மிக்ஸ்ட் வெஜிடபிள் மசாலா பாத்

Bhuvana

Well-Known Member
#1
மிக்ஸ்ட் வெஜிடபிள் மசாலா பாத் : FB_IMG_1582044772925.jpg

தேவையான பொருட்கள் :

பாசுமதி அரிசி/சீரக சம்பா அரிசி - 2 கப்
காய்கறிகள் - விருப்பத்திற்கு ஏற்ப 1 கப்
தேங்காய் - 1/2 கப் (துருவியது)
வர மிளகாய் - 2
மல்லி - 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 2 டீஸ்பூன்
சீரகம் - 2 டீஸ்பூன்
கிராம்பு - 2
ஏலக்காய் - 2
பிரியாணி இலை - 1
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
தண்ணீர் - 3 கப்

பாசுமதி அரிசியை தண்ணீரில் 1/2 மணிநேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும். பின் அரிசியை கழுவி, நீரை வடிகட்டிவிட வேண்டும்.

வாணலியை அடுப்பில் வைத்து, அதில் வர மிளகாய், மல்லி, துருவிய தேங்காய் மற்றும் சீரகத்தை போட்டு நிமிடம் வறுத்து இறக்கி, பின் குளிரை வைத்து, பேஸ்ட் போல் அரைத்துக் கொள்ள வேண்டும்.

குக்கரை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி, அதில் கிராம்பு, பிரியாணி இலை மற்றும் ஏலக்காய் சேர்த்து தாளிக்க வேண்டும்.

காய்கறிகளை சேர்த்து 2 நிமிடம் வதக்கவும். பின்னர் அரைத்த விழுதை சேர்த்து வதக்கவும்.

நன்கு வதக்கியதும், தீயை சற்று உயர்த்தி, கழுவி வைத்துள்ள அரிசி, உப்பு மற்றும் 3 கப் தண்ணீரை ஊற்றி, 2-3 நிமிடம் கொதிக்க விட்டு, குக்கரை மூடவும்.
ப்ரஷ்ர் வெளியேறும் போது வெய்ட் போட்டு சிம்மில் 10 நிமிடம் வைத்து இறக்கவும்...

கொத்தமல்லி சட்னி மற்றும் வெங்காய ரைத்தாவுடன் சாப்பிட சுவையாக இருக்கும்.