மீன் குழம்பு

Advertisement

Suvitha

Well-Known Member
சுவை எப்படி சுவீ..? :)
சும்மாவே மீன் குழம்புக்கு சொத்தையே எழுதிகொடுக்குற ஆளு நானு:D
உங்க பக்குவம் இன்னும் அருமையாக இருந்தது மலர்:)
 

ThangaMalar

Well-Known Member
சும்மாவே மீன் குழம்புக்கு சொத்தையே எழுதிகொடுக்குற ஆளு நானு:D
உங்க பக்குவம் இன்னும் அருமையாக இருந்தது மலர்:)
சரி சொல்லுங்க சுவீ..
நான் எந்த ரிஜிஸ்டர் ஆபிஸ்க்கு வரனும்? ;);)
 

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
10 சின்ன வெங்காயம், ஒரே ஒரு தக்காளி அரைச்சி வச்சிக்கங்க..

வெங்காயம் 4 பேருக்குனா பத்து சி வெங்காயம் அரைக்க..
30 சின்ன வெங்காயம் வதக்க...

ரெண்டு பத்தை தேங்காய், சீரகம் அரைச்சிக்கங்க..

புளி ஒரு எலுமிச்சை அளவு நனைய போடுங்க

நல்லெண்ணெய் ஊற்றி சீரகம், வெந்தயம், கருவேப்பிலை போடுங்க

சின்ன வெங்காயம் சின்னதா வெட்டினது நிறைய போடுங்க
பூண்டு ஒரு 10 பல் உரிச்சி அதையும் சேர்த்து வதக்கி...
வதங்கியதும் தக்காளி 3.. சின்னதா வெட்டி போடுங்க

அது வதங்கியதும் வெங்காயம், தக்காளி அரைச்சி வச்சது போடுங்க

கொஞ்சம் வதங்கியதும் மஞ்சள் தூள், மிளகாய் தூள், கல் உப்பு போடுங்க..
மிளகாய் தூள் வந்து குழம்பு மிளகாய் தூள் போடனும்
வெறும் மிளகாய்த்தூள் இல்ல
(இது இல்லனா... மிளகாய்த்தூள், கொத்தமல்லி தூள், சீரகத்தூள் போடுங்க)
( குழம்பு மிளகாய் தூள் னா மிக்ஸ்ட்டு
அதாவது மல்லி வெந்தயம் அப்புறம் சீரகம் கொஞ்சம் கடல பருப்பு வறுத்து அரைச்சது)
சக்தி மசாலா ல கிடைக்குது..

நல்லா கொதிக்கட்டும்
எல்லாம் வதங்கி எண்ணெய் தனியா பிரிஞ்சி வந்ததும், புளி கரைச்சி ஊற்றுங்க
சிம் ல வச்சிடுங்க
ஒரு 5 நிமிஷம் அப்படியே விடுங்க.. அப்புறம் கழுவி வச்ச மீன் எல்லா பக்கமும் மெதுவா போடுங்க
ஒரு பத்து நிமிடம் sim ல இருக்கட்டும்..
அப்புறம் அரைச்சு வச்ச தேங்காய் போட்டு ஒரு 5 நிமிஷத்தல off பண்ணிடுங்க

கொத்தமல்லி இலை பொடியா நறுக்கி போடுங்க..
சுவையான மீன் குழம்பு ரெடி
வாவ்..டார்லிங்.
ஐ மிஸ் யூ லாட்.
சூப்பர்...சூப்பர்..கலக்கு டியர்.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top