மையல் கொண்டேன் - 3

Advertisement

nalini sri. p

Writers Team
Tamil Novel Writer
மையல் – 3

கடற்கரை ரோட்டில் அமைந்துள்ள அந்த பல வீடுகளுக்கு மத்தியில் அமைந்துள்ளது வருனிகாவின் வீடு அதை வீடு என சொல்வதை விட குட்டி மளிகை என்றே சொல்லலாம் மூன்று தளங்களை கொண்டது தரை தளத்தில் பெரிய லான் அதோடு சமையலறை, பூஜையறை, மேலும் நான்கு அறைகளும் உள்ளது அதில் இரண்டு விருந்தினர் அறை, மற்ற இரண்டும் வருனியின் பெற்றோர் மற்றும் அவளின் அத்தை-மாமா அறைகள்

முதல் தளத்தில் ஒரு பெரிய அறை அதனுள்ளே இடது பக்கத்தில் ஒரு அறையும் அதன் அருகில் உடை மற்றும் அறையும்,வலது பக்கத்தில் அலுவலக அறையும் அதன் பால்கனியும் அமைந்துள்ளது இதுவே சித்தார்த்தின் அறை,அந்த அறையின் அருகே ஹோம் தேட்டருடன் கூடிய அறையும் அதன் அருகில் நவீன கருவிகளை கொண்ட உடற்பயிற்சி கூடமும் அதை தொடர்ந்து நீச்சல் குளமும் அமைக்க பட்டுள்ளது இதே போலவே வருனியின் அறையும் இரண்டாம் தளத்தில் அமைந்துள்ளது அதை தவிர இரண்டாம் தளத்தில் இதை போலவே மற்றோரும் அறையும் உண்டு அது சுஜிதாவினுடையது

அந்த வீட்டை சுற்றி தோட்டம் அமைக்கபட்டு அது அங்கு வேலை செய்யும் மணி என்பவரால் பராமரிக்க படுகிறது அந்த தோட்டத்தின் நடுவே அழகான குடை போன்ற அமைப்பில் சிமண்டினால் ஆனா மேல் குடாரமும் கீழே வட்ட வடிவில் இருக்கைகள் அமைக்க பட்டிருந்தது அதன் அருகே பெரிய மரமும் அதில் அழகிய வேலை பாடுகளுடன் கூடிய ஊஞ்சல் கட்டபட்டிருந்தது

தோட்டத்தின் அழகை எப்பொழுதும் காலைவேளையில் ரசிக்கும் சுஜிதா இன்றும் அங்கு அமைந்தள்ள சிமென்ட் தளத்தில் அமர்ந்து கொண்டு தன்னுடைய பெற்றோர் மற்றும் அத்தை-மாமா சேர்ந்து இப்படி எவ்வளவு அருமையாக அனைவருக்கும் போருந்தும்மாரும் அனைவரும் ஒன்றாக இணைக்குமாறும் வீட்டை அமைத்துள்ளனர் என எண்ணி கொண்டிருக்க அவளது என்னத்தை கலைக்கும்படி வீட்டின் உள்ளிருந்து சித்தார்த்தின் குரல் கேட்ட என்ன என பார்க்க உள்ளே சென்றாள் அதற்கு முன் அங்கு உள்ளவர்கள் பற்றி பார்ப்போம்

வேதாச்சலம்,வெற்றிசெல்வன் இருவரும் நண்பர்கள் அவர்கள் இருவரும் இணைந்து IT solusion என்ற கம்பனியை நடத்தி வருகின்றனர். வேதாசலத்தின் மனைவி தரணிகா சென்னையின் பிரபல வழக்கறிஞர் தற்போது தன்னுடைய வழக்கறிஞர் தொழிலில் இருந்து விலகி வன்முறையால் பாதிக்க பட்ட பெண்களுக்காக ஒரு இல்லத்தை நடத்திவருகிறார்

வேதாச்சலம்-தரணிகா தம்பதியருக்கு இரண்டு பிள்ளைகள் முதலாமவன் சித்தார்த் எகோனோமிக்ஸ் படித்து சேர்மார்க்கட்டில் கொடிகட்டி பார்ப்பவன் அதனுடனே பல மால்களை கட்டி அதையும் பார்த்து கொள்கிறான் சூர்யநிலவனின் ஆருயிர் நண்பன். இரண்டாவது நம்முடைய நாயகி வருணிகா MBBS கடைசி வருட ஹவுஸ் சர்ஜன் பயில்கிறாள்

வெற்றி செல்வனின் மனைவி செந்தமிழ்செல்வி IAS, சென்னையின் மாவட்ட ஆச்சியராக உள்ளார் இவர்களுக்கு ஒரே ஒரு புதல்வி சுஜிதா. இவள் பி.இ கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்து விட்டு தங்களது கம்பனியிலே பணிபுரிகிறாள் சித்தார்த்தும், இவளும் ஒருவரை ஓருவர் விரும்புகின்றனர் அது இவர்களின் குடும்பத்திற்கும் தெரியும் கூடிய விரைவில் இவர்களின் திருமணம் நடக்க உள்ளது

(சரி வாங்க சித்தார்த் எதற்கு கத்தி கொண்டிருந்தான் என பார்க்கலாம்)

சித்து அம்மா,அம்மா என கத்திகொண்டே இடுப்பில் துண்டை மட்டும் கட்டிக்கொண்டு தனது அறையில் இருந்து கீழே வந்தான், வெளியில் இருந்து உள்ளே வந்த சுஜியும் அவன்னின் கோலத்தைபார்த்து வெக்கபட்டு கொண்டே எதற்கு அத்தான் இந்த கோலத்தில் வந்து நிற்கிறாய்

சித்து “வாடி என் அத்தை பெத்த மவளே இப்படி வந்து நிற்கணும் என ஆசை பாரு இதுவெல்லாம் உங்க வேலைதானா எங்கடி என்னுடைய ட்ரெஸ் எல்லாம்”

சுஜி “எனக்கு தெரியாது அத்தான்”

சும்மா மனுசனை கடுப்பேத்தாம என்னுடைய ட்ரெஸ் என்ன என்று சொல்லு எப்படியும் நீயும்,அவளும் சேர்ந்துதான் இந்த வேலையை பார்த்திருபீங்க எனக்கு இன்று முக்கியமான மீட்டிங் இருக்கு சீக்கிரம் போகணும் please சுஜி என கோவத்தில் ஆரம்பித்து கெஞ்சலில் முடித்தான்

எனக்கு உண்மையா தெரியாதது அத்தான்

இவர்கள் பேசி கொண்டிருக்க சமையல் அறையில் இன்று மெனுவை சொல்லிவிட்டு வந்த தரணிகா சித்து இருக்கும் நிலையை பார்த்து டேய் என்னடா கோலம் இது வயது பொண்ணு இருக்க இடத்தில் இப்படிதான் வந்து நிற்ப்பியா

சித்து திருப்பி தன்னுடைய அன்னையிடம் சன்ன்டையிட ஆரம்பித்தான் “ஆமா எனக்கு மட்டும் இப்படி வந்து நிக்க வேண்டுதால் பாருங்க ஏன் மா நீ வேரா, என்னுடைய ட்ரெஸ் ஒன்னுகுட என்னுடைய அறையில் இல்லை இவளை கேட்டாள் எனக்கு தெரியாது என சாதிக்கிறா அப்ப என்னுடையது எல்லாம் எங்கே போச்சு”

இவர்களின் பேச்சை கேட்டு வந்த செந்தமிழ்செல்வி என்ன சித்து இதை இவள் செய்ய வில்லையென்றால் வரு செய்திருப்பா பாரு அவளைத்தான் காணவில்லை

தரணி “உங்களுக்கு இதுவே பொழப்ப போச்சு இன்னொருமுறை இதுமாதிரி எதுகாவது வாங்க தொலைச்சி கட்டிடுவேன்”

தமிழ் “நீ வா சித்து அவள் எப்படியும் நீச்சல் குளத்தின் அருகில் இருப்பாள் நான் வாங்கி தருகிறேன்”

இருவரும் வருணிகா இருக்கும் இடத்தை அடைய அவளோ நான் எதுவுமே செய்யவில்லை என்பது போல் அமைதியா நீச்சல்குளம் அருகில் உள்ள இருக்கைகளில் அமர்ந்து போனில் முழ்கியிருந்தாள்

அதை கண்ட சித்து கோவம்கொண்டு அவளின் முன்னே நின்று எங்க என்னுடைய ட்ரெஸ் என்றான்

வருவோ அவனை நிமிர்ந்து பார்த்துவிட்டு மீண்டும் போனை பார்க்க தொடங்க தமிழோ “வரு பாவம்டா உங்க அண்ணன் இன்று முக்கியமான மீட்டிக் வேற இருக்காம் குடுத்திடுடா”

நீங்க இரண்டு பேரும் செய்த வேலைக்கு உங்களையும் வைத்து செய்திருப்பேன் சரி நம்ப கலெக்டர் ஆச்சே சும்மா விடுறேன்

என்ன செய்தோம் வரு நீ இவ்வளவு கோவமாக பேசுற இருவரும் சேர்ந்து வினவ

அவர் வந்ததை ஏன் என்னிடம் நீங்க சொல்லவில்லை எப்படியும் அவங்க வந்ததும் அண்ணாவுக்கு சொல்லிருப்பாங்க நீங்க தான் இந்த மாவட்டத்தின் ஆச்சியர் உங்களுக்கும் தெரிந்திருக்கும் இரண்டு பேருமே என்கிட்ட இருந்து மறைத்து விட்டிர்கள் இல்ல என ஆட்ற்றமையோடு வினவ

சித்துவோ “எம்மா தாயி உன்னுடைய புருஷன் வந்ததை சொல்லவில்லை என்றுதான் இந்த ஆட்டம் கட்டினியா என்னால் முடியவில்லை உன்னையும் அவனையும் வைத்து கொண்டு அவன் என்ன என்றால் நான் வந்ததை சொல்லாதே நானே அவளை பார்க்கிறேன் என்கிறான் இவள் என்ன என்றால் அவன் வந்ததை சொல்லவில்லை என என்னிடம் எகுருகிறாள்”

தமிழோ “சித்து சும்மா இரு, வரு உன்னுடைய அவர் வந்தது எனக்கு தெரியும் நான் உனக்கு சுப்ரைஸ்ஸா சூர்யாவை நேரில் கட்டலாம் என நினைத்தேன்”

அத்தை நீங்கள் கலெக்டர் எனவெளியில் சொல்லிடாதிங்க வெளியில் மட்டும் ரொம்ப கண்டிப்பான ஆச்சியர் என பேரு வீட்டில் நீங்க கொடுக்கிற செல்லத்தில்தான் இவள் இப்படியெல்லாம் செய்கிறாள்

போடா நீ முதலில் இங்கிருந்து

ஆமா ஏதாவது சொன்னால் என்னை முதலில் துரத்துங்க என்னுடைய ட்ரெஸ் வாங்கிகொடுத்து அப்புறம் உட்கார்ந்து அத்தையும் மருமகளும் கொஞ்சுங்க எனக்கு என்ன வந்தது

வரு அவனுடையதை கொடுத்து அவனை முதலில் அனுப்புமா நாம பேசிக்கலாம்

சித்து தன்னுடைய உடமைகளை வாங்கி செல்ல தமிழ் “வரு அவரை பார்த்தியா ஏதாவது பேசினியா”

காலேஜ் போகுமோது பார்த்தேன் அவர் என்னை தெரிந்த மாதிரி காட்டி கொள்ளவே இல்லை என நேற்று நடந்ததை விவரித்தாள் தனது அத்தையிடம், நாயமாக பார்த்தால் நான்தான் அவர் மேல கோவ படனும் ஆனால் அவர் என்னை பார்த்தும் தெரியாதது போல் நடந்து கொள்கிறார்.

சரி விடு வரு எங்க போயிட போறான் இங்கதானே இனி இருக்க போறான் பார்த்துகொள்ளலாம் விடு நீ முதலில் ரெடி ஆகி வா சாப்பிடலாம் நாம ரொம்ப நேரமா இங்கே இருக்கோம் தரு மேல வந்தால் என்றால் என்னஏது என துருவி துருவி கேட்பாள் வக்கீல் முளை வேற வா போகலாம் என அழைத்து சென்றாள்

வேதாசலம்,வெற்றி,தமிழ், தரணி,சித்து,சுஜி,வரு அனைவரும் அவரவர் பணிகளுக்கு கிளம்ப தயாராகி உணவு உன்ன வந்தமர்ந்தனர். அனைவரும் அமைதியாக உன்ன வேதா “என்ன இன்று ரொம்ப அமைதியா இருக்கு வீடு எப்பவும் இப்படி இருக்காதே”

தரு “இப்பொழுதான் ஒரு ஆட்டம் ஆடி முடித்தார்கள் நீங்க வேற ஆரம்பிக்கதீங்க”

வெற்றி “இன்று என்ன கூத்தோ நம் வீட்டில்”

தமிழ் “நீங்க இப்ப சாப்பிட்டு கிளம்புரிங்காளா இலையா இப்படி வசதி என முறைத்து கொண்டே கேட்க”

அதற்குமேல் வெற்றி வாயை திறப்பவரா அனைவரும் உண்டு அவரர் பணிகளை தொடர சென்றனர்


மையல் தொடரும்.........................

Hai friends படித்து எப்படி உள்ளது என கூறுங்கள் உங்கள் கருத்துகளை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன் friends
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top