மையல் கொண்டேன் - 1

Advertisement

nalini sri. p

Writers Team
Tamil Novel Writer
மையல் – 1

காலை தென்றல் வீச கதிரவன் தனது கதிர்களை பரப்பி பனிதுளிகளுக்கு விடைகொடுக்க எப்பொழுதும் பரபரப்புடன் இயங்கி கொண்டிருக்கும் சென்னை மாநகரம் காலை வேலை பள்ளி,கல்லூரி,அலுவலகம் செல்லும் மக்கள் என இன்னும் அதிக பரபரப்புடன் இயங்கி கொண்டிருக்க மாநகரத்தின் மையத்தில் உள்ள காவல்துறை தலைமை அலுவலகம் எப்பொழுதும் விட இன்று அதிக சுறுசுறுப்புடன் இயங்கி கொண்டிருந்தது

அலுவலகத்தில் வெளியே உள்ள இருக்கைகளில் அதிகாரிகளை காணவந்தவர்கள், விசாரணைக்காக அழைத்து வரப்பட்டவர்கள், என அனைவரும் இவர்களிடம் இன்று காணப்படும் அதிக ஓட்டத்தை கண்டு என்ன நடக்கிறது என புரியாமல் பார்த்து கொண்டிருந்தனர்

அதில் ஒருவர் ஒரு கான்ஸ்டபிளிடம் “என்ன சார் இன்று அதிக பரபரப்புடன் இருக்கீங்க என்ன விசியம்” என வினவ அவரோ இன்று புதிதாக ACP வரார் பா அதற்கு தான் இந்த பரபரப்பு

இது இப்பவும் வழக்கமாக நடப்பது தானே ஒருவர் சென்றால் மற்றொருவர் அந்த இடத்திற்கு வருவது இதில் என்ன இருக்கு

எப்பொழுதும் நடப்பது தான் யா ஆனால் இன்று வருபவர் ரொம்ப நேர்மையானவராம் அதுவும் இல்லாமல் மிகவும் கண்டிப்பானவர் என்று சொன்னார்கள் அதுமட்டும் இல்லாமல் அவர் வேலையில் சேர்ந்து மூன்று வருடங்கள் தான் ஆகுதாம் இதுவரை அவர் எடுத்த எந்த வழக்கும் தோல்வியே இல்லையாம்

யாருக்கும் பணிந்து போக மாட்டாராம் தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் பாரபச்சம் பார்க்க மாட்டார் தனக்கு மேல் அதிகாரியாக இருந்தால் கூட என்று கேள்விபட்டேன் அதோடு தனக்கு கீழ் வேலை செய்பவர்களும் நேர்மையா இருக்கணும் என்று எதிர்பார்ப்பாராம் அதனால் தான் இவ்வளவு பரபரப்பு

இங்கே சூர்யாவை (எல்லோருக்கும் சூர்யா நம்ப வருணிகா மட்டும் நிலவன்) பற்றி பேசிகொண்டிருக்க இத்தனை பரபரப்புக்கும் உரித்தானவன் என்ன செய்கிறார் என பார்ப்போம்

சென்னையில் ஒரு பகுதியில் உள்ள குடியிருப்பு பகுதியில் உள்ள அந்த வீடு மூன்று அறைகளையும் ஒரு பெரிய வரவேற்பறை சமையல் அறை பூஜை அறை கொண்டது மாடியில் ஒரே ஒரு அறை உள்ளது அந்த அறையில் தான் சூர்யாவும் அவனுடைய தம்பி மித்ரனும் உடற்பயிற்சி செய்வர் அதோடு வீட்டை சுற்றி தோட்டமும் அதில் ஒருபுறம் அழகான ஊஞ்சலும் அதன் அருகில் சிறு இடைவெளி விட்டு அமர்ந்து தோட்டத்தை ரசிக்கும் படி கல்லினால் ஆனா இருக்கைகள் இருந்தது

சூர்யா தனது வீட்டில் தனது அறையில் இன்று வேலையில் சேர்வதற்காக தயாராகி கொண்டிருந்தான் அவன் தயாராகி கொண்டிருக்க அவர்கள் வீட்டில் உள்ளவர்களை காண்போம்

பார்வதி - சிவா தம்பதியருக்கு இரண்டு மகன்கள் முதலாமவன் சூரியநிலவன், இரண்டாமவன் மித்ரன். சூர்யா பதினோராம் வகுப்பு படிக்கும் போதே அவனுடைய தந்தை மாரடைப்பு வந்து இறந்து விட்டார் அதன் பின்பு தந்தையின் தொழிலான ரெஸ்டாரண்டை தனது பொறுப்பில் எடுத்து கொண்டு அதனுடவே படித்து வந்தான்

சிறு வயதில் இருந்தே சூர்யாவிற்கு போலீஸ் ஆகா வேண்டும் என்பது அவனுடைய கனவு எனவே கல்லூரியில் படிக்கும் போதே அதற்காக சேர்த்தும் படித்தான் பின் முதல் வாய்ப்பிலே சேர்ச்சி பெற்று வட இந்தியாவில் பணிபுரிந்து வந்தான் தற்போது சென்னைக்கு மாற்றுதல் பெற்று இங்கு வந்துள்ளான்

அவன் பணியில் சேர்ந்ததும் அப்பாவின் ரெஸ்டாரண்டை தனது நண்பன் சித்தார்த்வுடன் பாட்னர்ராக சேர்ந்து அதை மாற்றி ஷாப்பிங் மால்லை காட்டி தனது அன்னையின் பெயரில் பதிப்பிதான். சூர்யாவின் தம்பி மித்ரன் MBBS கடைசி வருடம் ஹவுஸ் சர்ஜன் படித்து கொண்டிருக்கிறான்
(சரி வாங்க நம்ப நாயகன் என்ன செய்கிறார் என பார்ப்போம்)

சூர்யாவோ எப்பொழுதும் போல் காக்கி உடுத்தாமல் பார்மல் ட்ரெஸ் அணிந்து தயாராகி விட்டு தனது மொபைலில் உள்ள நிகாவின் புகைப்படத்தை பார்த்து “நிகா நான் இன்று வேலையில் சேர உள்ளேன் இந்த ஐந்து வருடங்களாக உன்னை நேரில் பார்க்கவே இல்லை இன்று ஏனோ உன் நினைவு அதிகமாக உள்ளது உன்னை பார்க்க வேண்டும் போல் உள்ளது எனக்கு காட்சி தருவாயா நிகா உன்னை பார்க்கவேண்டும் உன்னுடனே இருக்க வேண்டும் என நினைக்கிறேன் நான் அழைத்தால் எப்படியும் நீ வர மாட்டாய் என்ன செய்து உன் கோவத்தை போக்குவது என தெரியவில்லை” அவன் நிகாவின் புகைப்படத்தை வைத்து அதனுடன் பேசி கொண்டிருக்க உள்ள வந்த மித்ரன் தனது அண்ணன் புகைப்படத்துடன் பேசுவதை கண்டு அண்ணா என அழைக்க சூர்யா என்ன என பார்த்தான்

“அண்ணா நீ இன்னும் கிளம்ப வில்லையா அண்ணியின் படத்தை பார்த்து பேசிகொண்டிருக்க இப்படி பேசுவதற்கு பேசாமல் அண்ணியை சமாதான படுத்தலாம்”

சூர்யா “சத்தமாக பேசாதே அம்மா காதில் விழ போகுது ஏற்கனவே திருமணம் செய்து கொள்ள சொல்லி வற்புறுத்தறாங்க இது மட்டும் அவங்க கேட்டால் உடனே யார் என்ன என கேட்பாங்க அதன் பிறகு அவள் வீட்டில் சென்று பேசுவாங்க. முதலில் அவள் படிப்பை முடிக்கட்டும் அதன் பிறகு பெசிகொள்ளலாம்”

மித்ரன் “என்னவோ போ அண்ணா நீ தான் இப்படி இருக்க என பார்த்தால் அவள் அதற்கு மிச்சமாய் இருக்கா உங்களை வைத்து சமாளிக்க எனக்கு தான் நிறைய energy வேண்டும்”

டே அவள் உன்னுடைய அண்ணி அவள் இவள் என்று என்னிடமே சொல்கிறாய்

அண்ணா அவள் முதலில் என்னுடைய தோழி அதன் பின்புதான் அண்ணி என்னிடம் சண்டை போடுறிங்களே அவள் முன்பு வந்து அண்ணி என கூப்பிட சொல்லுங்கள் பார்க்கலாம்

என்ன டா நான் சொன்னதால் தானே நீ அவள் படிக்க போகும் கல்லூரியிலே சேர்ந்தாய் இப்பொழுது என்னிடமே உன்னுடைய தோழி என்கிறாய் அதுவுமில்லாமல் நான் இப்பொழுதானே வந்திருக்கேன் இனி அவளை சமாதான படுத்திகொல்கிறேன் என்றான்

யாரு நீ அவளை சமாதான படுத்த போற நீ செய்த வேலைக்கு அவள் உன்னை பார்த்து ஒரு புன்னகை சிந்தினாலே பெரிது. இதுவே நான் மட்டும் அவளிடத்தில் இருந்தால் உன்னை சும்மா விட்டிருக்க மாட்டேன் ஏதோ அண்ணா போய்ட்ட இல்லை என்றால் அவளுடைய தோழனா உன்னை ஒரு வழி செய்திருப்பேன்

சும்மா பேசிகிட்டு இருக்கமா சீக்கிரம் காலேஜ் கிளம்பற வழியை பாரு அப்புறம் நிகாவை நல்லா பாத்துக்கோ

மித்ரன் மனதில் அவளை நான் பார்த்து கொள்ளணுமா அவள் விட்டால் இந்த ஊரையே விற்றுவிடுவாள் இதை சொன்னால் இவன் கத்துவான் என நினைத்து கொண்டான்

இவர்கள் இருவரும் இவ்வாறு பேசிகொண்டிருக்க அவர்களின் அம்மா பார்வதி “சூர்யா, மித்ரா இரண்டு பேரும் இன்னும் என்ன செய்றீங்க சாப்பிட வாங்க” அழைத்தார்

இருவரும் சாப்பிட்டு மித்ரன் கல்லூரிக்கும் சூர்யா தனது வேலையில் சேரவும் கிளம்பினர்

சூர்யா சென்னையில் இருந்து ஐந்து வருடங்கள் ஆகி விட்டதால் இப்பொழுது நகரம் இப்படி உள்ளது என அறிய சாதாரண உடுப்பில் ஆட்டோவில் சென்றான்

ஆட்டோவில் செல்லும்போது அந்த ஆட்டோ ஒட்டுனரிடம் சில விசியங்களை கேட்டு தெரிந்து கொண்டான். இவன் ஆட்டோவில் செல்ல அது ஒரு சிக்னலில் நிற்க அங்குள்ள போக்குவரத்து காவலரிடம் ஒரு பெண் வாதாடி கொண்டிருக்க காவல் துறை தலைமை அலுவலகம் செல்ல தனது பைக்கில் வந்த SI வேந்தனும்,சூர்யாவும் அவளை பார்த்தனர்

வேந்தனோ யார் இந்த பெண் இவ்வளவு தைரியமாக வழக்காடி கொண்டிருக்கிறாள் என்று நினைக்க சூர்யாவின் உதடுகளோ நிகா என உச்சரிக்க ஆட்டோ ஓட்டுனரோ என்ன பிரச்சனை என அருகில் உள்ள வர்களிடம் கேட்க அவர்களோ அந்த பெண்ணின் முன்பு வந்த ஒருவனிடம் எல்லாம் சரியாக இருந்தும் அந்த காவலர் பணம் கேட்பதால் அந்த வழியே வந்த இந்த பெண் அதை தட்டி கேட்பதாக சொன்னார்

ஆட்டோ ஓட்டுனரோ சூர்யாவிடம் இதை சொல்லி பாருங்க சார் ரொம்ப தைரியமான பொண்ணு போல அதனால் இப்படி நின்று கேள்வி கேட்கிறது இது போல் யாராவது கேட்டால் மட்டுமே இவர்கள் திருந்துவார்கள் என்றான்

சூர்யாவோ இவளுடைய தைரியத்திற்கு என்ன குறைச்சல் அப்பொழுதே எந்த இடத்தில் தவறு நடந்தாலும் அதை தட்டி கேட்பாள் இப்பொழுது அது இன்னும் அதிகரித்து உள்ளது என நினைத்தான்


மையல் தொடரும்.......................

Hai friends first update of மையல் கொண்டேன்வுடன் வந்து விட்டேன் படித்து எப்படி உள்ளது என சொல்லுங்கள் friends நிறையோ, குறையோ எதுவாக இருந்தும் சொல்லுங்கள் அது என்னை மேம்படுத்தி கொள்ள உதவும். படித்து ஒரு இரண்டு வரத்தை இப்படி உள்ளது என கூறிவிட்டு போங்கள் paa and I will next update on Thursday friends
 

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
உங்களுடைய "மையல்
கொண்டேன்"-ங்கிற
அழகான அருமையான
புதிய லவ்லி நாவலுக்கு
என்னுடைய மனமார்ந்த
நல்வாழ்த்துக்கள்,
நளினி ஸ்ரீ. p டியர்
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top