மையல் கொண்டேன் - 4

Advertisement

nalini sri. p

Writers Team
Tamil Novel Writer
மையல் – 4

வழக்கம் போல் அலுவலகம் செல்ல தயாராகி நிகாவின் புகைபடத்துடன் பேசி கொண்டிருந்தான் சூர்யா அவனை கண்ட மித்ரன் “இப்படியே போட்டோ கூடவே குடும்பம் நடத்துடா அண்ணா அவளிடம் பேசிடாதே”

டேய் நான் ஒரு போலீஸ் டா அதுக்காவது கொஞ்சம் மரியாதையை குடுடா

ஹலோ பிரதர் நீங்க போலீசா இருந்துகோங்க ஆனா வருவிடம் உங்களுடைய செய்கைகள் பலிக்காது சீக்கிரம் அவளை சமாதான படுத்தற வழியை பாருங்க

அது எனக்கு தெரியும் நீ உன்னுடைய வேலையை பாரு

சூர்யா பணியில் சேர்ந்து ஒரு வாரம் கடந்திருந்தது அவனும் இங்கு உள்ள பகுதிகளில் எந்த இடத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டும் எனவும் அங்கு யாரை கவனமாக கண்காணிக்க வேண்டும் என அனைத்தையும் அறிந்து கொண்டான் அவனுக்கு துணையாக வேந்தனும், யாழினியும் அனைத்தையும் கூறினார்

இன்று ஆச்சியர் அலுவலகத்தில் மீட்டிங் உள்ளதால் காலையில் தயாராகி நீகாவின் போட்டோவை பார்த்து அதை பற்றியே கூறினான் “நான் இன்று செந்தமிழ் அம்மாவை பார்க்க போறேன் நிகா அவங்களும் என்மீது கோவமாக இருக்காங்களா என தெரியவில்லை ஆனால் நான் அலுவலக மீட்டிங் தொடர்பாகவே செல்கிறேன் இருந்தாலும் ஒரு சின்ன தயக்கம்” என பேசிகொண்டிருக்கும் போதுதான் மித்ரன் வந்தது அதை நினைத்து கொண்டே ஆச்சியர் அலுவலகத்தை அடைந்து தன்னுடைய காவல்துறை வாகனத்தில் இருந்து இறங்கினான்

நடைபெறும் மீட்டிங்கில் கமிஷனர்,ஆச்சியர் தமிழ்,சூர்யநிலவன் மட்டுமே இருந்தனர் உள்ளே சென்ற சூர்யா கமிஷனர்,ஆச்சியருக்கு தன்னுடைய வணக்கத்தை தெரிவித்து கொண்டு அருகில் உள்ள இருக்கையில் அமர்ந்தான்

ஆச்சியர் “இப்பொழுது வந்திருக்கும் இந்த பிரச்சனையால் மக்கள் அதிகளவில் பாதிக்க பட்டிருக்காங்க இதை எப்படி சரி செய்வது இதற்கு காரணமானவர்களை எப்படி கண்டுபிடிப்பது”

கமிஷனர் “அதற்காக நான் சூர்யாவை வரவழைத்தேன் மேம் அவர் இதை திறம்பட முடிப்பார் என எண்ணுகிறேன் இவருடைய ரெக்கார்டில் இவர் எடுத்த அனைத்து வழக்குகளையும் வெற்றிகரமாக முடித்துள்ளார் இதையும் முடிப்பார் என நம்புகிறேன்”

சூர்யா “என்ன பிரச்சனை சார் எதுவாக இருந்தாலும் என்னுடைய கடமையை நான் சரியாக செய்வேன்”

கமிஷனர் “இப்பொழுது புதிதாக ஆன்லைனில் சூதாட்டம் அதிக அளவில் நடந்து கொண்டிருக்கிறது சூர்யா நீங்கள் புதிதாக வந்துள்ளதால் அதை பற்றி உங்களுக்கு தெரிய வாய்ப்பில்லை”

ஆச்சியர் “இந்த சூதாட்டத்தால் நிறைய நடுத்தர வர்க்கமும் கூலி வேலை செய்பவர்களும் பாதிக்க பட்டுள்ளனர் தற்போது இவை மிக அதிகளவில் நடப்பதாக தகவல் வந்துள்ளது இதன் பின்னணியில் யார் செயல் படுகின்றனர் என தெரிந்து அவர்களை ஒடுக்க வேண்டும் இதனால் சிலர் குடும்பத்துடன் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்”

கமிஷனர் “இந்த கேசை உன்னிடம் ஒப்படிக்கவே வர சொன்னேன் இதன் பின்னே யார் செயல் படுகின்றனர் என தெரியவேண்டும் அதோடு உனக்கு இன்னுமொரு கேசையும் கொடுக்க உள்ளேன் இதை இரண்டையும் நீயே நேரடியாக விசாரித்து அவர்களை கண்டு பிடிக்கவேண்டும் உனக்கு உதவியாக வேந்தனையும், யாழினியும் இருப்பார்கள்”

சூர்யா “இன்னொரு வழக்கு என்ன சார்”

கமிஷனர் “சிட்டியில் காலேஜ் படிக்கிற பெண்கள்,வேலைக்கு செல்லும் பெண்கள் என சில பேர் காணாமல் சென்று உள்ளனர் அதில் நமக்கு புகார் வந்த சிலவற்றில் இரண்டு பெண்களின் சடலம் மட்டுமே நமக்கு கிடைத்துள்ளது அதுவும் மீக போசமான நிலையில் இதை பற்றி நம்முடைய துறையில் கூட நிறைய பேர்க்கு தெரியாது இப்பொழுது அதிக அளவில் இது போன்ற சம்பவங்கள் நடந்து வருகிறது இதை நீங்க ரகசிய விசாரணை செய்து குற்றவாலியை கண்டு பிடிக்க வேண்டும்”

ஆச்சியர் “இதன் பின்னணியில் நிறைய பேரும் புள்ளிகள் சம்மந்த பட்டுள்ளதாக தகவல் வந்துள்ளது அதனால் எவ்வளவு விரைவாக முடியுமோ அவ்வளவு விரைவில் இந்த வழக்கை முடிக்க பாருங்கள்”

சூர்யா “கண்டிப்பாக என்னால் முடிந்த அளவு விரைவாக முடிக்கின்றேன் மேம்”

ஆச்சியர் “ஓகே நீங்க கிளம்பலாம் கமிஷனர் சார் சூர்யா நீங்க இருங்கள் உங்களிடம் கொஞ்சம் பேச வேண்டும்”

கமிஷனர் அவ்விடத்தை விட்டு நகர்ந்ததும் “என்ன சூர்யா என்னை உனக்கு அடையலாம் தெரிகிறாதா ஏன் கேட்டேன் என்றால் மனைவியையே அடையலாம் தெரியல இதில் அவளுடைய அத்தையை எங்கே தெரிய போகிறது அதற்கு கேட்டேன்”

தமிழ்மா நீங்களும் இப்படி பேசுகிறிர்கள் அவள் புரியாமல் பேசுகிறாள் என்றால் நீங்களும் என்னை நோகடிகிறீங்க அவளை பார்த்தும் பார்க்காதது போல் சென்றது தவறுதான் ஆனால் நான் பேசி இருந்தாலும் உங்களுடைய மருமகள் அப்படியே என்னுடன் கிளம்பி வந்திருப்பாள் பாருங்க எப்படியும் நான் அப்பொழுது பேசி இருந்தால் இன்னும் அதிகமாக முறுக்கி கொள்வாள் இப்பொழுது பாருங்கள் நான் கண்டு கொள்ளாமல் வந்ததால் என்னை பற்றியே நினைப்பாள் ஏன் அப்படி செய்தான் என்று இதையே நினைத்து என்னுடைய எண்ணங்கள் அதிகமாக அவளில் இடம்பெரும் அப்பொழுது அவளுடைய கோவம் கொஞ்சம் குறையும்

அது சரி போலீஸ் முளை பயங்கரமா வேலை செய்கிறது போல நீயும் இந்த ஐந்து வருடத்தில் நிறைய மாறிவிட்டாய் பார்ப்போம் நீங்கள் இருவரும் எப்பொழுது சமாதானம் ஆகுறிங்கள் என்று. அப்புறம் இந்த கேஸ் விசியமாக என்ன தகவல் கிடைத்தாலும் உடனே தெரிய படுத்து

அலுவலகம் விட்டு வெளியே வரவும் சூர்யாவின் போன் ஒலிக்கவும் சரியாக இருந்தது எடுத்து யார் என பார்த்தால் சித்து என திரையில் மின்ன அதை ஏற்று காதில் வைக்க இவன் ஆன் செய்தவுடன் அந்த புறம் இருந்த சித்து சூர்யாவை பேசவே விடாமல் ஏன்டா புருசனும்,பொண்டாட்டியும் சேர்ந்து என்னை பாடா படுத்துறீங்கள் ஒரு மனுசனை நிம்மதியா இருக்கவே விட மாட்டிர்களா

சென்னை வந்தவுடன் நீயே சென்று உன்னுடைய பொண்டாட்டியை பார்க்க வேண்டியது தானே எனக்கு போன் செய்து வந்ததை சொல்லி அவளிடம் சொல்ல வேண்டாம் நானே பார்த்து கொள்கிறேன் என கூறிவிட்டு அவளை பார்த்தும் பேசாமல் இருந்துள்ளாய் நீ வந்ததை ஏன் என்னிடம் சொல்லவில்லை என்று என்னை போட்டு வருத்தேடுக்கிறா இதில் இந்த அத்தை வேறு நீயும்,வருவும் சேர்ந்து என்னுடைய திருமணத்தில் இருக்க வேண்டுமாம் அதனால் எனக்கும்,என்னுடைய சுஜி குட்டிக்கும் இப்பொழுது திருமணம் என்ற பேச்சிக்கே இடமில்லை என சொல்லிவிட்டாங்க அம்மா-அப்பாவை பேச சொன்னால் அத்தை சம்மதம் முக்கியம் என்றுவிட்டார்கள்

நல்லா வருவடா நீ, புருஷனும் பொண்டாட்டியும் வச்சு செய்றிங்க இதில் ஒன்னும் தெரியாத அப்பாவி மித்ரனை வேற மாட்டிவிட்டிருக்க இது இப்ப அவளுக்கு தெரிந்து அவன் மாட்ட போகிறானோ தெரியவில்லை

சித்து நான் சொல்வதை முதலில் கேள் எல்லாம் இன்னும் சிறிது காலம் மட்டுமே அதற்குள் அனைத்தையும் சரி செய்கிறேன் உன்னுடைய திருமணத்தை பற்றியும் தமிழ்மா விடம் பேசுகிறேன்

நீ ஒன்றும் பேச வேண்டாம் முதலில் வருவை சமாதான படுத்த வழியை பார் அதை செய்தாலே என்னுடைய திருமணம் தானாக நடக்கும் சரி வைக்கிறேன் பிறகு பெசிகொள்ளலாம்

சித்து போனை வைத்தது அலுவலகம் நோக்கி சென்றான். அலுவலகத்தை அடைந்ததும் வேந்தனையும்,யாழினியும் அழைத்து பேசினான்

வேந்தன் நீங்க எந்த எந்த ஏரியாவில் ஆன்லைன் சூதாட்டம் அதிகமாக நடக்கிறது என்ற தகவல்களை சேகரியுங்கள் அதோடு அந்த ஏரியாவில் யார் அதை செய்கிறார்கள் என்ற விவரமும் வேண்டும் இன்னும் இரண்டு நாட்களுக்குள் நான் கேட்ட விவரங்கள் என்னிடம் வரவேண்டும்

யாழினி நீங்க பெண்கள் காணமல் சென்ற வழக்கில் இரண்டு பெண்கள் சடலம் நமக்கு கிடைத்து உள்ளது தானே அதன் பாரன்சிக் அறிக்கையை சேகரியுங்கள் இன்னும் அனைத்து காவல் நிலையங்களில் எத்தனை பெண்கள் காணமல் போனதாக வழக்கு பதிவாகி உள்ளது என்கிற விவரங்களையும் சேகரியுங்கள் என கட்டளைகளை பிறப்பித்தான்

அன்று இரவு நேர ரோந்து பணியில் இடுபட்டிருந்தான் சூர்யா அவனுடன் வேந்தனும் ஜிப் ஓட்டும் பீட்டர் என்பவரும் உடனிருந்தனர் எப்பொழுதும் போல் இரவு வேலையில் வரும் வாகனங்களை நிறுத்தி சோதனை இட்டனர் நேரம் இரவு 12 மணியை நெருங்க மகப்பேறு அதிகம் இருந்ததால் உடன் இருக்கும் மருத்துவருக்கு உதவி செய்து தாமதமாகவே கிளம்பினாள் வரு


 

nalini sri. p

Writers Team
Tamil Novel Writer
முகத்தை சாலினால் மறைத்து கண்கள் தெரியுமாறு காட்டி கொண்டு ஹெல்மெட் அணிந்து கொண்டு வண்டியில் வந்து கொண்டிருந்தாள் இரவு அதிக நேரமாகி விட்டதால் இவள் தனியாக வண்டி ஓட்டி கொண்டு வரவும் அவளை நிறுத்தினார் பீட்டர்

வண்டியை நிறுத்திய பீட்டரிடம் என்ன சார் எதற்கு நிறுத்த சொன்னிர்கள் என வரு வினவ அவர் “வாகன உரிமம், வாகன ஒட்டிகான உரிமம்,கப்புரிமாம் கேட்கவும் அனைத்தையும் கண்பிக்க அதற்குள் வேந்தன் அவ்விடம் வந்து இந்த நேரத்தில் எங்கு செல்கிறீர்கள் என வினவ

ஏன் சார் ஒரு பொண்ணு இந்த நேரத்தில் எங்கும் செல்ல கூடாது என சட்டம் இருக்கிறதா அப்படி இருப்பது போல் நான் கேள்வி படவில்லையே

மேடம் கேட்டதற்கு மட்டும் பதில் கூறுங்கள் பெண் தனியாக இந்த நேரத்தில் வண்டி ஓட்டிக்கொண்டு வருவதால் உங்களுடைய பாதுகப்பிற்கே கேட்டேன் அதனால் அதற்கு மட்டும் பதில் பேசுங்கள் தேவயில்லாமல் பேச வேண்டாம்

ஏன் ஆண்கள் மட்டும் எப்பொழுது வேண்டுமானாலும் எங்கு வேண்டுமானாலும் செல்லலாம் ஆனால் ஒரு பெண் அவசியத்திற்கு கூட இரவில் வெளியில் செல்ல கூடாது அப்படி தானே என்று கேள்வி தொடுக்க

மேடம் அதிகம் பேசாதீர்கள் முதலில் ஹெல்மெட்டை கழற்றுங்கள் இவர்கள் வாக்குவாதத்தை பார்த்து அங்கு வந்த சூர்யா என்ன பிரச்சனை

சார் இவங்கள் கேட்டதற்கு சரியாக பதில் சொல்ல மாட்டேன் என்கிறார்கள் சூர்யா கோவத்துடன் என்ன மேடம் கேள்வி கேட்டால் சரியாக பதில் கூற மாட்டீர்களா இந்த நடு இரவில் எங்கு சென்றுகொண்டிருகிற்கள் முதலில் தலை கவசத்தை அகற்றுங்கள்

சூர்யா பேச தன்னுடைய ஹெல்மெட்டை கழட்டிவிட்டு முகத்தில் உள்ள துணியை நீக்க வேந்தனோ அவளின் முகம் பார்த்து அட ஜான்சிராணி அதுதேனே பார்த்தேன் போலீசிடம் யார் இவ்வளவு குரலை உயர்த்தி பேசுவது என்று இன்று என்ன சாகசம் செய்ய போகிறார்களோ பார்ப்போம் மனதில் நினைக்க

முகத்தில் அணிந்திருந்த துணியை விளக்கி சூர்யாவை பார்த்து முறைத்து கொண்டே எங்கே செல்கிறேன் என அவசியம் சொல்ல வேண்டுமா என பற்களை கடித்து கொண்டு வினவ

சூர்யாவோ தன்னுடைய நிகாவை பார்த்த மகிழ்ச்சியில் பேச்சின்றி நிற்க அவளின் பேச்சில் தன்னிலை உணர்ந்து நீங்கள் கிளம்புங்கள் என்றான்

வரு முகத்தை இறுக்கமாக வைத்து கொண்டு இப்பொழுது கூட என்னிடம் பேச மாட்டாய் அப்படி தானே என அழுத்தமாக ஒரு பார்வை பார்த்து கிளம்பினாள்

அப்பா என்ன முறைப்பு இவள் கண்ணில் கட்டும் பவனைக்கே இவளை இன்னும் வேறுப்பெற்றலாம் போல உன்னுடைய இந்த தைரியம்,உன்னுடைய குறும்பு, கண்களில் காட்டும் வர்ண ஜலங்களுக்கும் என்னை முழுவதுமாக உன்பக்கம் கவர்ந்தது l love u நிகா என மனதில் கூற அது அவளுக்கு கேட்டதோ என்னமோ கண்களில் காதல் வழிய இவனை திரும்பி பார்த்து சென்றாள்

பீட்டரிடம் அந்த பெண்ணை தொடருங்கள் என கூறி ஜிப்பில் அமர்ந்தான் வேந்தனும் விரைந்து ஏறிக்கொள்ள பீட்டர் அவளை தொடர்ந்தான்

வரு வீட்டை அடைய அவள் உள்ளே செல்லும் வரை பார்த்து விட்டு ஜிப்பை திருப்புங்கள் என கட்டளையிட்டான் வேந்தனோ “சார் இது கலெக்டர் மேம் வீடு”

ம் என்றான் சூர்யா அதன் பின் எதுவும் பேசவில்லை இவங்கள் கலெக்டர் மேடம் பெண்ணோ அதனால் தைரியமாக தவறை தட்டி கேட்கிறாங்கள் போல என வேந்தன் நினைத்து கொண்டான்

வருவிற்கு சூர்யா அவளை தொடர்த்து வருவது தெரிந்தே இருந்தது தன் வீட்டில் வண்டியை நிறுத்தி இறங்கி சூர்யாவை பார்த்து கண்ணில் காதலுடன் l love u நிலவா என வாயசைத்து உச்சரித்தாள்

மையல் தொடரும்.........................

Hai friends next updateவுடன் வந்து விட்டேன் படித்து உங்களின் கருத்துகளை கூறுங்கள் அதை அறிந்து கொள்ள நானும் ஆவலுடன் உள்ளேன்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top