மாலை சூடும் வேளை-23

Advertisement

laxmidevi

Active Member
மாலை-23
பாடல் வரிகள்
வார்த்தை உன் வார்த்தை நின்று போனால்
வாழ்க்கை என் வாழ்க்கை நின்று போகும்
உடலை என் ஜீவன் உதறிப் போகும்
சொல்லு சொல்லு சொல்லு
உள்ளங்கள் பேசும் மொழி அறிந்தால்
உன் ஜீவன் தொலைக்க தேவை இல்லை
இரு கண்கள் பேசும் பாஷைகளை
ஏதொரு மொழிகள் சொல்வதில்லை
தான் கொண்ட காதல் மொழிவதற்கு
தமிழ் நாட்டுப் பெண்கள் துணிவதில்லை
மொழியே போ போ அழகே வா வா வா
மொழியே போ போ போ அழகே வா வா வா......
மங்கையர்க்கரசி ராமநாதனாக இருந்தபோது விக்ரம் தன்னுடைய நேசத்தை வெளிப்படுத்த தயங்கியிருக்கலாம்.ஆனால் மங்கையர்கரசி விக்கிரமாதித்தன் ஆன பின் அவனது தயக்கம் தேவையற்றது.அதுவும் அவள் பிடித்து இருக்கிறது என்று இவனிடம் அன்று போனில் கூறிய பின்பும்.
தந்தை பார்த்த மாப்பிள்ளை என்பதால் சம்மதம் சொல்லி இருப்பாள் என்றெண்ணி தான் அவ்வாறு கூறினான் விக்ரம்.இவன் சும்மா இருந்தாலவது மங்கையர்கரசி தன் நேசத்தை வெளிப்படுத்தி இருப்பாள்.ஏதேதோ பேசி அதையும் கெடுத்துக் கொண்டான். தவளை தன் வாயால் தான் கெடுமாம்.
இன்று எப்படியாவது தன் கணவனான விக்ரமிடம் தன் காதலை சொல்லிவிட வேண்டும் என்ற ஆவலுடன் வந்த மங்கை விக்ரமின் பேச்சினால் உண்டான வருத்தத்தை உள்ளேயே அழுத்திக் கொண்டு புன்னகை முகமாகவே சரி என்றாள்.
தன் பேச்சை ஆதரித்தோ இல்லை மறுத்தோ ஏதாவது பேசுவாள் என்று நினைக்க அவளது தலையைசைப்பில் குழம்பினான் விக்ரம்.

மங்கையின் பதிலின் மூலம் அவள் மனதில் இருப்பதை ஓரளவு கணிக்கலாம் என்று எண்ணியிருந்த விக்ரமிற்கு பெரிய ஏமாற்றமே கிடைத்தது. வாய் திறந்து பேசினால் என்ன என்று மனதுக்குள் செல்லமாக திட்டினான். தன்னைவிட பெரிய அழுத்தகாரியாக இருப்பாள் போலிருக்கிறது.உன் பாடு திண்டாட்டம் தான் விக்ரம் என்று மனதில் எண்ணிக் கொண்டான்.

எப்படி பட்ட குற்றவாளியிடமிருந்தும் விசயத்தை வாங்கிவிடும் விக்ரமால் தன் மனைவியிடமிருந்து ஒரு வார்த்தையை கூட வாங்க முடியவில்லை.

மங்கை உள்ளுக்குள் யோசித்துக் கொண்டிருப்பாள் போல அதற்கேற்ப அவளது கருவிழிகள் கருப்பு வெள்ளை மலர்களாய் அங்குமிங்குமாய் நாட்டியமாடியது .இதைக் கண்ட விக்ரமிற்கு அந்த விழிகளில் இதழ் பதித்து அதில் முழ்கி தொலைந்து போக வேண்டும் என பேராவல் எழுந்தது. இதற்கு மேலும் இங்கே இருந்தால் கண்டிப்பாக தன் கட்டுப்பாடை மீறி விடுவோம் என்று எண்ணினான்.

தன்னுடைய மனைவிதான். தன் உரிமையை எடுத்துக் கொள்ளலாம் தான்.அவளும் மறுக்க போவதில்லை.ஆனால் தன் மனதிலிருக்கும் நேசத்தை அவளிடம் கூறி அதை அவள் முழுமனதுடன் ஏற்றுக் கொண்ட பின்பு காதலாய் தன் மனைவியை ஆள வேண்டும் என்று நினைத்தான்.

அவர்களது இல்வாழ்க்கை காதலால் தொடங்க வேண்டுமே தவிர கட்டாயத்தினால் நிகழக் கூடாது என்று முடிவெடுத்திருந்தான். பின்னால் தானே அந்த முடிவை மீறப் போவதை அறியாமல்.

எனக்கு தூக்கம் வரவில்லை. நான் கொஞ்ச நேரம் வெளியே தோட்டத்தில் அமர்ந்து நினைக்கிறேன் .உனக்கு தூக்கம் வந்தால் தூங்குமா என்று கூறினான் விக்ரம்.

இல்லை எனக்கு தூக்கம் வரவில்லை நானும் தோட்டத்திற்கு வரவா என்று கேட்டாள் .

சரி .

இருங்க நான் டிரஸ் சேஞ்ச் பண்ணி விட்டு வருகிறேன் என்று பட்டுப்புடவையை மாற்றிவிட்டு சுடிதாரில் வெளியே வந்தாள்.

இருவரும் தோட்டத்தில் இருந்த சிமிண்ட் திண்ணையில் அமர்ந்து இருந்தார்கள்

விக்ரம் லேப்டாப்பின் மேல் கண்ணை வைத்துக் கொண்டே மங்கை அறியாதவறு அவளையே பார்த்துக் கொண்டிருந்தான்.

மங்கள்யோ விக்ரம் லேப்டாப்பை பார்க்கும் போது ஓரக்கண்ணால் அவளை பார்த்துக்கொண்டிருந்தாள்.

என் மீது விருப்பம் இல்லாமலா என்னை மணந்து கொண்டார் நான்தான் அவரை விரும்புகிறேனா அவருக்கு அப்படி இல்லையோ? ஒரு வேளை என்னை விரும்புவதாக வீட்டில் கூறியதால் அவர்கள் வீட்டில் திருமணத்திற்கு ஏற்பாடு செய்து விட்டார்களா என்று யோசித்துக் கொண்டிருந்தாள். மீனாக்ஷி அம்மா இந்த திருமணம் உன் சன்னதியில் உன் ஆசியோடு நடைபெற்றது . எங்கள் இருவரையும் நீதான் சேர்த்து வைக்க வேண்டும். எப்போதும் நாங்கள் இருவரும் சொக்கநாதர் மீனாக்ஷியாய் சேர்த்து இருக்க வேண்டும் என வேண்டினாள்.பின்னாளில் தானே விரும்பி அவனை பிரிந்து செல்வாள் என்பதை அறியாமல்
எப்படி இருந்தாலும் இப்போது நான் அவர் மனைவி. அவர் என்னை காதலித்து திருமணம் செய்து கொள்ளாவிட்டால் என்ன? . இனிமேல் நேசிக்கட்டும். எத்தனையோ பெற்றோர் பார்த்து வைத்த திருமணங்கள் எல்லாம் வெற்றிபெறவில்லையா. அவர் என்னை விரும்பாவிட்டாலும் நான் அவரை உயிராய் நேசிக்கிறேன். அதை அவருக்கு உணர்த்துவேன்.காதலியாக இல்லாவிட்டாலும் ஒரு மனைவியா அவரை என்னை விரும்ப வைப்பேன் என்றும் மனதில் முடிவெடுத்தாள்.

விக்ரமின் காதலியும் அவள்தான் மனைவியும் அவள் தான் என்று உணராமல்!!!?

இங்கு விக்ரமோ தான் எடுத்த முடிவு சரி தானா. தன்னால் அதை காப்பாற்ற முடியுமா என்று யோசித்துக் கொண்டிருந்தான். தொழில் சம்பந்தமான விழாக்கூட்டங்களில் பெண்கள் மேலே வந்து விழுந்து பழுகினாலும் சாரி எனக்கு விருப்பமில்லை என்ற ஒற்றைச் சொல்லுடன் நகர்ந்து விடுவான்.அவர்களின் அழகோ நெருக்கமோ அவனை துளியளவு கூட பாதித்தில்லை .

ஆனால் பத்தடி தூரத்தில் இருந்தாலும் அவன் மனைவி அவனை சுண்டி இழுத்ததாள். அவளிடம் இருந்து தள்ளி இருப்பது அவனுக்கு பெரும்பாடாக இருந்தது. எப்படியோ சீக்கிரம் அவளிடம் தன்னுடைய நேசத்தையும் உணர்த்திட வேண்டும் என்று முடிவெடுத்தான். மங்கைக்கு விக்ரமை பிடிக்கும் என்று அவனுக்கு தெரியும் இந்த பிடித்தத்தை விரைவில் காதலாக மாற்ற எண்ணினான்.

ஏற்கனவே மங்கை கரையுடைத்த வெள்ளமாய் இவன் காதல் கொண்டு இருப்பதை புரிந்து கொள்ளாமல்.

போகலாமா மங்கை எனக்கு தூக்கம் வருகிறது என்றான் விக்ரம்.

இவ்வளவு நேரம் மனதில் இருந்த குழப்பங்கள் நீங்கி ஒரு தெளிவான முடிவு எடுத்தால் சரி போகலாம் என்றாள் மங்கையும்.

இவர்கள் இருவரையும் மாடியில் இருந்து ஃபோனில் பேசிக்கொண்டிருந்த சுந்தர் பார்த்தான். அவனுக்கு தவறாக ஏதும் தோன்றவில்லை .இருவருக்குமே இது அவசர திருமணம் தான் .ஏற்றுக் கொள்ள கொஞ்சம் நாட்கள் ஆகலாம் என்று நம்பினான். எது எப்படியோ இப்போது கூட இருவரும் சேர்ந்து தானே இருக்கிறார்கள் என்று நிம்மதியானான்.

மங்கை ஏசி போட்டுக்கொள்ளலாமா இல்ல ஃபேன் மட்டுமே போதுமா?
ஏசி போட்டுக் கொள்ளுங்கள். நான் போர்த்திக் கொள்கிறேன் .
ஏதேதோ எண்ணங்களில் நீந்திக் கொண்டிருந்த இருவரும் நன்றாக தூங்கி விட்டார்கள்.
தூங்கும் போது தன் மீது ஏதோ இடிப்பது போல இருக்க கண் விழித்து பார்த்தான்.
குளிர் தாங்காமல் அவனுடைய மனைவி தன்உடலை குறுக்கி அவனை இடித்தவாறு படுத்துக் கொண்டிருந்தாள்.
புரண்டு படுத்ததில் போர்வை விலகியிருந்தது . ஏசியை குறைத்து விட்டு இருவருக்கும் போர்த்தி மங்கையை தன்னுடன் சேர்த்து அணைத்தவாறே தூங்கிப்போனான். மங்கையும் குளிருக்கு இதமாக அவன் மார்பில் ஒண்டிக் கொண்டாள்.
மங்கையும் விக்ரமும் இணைவார்களா?
மாலை தொடுக்கப்படும்.....
 

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
லக்ஷ்மி தேவி டியர்
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top