மாலை சூடும் வேளை-15

Advertisement

laxmidevi

Active Member
மாலை-15

பாடல் வரிகள்

சுற்றமும் முற்றமும்யாருமே இன்றி
வாழ்ந்திடும் வீட்டினில்தெய்வம் இல்லை
பாசங்கள் நேசங்கள்ஏதுமே இன்றி
வாழ்ந்திடும் வாழ்க்கையோவாழ்க்கையில்லை
பிரிந்தே நாம்வாழ்ந்திடும் போதிலும்நினைவுகள் நம்மைசேர்த்திடுமே
அழகாய் பூ பூத்திடவேண்டியே
வேர்கள் நீர் ஈர்திடுமே
இன்னோர் ஒரு ஜென்மம்
அது கிடைத்தாலும் கூட
இது போல் ஒரு சொந்தம்
கிடைத்திட நாம் வரம் தேவை
யாரென்ன சொன்னாலும்யாரென்ன செஞ்சாலும்
சொந்தமும் பந்தமும் கூட வரும்
நாம் வந்த பின்னாலும்
நான் சென்ற பின்னாலும்சொந்தமும் பந்தமும் பேரு சொல்லும்......

விக்ரமிடம் அவன் அன்னை அம்பிகா திருமணத்தைப் பற்றி பேசி முழுதாக ஒரு மாதம் கடந்திருந்தது .அவன் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் வீட்டில் அவனிடம் திருமணத்தைப் பற்றி பேசவில்லை .

எனவே விஜய்யிடம் பேசி ஒரு முடிவுக்கு வர எண்ணி விஜய்க்கு போன் செய்தான் விக்ரம்.
விஜய் ஆனந்த் தான் இந்தியா வர இன்னும் இரண்டு மாதம் ஆகும் என்றான்.

இதனால் கோபமான விக்ரம்
என்ன சொல்ற இங்கே விட்டால் நாளைக்கு கல்யாணம் பண்ணி வச்சுருக்காங்க போல. நீ இன்னும் ரெண்டு மாசம் கழிச்சு வரேன்னு சொல்ற. நான் என்னடா பண்றது?

ப்ளீஸ் விக்ரம்.எப்படியாவது சமாளி நான் இங்க அக்ரிமெண்ட் சைன் பண்ணிட்டேன் என்னால பாதியிலே வர முடியாது .

முடிஞ்சா எவ்வளவு சீக்கிரம் வர முடியுமோ அவ்வளவு சீக்கிரம் வந்துரு என்றான் விக்ரம்.

கொஞ்சம் சமாளி டா.

சரி விஜய் மாமா உங்க கல்யாணத்திற்கு சம்மதம் சொல்வார்னு நம்பறியா?

கண்டிப்பா .

எப்படி மாமா உனக்கு ஓகே சொல்வார்னு. இவ்வளவு நம்பிக்கையா சொல்ற?

ஏன்னா தன் அப்பாவின் விருப்பம் தான் தன்னோட விருப்பம் என்று மலர் சொல்லிவிட்டாள். அதே மாதிரி மலருக்கு என்னை பிடிக்கும்னு மாமாக்கு தெரிஞ்சா கண்டிப்பா அவரும் ஒத்துப்பார். என்ன கொஞ்சம் தயங்கியலாம் என் குடும்பத்தை பத்தி நினைச்சு .ஆனால் அதை பத்தி பேசி சரி படுத்திட்டேன்னா கண்டிப்பா எங்க கல்யாணத்துக்கு சம்மதிப்பார். மலர் தன் தந்தை மனம் வருந்தக் கூடாது என்று நினைப்பது போல அவளுடைய அப்பாவும் மகளின் விருப்பம் தான் முக்கியம் என்று நினைப்பார் தானே.மலரும் நீயும் வீட்டுப் பெரியவர்களின் மனம் நோகக் கூடாது என்று நினைக்கும் போது உங்களை வளர்த்தவர்களை உடைய குணம் மட்டும் வேறு எப்படி இருக்கும் . அதனால்தான் சொல்கிறேன் கண்டிப்பாக மாமா எங்கள் கல்யாணத்திற்கு ஒத்துக் கொள்வார் விக்ரம்.

அது சரி உங்க வீட்டுல ஒத்துக்குவாங்களா?

கொஞ்சம் எதிர்ப்பு வரலாம் ஆனால் ஒத்துக்குவாங்க ஒத்துக்க வெச்சுடுவேன் என்றான் விஜய் .

நீ நினைச்ச படியே நடக்கணும்னு நானும் விரும்புகிறேன் .முடிஞ்சா அளவு சீக்கிரம் வர பாரு டா நான் இங்க எப்படியாவது சமாளித்து வைக்கிறேன்.

சரி எதையாவது சொல்லி சமாளிப்போம் விஜய் வரும்வரை .என்று நினைத்தான் விக்ரம்.

******

மகா கொஞ்சம் தண்ணி கொடும்மா என்றவாறே கை கால் கழுவி விட்டு வீட்டினுள் வந்தார் ரங்கநாதன்.

அப்போது அவரது தங்கை பத்மாவிடம் இருந்து கால் வரவே எடுத்து பேசினார்.

சொல்லு பத்மா வீட்ல எல்லாரும் நல்லா இருக்காங்களா?
எல்லாம் நல்லா இருக்காங்கஅண்ணா. அங்க அண்ணி அம்மா ,மாது, மங்கை எல்லாரும் நல்லா இருக்காங்களா?

எல்லாரும் நல்லா இருக்காங்க அப்புறம் நம்ம சுந்தருக்கு எதுவும் பெண் அமைந்ததா?

இல்லன்னா ஒன்னும் அமைய மாட்டேங்குது. நீங்களே அங்க நம்ம ஊரிலேயே ஒரு நல்ல பொண்ணா பாருங்களேன் நல்ல குடும்பமா குணமா இருந்தா போதும் .

சரி பத்மா நான் வேணா தரகர்கிட்ட சொல்லி வைக்கிறேன்.கடவுள் யார் யாருக்கு எங்க முடி போட்டுருக்கிறாறோ பார்ப்போம்.


சரிங்க அண்ணா அம்மா கிட்ட குடுங்க.

தன் தாயிடம் பேசிவிட்டு இணைப்பை துண்டித்தார் பத்மா.

ரங்கநாதன் போன் பேசி முடித்ததும் அவளிடம் தண்ணீரை கொடுத்துவிட்டு யார்ங்க போன்ல என்றார் மகா .
அவரிடம் அனைத்தையும் கூறினார் .

நாமளும் மங்கைக்கு வரன் பார்க்கணும் அப்பதான் படிப்பு முடிந்தவுடன் திருமணம் செய்ய வசதியாக இருக்கும் மங்கை ஜாதகத்தை ஜோதிடரிடம் காண்பிக்கனுங்க என்றார் மகாலட்சுமி.

நேத்து ஜோதிடரைப் பார்த்து விட்டுதான் வந்தேன். நாலு மாசத்துல மங்கைக்கு திருமணம் நடந்தால் அவள் அந்த மதுரையை ஆளும் மீனாட்சியை போல் மகிழ்ச்சியுடனும் நிறைந்த செல் வத்துடன், சௌபாக்கியவதியாய் வாழக்கூடிய ஒரு யோக திசை நடக்கிறதாம். எனக்குத்தான் படிக்கிற பிள்ளைக்கு கல்யாணமானு அதுவும் நாலு மாசத்துலன்னு யோசனையா இருக்கு.

நீங்கள் வரன் பாருங்கள் நல்ல இடமாக இருந்தால் செய்யலாம் இல்லைனா பிறகு பார்த்து செய்வோம். அதற்காக அவசரப்பட்டு எதுவும் செய்ய வேண்டாம் நல்ல குடும்பமாக இருக்கணும் மங்கைக்கும் பிடிக்கணும் .பார்த்து தான் செய்யனும் . அவசரத்தில் கல்யாணம் பண்ணிட்டு அவகாசமாய் அழுனு. அப்படிங்கற மாதிரி ஆகிற கூடாது.

சரிமா .மாது எங்கே ஆள காணோம்?

அவன் நம்ம மாந்தோப்புக்கு போய் இருக்காங்க.

தோப்புக்கு போயிருக்கானா, கிரிக்கெட் விளையாட போயிருக்கானா. இந்த வருஷம் ப்ளஸ் 2ஞாபகம் இருக்கா ஒழுங்கா படிக்க சொல்லு அப்பதான் நல்ல மார்க் வரும். வீடு தங்குவதில்லை.

இல்லங்க தினமும் வீட்டில் வந்து படிக்க தான் செய்வான் இன்னைக்கு தான் போய் இருக்கான் நான் பாத்துக்குறேன் என்ற தன் கணவனை சமாளித்தார் மகாலட்சுமி.

சரி மாதுவிடம் சொல்லி வை.

*********

விக்ரம் கமிஷனர் ஆபீஸில் அவனுடைய அறையில் அமர்ந்து கணினியில் ஏதோ டைப் செய்து கொண்டிருந்தான். அப்போது அவன் நண்பன் சுரேன் கால் செய்தான்.

சொல்லுடா என்றான் விக்ரம் .

நீ இப்போது ஃபிரி தான உன்கிட்ட கொஞ்சம் பேசணும் நான் கமிஷனர் ஆபீஸ் வெளியே தான் இருக்கேன் என்றான் சுரேன்.

உள்ளே வாடா பேசலாம் என்றான் விக்ரம் .






சுரேன் விக்ரமின் அறைக்குள் வந்தான்.

ஏதாவது சாப்பிடறியா?

சரி காபி சொல்.

காபி வந்தவுடன் காபியைப் பருகினர்.

என்னடா ஏதாவது முக்கியமான விஷயமா இங்கேயே வந்து இருக்கிறாய் என்று வினாவினான் விக்ரம் .

ஆம்.அப்பாவ எக்ஸ்போர்ட் டீலர்ஸ் மீட்டிங்கில் பார்த்தேன் .உன் திருமணம் விஷயம் பற்றி என்னிடம் கூறினார் .நீ எதுவும் பதில் சொல்லாமல் இருப்பதாக வருத்தப்பட்டார். நீ ஏதாவது சொன்னால் தானே அவர்கள் ராகவன் அங்கிளுக்கு
பதில் சொல்ல முடியும் .

என்ன சொல்றது உனக்கு விஜய் மலர் காதல் விஷயம் தெரியும் தானே .பின் இதில் நான் என்னடா சொல்லவது என்று சலிப்பாய் கூறினான் விக்ரம்

நீ இதைப் பற்றி ராகவன் அங்கிளிடம் சொல்ல வேண்டியது தானே .இல்ல நம்ம அப்பாவிடமாவது சொல்லலாம் தானே.

சொல்லி விடலாம் தான்.ஆனால் அவர்கள் எப்படி எடுத்துக் கொள்வார்கள் என்று தெரியவில்லை ஏற்கனவே நடந்த பிரச்சினையில் மாமாவிற்கு கொஞ்சம் உடல்நிலை கெட்டு விட்டது அவரை வற்புறுத்த முடியாது .என்னுடைய விஷயம் என்றால் அப்பாவிடம் சொல்லி விடுவேன் இதன் மலர் விஜய் சம்பந்தப்பட்டது .அதைபற்றி நான் எப்படி கூறமுடியும் சுரேன்.

சரி உனக்கு இந்தத் திருமணத்தில் விருப்பம் இல்லை என்று கூறிவிடலாமே.

நான் அப்படிக் கூறினால் மாமா உடனடியாக வேறு மாப்பிள்ளை பார்த்து விட்டால் என்ன செய்வது விஜய் வரவே இன்னும் இரண்டு மாதமாகும்.மலரும் தன் அப்பா சொல்வதைத் தான் கேட்பாள். ஒரே குழப்பமா இருக்குடா வீட்டிற்கு சென்றால் எதுவும் கேட்பார்களோ என்று வேலையை காரணம் காட்டி வெளியிலேயே சுற்றிக் கொண்டு இருக்கிறேன் .அம்மா வேறு பாவம் என் பதிலுக்கு காத்து கொண்டிருக்கிறார் .என்னால முடியலடா சாமி .

சரி விடு விக்ரம் பார்த்துக்கலாம் . வேற ஏதாவது வழி இருக்குதான்னு பார்க்கலாம்.

சரி சாரு கிட்ட பேசுனியா அவ உன் மேல ரொம்ப கோபமா இருக்கா.

பேசி ரொம்ப நாளாச்சு மலர் பிரச்சினை பெரிய பிரச்சினையா ஓடிட்டு இருக்கு.இதுல எங்க சாருகிட்ட பேச.


டென்ஷனாகாத எதா இருந்தாலும் சமாளிப்போம். நான் அப்பாகிட்ட பேசி சமாதானப்படுத்தி வைக்கிறேன் என்று கூறி விக்ரமிடம் இருந்து விடைபெற்று சென்றான் சுரேன்.

மனம் மிகவும் குழம்பி நிலையில் இருக்கவே தன் தங்கை பிள்ளைகளை பார்த்தால் நன்றாக இருக்குமென்று தோன்றியது விக்ரமிற்கு.

உடனே மணிமேகலையை போனில் அழைத்தான் விக்ரம்.

ஹாய் மேகி எப்படி இருக்க மாம்ஸ் எப்படி இருக்கார் என் பட்டுஸ் எப்படி இருக்காங்க?

எல்லாரும் நல்லா இருக்கோம் உன் பட்டூஸ் தான் ஒரு வாரமா உன்ன காணாம தேடிட்டே இருக்காங்க அவங்க தொல்லை தாங்க முடியல என்றால் மேகி.

கொஞ்சம் பிசி மேகி என் படடூஸ்க்கு சம்மர் ஹாலிடே தானே. நீங்க மூணு பேரும் பேசாம நம்ம வீட்டுக்கு வந்துடுங்களேன்.

உங்க மாம்ஸ் விட்டா தான?

மாம்ஸ் வேணும்னா அவர் வொய்ஃப் அங்கேயே வைத்துக் கொள்ளட்டும் என் பட்டூஸை மட்டுமாவது அனுப்பி வையுங்கள் என்று தங்கையை வாரினான் விக்ரம்.

விக்ரமின் தங்கை மணிமேகலையின் பிள்ளைகள் மூத்தவள் அபிநயா பர்ஸ்ட் ஸ்டாண்டர்ட். இளையவன் அக்ஷய் எல்கேஜி .

இருவருடன் நேரம் செலவழிப்பது விக்ரமிற்கு மிகவும் பிடிக்கும். அதாவது அவனுக்கு நேரம் இருந்தால். இல்லையெனில் போனில் மட்டுமாவது பேசிக் கொள்வான். இருவருக்கும் தன் மாமனுடன் விளையாடுவது மிகவும் பிடிக்கும் . இருவருடன் சரிக்கு சரி மல்லுக்கட்டி அவர்களிடம் விளையாட்டில் தோற்பான். கண்ணசைவில் ஒரு மாவட்டத்தினை நிர்வாகிக்கும் அந்தக் காவலன் கண்ணாமூச்சி விளையாட்டில் அவர்களை கண்டுபிடிக்க முடியாததை போல் நடிப்பான். விக்ரம் மணியின் குழந்தைகள் வீட்டிற்கு வந்துவிட்டால் கொஞ்சம் நேரமே வீட்டுக்கு வர பார்ப்பான்.மூவரும் விளையாடுவது அம்பிகாவிற்கு விக்ரம்,மணியின் சிறுவயதினை ஞாபகப்படுத்தும்.
மொத்த வீடே மகிழ்ச்சியாக இருக்கும்.

சரி நீ வரியா அனுப்பி வைக்கிறேன் என்று கேட்டாள் மேகி.

இல்ல மேகி அபபாவ அனுப்பிவைக்கிறேன் எனக்கு கொஞ்சம் ஒர்க் இருக்கு என்றான் விக்ரம்.

அப்புறம் இந்த மலர் இருக்கா இல்ல அவ என்று மணிமேகலை பேசிக்கொண்டிருக்கும்போதே விக்ரமை கமிஷனர் அழைப்பதாய் ஒருவர் வந்து சொல்லவும்

சாரிடா மேகி கமிஷனர் கூப்பிடுகிறார் அப்புறம் பேசலாம் என்று கூறி போனை வைத்து விட்டான் விக்ரம்.

ஒருவேளை மேகி கூறியதை அவன் முழுவதும் கேட்டிருக்கலமோ?

என்ன செய்ய எல்லாம் விக்ரமின் நேரம்...

பார்ப்போம் .

மாலை தொடுக்கப்படும்...
 

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
லக்ஷ்மிதேவி டியர்
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top