மெல்லிய காதல் பூக்கும் P6

Advertisement

mila

Writers Team
Tamil Novel Writer
ஹாய் கியூட்டிபாய்ஸ் குட்டி டீஸர். சீக்கிரம் எபியோட வரேன்:geek::geek:


images (18).jpg
வண்டியை நிறுத்தி விட்டு மனைவியை காண ஆவலோடு வந்தவன் கண்டது பார்வதி பாட்டியின் மடியில் படுத்துக் கொண்டு தன்னையே மறந்து தொலைக்காட்ச்சியில் லயித்திருக்கும் மனைவியை.



"வண்டி சத்தம் கேட்டு வெளியே வருவானு பாத்தா கண் சிமிட்டாம டிவி பாக்குறா அப்படி என்ன பாக்குறா?" என்ற எண்ணத்தோடு அவர்கள் அமர்ந்திருக்கும் சோபாவின் பின்னால் சென்று நின்றுக் கொண்டவன் டீவியை நோக்க அதில் ஏதோ ஹிந்தி டிவி சீரியல் ஓடிக் கொண்டிருந்தது. கதையின் நாயகி கண்ணீரில் கரைய, பாட்டியும் பேத்தியும் சீரியல் மாமியாரையும், ஹீரோவையும் வெளுத்து வாங்கிக் கொண்டிருந்தனர்.



"உங்க ரெண்டு பேருக்கும் ஹிந்தி தெரியும் என்பதே! எனக்கு தெரியாதே" திடுமென கேட்ட கணவனின் குரலில் பாட்டியின் மடியில் தலைவைத்து படுத்துக்க கொண்டிருந்த தியா அடித்துப் பிடித்து எழுந்துக்க கொள்ள,



"ஹிந்தி தெரியும் னு முதல்லயே சொல்லி இருந்தா.. வீட்டுல தனியா இருக்காம வெளிய எங்கயாவது போய் வர ஏற்பாடு செஞ்சி இருப்பேன்" சொல்லியவாறே சோபாவில் அமர்ந்தான் பிரதீபன்.



டிவியில் கண்ணை வைத்தவாறே பார்வதி பாட்டி "என்ன சொல்லுறாங்க னு புரியல பேராண்டி.. ஆனாலும் துணியெல்லாம் பல பல னு போட்டு இருக்காங்க, எம்புட்டு நகை? வீடெல்லாம் பாரேன் டீவிலயே! மும்பாய் பார்க்கலாம். பாஷையா முக்கியம் எங்கப் பாத்தாலும் மாமியார் மருமகளை கொடும செய்றதும், புருஷன்காரன் அம்மாக்கு உடந்தையா இருக்குறதுக்கு நடந்து கிட்டு தானே இருக்கு. திவ்யா போ.. போய் உன் புருஷனுக்கு காபி கொண்டுவா.." திவ்யாவை விரட்ட



"இப்போ யாரு இவருக்கு நேரங்காலத்தோட வீட்டுக்கு வர சொன்னா" சிடு சிடுப்போடையே எழுந்தவளை தடுத்தான் பிரதீபன்



"நீ இரு தியா சீரியல் சூப்பரா போகுது பாத்துட்டே காபி குடிக்கலாம்" அவளின் சுணங்கிய முகத்தை கண்டு சொன்னவன் "தமிழ் சேனல் என்ன பாக்குறீங்க னு சொன்னா ஏற்பாடு பண்ணுறேன் பாட்டி" என்றவன் பூவை எவ்வாறு மனைவியிடம் கொடுப்பதென்று தயங்கினான்.



"என்ன பேராண்டி பொண்டாட்டிக்கு பூ வாங்கிட்டு வந்திருக்க போல, வந்த உடனே கொடுக்காம என்ன ஆற அமர உக்காந்துட்ட?" ப்ரதீபனின் கையில் இருந்த பையில் மல்லிகை பூவை கண்ட உடன் நொடியில் புரிந்துக் கொண்டு சொன்னவர் தியாவின் புறம் திரும்பி "என்ன மச மசன்னு நிக்குற பூவ வாங்கிட்டு போ.. போய் காப்பி போடு" மீண்டும் அதட்ட





"எதுக்கு பூவு அதான் தோட்டத்துல நிறைய இருக்கே!" என்ற பார்வையோடு வாங்கிக் கொண்டவள் நேராக சென்றது பூஜையறைக்கு. அழகாக சாமி படத்துக்கு சாத்தியவள் வணங்கி விட்டு வெளியே வர பிரதீபன் தான் நொந்து விட்டான்.



ரிஷி சொன்ன ஒன்னும் நடக்கவில்லை. ஒரு வெக்கப் புன்னகை கூட இல்லாமல், பூவை வாங்கியது மட்டுமல்லாது ஆசையாக அவளுக்காக வாங்கி வந்ததை சாமிக்கு சாத்தி விட்டாள். இவ எந்த நேரத்துல என்ன செய்வான்னு ஒன்னும் புரியல.

images (12).jpg

மனைவியை முறைக்கவும் முடியாமல், கடியாவும் முடியாமல் அவளையே பாத்திருக்க, "என்ன ஒரு நாளும் இல்லாம இப்படி பாக்குறாரு. கோபமா இருக்கிறாரோ" யோசனையுடனே கணவனுக்கு காபி போட சமயலறைக்குள் நுழைந்தாள் தியா.

:):):):):)
 

banumathi jayaraman

Well-Known Member
அடக் கண்ராவியே
என்ன இந்த திவ்யாப் புள்ளை
இம்புட்டு தத்தியா இருக்கு?
பார்வதிப் பாட்டியின் டிரைனிங்
சரியில்லை போலவே

சீனியர் கயல்விழி என்ன பண்ணுறாள்?
அண்ணனுக்கு கண்ணாலம்
செஞ்சு வைச்சா மட்டும் போதுமா?
இந்த தியாப் பொண்ணு மஹா
தத்தியால்ல இருக்கு
அண்ணனுக்கும் ஒண்ணும்
தெரியலே
பிரதீபா உன்ற வம்சம் வெளங்குனாப்புலதான் போ
 
Last edited:

mila

Writers Team
Tamil Novel Writer
அடக் கண்ராவியே
என்ன இந்த திவ்யாப் புள்ளை
இம்புட்டு தத்தியா இருக்கு?
பார்வதிப் பாட்டியின் டிரைனிங்
சரியில்லை போலவே

சீனியர் கயல்விழி என்ன பண்ணுறாள்?
அண்ணனுக்கு கண்ணாலம்
செஞ்சு வைச்சா மட்டும் போதுமா?
இந்த தியாப் பொண்ணு மஹா
தத்தியால்ல இருக்கு
அண்ணனுக்கும் ஒண்ணும்
தெரியலே
பிரதீபா உன்ற வம்சம் வெளங்குனாப்புலதான் போ
ஹஹஹ ஏதாவது பண்ணலாம் பானுமா எங்க போயிட போறா
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top