மூட்டு வலி குறைய

Advertisement

Bhuvana

Well-Known Member
மூட்டு வலி குறைய :

1. இரண்டு மேஜைக்கரண்டி விளக்கெண்ணையை எடுத்து அடுப்பில் வைத்து சூடேற்றி ஒரு கப் ஆரஞ்சுப் பழச்சாற்றில் கலந்து தினமும் காலையில் சாப்பிட்டு வந்தால் மூட்டுவலி குறையும்.

2. கணப்பூண்டு இலைகளை எடுத்து வேப்ப எண்ணெய் விட்டு வதக்கி மூட்டுகளில் கட்டி வந்தால் மூட்டுவலி குறையும்.

3. பூண்டின் இலைகளை எடுத்து வேப்ப எண்ணெய் விட்டு நன்கு வதக்கி மூட்டில் கட்டி வந்தால் மூட்டுவலி குறையும்.

4. எருக்கன் இலைகளை நெருப்பில் வாட்டி மூட்டு வீக்கங்களீன் மீது வைத்து சிறிது நேரத்திற்கு கட்டி வைத்தால் வீக்கம் குறையும்.

5. துளசியின் வேர்கள், இலைகள், தண்டு, பூக்கள், விதைகள் ஆகிய துளசியின் 5 பாகங்களையும் எடுத்து இதற்கு சம அளவு பழைய வெல்லம் சேர்த்து நன்றாக அரைத்து வலியுள்ள இடத்தில் பூசினால் மூட்டு வலி குறையும்.

6. 250 கிராம் இஞ்சி சாறில், 150 கிராம் நல்லெண்ணெய் கலந்து வலி, வீக்கம் உள்ள இடத்தில் நன்றாக அழுத்தி தேய்த்து வந்தால் மூட்டு வீக்கம் மற்றும் மூட்டு வலி குறையும்.

7. கொய்யா இலைகளை நன்றாக விழுது போல அரைத்து மூட்டு வீக்கத்தின் மீது பூசி வந்தால் மூட்டு வலி மற்றும் மூட்டு வீக்கம் குறையும்.

8. மருதாணி இலைகளை அரைத்து மூட்டு வலி ஏற்பட்ட இடங்களில் தடவி வந்தால் மூட்டு வலி குறையும்.

9. சூடான பாலில் 3 ஏலக்காயை உடைத்துப் போட்டு, சிறிதளவு மஞ்சள் பொடி சேர்த்து தினமும் இரவில் குடித்து வந்தால் மூட்டு வலி குறையும்.

10.பிரண்டை இலை, முடக்கத்தான் இலை, சீரகம் மூன்றையும் தலா 10 கிராம் அளவு எடுத்து அரைத்து காலையில் சாப்பிட்டால் மூட்டு வலி, மூட்டுத் தேய்வு குறையும்.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top