மாலை சூடும் வேளை-14

Advertisement

laxmidevi

Active Member
மாலை-14


பாடல் வரிகள்


செவ்வானம் தொட்டு தொட்டு


செந்தூரம் கொஞ்சம் இட்டு


செவ்வல்லி பூவில் செய்த தேகமோ


மலையோடு தோள்கள் வாங்கி


மதயானை தேகம் வாங்கி


பொலிவான தோற்றம் உந்தன் தோற்றமோ


குற்றால சாரலுக்கும் கொடைகானல் தூரலுக்கும்


இல்லாத சுகம் உந்தன் வார்த்தையோ


நாடோடி மன்னனுக்கும் ராஜராஜ சோழனுக்கும்


உண்டான வீரம் உந்தன் வீரமோ!!!!


விக்ரம் காயங்கள் ஆறி மறுபடியும் அவன் பணியில் சேர்ந்து விட்டான்.


நாட்கள் அதன்போக்கில் சென்றன.


மூன்றாம் வருட மாணவர்கள் ஒரு மினி ப்ராஜெக்ட் செய்ய வேண்டும் அவர்கள் அதை செமஸ்டர் எக்ஸாம் லீவு முடிந்து வந்து சமர்ப்பிக்க வேண்டும் .அந்த ப்ராஜக்ட் ஒரு விஷயமாக மங்கையும் மதியும் அவர்கள் கல்லூரி பக்கத்திலுள்ள ஒரு கம்ப்யூட்டர் சென்டருக்கு போய் கொண்டிருந்தார்கள் .அவர்கள் வேலையை முடித்துவிட்டு வரும் போது மதியின் அத்தை மற்றும் அவளின் அத்தானை பார்த்தார்கள் . மதியின் அத்தை காதல் திருமணம் செய்து கொண்டதால் மதியழகியின் தாத்தா ஏற்றுக்கொள்ளவில்லை .தற்செயலாக மதியை பார்த்த அவளது அவளிடம் வந்து பேசினார். இதுபோல அவ்வப்போது இருவரும் பேசிக் கொள்வார்கள். அவர்களுக்கு மதியை தன் மருமகளாக விருப்பம் . தற்போதும் மதியின் அத்தை கீதா அவளை பார்க்க வந்திருந்தார். குடும்ப விஷயம் பேசும்போது நான் எதற்கு என்று மதி குடும்பத்தினருக்கு தனிமை கொடுத்துவிட்டு பேசி விட்டு வா மதி பஸ் ஸ்டாப்பில் இருக்கிறேன் என்று கூறிவிட்டு சென்றாள் மங்கை.


அப்போது அங்கு சனி பிரதோஷ சிறப்பு வழிபாடு என்று ஒரு போஸ்டரை பார்த்தாள். சிவன் கோயில் பஸ் ஸ்டாப் பக்கத்தில்தான் இருந்தது. கோவிலுக்கு போய் சாமி கும்பிடலாம் சில நாட்களாக விக்ரமின் நினைவில் குழம்பி இருந்த மனதிற்கு அமைதி கிடைக்கட்டும் என்று எண்ணி அங்கு சென்றாள்.


அந்த இறைவன் அவளுக்கு அங்கு என்ன வைத்திருந்தாரோ யாருக்கு தெரியும் .


அங்கு கோவிலில் கூட்டம் நிரம்பி வழிந்தது. நீண்ட வரிசையில் மக்கள் காத்திருந்தனர் என்ன முயன்றும் சாமியை வெளியிலிருந்து எட்டிக்கூட பார்க்க முடியவில்லை.வரிசையில் நின்றால் விடுதிக்குப் போய் சேர முடியாது. சரி கிளம்பலாம் நமக்கு இன்னைக்கு சாமியை பார்க்க கொடுத்துவைக்கவில்லை என்று நினைத்து கொண்டு நடந்தாள்.


அப்போது அங்கு விக்ரம் இன்னொருவருடன் பேசிக்கொண்டே வந்து கொண்டிருந்தான்.




மெருன் கலர் சட்டையும் அதற்கு மேட்சாக பேண்டும் அணிந்திருந்தான் எப்போதும் போல் கூலர்ஸை சட்டையின் மேல் பட்டன் வெளியில் மாட்டி இருந்தான் . இடது கையில் வாட்ச் மாநிறத்துக்கும் சற்று அதிகமான நிறம் நல்ல உயரம் எப்பவும் போல முகத்தில் இருக்கும் கம்பீரம் ,கூர்மையான அளவெடுக்கும் பார்வை. சொல்லப்போனால் நம்ம ஹீரோ மகேஷ்பாபு போல் இருந்தான் என்ன நிறம் மட்டும் கொஞ்சம் கம்மி.


அவனைப் பார்த்த மங்கை கண்ணை எடுக்காமல் அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள்.


அவளை பார்த்து ஹாய் மங்கை என்றான் விக்ரம்.


அவள் இது எதையும் உணராமல் அவனையே சைட் அடித்துக் கொண்டிருந்தாள்.


மங்கை என்று விக்ரம் இரு முறை அழைத்த பிறகே அவனைப் பார்த்தாள்.


என்ன பலமான யோசனை மங்கை நான் அழைப்பதை கூட உணராமல்.


சாரி சார் கூட்டம் அதிகமாயிருந்தது சாமி பார்க்க முடியல வரிசையில நின்னா ரொம்ப லேட்டாகும் விடுதிக்குப் போக முடியாது .அதை பற்றி யோசித்தேனா உங்களை கவனிக்கவில்லை சார் என்று நம்பும்படியாக கூறினாள் .


நீ சொன்னால் நான் நம்புகிறேன் மங்கை என்றான் அவன் அவளை நம்பாத பாவனையில்.


ஏண்டி இப்படி பப்ளிக்காகவா சைட் அடிப்பது. சைட் அடிப்பது ஒன்னும் நமக்கு புதுசு இல்ல ஆனா அதுக்குன்னு இப்படியா என்ற அவளே மைண்ட் வாய்ஸில் பேசிக்கொண்டாள். சரி சரி இனிமேல் இதுபோல் பார்க்கக்கூடாது என்று அவளுக்கு அவளே பதிலும் சொல்லிக்கொண்டாள் எல்லாம் மைண்ட் வாய்ஸில் தான் .
நொடிக்கொரு முறை மாறும் மங்கையவளின் முக பாவனைகளில் தன்னையே தொலைத்துக் கொண்டிருந்தான் அந்த காவல்காரன்.


அப்ப நீ என்ன சாமி கும்பிடனுமா என்னுடன் வா கூட்டி போகிறேன் உள்ளே எல்லாம் செல்லமுடியாது.இந்த பூஜை பொருட்களைக் வெளியிலிருந்து கொடுத்து விட்டு சாமி பார்த்து விட்டு வரலாம் .சரியா . என்றான் விக்ரம்.


ஏனோ அவள் முகம் வாடினால் அவனுக்குத் தாங்கவில்லை


சாமி ஆங்கிள் அந்த பூஜை பொருட்களைக் மங்கையிடம் கொடுத்து விட்டு காரில் இருங்கள் வருகிறேன் என்றான் விக்ரம்.


சரிங்க தம்பி.


மங்கை நீ அதை வாங்கிக் கொள்.


அவளும் வாங்கிக் கொண்டு அவனுடன் நடந்தாள்.


நீங்கள் சாமி எல்லாம் கும்பிடுவீர்களா சார்?


ஏனம்மா நான் எல்லாம் சாமி கும்பிட கூடாதா என்றான் கேலியாக.


இல்லை சார் என்று இழுத்தாள் அவள்.


அதற்குள் கோவிலில் கர்ப்பகிரகத்தின் வெளி கேட் அருகில் வந்து விட்டிருந்தனர் .


இங்குள்ளவர்களிடம் கொடுத்துவிட்டு சாமி கும்பிடு நான் இங்குள்ள நிர்வாகியை பார்த்து பேசிவிட்டு வருகிறேன் என்றான் விக்ரம்.


அவரிடம் பேசி முடித்து விட்டு அவள் அருகில் வந்தது கூட தெரியாமல் அவள் உள்ளே எட்டி எட்டி பார்த்துக் கொண்டிருந்தாள்.


என்ன மங்கை இன்னும் சாமி பார்க்க முடியலையா


உள்ளேயும் கூட்டம் தான் இருக்கு யாருமே வரல சார் என்றாள்.


இதை கவனித்த கோவில் நிர்வாகி மேடம் நீங்கள் அந்த பக்கமாக உள்ளே போய் சாமி கும்பிடுங்கள் என்றார் விஜபி தனி வரிசையை காட்டி.


இல்ல சார் வேண்டாம் எல்லாரும் காத்திருக்கையில் இப்ப வந்துட்டு நான் மட்டும் முதலில் உள்ள போய் சாமி கும்பிடுவது நல்லா இருக்காது. கடவுளின் முன் அனைவரும் சமமே. கடவுளைக் காண வேண்டுமானால் காத்திருக்கத்தான் வேண்டும். வரிசையில் நிற்க இயலாதவர்கள் முடியாதவர்களுக்கு வேண்டுமானால் விலக்கு அளிக்கலாம் .என்னை பற்றி உங்களுக்கே தெரியும் தானே வேண்டாம் சார் என்றான் விக்ரம் தன்மையாக.


இல்ல மேடம் ரொம்ப விருப்பப் பட்ட மாதிரி இருந்துச்சு அதான் என்று இழுத்தார் அவர்.


வேண்டாம் சார் என்றாள் மங்கையும்.


சார் எப்படியும் இந்த பிரசாதத்தை கொடுக்க நான் உள்ளே போகனும் எனக்கு பதில் நீங்கள் இருவரும் இதை கொடுத்துவிட்டு சாமி கும்பிட்டு விட்டு வாருங்கள். இப்போது உங்கள் கொள்கைக்கு எந்த பிரச்சனையும் வராது தானே .எனக்கு பதில் நீங்கள் போங்கள் என்றார் அந்த நிர்வாகி சிரித்தவாறே.


அவர் கூறியதும் மங்கையின் விழிகளில் தெரிந்த மகிழ்ச்சியை பார்த்ததும் சரி என்றான் விக்ரம்.


உள்ளே போய் பூஜை பொருட்களை கொடுத்துவிட்டு சாமி கும்பிட்டு வா இந்த ஒரு முறை மட்டும் தான் இனிமேல் இதே மாதிரி எதிர்பார்க்க கூடாது என்றான் கண்டிப்பாக.


நீங்களும் வாங்க சார் என்றாள் மங்கை.


இல்ல வேண்டாம் நீ மட்டும் போ.


பிளிஸ் வாங்க என்று கண்களாலேயே கெஞ்சினால் மங்கை.


அதை மறுக்க இயலாமல் மங்கையுடன் விக்ரம் சாமி கும்பிட சென்றான். அவர்கள் உள்ளே சென்றபின் தான் இறைவனுக்கு கற்பூர ஆரத்தி காட்டினார்கள் .அடிமுடி காணமுடியாத இறைவனையும் அவரை தன்னுள் கொண்டிருக்கும் அம்மனையும் அந்தக் கற்பூர ஒளியில் தரிசித்த போது இருவருமே மனநிறைவாக உணர்ந்தனர் .அங்கிருந்த பூசாரி விக்ரமை கண்டதும் பூ பழம் நெய்வேத்தியம் பிரசாதம் எல்லாம் தட்டில் வைத்துக் கொடுத்தார்


விக்ரம் அதை மங்கையை வாங்கிக்கொள்ள சொன்னான்.


இருவரும் அங்கிருந்து வெளியே வந்தனர் .சில நாட்களாக மனதில் இருந்த சஞ்சலம் அனைத்தும் நீங்கி மனம் நிம்மதியாக இருப்பதை உணர்ந்தால் மங்கை.


எல்லா பிரச்சனைக்கும் சீக்கிரமாக ஒரு நல்ல முடிவு கிடைக்கும் என்ற நம்பிக்கை வந்தது விக்ரமிற்கு.


அதன் பின் இருவரும் எதுவும் பேசிக்கொள்ளவில்லை . மனம் ஒருவிதமான அமைதியில் இருந்ததால் அங்கு பேச்சுவார்த்தை தேவைப்படவில்லை.



அழகான முகம், சின்னதாய் ஒரு பொட்டு அதன் மேலே திருநீறு குங்குமம் அவளுக்கு பொருத்தமான நிறத்தில் அவளுடைய உடை . அவளுடைய கிளிப்பில் அடங்காமல் முகத்தில் மோதும் முடியினை விக்ரமின் கைகள் தன்னியல்பாய் ஒதுக்கியது. மங்கையின் கைகளைளில் பிரசாத தட்டு இருந்ததால் அவளால் கூந்தலை ஒதுக்க இயலவில்லை. விக்ரமின் விரல் மங்கையின் முகத்தினை லேசாக தீண்டவும் முகம் செம்மை நிறம் பூசிக்கொண்டது. இது ஒரு அக்கறையான செயல்பாடு இதை பெரிதாக எடுத்துக் கொள்ளக் கூடாது என்ற அவளுக்கு அவளே கூறிக்கொண்டாள். சாதாரணமாய் இருப்பதாய் கட்டிக் கொண்டாள்.

பெண்ணிவளின் அருகில் தன் சுயம் தொலைவதை உணர்ந்த காவலன் நான் கிளம்புகிறேன் மங்கை நீ தனியாகவா வந்தாய் .


இல்ல சார் மதியுடன் தான் வந்தேன் பஸ் ஸ்டாப்பில் இருப்பாள் .


சரி பத்திரமாக விடுதிக்கு சொல்லுங்கள்.


அப்போதுதான் ஞாபகம் வந்தவளாக சார் இந்தாங்க பிரமாதம் என்றாள் மங்கை .

மங்கையை தங்கள்

குடும்பத்தில் ஒருத்தியாக நினைத்துத்தான் பிரசாதத்தை அவளை வாங்க சொன்னான் விக்ரம். இப்போது அதை அவளிடமிருந்து வாங்க அவனுக்கு மனமில்லை.


அப்பாவும் அம்மாவும் இன்னைக்கி கோவிலுக்கு வருவார்கள் அப்போது வீட்டிற்கு பிரசாதம் வாங்கி வருவார்கள் நான் எடுத்துக் கொள்கிறேன் இதை நீ எடுத்துக் கொண்டு போய் உன்னுடைய பிரான்சுக்கும் கொடு என்று சொல்லிவிட்டு கிளம்பிவிட்டான்.


மதியும் இவளைத்தான் பஸ்ஸ்டாப்பில் எதிர்பார்த்துக் கொண்டிருந்தாள்.


நேரமாகிவிட்டது நானே உங்களை இன்று விடுதியில் விட்டுவிட்டு செல்கிறேன் என்றான் மதியின் அத்தை மகன் .


ஒருவழியாக மங்கையும் மதியும் தங்கள் ரூம் வந்தனர்.


மங்கையிடம் இருந்த பிரசாதத்தை பார்த்துவிட்டு கோவிலுக்கு போனீங்களா என்றால் கவி .


மங்கை அவளிடம் நடந்ததை தெரிவித்தாள்.


பிரசாதம் ஏசிபி சாருக்கு தான் கொடுத்தாங்க ஆனா ஏன்னு தெரியல அவர் என்கிட்ட கொடுத்துட்டு நீ எடுத்துட்டு போனு சொல்லிட்டார்.


ஏன் எனக்கு தெரியுமே ஏன்னா நீ அந்த பொங்கலை ஆ னு பார்த்து இருப்ப அதான் பாவம்னு உடனே கொடுத்துட்டார் என்று கலாய்த்தாள் மதி.


நானே எல்லாத்தையும் சாப்பிட்டு இருக்கனும் உங்களுக்கு கொண்டுவந்தேன் ல என்ன சொல்லணும் என்றாள் மங்கை.


அதை விடு மங்கை அவளை போலத்தானே உன்னையும் நினைப்பாள் என்று மதியை கலாய்த்தல் கவி தங்களுக்குள் சலசலத்துவாறே ப்ராஜெக்டை செய்து முடித்தனர்.


***


மலர் மலர் அப்பாவைக் கூப்பிடு மா டிபன் சாப்பிடலாம் என்றார் மலரின் தாய் பூரணி


சாப்பிட வருகிறோம் காலை டிபன் என்னம்மா என்றால் மலர் .



உனக்கு பூரி அப்பாவுக்கு இட்லி மெது வடை .


ஒரு பூரியே பூரி செய்து இருக்கிறதே அடடா ஆச்சரியக்குறி அப்பா


பாருங்களேன் எப்படி என் கவிதை என்றால் மலர் தன் தந்தையிடம்


சூப்பர்டா குட்டி மா என்றார் அவர்.


பாவமே பிள்ளை கேட்டானு உனக்கு பூரியும் உங்க அப்பாவுக்கு இட்லியும் நான் வேலை மெனக்கெட்டு செஞ்சு கொடுத்தா நீ என்னை கலாக்கிறாயா உனக்கு வர வர வாய் ஜாஸ்தி ஆயிடுச்சு பாவம் விக்ரம் தம்பி உன் கிட்ட மாட்டிக்கிட்டு என்ன பாடு பட போறதோ?


இதைக் கேட்டதும் மலரின் முகம் வாடியது.


இதை பார்த்த ராகவன் என்னடா மலர் உனக்கு இந்த திருமணத்தில் சம்மதம் தானா?


உங்க முடிவு தாம்பா என் விருப்பம் என்று சிரித்தாள் மகிழ்ச்சியாக .


சரிடா குட்டி எப்போதும் இப்படி சிரித்துக் கொண்டே இருக்க வேண்டும் அதுதான் எங்களுக்கு வேண்டும் என்றார் ராகவன்.


அண்ணி கிட்டே பேசிட்டிங்கள அண்ணி என்ன சொன்னாங்க என்றார் பூரணி ராகவனிடம் .


அக்கா மாப்பிள்ளை கிட்ட பேசிட்டு சொல்றேன் னு சொன்னாங்க இப்பதான் உடம்பு சரியா இருக்கு இனிமே தான் அவர் கிட்ட இதை பத்தி பேசணும் என்றார் ராகவன் .


நல்லபடியா இவள் கல்யாணத்தை முடித்தால் தான் எனக்கு நிம்மதி என்றார் பூரணி.


எல்லாம் நல்லபடியாகவே நடக்கும். கவலைப்படாதே பூரி. கொஞ்சம் வேலை இருக்கிறது போயிட்டு வரேன் என்று சொல்லிவிட்டு கிளம்பினார் ராகவன்.


அதே நேரத்தில் விக்ரம் மலரின் ஆனந்துடன் போனில் தீவிரமாக சண்டையிட்டுக் கொண்டிருந்தான்.


யாருக்கு யாருடன் முடி போட்டிருக்கிறதோ!!!


பார்ப்போம்.


மாலை தொடுக்கப்படும்.
 

laxmidevi

Active Member
Thank u banumathi mam...

Friends please share your comments ..story is going good or I need to change anything in the way...
Thanks for your support friends..

Regards
Laxmidevi.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top