மாலை சூடும் வேளை-9

Advertisement

laxmidevi

Active Member
மாலை -9

பாடல் வரிகள்

உன்னருகே நான் இருந்தும் உண்மை சொல்ல துணிவு இல்லை

கைகளிலே விரல் இருந்தும் கைகள் கோர்க்க முடியவில்லை

உன்னை எனக்கு பிடிக்கும் அதை சொல்வதில் தானே தயக்கம்

நீயே சொல்லும் வரைக்கும் என் காதலும் காத்து கிடக்கும்

மலர்விழி தன் தம்பி மோகன் அனுப்பிய வீடியோவை பார்த்துக் கொண்டிருந்தாள் .இந்த மாமாவை பார் பெரிய ஹீரோவைப் போலஎன்ட்ரி கொடுப்பதை பிறகு போன் செய்து கலாய்க்கலாம் என்றெண்ணினாள். மோகன் மலர்விழியின் அன்னை பூரணியின் தங்கை மகன். விக்ரமிற்கு மச்சான் , அத்தான் அப்படி எல்லாம் கூப்பிட்டால் பிடிக்காது .அவனை வெறுப்பேற்றவே அவ்வாறு கூப்பிடுவாள் மலர்விழி.

மலர்விழி அந்த வீடியோவை பார்த்துக்கொண்டிருக்கும்போதே விக்ரமிடமிருந்து கால் வந்தது .

ஹலோ சொல்லுங்க மச்சான்,...... நானே உங்களுக்கு போன் பண்ணனும்னு நெனச்சேன் நீங்களே பண்ணிட்டீங்க என்றாள்.

மலர் என்னை மச்சான் சொல்லாதே என்று அந்த ஏசிபி ஒரு சிறு பிள்ளை போல் அவரிடம் கத்திக் கொண்டிருந்தான் .

அப்படித்தான் கூப்பிடுவேன் மச்சான் .......என்று இழுத்தாள் அவள் .

சரி அதை விடு வேறு ஒரு முக்கியமான விஷயம். என்று ராகவன் கூறியதையும் அம்பிகா அவரிடம் பேசியதையும் கூறினான்.

என்ன மலர் உன்னுடைய விருப்பம் என்ன?

என் அப்பாவின் முடிவுதான் என் விருப்பம்.

உன் அப்பாவின் முடிவு எனில் நாம் இருவரும் திருமணம் செய்து கொள்வதுதான், என்ன செய்து கொள்வோமா?

சரி அப்படியே செய்வோம் விக்ரம் மாமா என்றாள் மலர் .

அப்ப விஜய் அவனைப்பற்றி கொஞ்சமாவது யோசித்தாயா? உனக்காகத்தான் அவன் மூன்று ஆண்டுகள் தாய் நாட்டிற்கே வராமல் மலேசியாவில் பாடுபட்டுக் கொண்டிருக்கிறான் .இங்கு எத்தனை வளம் இருந்தும் ஓய்வில்லாமல் உழைத்துக் கொண்டிருக்கிறான் உனக்காக! உன் மீதுள்ள காதலுக்காக .

நீ அதை பற்றி எல்லாம் கொஞ்சம் கூட யோசித்த மாதிரியே தெரியவில்லையே மலர்.

மாமா உங்களுக்கு இங்க நடந்தது எல்லாம் தெரியும் ஆனந்திற்கும் தெரியும். தெரிந்தும் இப்படி கேட்கலாமா இன்னும் ஒரு முறை அப்பாவினை கஷ்டப்படுத்தவோ, அவரை பாதிக்கும் எந்த ஒரு காரியத்தையும் செய்யவோ நான் தயாரில்லை என்றாள் மலர்.

மலர் மாமாவிடம் நான் பேசுகிறேன் அவர் புரிந்து கொள்வார் .

வேண்டாம் அவர்கள் குடும்பத்தை பற்றி தெரிந்தாலே அப்பா ஒத்துக்கொள்ள மாட்டார். வீணாக அப்பாவிற்கு மனக்கஷ்டம் .அவர் விரும்பியவாறு எல்லாம் நடக்கட்டும் என்றாள் மலர்.

சரி அப்படியே செய்வோம்.இந்த விருப்பமில்லாத இந்த திருமணத்தால் நீ நான் ,விஜய் மூவரும் நிம்மதியில்லாமல் வாழ்வு முழுமைக்கும் தவித்துக் கொண்டே இருப்போம் சரிதானா மலர்.

ஏன் மாமா உங்களுக்கும் என்னை பிடிக்கவில்லையா?

மலர் சொன்னால் புரிந்து கொள் எனக்கு உன்னை எப்போதும் பிடிக்கும் என் மாமா மகளாக .ஆனால் உன்னுடைய மனதில் நான் இல்லை அது எனக்கு நன்றாக தெரியும்.
சரி மலர் எல்லாம் போகட்டும் உன் மனதில் விஜய் இல்லை என்று சொல். நாளைக்கே கூட நான் மாமாவிடம் நம் திருமணம் பற்றி பேசுகிறேன்
ஆனால் நீ உன் மனமறிந்து உண்மையைச் சொல்லவேண்டும் என்றான் விக்ரம்.

அதற்கு அடக்கப்பட்ட அழுகையின் சத்தமே மலரிடமிருந்து பதிலாக கிடைத்தது விக்ரமிற்கு. போனை கட் செய்து விட்டாள் மலர்.

மனம் முழுவதும் விஜய் இருக்கும் பொழுது இல்லை என்று எப்படி அவளால் விக்ரமிடம் பதில் சொல்ல முடியும்.

விக்ரம் மறுபடியும் மலருக்கு போன் செய்தான் ஆனால் மலர் அழைப்பை ஏற்கவே இல்லை.

இந்த குழப்பத்தில் விக்ரமிடம் அந்த வீடியோவை பற்றி சொல்ல மறந்தாள் மலர்.

மங்கையின் அத்தை பத்மா தன் மகன் சுந்தரிடம் போனில் ஏன்டா சுந்தர் மங்கையை பிடிக்கலை என்கிறார் அவளைப் போல் பெண் கிடைக்கும் புண்ணியம் செய்து இருக்க வேண்டும் நல்ல பெண்ணா பேசாமல் அவளையே கட்டிக்கொள் என்றார்.

அம்மா நான் எப்ப மங்கையை பிடிக்கலைன்னு சொன்னேன் . அவளும் எனக்கு இன்னொரு தங்கை மாதிரி தான் புரிஞ்சுக்கோங்க நீ இப்படியே பேசிக்கிட்டு இருந்தா நான் இங்கேயே ஏதாவது ஒரு பெண்ணைப் பார்த்து கட்டிக் கொள்ளப் போகிறேன் என்று மிரட்டினான்

நான் இனிமே வற்புறுத்த மாட்டேன் வேறு பெண் பார்க்கிறேன். உடம்பை பார்த்துக்கொள்.

சரிம்மா ஜானகிக்கு லேப்டாப் அடுத்த மாதம் வாங்கி வருகிறேன் அவளிடம் சொல்லுங்கள் என்று போனை வைத்து விட்டான் .

இனிமேல் மேலும் காலம் தாழ்த்த கூடாது. கனியிடம் பேசி அவளின் மனதை பற்றி அறிந்து கொள்ள வேண்டும் என்று சுந்தர் நினைத்தான். உடனே விடுமுறை எடுத்துக் கொண்டேன் அந்தமான் சென்றான் கனியை பார்ப்பதற்காக.
அங்கே கனியின் வீட்டிற்கு சென்றான் அவள் வீடு காலி செய்த வேறு ஊருக்குப் போய் விட்டதாகக் கூறினார்கள் அவளைப் பற்றிய வேறு எந்த தகவலும் கிடைக்கவில்லை. அவளுடைய அலுவலகத்திலும் அதே பதிலே கிடைத்தது.

கடைசியாக சுந்தர் மலை கோவில் திருவிழாவிற்கு செல்வதற்கு முன் கனியிடம் பேசியிருந்தான் .அதன்பின் போன் செய்யும் போது அவள் வேலை இருப்பதாக கூறவே அவளை தொல்லை செய்யவில்லை. இப்பொழுது ஆளே மாயமாகி விட்டிருந்தாள். என்ன செய்வதென்ற தெரியாமல் சுந்தர் குழம்பி நின்றான்.

எப்படியும் கனியை கண்டுபிடிக்க வேண்டுமென்று அவனுக்கு தெரிந்த போலீஸ் நன்பர்களின் உதவியுடன் அவளின் மொபைல் நம்பரை கடைசி கால் லோக்கேசனை டிரேஸ் செய்தான் அது பெங்களூரை கட்டியது. அதன்பின் போன் அணைத்து வைக்கப்பட்டு இருந்தது. அவளைத் தேடும் பணியை தொடங்கினான். அது ஒன்றும் அவ்வளவு எளிதாக இல்லை.

இப்படியாக சில நாட்கள் அனைவருக்கும் குழப்பமான மனநிலையிலேயே கழிந்தது.

ஈரோட்டில் பச்சை மலையில் இருந்து தப்பிய இன்னொரு தீவிரவாதி மற்றும் அவனுடன் தொடர்பில் இருந்தவர்களுடன் கைது செய்யப்பட்டான். கோவையில் உள்ள பத்திரிக்கை நிருபர்கள் விக்ரமிடம்
என்ன சார் நீங்க பச்சைமலையில் தேடிக் கொண்டிருக்கிறீர்கள் .அவனை ஈரோட்டில் வைத்து பிடிக்கப்பட்டதாக சொல்கிறார்கள் இதைப் பற்றி உங்கள் கருத்து என்ன?
அவன் இங்கிருந்து தப்பிச்சென்ற விவரம் உங்களுக்கு தெரியவில்லையா என்று கேட்டனர்.
நாங்களும் அவனை முழுவீச்சில் தேடிக்கொண்டிருந்தோம். ஒருவேளை அவன் இங்கு வராமலே இருந்திருக்கலாம் அல்லவா அல்லது இங்க இருந்து தப்பித்தும் போயிருக்கலாம் .எங்களுடைய கணிப்பும் தவறாக வாய்ப்பு இருக்கிறது தானே ?யார் பிடித்தால் என்ன தீவிரவாதியை பிடித்தாயிற்று தானே. சாதாரண சந்தேக கேசில் தான் கைது செய்திருக்கிறார்கள் பின்புததான் அவனை பற்றி தெரியவந்திருக்கிறது.ஈரோடு காவல்துறையினரும் தங்களது பணியினை சிறப்பாக செய்திருக்கின்றனர்.எனக்கு கொஞ்சம் வேலை இருக்கிறது .பிறகு சந்திக்கலாம் .நன்றி என்று கூறிவிட்டு உள்ளே சென்று விட்டான் விக்ரம்.

என்ன நடக்கிறது விக்ரம் கண்டிப்பா உன்னுடைய உதவியில்லாமல் ஈரோட்டில் அந்த தீவிரவாதியை கைது செய்திருக்க முடியாது .உண்மையை சொல் என்றார் கமிஷனர்.

எஸ் சார் நான்தான் அவனை தப்பிக்க தப்பிக்க விட்டேன் மேலும் அவன் ஈரோட்டில் இருப்பது எனக்கு தெரியும் அவனுடன் வேறு யார் யார் , இங்குள்ளவர்கள் தொடர்பில் இருக்கிறார்கள் என்று தெரிந்து கொள்ளவே அவனை தப்பி செல்ல அனுமதித்தேன் .அவர்கள் நோக்கம் சிலை கடத்துவது இல்லை இதன் மூலம் வேறு ஏதோ திட்டமிட்டு இருக்கிறார்கள். தற்போது மத கலவரத்தை தூண்டிவிட இருப்பதாக தகவல் வந்தது. அதனால்தான் ஈரோடு கமிஷனிடம் சொல்லி இப்பொழுது கைது செய்ய சொன்னேன் . இன்னும் இதில் யார் யாருக்கு தொடர்பு இருக்கிறது என்று தெரியவில்லை கண்டுபிடிக்கணும் சார் என்றான் விக்ரம்.

நீ இவ்வளவு வேலை பார்த்தும் பேர் புகழ் எல்லாம் வேறு ஒருவருக்கு போய்விட்டதே விக்ரம் என்றார் கமிஷனர் .
இதை இப்பொழுது மீடியாவிடம் சொன்னால் அவனுடன் தொடர்பில் இருந்தவர்கள் எச்சரிக்கை ஆகிவிடுவார்கள் பின் நாம் அவர்களை கண்டுபிடிப்பது சிரமமாகிவிடும்.
பெயர், புகழுக்காக எல்லாம் வேலை பார்த்தால் நம்முடைய கடமையை சரிவர செய்ய முடியாது .உங்களுக்கு தெரியாததா சார் என்றான் விக்ரம் .

உன் அப்பாவை போலவே நீயும் இருக்கிறாய் விக்ரம் அவரும் அப்படித்தான் தன் பணியினை முழு மன நிறைவோடு செய்வார் .மற்ற எதைப் பற்றியும் கவலைப்பட மாட்டார் .
மற்றவர்கள் செய்த வேலையைகூட தனதாக காட்டிக் கொள்வார்கள்.ஆனால் உன்னை நினைக்கும் போது பெருமையாக இருக்கிறது.
வெல்டன் மை பாய் என்றார் கமிஷனர்.

விக்ரம் அதற்கு ஒரு புன்னகையை பதிலாக தந்தான்.

தீவிரவாதிகள் பிடித்துவிட்டதால் சக்தி கல்லூரிரி பழையபடி இயங்கத் தொடங்கியது. மங்கையின் கால் காயம் சரியாகி நன்றாக நடக்கத் தொடங்கியிருந்தாள்.
கவி அன்று மங்கை விக்ரமின் தோளில் சாய்ந்ததை மதியிடம் சொல்லி கேலி செய்து கொண்டிருந்தாள்.
போடி கவி ,நீ அங்கே இருந்திருந்தால் அவர் எடுப்பிலேயே ஏறி அமர்ந்திருப்பாய் நம்ம ராகவா லாரன்ஸ் போல ,நானாவது பரவாயில்லை என்றாள் மங்கை .

விடு கவி அவளுக்குத்தான் அவருடைய சுந்தர் மாமா இருக்கிறாரே அவரைத் தவிர வேறு யாரையும் நினைக்க என்ன பாக்க கூட மாட்டாள் என்றாள் மதி.
அப்படி இல்லை என்று சொன்னாலும் ஒத்துக் கொள்ள மாட்டார்கள். என்னை அப்புறமாக ஓட்டலாம் முதலில் இந்த மினி ப்ராஜெக்டை பார்ப்போம் என்று அனைவரின் கவனத்தையும் ப்ராஜெக்டில் திருப்பினாள்.
ஆனால் அவள் மனம் அங்கு இல்லை. அன்று விக்ரம் அவளை அணைத்து இருந்ததையும் அவனது கனிவான பார்வையையும் எண்ணிப் பார்த்துக் கொண்டிருந்தது.

அவளின் சிந்தனையில் இருந்தவனும் அவளைப் பற்றி தான் எண்ணிக்கொண்டிருந்தான்.
விக்ரம் காரில் பச்சை மலை கடந்தபோது அவன் மனம் தானாக மங்கை பயத்தில் அவனை அணைத்ததை பற்றி எண்ணிக் கொண்டிருந்தது. மங்கையை அப்படி ஒரு நிலையில் பார்த்ததும் பதட்டத்தில் அவனுக்கு ஒன்றும் தோன்றவில்லை பின்பு அவனுடைய போலீஸ்கார மூளை சரியாக செயல்பட்டு மங்கையை காப்பாற்றியது. அவளின் அணைப்பு வாழ்நாள் முழுவதும் வேண்டுமென் அவன் மனம் விரும்பியது இதற்குப் பெயர் என்ன என்று தான் தெரியவில்லை இந்த காவல்காரனுக்கு. காதலிக்கும் பருவத்தில் எல்லாம் படிப்பு,வேலை என்று இருந்து விட்டு இது காதல் தானா என்று கூட அவனுக்கு தெரியவில்லை. எப்படிப்பட்ட சிக்கலான வழக்கையும் எளிதாக ஆராய்ந்து கண்டுபிடிப்பவனுக்கு, அவன் மனதில் உள்ள மங்கையின் மீதமான உணர்வினை சரியாக புரிந்து கொள்ள முடியவில்லை.அவளைப் பற்றிய எண்ணத்தில் மூழ்கி இருந்தவன் முகம் புன்னகையை தத்து எடுத்தது. இதில் அவனைத் தொடர்ந்து வந்த இரண்டு கார்களில் கவனிக்கத் தவறினான். இரண்டு காரும் அவன் முன்னும் பின்னுமாக மறித்தது .அதன் பின்பே விக்ரம் காரை சடன் பிரேக் போட்டு நிறுத்தினான். விக்ரமின் கார் பின்னாலிருந்த காரல் இடித்து தள்ளப்பட்டது. விக்ரமின் கார் நிலை இழந்து மலைச்சரிவில் இறங்கியதும்,காரிலிருந்து குதித்து இறங்கினான் விக்ரம். அப்போது அங்கு இருந்த ஒருவன் விக்ரமின் நெற்றியில் துப்பாக்கியில் குறி வைத்தான்.

மாலை தொடுக்கப்படும்.
 

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
லக்ஷ்மிதேவி டியர்
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
அடடா
மங்கையற்கரசியை நினைத்துக் கொண்டே வந்து வில்லன்களிடம் விக்ரம் மாட்டிக் கொண்டானே
ம்ம்ம்..........ஆனால் ஒன் ஸ்மால் டவுசர் டவுட்டுங்கோ
பொடணியிலும் கண் வைத்திருக்கும் நம்ம விக்ரம் தன்னை ஃபாலோவ் செஞ்ச கார்களை கவனிக்கலை
இதை நாங்கோ நம்போணும்
சரி உங்கள் ஆசையைக் கெடுப்பானேன்
நாங்கள் நம்புறோம்
அடுத்த அப்டேட் சீக்கிரமா கொடுங்க, லக்ஷ்மி டியர்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top