றேன்னு பாரேன்" என்று மாறன் நிஷாந்த்தின் காதுக்கருகில் சென்று, சிரித்துக்கொண்டே கிசுகிசுக்க, "ஸ்டாப் லாஃபிங் ஐ சே!" என்று கடுப்பாய் கத்தினார் நம் காண்டு காண்டாமிருகம்.

"மிஸ்டர். மாறன். கொஞ்சம் சிரிக்கறதை நிறுத்திட்டு, எதுக்கு சிரிக்கறீங்கன்னு சொல்றீங்களா? சொன்னா நாங்க எல்லாரும் சேர்ந்து சிரிப்போம்ல" என்று கடுப்பாய் கேட்க, "அதை எப்படி நான் உங்க கிட்டயே சொல்லுவேன் சார்" என்று மாறன் கேட்க, "அப்போ என்னை பத்தி தான் பேசிருக்கீங்க? சொல்லுங்க மிஸ்டர்.மாறன் என்ன சொன்னீங்க? எதுக்கு இந்த நிஷாந்த் சிரிச்சாரு?" என்று .கேட்டார்.

"அதுவந்து ரய்னா சார். இந்த நிஷாந்த் பையன் இருக்கான் ல.." என்று தொடங்க, வயிற்றில் புளியை கரைத்தது போல் இருந்தது நிஷாந்த்திற்கு.

"என்ன சார் சொல்றீங்க" என்று நிஷாந்த் மாறனின் கையை சொரிய, "இருங்க நிஷாந்த். நம்ப ரய்னா சார் கிட்ட இருந்து எதுவும் மறைக்க முடியாது. சொல்லி தான் ஆகணும்" என்று சொல்லிவிட்டு, "நம்ப நிஷாந்த் என்ன சொன்னாருன்னா. 'நம்ப ரய்னா சார் இருக்காரே! அவர் எப்படி சார் இந்த வயசுலயும் இவ்ளோ செமயா பாடி மைண்டைன் பன்றாரு? நம்ப ஆஃபீஸ்ல, இத்தனை எங் மென் இருக்கோம், ஆனாலும் இந்த பொண்ணுங்களாம் நம்ப ரய்னா சாரை தான் சைட் அடிக்கறாங்க'ன்னு சொன்னாரு! அதுக்கு நான் சொன்னேன், 'அதென்ன பெரிய விஷயம்? நானும் தான் அந்த வயசுல ஃபிட்டாக இருப்பேன். நீ வேணும்னா பாரு'ன்னு சொன்னேன். அதுக்கு இந்த நிஷாந்த் என்ன தெரியுமா சொன்னாரு? 'என்னது? நீங்களா? நம்ப ரய்னா சார் மாதிரி 60 வயசுல இவ்வளோ ஃபிட்டாகவா? வாய்ப்பே இல்ல. அவரை பாருங்க சார். 20 வயசுல கால சக்கரத்தை நிறுத்தின மாதிரி, இந்த வயசுலயும் எவ்ளோ எங் அண்ட் ஹாண்ட்சமா இருக்கார். நீங்க அப்டிலாம் இருக்க சான்சே இல்ல' அப்புடின்னு சொல்லி இப்டி சிரிக்கறாரு சார்" என்று தங்கு தடையே இல்லாமல் ரீல் விட்டான் மாறன்.


அதை கேட்டதும் உச்சி குளிர்ந்துவிட்டது நம்ப ரைனோசர்க்கு. அவன் பேச்சுவாக்கில் 20 வயதை கூட்டியதை கூட கவனிக்க மறந்தார். புகழ்ச்சி கண்ணை தான் மறைக்குமென்று சொல்வார்கள். புகழ்ச்சி காதையும் அடைக்கும் என்று நம்ப ரைனோசரை பார்த்து தெரிந்துக்கொள்ள வேண்டும் நாம். அவர் புகழ்போதையில் தன்னை மறந்து நின்றுகொண்டிருக்க, அவர் பின்னால் யாருடையோ குரலோ கேட்டது.

"டேய் மாறா. லஞ்ச் டைம் ஆகிடுச்சு. வாடா சாப்பிட போகலாம். அப்புறம் நேத்து வடை எடுத்துனு வந்தியே. அதுல பருப்பே வேகலை டா. ஒரே நூல் நூலா வந்துச்சு டா மச்சான்" என்று பின்னால் இருந்து அழைத்தான் மாறனின் சக ஊழியன் கிருபா.

அதை கேட்டதும் ரய்னா, "என்னது? வடையா? நூலா? என்ன சொல்லுறாரு கிருபா?" என்று பதற, "சார். நீங்க டென்ஷன் ஆகாதீங்க. அவன் நேத்து கொண்டு வந்த வடையை பத்தி சொல்லுறான். இந்தாங்க. இன்னைக்கு வேற கடைல வடை வாங்கி வந்தேன். இதுல பருப்பு நல்லா வெந்திருக்கும்" என்று சொல்லிவிட்டு கிருபாவுடனும், நிஷாந்த்துடனும் சாப்பிட சென்றான் மாறன்.

"ஏன் டா. நூலு வடைன்னு அந்த மனுஷனை கொழப்புற?" என்று மாறன் கேட்க, "நீ பாட்டுக்கு இஷ்டத்துக்கு கதை விட்டா? " என்று பதிலுக்கு கேட்டான் கிருபா, "நீ சொல்றதுல ஒரு நியாயம் இருக்கு தான். பாக்குறதுக்கு நசுங்கி போன லாரி சக்கரம் மாதிரி இருக்கிறவரை, 20 வயசுல கால சக்கரம் நின்ன மாதிரி இருக்குன்னு சொன்னா தாங்க முடியாது தான்" என்று அவர்கள் பேசிக்கொண்டே சாப்பிட போய்விட்டனர். ஆனால், பாவம் நம் ரய்னா சார். இவர்கள் தன்னை கலாய்ப்பது கூட புரியாமல் விழித்துக்கொண்டிருந்தார்.


டைனிங் ஹால்க்கு சென்று, மாறன் அவன் டிப்பன் பாக்ஸை திறக்க, அதில் தயிர் சாதம் சிரித்துக்கொண்டிருந்தது.

ஆம். தயிர் சாதம் மேல், கேரட், மிளகாய் எல்லாம், ஒரு ஸ்மைலி வடிவில் அடுக்கிவைக்கப் பட்டிருந்தது.

"என்ன மாறா இது? தயிர் சாதம் சிரிக்குது?" என்று கிருபா கேட்க, "அது...இந்த குட்டி இளா பண்ண வேலை" என்று புன்னகையுடன் கூற, ஒரு நிமிடம் அந்த ஸ்மைலியை பார்த்ததும் அகக்கண்ணில் தோன்றி மறைந்தது, பூவாய் சிரிக்கும், அவன் மகள் இளநிலாவின் முகம்.


இளநிலாவை நினைத்த அடுத்த நொடியே, அவன் அலைபேசி அலறியது. திரையில் தெரிந்ததோ, நிலாவின் பிரின்சிபால் நம்பர். அதை பார்த்ததும், ஐயோ அம்மா என்று அலறியது அவன் மனம்.

தன் மகளுக்கு ஏதாவது ஆகியிருக்குமோ! என்று அலறவேண்டிய தந்தை மனம், இங்கோ நேர்மாறாக, தன் மகளால் யாருக்கும் ஏதாவது ஆகியிருக்குமோ? என்று அலறியது. அவள் மகள் செய்யும் அலப்பறைகள் அப்படி.

எல்.கே.ஜி சேர்ந்து மூன்று மாதங்கள் தான் ஆகிறது. அனால், மாதத்திற்கு நான்கு முறை, மாறனுக்கு அந்த பள்ளி ப்ரின்சிபாலின் ஸ்பெஷல் தரிசனம் கிடைத்துவிடும். எல்லாம் இவன் குட்டி இளா செய்யும் வேலைகள் தான்.

"இன்னைக்கு என்ன பண்ணி வச்சாளோ!" என்று யோசித்துக்கொண்டே அலைபேசியை உயிர்ப்பித்தான்.







Enna pannaa'nnu next epi la paapom! Comments please..
Kalakkal epi. Kutty ilakaaga waiting. Reinoser semma name
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top