மின்னலே... மின்னலே... 23

Rajani novals

Well-Known Member
#1
23.மின்னலே... மின்னலே...

அடுத்த நாள் காலையில் வீட்டினர் அனைவரும் பரபரப்பாக கிளம்பிக் கொண்டு இருந்தனர்...

ஆம் அன்று மாலை திருமண நிச்சயதார்த்தம் மற்றும் வரவேற்பு உள்ளதால் அனைவரையும் கிளம்ப ஆயத்தம் செய்து கொண்டு இருந்தார் ராதா...

அதுமட்டும் இல்லாமல் அவருக்கு மிகப்பெரிய சோதனையே ராஷ்மிகாவும் மனோகரனும்தான்... அவர் வீட்டில் இல்லையென்றால் ராதா என்ன சொன்னாலும் ராஷ்மிகா அப்படியே கடைபிடிப்பாள்...

ஆனால் மனோகரன் வீட்டில் இருந்தால் ராதாவை ஒரு இன்ச் கூட மதிக்க மாட்டாள் ராஷ்மிகா...

அனைவரும் அவரவர்களுக்கான உடைகளை எடுத்து வைத்து கொண்டு தயாராக இருக்க, ராஷ்மிகா மட்டும் காலை மணி பத்து ஆகியும் இன்னும் அறை கதவைத் திறக்காமல் இருப்பதால் ராதாவுக்கு கோபம் தலைக்கு ஏறியது...

ஹாலுக்கு வந்தவர் அவளை "ரச்சு!"... கத்தி அழைத்தவர்... அவள் இன்னும் வராது அறையிலேயே இருக்கவும்... வேறு வழி இல்லாமல் கால் வலித்தாலும் பொறுத்துக்கொண்டு அறைக்குச் சென்றார்...

அறைக் கதவை வேகமாக தட்டியவாறு "இப்போ கதவைத் திறக்க போறியா இல்லையா?... நான் கதவைத் திறந்து உள்ளே வந்தேன்னா அடி விழும் ரச்சு!"... என்று ராதா கோபமாகக் கூறவும்...

அசால்டாக கதவைத் திறந்து கொண்டு, தலையை மட்டும் நீட்டி வெளியே பார்த்த ராஷ்மி... "மா கிளம்பிட்டு தான் இருக்கிறேன்... அப்பா எங்கே?"... கேட்கவும்

"எதுக்கு கேக்குற?... செல்லம் கொஞ்சி இன்னும் லேட் பண்றதுக்கா"... கேட்ட ராதா அவள் காதைப் பிடித்து திருகினார்...

"ஐயோ அம்மா எல்லாம் எடுத்து வச்சுட்டேன்... இதோ பாருங்க என்னோட பேக்கை... சாப்பாடும் சாப்பிட்டாச்சு... நீங்க போகும் போது என்னை அழைச்சுக்கிட்டு போங்க"... சொன்னவாறே அம்மாவைப் பாவமாகப் பார்க்க...

அறையின் உள்ளே வந்தவர் பேக்கை திறந்து செக் பண்ணியவர்... "ரச்சும்மா நகை என்கிட்டே இருக்குடா... அதுமட்டும் இல்லாமல் நாம ஒரே அறையில் தான் இருக்கப் போறோம்னு அப்பா சொல்லி இருக்கார்... இன்னைக்கு மட்டும்தான் ஒண்ணா எல்லோரும் பழையபடி படுக்க முடியும்...

அப்புறம் கல்யாணம் ஆனா அப்பா அம்மா கூட படுக்க வாய்ப்பு கிடைக்குமோ என்னவோ"... அவளது முகத்தை வருடியவாறே கூறியவருக்கு அழுகை வரவும் படுக்கையில் அமர்ந்து கொண்டவர் மவுனமாகக் கண்ணீர் விடவும்...

ராஷ்மிகாவுக்கும் மனம் கனத்துப் போகவே ராதாவின் அருகில் அமர்ந்தவள் அவரை அணைத்துக் கொண்டாள்...
"அம்மா ப்ளீஸ் மா தயவு செய்து அழாதீங்க"... அவரை ஆறுதல்படுத்தவும் உள்ளே வந்த மனோகர்


"ராதாம்மா இங்கே இருக்கியா நீ ?... அங்கே மண்டபத்தில் மாப்பிள்ளையை அழைச்சுகிட்டு வந்துட்டாங்களாம்... நாம பொண்ணை சாயங்காலம் நாலு மணிக்கு அழைத்துப் போனால் போதும்"...
மனோகரன் சொல்லவும் தலையை மட்டும் ஆட்டிவிட்டு கண்களைத் துடைத்துக் கொண்ட ராதா அறையை விட்டு வெளியே சென்றார்...


ராதா சோகமாக வெளியே செல்வதைக் கண்ட மனோகரன் ராஷ்மிகாவைக் கேள்வியாய்ப் பார்த்தார்... "என்ன ஆச்சு உங்க அம்மா சோகமாப் போறாங்க?... நீ ஏதாவது சொன்னியா அவங்களை"... சற்றே கோபமாகக் கேட்கவும்...

"அச்சோ அப்பா நான் உங்க மனைவியை ஒண்ணுமே சொல்லவில்லை... அவங்கதான் அக்காவை பிரியனுமேன்னு நினைத்து வருத்தப்படறாங்க"...

"அதுவும் சரிதான் பொண்ணைப் பெற்றாலே இதை அனுபவித்துதான் ஆகணும் போல"... மனோகரனும் கண்கலங்கவே அவளுக்கும் அழுகை வந்து விட்டது...

அவர் அருகில் அமர்ந்து அவர் தோளில் தலை சாய்த்தவள் "எனக்கு கல்யாணமே வேண்டாம்பா... உங்களோடவே இருந்துடறேன்"... ராஷ்மிகா கூறவும் சுதாரித்துக் கொண்டவர்...

"அது இன்னும் கேவலமாக போய்விடும்டா... பொண்ணை கட்டி கொடுக்காமல் வீட்டிலேயே வச்சு இருக்கான் பாருன்னு"... சொன்னவர்

"சரி நீ படுத்து ரெஸ்ட் எடு சாயங்காலம் மண்டபம் போகணும்... அப்புறம் நிற்கக் கூட நேரம் இருக்காது"... சொன்னவர் எழுந்து செல்ல...

மனம் கலங்க அப்படியே படுக்கையில் படுத்து கொண்டாள் ராஷ்மிகா...

அப்படியே புரண்டு படுத்தவள் போனைப் பார்க்கவும்...

ரன்வீர் ஆன்லைனில் இருப்பதை அது காட்டவும்... அவனுக்கு அழைத்தாள் ராஷ்மிகா...

அவன் பிஸியாக இருந்திருப்பான் போல அழைப்பைக் கட் பண்ணவும்... "ஹா!... பெரிய பிசினஸ் மேன்... இருந்துட்டு போகட்டும் எனக்கென்ன"... அலட்சியமாக உதடு சுழித்துக் கொண்டவள் அப்படியே உறங்கிப்போய் விட...

மாலை நேரம் ஆக அனைவரும் மண்டபத்துக்கு கிளம்பினார்கள்... மணப்பெண்களை ஆரத்தி எடுத்து மேலதாளங்களுடன் வரவேற்க... உரிய முறைப்படி மணப்பெண் வீட்டார் சகல மரியாதைகளுடன் மண்டபத்திற்குச் சென்றனர்...

உள்ளே போனதுதான் அதற்கு பின்னர் அனைவருக்கும் ஒரு ஒரு வேலைகள் காத்துக் கொண்டு நிற்க... யாரும் யாரிடமும் நின்று பேச நேரம் இல்லாது போயிற்று...

இரவு எட்டு மணி அளவில் அங்கே வந்த ரன்வீர் லேசான தாடியுடன் பார்க்கவே அழகாக இருந்தான்... அவன் வருவதை மண்டபத்தில் மாடியில் உள்ள அறையில் இருந்து பார்த்தவளுக்கு வெட்கம் தானாக வந்து ஒட்டிக் கொள்ளவே... கிழே செல்ல ரெடி ஆகியவள் அங்கே சென்றால் அவனைப் பார்க்க நேரிடுமே என்று சங்கடப்பட்டவள் அறைக்குள்ளேயே புகுந்து கொண்டாள் மீண்டும்...

'கடவுளே அவர் வேறு வந்துட்டார்... எப்படி அவர் முகத்தைப் பார்ப்பேன் நான்... எனக்கு வெட்க வெட்கமா வருதே'... நகத்தை கடித்துக் கொண்டவள் புலம்ப...

அப்பொழுது போன் வரவும் ஒருவேளை அவனோ இல்லை யாரோவென்று எட்டிப் பார்க்க அவள் அம்மாதான் அழைத்திருந்தார்...

எடுத்து காதில் வைக்க " ரச்சும்மா எங்கேடா இருக்கே... வா அக்காவுக்கு நிச்சயம் பண்ணப் போறாங்க"... அதட்டவும் வேறு வழியின்றி அறையை விட்டு வெளியே வந்தாள்...

ஸ்டேஜுக்கு வந்தவள் வேறு எங்கும் தன் கண்களைத் திருப்பாது அங்கே உட்கார்ந்திருந்த உறவினர்களுடன் தானும் அமர்ந்து கொண்டாள்...

வெற்றிலை பாக்கு மாற்றி மாப்பிள்ளை வீட்டாரும் பெண் வீட்டாரும் திருமணத்தை உறுதி படுத்திக் கொள்ளவே... அனைவரும் அங்கிருந்து களைய...

மாப்பிள்ளையும் பெண்ணும் மாற்றி மாற்றி போஸ் கொடுத்து கொண்டு இருந்தனர்... அவள் அருகில் வந்த சீமா...

"என்ன மேடம் பார்க்கவே முடியலை உங்களை?... சரி வா சாப்பிட போகலாம் பசிக்குது"... அவளை சீமா தன்னோடு வருமாறு இழுக்கவும்... பசிக்கிறது வா என்பவளிடம் மறுக்கவும் வழியில்லாது... அவளுக்கும் பசியில் சிறுகுடல் பெருக்குடலைத் தின்று விடும் போலத் தோன்ற அவள் பின்பு அமைதியாகச் சென்றாள்...

ஆனால் சீமா பந்திக்கு அழைத்துச் செல்லாது வேறு புறம் அழைத்துச் செல்ல... "அடேய் அங்கேதான் சாப்பாடு போடுறாங்க... நீ வேற இடம் போற"... ராஷ்மிகா கூறவும்...

"அதெல்லாம் சரியாதானே போறேன் நீ வா"... அவள் அழைத்துச் சென்ற இடம் மண்டபத்தில் வி ஐ பி க்கள் மட்டுமே வந்து தங்கும் ஆடம்பரமான அறை... அதை கண்கள் விரிய சுற்றி பார்த்தவள் அறைக்குள் சென்றவள்...

அங்கே ரன்வீர் அமர்ந்து சாப்பிட்டு கொண்டிருக்கவும் ராதா பரிமாறிக்கொண்டு இருக்கவும்... 'ஏன் ஐயா பந்தியில் அமர்ந்து சாப்பிடமாட்டாரோ?... ராஜமரியாதைதான்
போ'... நினைத்துக் கொண்டவளுக்கு அவன் ராஜபரம்பரைதானே என்ற நினைவும் எழ உதடுகளை கடித்துக் கொண்டாள்...


அப்போது சரியாக அவன் நிமிர்ந்து பார்க்க அவன் பார்வை அவள் உதடுகளில் பதிய நொடியில் முகம் சிவந்து போனது அவளுக்கு வெட்கத்தில்...

அவளைத் திரும்பிப் பார்த்த ராதா... "ரச்சும்மா வா வந்து தம்பிக்கு சாப்பாடு போடு"... அவளை அழைக்கவும் வேறு வழியின்றி அவனுக்கு பரிமாறினாள் அவன் முகம் பார்க்காமலேயே...

தன்னிடம் படபடவென்று பொரிந்து தள்ளுபவள் இன்று அமைதியாகவே இருக்கவும்... ஆரம்பத்தில் எதுவும் புரியாது இருந்தவன் சற்று நேரத்திலேயே அவளது தடுமாற்றத்தினை இனம் கண்டு கொண்டவனின் விழிகளில் பிரகாசம் கூட... அதை காட்டிக்கொள்ளது ரன்வீர் உணவை முடித்து விட்டு வெளியே செல்ல மற்றவர்களும் சாப்பிட ஆரம்பித்தனர்...

சீமா ஏதோ லொட லொடவென பேசிக்கொண்டு இருக்க ராஸ்மிகா தலையைத் தலையை ஆட்டி ஏதோ உளறி வைக்கவும் செய்தாள்...

அறையை விட்டு வெளியே வந்தவளை சேலை முந்தானையை பற்றி இழுத்து பக்கத்து அறைக்குள் நுழைந்து கொண்டான் ரன்வீர்...

அதில் பின் கழன்று போகவும் நழுவியது முந்தானை அவள் தோளை விட்டு கிழே...
அவன் பார்வை அங்கே பதியவும் அதன்பின் அவளைப் பார்க்கும் விதம் முற்றிலும் மாறிப்போக அவளை நெருங்கினான் அவன்...


அவன் கிறங்கிய பார்வை அவளை ஏதோ செய்ய... அந்த உணர்வுகளின் கணம் தாங்காதவளாய் நடுங்கிப் போனவள் சட்டென தன்னை மறைத்துக் கொண்டு ஜன்னல் புறம் திரும்பி நின்று கொண்டாள்...

அவன் மேலும் அவளை நெருங்கி அருகில் வரவும்... "அங்கேயே நில்லுங்க... என்னை தொட்டு பேச மாட்டேன்னு சொல்லி இருக்கீங்க நீங்க"... அவன் அருகாமையில் பேச்சே வராது விட்டு விட்டு அவள் கூறவும்...

கிழே குனிந்து அவள் முந்தானையை கையில் எடுத்தவன் அதை அவள் தோளில் சரி செய்து... அவளை சிறிதும் தொடாமல் ரவிக்கை உடன் பின் செய்தும் விட..

அவனது சூடான மூச்சு காற்று அவள் காதுகளில் வந்து மோதவும்... தோள்களைக் குறுக்கியவள்... "அச்சோ கொஞ்சம் தள்ளி இருங்களேன் கூச்சமா இருக்கு எனக்கு"... அவள் சிணுங்கவும்

மேலும் நெருங்கியவனை "ப்ச் தள்ளி இருக்க சொன்னேன் உங்களிடத்தில்"... அவள் கோபமாக கூறுவதாக நினைத்து கொஞ்சல் மொழியில் கூற...

"நீ தள்ளிதானே இருக்க சொன்னே... அதான் பக்கத்தில் தள்ளி வந்துட்டேன்"... கூறிவிட்டு அவன் சிரிக்கவும்

அதற்கு மேல் தாங்காதவளாய் தன் மனதை அவனுக்கு உணர்த்தி விட வேண்டும் என்று எண்ணியவளாய்... ஜன்னலருகே ஒரு பென் கிடக்கவும்... அதைக் கையில் எடுத்துக் கொண்டவள் தன் கைகளில் ஏதோ எழுதினாள்... பின் அதை அவனை நோக்கிக் காண்பிக்கவும்...

அவனுக்கு சந்தோஷத்தில் தலைகால் புரியவில்லை ஆம் அதில் ஐ லவ் யூ என்று எழுதி இருக்க அவனும் இதைக் கேட்கத்தானே ஆசைப்பட்டான்...
 
Last edited:
#2
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
ரஜனி டியர்

என்னாஆஆஆஆஆஆஆது?
ராஷ்மிகாவுக்கு வெட்கம் வேலாயுதம்லாம் வருதா?
அய்யோ
எனக்கு நெஞ்சு வலிக்குதே
யாராச்சும் ஜோடா குடுங்கப்பா
 
Last edited:

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Sponsored

Advertisement