மெல்லிய காதல் பூக்கும் P15

Advertisement

mila

Writers Team
Tamil Novel Writer
இந்த வாரம் தேவதையிடம் வரம் கேட்டேன் UD போட முடியல next week தரேன்.:geek::geek:

கணவன் மனைவிக்கிடையில் அதிகமான சண்டைகள் குழந்தைகளை வைத்தே வருகிறது என்பது என் கருத்து உங்க கருத்து?

download (41).jpg

காலையிலையே மனைவியையும் மகனையும் அழைத்துக் கொண்டு கோவிலுக்கு சென்று குடும்பமாக சாமி கும்பிட்டவர்கள் ஸ்ரீராமை அழைத்துக் கொண்டு மாலுக்கு சென்று அவனுக்கு சில விளையாட்டு சாமான்களை ரிஷி வாங்கிக் கொடுக்க முனைய, வீட்டில் ஏகப்பட்டது இருக்கு வேண்டாம் என்று கயல் மறுக்க, ஸ்ரீராமும் கண்ட, கண்ட பொருட்கள் எல்லாம் வேண்டும் என்று அடம்பிடிக்கலானான்.

ஆர்ப்பாட்டம் பண்ணி ஒட்டுமொத்த கூட்டத்தின் கவனத்தையும் தன்பால் இழுத்த ஸ்ரீராம் தரையில் உருள ஆரம்பிக்க குழந்தை அடம் பிடிப்பதை சகிக்காது ரிஷி எல்லாவற்றையும் வாங்க, அவனை முறைத்த கயல் ஸ்ரீராமை திமிரத் திமிர தூக்கிக் கொண்டு வெளிநடப்பு செய்ய சத்தமாக அழத்துவங்கினான் அவன்.

2.jpg

கையில் எடுத்த பொருட்களை விட்டு விட்டு அவள் பின்னாடி ஓடி வந்தவன் "என்ன பண்ணுற வார் பாரு எப்படி அழுறானு"

கணவனுக்கு பதிலளிக்காமல் "ஸ்ரீ இப்போ நீ அழுறத நிறுத்தலைனா? ஈவினிங் பார்ட்டி கிடையாது. ஐஸ் கிரீம் கிடையாது, பார்க் போகமா வீட்டுக்குத்தான் போகணும்" குழந்தையை மிரட்ட ஸ்ரீராம் அழுவதை நிறுத்துவதாக இல்லை. ரிஷிக்கு தான் கயலின் மேல் கோபம் கோபமாக வந்தது.

"டைவர் வண்டியை வீட்டுக்கு விடுங்க. ஸ்ரீ பிக் பாய்னு நினச்சேன் இன்னும் சின்ன பையனாக தான் இருக்கான். ஸ்கூல் பிரெண்ட்ஸ் பார்த்தா சிரிப்பாங்க நாங்க வீட்டுக்கே போலாம்" என்றவள் வண்டியில் ஏறி அமர்ந்துக் கொள்ள கொஞ்சம் கொஞ்சமாக ஸ்ரீயின் அழுகை அடங்கி அன்னையின் சொல்லுக்கு கட்டுப்படலானான்.

ரிஷிக்குமே ஆச்சரியமாக இருந்தது. ஸ்ரீராமை அழவைக்க கூடாதென்று ரிஷி எல்லாவற்றையும் வாங்கிக் குவிக்க தயாராக இருக்க, ரெண்டே வார்த்தையில் அடக்கி விட்டாள் கயல்.

ஸ்ரீராமோடு சிறுவர் பூங்கா, ஐஸ் கிரீம் பாலர், கார்ட்டூன் திரைப்படத்தையும் பார்த்து விட்டு வெளியே வர மதியத்தையும் தாண்டியிருக்கவே! சாதாரணமாக உணவை முடித்துக் கொண்டு வீடு திரும்ப களைப்பில் உறங்க ஆரம்பித்திருந்தான் ஸ்ரீராம்.

"முதல்ல அடம்பிடிச்சவன் அப்பொறம் அடங்கியே இருந்தானே! அவனை அடக்குற மாதிரிதான் என்னையும் அடக்கி உன் முந்தானையில் நல்லா முடிச்சு வச்சிருக்க" ரிஷி சிரித்தவாறே சொல்ல

தூங்கும் ஸ்ரீராமின் தலையை கோதியவாறே "ஊட்டில இருக்கும் பொழுது இப்படி அடம் பிடிச்சதே இல்ல. வீட்டுல நீங்க விளையாட்டு சாமான்களை வாங்கிக் குவிக்கும் பொழுதே தெரியும் இப்படி அடம் புடிப்பான்னு. என்ன சொன்னா அடங்குவான்னும் தெரியும். குழந்தைக்கு வாங்கிக் கொடுக்கலாம். ஆனா வீண் செலபு செய்யவும் கூடாது. அடம் பிடிக்கும் பொழுது அவங்க சொல்லுறத செய்யவே கூடாது. அப்பொறம் அதையே ஆயுதமா பயன் படுத்திப்பாங்க"

"இதுல என்ன இருக்கு வார். என்னால வாங்க முடியுது என் பையனுக்கு நான் வாங்கிக் கொடுக்குறேன். ஒரு அப்பாவா என் பையனுக்கு இதக் கூட நான் செய்யக் கூடாதா?" தன்னனுடைய குழந்தை பருவம் தான் கொடுமையாக முடிந்தது. தன்னுடைய குழந்தையாவது ஆசைப்பட்டவைகளை அனுபவிக்கட்டும் என்ற ஆதங்கத்தில் ரிஷி பேச

"இப்போதான் சொன்னேன் வீண் செலவு பண்ண கூடாதென்று. இதுவே கத்தியோ! ஆயுதமோ! வேணும் னு சொன்னா வாங்கிக் கொடுப்பீங்களா? ஆபத்துனு சொல்லி புரிய வைக்க மாட்டீங்க? தேவைக்கு அதிகமாகவே இவன் கிட்ட விளையாட்டு சாமான்கள் இருக்கு. பகிர்ந்து விளையாடவும் யாரும் இல்ல. இந்த லட்சணத்துல இன்னும் எதுக்கு. முதல்ல இருக்குறத விளையாடட்டும்" கணவனை முறைக்கலானாள் கயல்.

images (4).jpg

"உனக்கு நான் என்ன சொல்ல வரேன்னு புரியல"

"நல்லாவே புரியுது. உங்களுக்கு கிடைக்காததெல்லாம் உங்க மகன் அனுபவிக்கனும் னு ஆசை படுறீங்க. ஆசை படலாம் அதுவே அவனை பேராசைக்காரனாக மாத்தாம இருக்கணும்"

இதற்கு மேலும் மனைவியிடம் பேசி புரியவைக்க முடியாது என்று புரிய ரிஷி அமைதியாக வண்டியை வீட்டுக்கு செலுத்த வீட்டில் மாலை பார்ட்டிக்கான ஏற்பாடுகள் நடந்துக்க கொண்டிருந்தது.
 
banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
Superb Precap,
பஸ்மிலா டியர்

உண்மைதான்
குழந்தைங்க அடம் பிடிக்கும் பொழுது கண்டிப்பாக அதை நிறைவேற்றக் கூடாது
அப்புறம் இதே பழக்கமாயிடும்
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
இந்த வாரம் தேவதையிடம் வரம் கேட்டேன் UD போட முடியல next week தரேன்.:geek::geek:

கணவன் மனைவிக்கிடையில் அதிகமான சண்டைகள் குழந்தைகளை வைத்தே வருகிறது என்பது என் கருத்து உங்க கருத்து?

View attachment 5132

காலையிலையே மனைவியையும் மகனையும் அழைத்துக் கொண்டு கோவிலுக்கு சென்று குடும்பமாக சாமி கும்பிட்டவர்கள் ஸ்ரீராமை அழைத்துக் கொண்டு மாலுக்கு சென்று அவனுக்கு சில விளையாட்டு சாமான்களை ரிஷி வாங்கிக் கொடுக்க முனைய, வீட்டில் ஏகப்பட்டது இருக்கு வேண்டாம் என்று கயல் மறுக்க, ஸ்ரீராமும் கண்ட, கண்ட பொருட்கள் எல்லாம் வேண்டும் என்று அடம்பிடிக்கலானான்.

ஆர்ப்பாட்டம் பண்ணி ஒட்டுமொத்த கூட்டத்தின் கவனத்தையும் தன்பால் இழுத்த ஸ்ரீராம் தரையில் உருள ஆரம்பிக்க குழந்தை அடம் பிடிப்பதை சகிக்காது ரிஷி எல்லாவற்றையும் வாங்க, அவனை முறைத்த கயல் ஸ்ரீராமை திமிரத் திமிர தூக்கிக் கொண்டு வெளிநடப்பு செய்ய சத்தமாக அழத்துவங்கினான் அவன்.

View attachment 5133

கையில் எடுத்த பொருட்களை விட்டு விட்டு அவள் பின்னாடி ஓடி வந்தவன் "என்ன பண்ணுற வார் பாரு எப்படி அழுறானு"

கணவனுக்கு பதிலளிக்காமல் "ஸ்ரீ இப்போ நீ அழுறத நிறுத்தலைனா? ஈவினிங் பார்ட்டி கிடையாது. ஐஸ் கிரீம் கிடையாது, பார்க் போகமா வீட்டுக்குத்தான் போகணும்" குழந்தையை மிரட்ட ஸ்ரீராம் அழுவதை நிறுத்துவதாக இல்லை. ரிஷிக்கு தான் கயலின் மேல் கோபம் கோபமாக வந்தது.

"டைவர் வண்டியை வீட்டுக்கு விடுங்க. ஸ்ரீ பிக் பாய்னு நினச்சேன் இன்னும் சின்ன பையனாக தான் இருக்கான். ஸ்கூல் பிரெண்ட்ஸ் பார்த்தா சிரிப்பாங்க நாங்க வீட்டுக்கே போலாம்" என்றவள் வண்டியில் ஏறி அமர்ந்துக் கொள்ள கொஞ்சம் கொஞ்சமாக ஸ்ரீயின் அழுகை அடங்கி அன்னையின் சொல்லுக்கு கட்டுப்படலானான்.

ரிஷிக்குமே ஆச்சரியமாக இருந்தது. ஸ்ரீராமை அழவைக்க கூடாதென்று ரிஷி எல்லாவற்றையும் வாங்கிக் குவிக்க தயாராக இருக்க, ரெண்டே வார்த்தையில் அடக்கி விட்டாள் கயல்.

ஸ்ரீராமோடு சிறுவர் பூங்கா, ஐஸ் கிரீம் பாலர், கார்ட்டூன் திரைப்படத்தையும் பார்த்து விட்டு வெளியே வர மதியத்தையும் தாண்டியிருக்கவே! சாதாரணமாக உணவை முடித்துக் கொண்டு வீடு திரும்ப களைப்பில் உறங்க ஆரம்பித்திருந்தான் ஸ்ரீராம்.

"முதல்ல அடம்பிடிச்சவன் அப்பொறம் அடங்கியே இருந்தானே! அவனை அடக்குற மாதிரிதான் என்னையும் அடக்கி உன் முந்தானையில் நல்லா முடிச்சு வச்சிருக்க" ரிஷி சிரித்தவாறே சொல்ல

தூங்கும் ஸ்ரீராமின் தலையை கோதியவாறே "ஊட்டில இருக்கும் பொழுது இப்படி அடம் பிடிச்சதே இல்ல. வீட்டுல நீங்க விளையாட்டு சாமான்களை வாங்கிக் குவிக்கும் பொழுதே தெரியும் இப்படி அடம் புடிப்பான்னு. என்ன சொன்னா அடங்குவான்னும் தெரியும். குழந்தைக்கு வாங்கிக் கொடுக்கலாம். ஆனா வீண் செலபு செய்யவும் கூடாது. அடம் பிடிக்கும் பொழுது அவங்க சொல்லுறத செய்யவே கூடாது. அப்பொறம் அதையே ஆயுதமா பயன் படுத்திப்பாங்க"

"இதுல என்ன இருக்கு வார். என்னால வாங்க முடியுது என் பையனுக்கு நான் வாங்கிக் கொடுக்குறேன். ஒரு அப்பாவா என் பையனுக்கு இதக் கூட நான் செய்யக் கூடாதா?" தன்னனுடைய குழந்தை பருவம் தான் கொடுமையாக முடிந்தது. தன்னுடைய குழந்தையாவது ஆசைப்பட்டவைகளை அனுபவிக்கட்டும் என்ற ஆதங்கத்தில் ரிஷி பேச

"இப்போதான் சொன்னேன் வீண் செலவு பண்ண கூடாதென்று. இதுவே கத்தியோ! ஆயுதமோ! வேணும் னு சொன்னா வாங்கிக் கொடுப்பீங்களா? ஆபத்துனு சொல்லி புரிய வைக்க மாட்டீங்க? தேவைக்கு அதிகமாகவே இவன் கிட்ட விளையாட்டு சாமான்கள் இருக்கு. பகிர்ந்து விளையாடவும் யாரும் இல்ல. இந்த லட்சணத்துல இன்னும் எதுக்கு. முதல்ல இருக்குறத விளையாடட்டும்" கணவனை முறைக்கலானாள் கயல்.

View attachment 5134

"உனக்கு நான் என்ன சொல்ல வரேன்னு புரியல"

"நல்லாவே புரியுது. உங்களுக்கு கிடைக்காததெல்லாம் உங்க மகன் அனுபவிக்கனும் னு ஆசை படுறீங்க. ஆசை படலாம் அதுவே அவனை பேராசைக்காரனாக மாத்தாம இருக்கணும்"

இதற்கு மேலும் மனைவியிடம் பேசி புரியவைக்க முடியாது என்று புரிய ரிஷி அமைதியாக வண்டியை வீட்டுக்கு செலுத்த வீட்டில் மாலை பார்ட்டிக்கான ஏற்பாடுகள் நடந்துக்க கொண்டிருந்தது.
நானும் உங்கள் கட்சிதான்,
பஸ்மிலா மேடம்
குழந்தைகளால்தான் கணவன் மனைவிக்குள்ள சண்டை வருது

குழந்தைகளை அம்மா அப்பா யாராவது ஒருத்தர் கண்டிக்கும் பொழுது அடுத்தவர் குழந்தைக்கு சப்போர்ட் பண்ணக் கூடாது
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top