முள்ளும் மலராய் தோன்றும் 1

Rajalakshmi Narayanasamy

Writers Team
Tamil Novel Writer
#1
அந்த அதிகாலை பொழுதில் அந்த வீடே பரபரப்பாய் இருந்தது.... தம்பி தங்கையை பள்ளிக்கு கிளப்பிவிட்டு தானும் கிளம்பிக்கொண்டிருந்தாள் ... அக்‌ஷரா
"சீதா.., சீதா சாப்பாடு ரெடியா? பிள்ளைங்களுக்கு நேரமாகுது" என்ற குரல் மாடி வரை கம்பீரமாய் ஒளித்தது...
மூவர் முகத்திலும் புன்னகை மலர்ந்தது...
"அக்கா, இது சீதாவுக்கா இல்ல நமக்கா?" என்றான் அக்‌ஷய்..
"சத்தம் இங்க வர்றப்போவே தெரியல... நமக்கு தான்.. இப்போ உடனே டைனிங்ல போய் உக்காரல.. அடுத்து டிரைவர கேப்பாங்க.. அடுத்தது நேரா இங்கயே வந்து நிப்பாங்க..." எனறு சிரித்தாள் அனுஷ்கா..
"ஷ்.. என்ன உங்க ரெண்டு பேருக்கும் சேட்ட கூடிடுச்சு... அக்கா எவ்ளோ அக்கரையா சாப்பாடு எடுத்து வைக்க சொல்றாங்க.. எல்லாம் நமக்காக தானே! அத போய் கிண்டல் பண்ணிகிட்டு" என மென்மையாக கண்டித்தாள் அக்‌ஷரா..
மூவரும் கிளம்பி உணவுண்டு.. அவரவர்க்கு பிடித்ததை செய்து வைத்திருந்த சீதாவுக்கு முத்தத்தை பரிசளித்துவிட்டு.. வேகமாய் வந்து ஹாலில் அமர்ந்திருந்த அக்காவிற்கு முத்தமிட்டு அருகிலேயே அமர்ந்திருந்த அண்ணனிடம் சென்று அமர்ந்தனர்...
மூவரின் தலையையும் வாஞ்சையாய் தடவி விட்டவன் "நேரமாச்சா டா கிளம்புங்க ... வண்டி ரெடியா இருக்கு... " என்றான்...
மூவரும் வெளிவந்து இரட்டையர்கள் ஒன்றிலும் அக்‌ஷரா ஒன்றிலுமாக ஏறி பறக்க... அந்த விட்டின் கோலம் அப்படியே தலைகீழாய் மாறியது..
அதுவரை ஒரு தெய்வீக குடும்பமாய்.., கோவில் போல காட்சியளித்த வீட்டிற்குள் வரிசையாய் வந்து சேர்ந்தார்கள் கிங்கரர்கள் போலிருந்த ரவுடிகள்..!
...
இது தினசரி வாடிக்கை தான்..
அக்‌ஷரா மருத்துவம் படித்து... உள்ளூரிலேயே ஒரு மருத்துவமனையில் பயிற்சியில் இருக்கிறாள்..
அக்‌ஷயும், அனுஷ்காவும் இரட்டையர்கள்..இருவரும் பள்ளி இறுதி ஆண்டுகளில்... தாய் தந்தையற்றவர்கள்...
ஆனால் அந்த குறையே தெரியாமல் வளர்க்கத்தான் அக்காவும் அண்ணனும் இருந்தார்களே...!!
தியாகமும் அன்பும் உருவான அக்கா.. உண்மையில் ஒரு தாய் போலத்தான்.. எப்போதும் பாதுகாப்பு கொடுத்தவன் அண்ணன்... அவர்கள் அரவணைப்பில் எந்த தீமையும் அண்டாது வளர்ந்தார்கள் மூவரும்..
ஆனால்... அவள் அக்காவானவள் .. அவள் அனுபவித்த துன்பம் தான் எவ்வளவு??
அவளுக்கு 16 வயதான போது பெற்றோர் ஓர் விபத்தில் மாண்டுவிட.. கணக்கற்ற சொத்துகள் இருக்கத்தான் செய்தன...
ஆனால் பெற்றோர் இல்லாத அனாதரவான சூழல்..., இரண்டு சின்னஞ்சிறு தங்கைகள்.. ரெண்டும் கெட்டன் வயதில் ஒரு தம்பி.. குழந்தை வயதில் ஒரு தம்பி...
மூத்தவனுக்கு 15 வயதே... என்ன செய்வதென தெரியாத குழப்ப நிலைதான்... மூத்த தங்கைக்கு 12 வயது சிறியவள்... பெற்றோர் இல்லை என புரியும் வயது.. ஆனால் அதை தாங்கவியலா மனது..
அடுத்த இரட்டையர்கள் 6 வயதில் இருந்தார்கள்... அவர்களுக்கு எதுவும் புரியவில்லை.. பெற்றோர் எங்கே தெரியாது.. வீடு ஏன் அமைதியாய் இருக்கிறது புரியாது.. சகோதரர்கள் ஏன் அழுகிறார்கள்? காரணம் பிடிபடாது.. எல்லாம் குழப்பம்..
இத்தனை சோகத்தில்.. அவளை அபகரிக்கவும் சில மிருகங்கள் முயலத்தான் செய்தன...
பெண் அவள் புத்திசாலியாய் இருந்தாள்... மூத்த சகோதரனை முன்னிருத்தி அவனை இயக்கினாள்...
அவள் கதவுக்கு பின் நின்று கொண்டு முன் நிற்பவனிடம் அரிவாள் கொடுத்தாள்...
வீட்டு வேலைக்கு இருந்தவர்களை கண்ணசைவில் ஆட்டி வைத்தாள்.. தந்தையுடன் உடனிருந்த நண்பர்களை துணைக்கு வைத்துக் கொண்டாள்...
தம்பியை தன் ஆயுதமாக மாற்றினாள்.. அவனறியாமலே... இப்படி அந்த குடும்பத்தை கொஞ்சம் கொஞ்சமாய் காத்தாள்...
பின், ஊரே பார்த்து பயப்படும் அளவுக்கு வளர்ந்தாள்.. அவள் அதிரூபசுந்தரி...
அவள் பின் நின்று மொத்த குடும்பத்தையும், அந்த ஊரையும் ஆட்டி வைத்தாள் அவள் தம்பி மூலம்... அவன் ஆதிதேவன்...
அவள் அரசியாய் அரசாண்டாள் பின்னிருந்து... அது யாருக்கும் தெரியாமல்... அன்பே உருவான பாத்திரத்தில் ... தேவதை தோற்றத்தில் அவளுள் ஒரு அரக்கி குடியிருந்தாள்..
அதிரரூபசுந்தரியின் கதை இது..
 
Attachments

#5
:D :p :D
உங்களுடைய "முள்ளும்
மலராய் தோன்றும்"-ங்கிற
அழகான அருமையான
புதிய லவ்லி நாவலுக்கு
என்னுடைய மனமார்ந்த
நல்வாழ்த்துக்கள்,
ராஜலக்ஷ்மி நாராயணசாமி டியர்
 
Last edited:

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Sponsored

Advertisement