முகவரி

Advertisement

Jagan P

Member
நான் யாரேன கண்டுக்கொள்ளாத ஊடர்
பல இடர்களை கடந்து வந்தேன் கால்நடை பயணமா

வயிற்றுப் பிழைப்பை மறந்தேன்
அறிமுகமில்லாதவர்களிடம் கையேந்தி நின்றேன் ஒரு
வேளை சோத்துக்காக

அடைக்கலம் தேடியலைந்தேன்
படதா வேதனைகளை கடந்தேன்
யாரும் கேட்காத கேள்வி அது?

எங்கமா போற? என கேட்டது பேருந்து நடத்துனரில் குரல் எனக்கோ உடல் பதறியது
குரல் தழுத்தழத்தது மனமோ குமுறியது கண்ணீரே வரவைத்தது பயணத்தின் போது

பிள்ளையை என் மகன் என முகவரிக் கொடுத்துவளர்த்தேன்
அவனோ எனக்கு முகவரி இல்லாதவளாக மாற்றிவிட்டான்

ஏதோவொரு தைரியத்தில் பயணப்படேன் கோயம்பேடு பேருந்துநிலையம் என முகவரி கொடுத்துள்ளது எனக்கு

மகன் வீட்டில் முதேவியாக வாழ விரும்பவில்லை கோயம்பேட்டில் உழைக்கும் கிழவியாக வாழ்கிறேன்.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top