மாலை சூடும் வேளை-13

Advertisement

laxmidevi

Active Member
மாலை-13
பாடல் வரிகள்.
அடி நீதான் என் சந்தோசம்
பூவெல்லாம் உன் வாசம்
நீ பேசும் பேச்சேல்லாம்
நான் கேட்கும் சங்கீதம்
உன் புன்னகைநான் சேமிக்கின்ற செல்வம்மடி
நீ இல்லையென்றால்நானும் இங்கே ஏழையடி
நெடுங்காலமாய் புழங்காமலே
எனக்குள்ளே நேசம் கிடக்கின்றதே
உனைப்பார்த்ததும் உயிர் தூண்டவே
உதடுகள் தாண்டி தெறிக்கின்றதே
தரிசான என் நெஞ்சில் விழுந்தாயே விதையாக
நீ அன்பாய் பார்க்கும் பார்வையிலே என் ஜீவன் வாழுதடி
நீ ஆதரவாக தோள் சாய்ந்தால் என் ஆயுள் நீளுமடி......
தன் செல்போன் சத்தத்தில் தூக்கம் கலைந்து எழுந்தான் சுந்தர். அதில் சொல்லப்பட்ட செய்தியில் அதிர்ந்து வேகமாக கிளம்பினான் .
மருத்துவமனையின் அடைந்த சுந்தர் அங்கே அழுது கொண்டிருந்த கனிமொழியை பார்த்து
என்னாச்சு கனிமா அம்முவுக்கு என்ன? ஆச்சு நேத்து சாயந்திரம் கூட பார்த்தேனே நல்லா தானே விளையாடிட்டு இருந்தா? திடீரென எப்படி காய்ச்சல் ? கனி அழாதேம்மா என்னாச்சு சொல்லு ?அப்பதான் எனக்கு தெரியும்.



கனி அழுகையை குறைத்து நடந்ததை கூறினாள் .
கனிமொழி வேலை முடிந்து வந்த தன் மகளுக்கு சப்பாத்தியும் குருமாவும் செய்துகொண்டிருந்தாள் அப்பொழுது கனிமொழியின் அம்மா வைதேகியும் சம்முவும் கோவிலுக்கு சென்று விட்டு புதிதாய் இருவரை உடன் அழைத்து வந்தார்கள்.
கனிமொழி அவர்களுடன் வந்தவர்களை வரவேற்று காபி கொடுத்தாள்.
நீ உட்காருங்க கனிமொழி நான் உங்ககிட்ட பேசணும் என்றார்கள் அவர்கள்.
நான்தான் வைதேகி அம்மாவின் பையன் கணேஷ் இது என் மனைவி கலா. ஒரு பிரச்சனையில் அம்மா வீட்டை விட்டு வெளியே வந்துவிட்டார்கள் நாங்களும் இவ்வளவு நாள் தேடிக்கொண்டே இருக்கிறோம் இப்பொழுதுதான் கண்டுபிடிக்க முடிந்தது.
சரி வாருங்கள் என்று கூறினால் உங்களை தனியாக விட்டுவிட்டு வர மறுக்கிறார்கள்.
நான் செய்தது தவறுதான் எங்களை பெரிய மனது வைத்து மன்னிக்கக் கூடாதா? எந்த வீட்டில்தான் பிரச்சனை இல்லை கனிமொழி. நானும் இந்த நான்கு வருடமாக தேடிக் கொண்டுதான் இருக்கிறேன்.நீங்கள் அவர்களை நன்றாக பார்த்துக் கொண்டதற்கு நன்றி. இனிமேலாவது அம்மா எங்களுடன் வருவதற்கு நீங்கள்தான் அவர்களை சம்மதிக்க வைக்க வேண்டும் என்று கூறினான் கணேஷ் .
இதைக் கேட்ட கனிமொழி ஒரு நிமிடம் அதிர்ந்தாள் பின்பு சுதாரித்து அம்மா அவங்க சொல்வதும் சரிதானே ,ஏதோ தெரியாம செஞ்சுட்டாங்க. அவங்க மன்னிப்பு கேட்டதுக்கு அப்புறம் நீங்க அவங்களை பண்ணிக்கிறது தான் நியாயம் .
எல்லாம் சரிதான் கனிமா உன்னையும் பாப்பாவையும் விட்டுட்டு நான் எப்படி போறது ?
எங்களுக்கும் உங்களை விட்டு இருக்கிறது கஷ்டம் தான்.
நாலு வருஷம் உங்களைப் பிரிந்து இருந்திருக்காங்க. இனிமேலாவது அவ கூட இருங்க. நானும் சம்முவும் தோன்றும்போது உங்களை வந்து பார்த்துப்போம். நீங்களும் அடிக்கடி வாங்க என்று கூறினாள் உண்மையில் கணேஷ் அவன் அம்மாவை கூப்பிடும்போது அனுப்ப மாட்டேன் என்று சொல்ல தான் யார் என்று நினைத்தாள் கனிமொழி.ஒருவாறு வைதேகியை சமாதானப்படுத்தி அவர் மகன் கணேஷுடன் அனுப்பி வைத்தாள்.
வைதேகியை கேட்டு சம்மு அடம் பிடித்தாள்.பொதுவாக சம்பூர்ணா அடம்பிடிக்கும் பெண்ணில்லை சொன்னால் புரிந்து கொள்வாள் அதனால் இதுவரை கனி அவளை அடித்ததே இல்லை. அவளும் அடிக்கும் படி நடந்துகொண்டதில்லை.
இப்போது வைதேகியை கேட்டு அழுதுகொண்டே இருந்தாள். எவ்வளவு சமாதானம் கூறியும் அழுகையை நிறுத்தவில்லை ஏற்கனவே வைதேகி அம்மாவை பிரிந்த குழப்பத்தில் இருந்த கனி சம்முவை அடித்துவிட்டாள். அதனால் அழுது கொண்டே தூங்கி விட்டால் சம்மு.
கொஞ்ச நேரம் கழித்து பார்த்தபோது சம்முவின் உடல் அனலாக கொதித்தது தூக்கத்தில் ஏதோ உளறிக் கொண்டே இருந்தாள்.
உடனே பயந்து கனி சம்முவை கூட்டிக்கொண்டு ஹாஸ்பிடல் வந்துவிட்டாள் அதன் பின்புதான் சுந்தருக்கு அழைத்தாள்.
நடந்ததை எல்லாம் கேட்ட சுந்தருக்கு நம்பவே முடியவில்லை அப்ப வைதேகி அம்மா உன்னுடைய அம்மா இல்லையா கனி என்றான் சுந்தர்.
இல்லை சுந்தர் நான்கு வருசத்துக்கு முன்னாடி சென்னைல வேலைக்கு போயிட்டு வரும்போது ஒரு கோயில்ல அவங்களைப் பார்த்தேன். ரொம்ப சோர்வா இருந்தாங்க என்னன்னு கேட்டதுக்கு சாப்பிடலை. அதனால் சோர்வாக இருக்குன்னு சொன்னாங்க அப்புறம் எங்க வீட்டுக்கு கூட்டிட்டு போயி பேசினதுக்கு அப்புறம்தான் தெரிஞ்சது ஏதோ பிரச்சனைனு வீட்டைவிட்டு வந்துட்டாங்க.எங்கேயாவது அனாதை ஆசிரமத்தில் சேர்த்து விட சொன்னாங்க. அப்போ எனக்கும் சம்முவுக்கும் யாரும் இல்லையா ,அம்மா நீங்க இங்கேயே இருங்க உங்களுக்கு மகளா நான் இருப்பேன் என் மகள் உங்களுக்கு பேத்தியாய் இருப்பாள். உங்களுக்கு சம்மதம்னா நாம எல்லாரும் ஒன்றாக இருக்கலாம் என்றேன். அவங்க சரி சொன்னதுக்கு அப்புறம் எல்லாரும் ஒரே குடும்பமாக வாழ்ந்தோம். நான் அவங்கள என்னோட அம்மாவா தான் நினைச்சேன் அவங்களும் அப்படிதான் என்ன நெனச்சாங்க.



அதனாலதான் அவங்க போகவும் மனசு கலங்கிருச்சு. சம்மு அழுதுட்டே இருக்கவும் கோபத்துல அடிச்சுட்டேன் என்னால முடியல சுந்தர்.எனக்கு பிடிச்சவங்க என் பக்கத்திலேயே இருக்க மாட்டேங்குறாங்க . முதலில் அம்மா அப்பா இப்ப வைதேகி அம்மா.நீயும் போயிடுவியா என்ற அழுதாள் அவள்.
ஏன் கனி அப்புறம் அம்மாவை அவங்க கூட அனுப்பினே பேசாம இங்க இருக்க சொல்லலாம்ல .
அது தப்பு சுந்தர் இத்தனை நாளா அவங்க அம்மா தேடி இருக்காங்க இப்ப அவங்க அம்மாவ கேட்டா நம்ம அனுப்புவது தான் நியாயம். அம்மாவையும் பிள்ளையை பிரித்த பாவம் எனக்கு வேண்டாம் ஏற்கனவே என்ன பாவம் செய்தேனோ இவ்வளவு கஷ்டப்படுறேன்.வைதேகி அம்மாவிற்கும் தன் மகன் ,பேரப் பிள்ளைகளுடன் இருக்க ஆசை இருக்கும் அல்லவா அதனால்தான் அனுப்பி வைத்தேன் சுந்தர்.
அப்ப உன்னோட அம்மா அப்பா என்று இழுத்தான் .
சொல்றேன் எல்லாத்தையும் உங்கிட்ட சொல்றேன் .அப்பதான் எனக்கு நிம்மதியா இருக்கும். நான் சொல்றதை எல்லாம் கேட்டுட்டு நீ என்ன முடிவு எடுத்தாலும் எனக்கு சம்மதம் என்றாள்.
நீ என்ன சொன்னாலும் அதனால் என் முடிவு மாறப்போவதில்லை கனிமா ஆனால் என்னிடம் சொல்வதால் உனக்கு கொஞ்சம் ஆறுதல் கிடைக்குமென்றால் எனக்கு சந்தோஷமே. மத்தபடி நீ என்னிடம் எதையும் கூற வேண்டும் என்று நான் எதிர்பார்க்க மாட்டேன் .அது உன்னுடைய விருப்பம். நான் ஏற்கனவே கூறியபடி உன்னுடைய கடந்த காலத்தை பற்றி எனக்கு கவலையும் இல்லை. உன்னுடைய நிகழ்காலமும் எதிர்காலமும் நானாக இருக்க வேண்டும் அவ்வளவே என்றான் சுந்தர்.
குழந்தைக்கு கண் விழித்து விட்டாள் . செக்கப் முடிந்து விட்டது வந்து பாருங்கள் என்று அங்கிருந்த நர்ஸ் வந்து சொன்னார்.
இருவரும் குழந்தையை பார்க்க சென்று விட்டார்கள். அப்பொழுதுதான் சம்பூர்ணா கண்விழித்து பார்த்தாள்.
இருவரையும் .
எனக்கு காய்ச்சல் வந்திருச்சா ஊசி போட்டாங்களா என்று கேட்டாள் அவள்.
ஒன்னும் இல்லடா ஊசி கிடையாது என்று சமாதானப்படுத்தினார்கள். டாக்டர் வீட்டுக்கு கூட்டிட்டு போகலாம் என்று சொல்லவும், சுந்தர் தன் காரில் கனியையும் அம்முவையும் கூட்டிக் கொண்டு அவர்கள் வீட்டிற்கு சென்றான் . அம்முவிற்கு பால் கொடுத்து மருந்து கொடுத்து தூங்க வைத்து விட்டு சுந்தரிடம் வந்தால் கனி.
நீ கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடு என்றான் சுந்தர்.
உன்னிடம் எல்லாவற்றையும் சொல்ல வேண்டும் . சொன்னால் தான் எனக்கு தூக்கம் வரும்.
நீ என்னிடம் எந்த விஷயத்தைப் பற்றியும் கூறத் தயக்கம் கொள்ளத் தேவையில்லை. இப்பொழுது கொஞ்ச நேரம் தூங்கு. ஏதாக இருந்தாலும் காலையில் பேசிக்கொள்ளலாம். நீ ரொம்ப களைப்பாக இருக்கிறாய் தூங்குமா .
சுந்தர் கனியை வற்புறுத்தி தூங்கவைத்தான்.
அவளை தூங்க வைத்துவிட்டு சோபாவில் படுத்தவாறே மனம் அவளை சந்தித்ததை பற்றி எண்ணிக் கொண்டிருந்தது .
சுந்தரும் அவனுடன் இன்னும் இரண்டு பேரும் ஒரு டூர் மேனேஜ்மென்ட் ப்ராஜெக்ட் காக அந்தமான் சென்றிருந்தனர் .
அங்கு அந்த டூர் மேனேஜ் கம்பெனியின் சார்பாக பிசினஸ் அனாலிஸ்ட் ஆக வந்தவள் தான் கனிமொழி .
பார்த்தவுடன் சுந்தருக்கு கனியின் மேல் பெரிதாக எந்த ஈர்ப்பும் ஏற்படவில்லை நல்ல திறமை உள்ள பெண் என்று மட்டும் எண்ணினான்.
ஒரு நாள் அந்தமானில் அவன் வீட்டின் அருகில் உள்ள பூங்காவில் தன் குழுவினருடன் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தான். சற்று நேரத்தில் அனைவரும் அவர்கள் பிளாட்டிற்கு சென்று விட்டனர் .சுந்தர் தன் தந்தையுடன் போனில் பேசிக்கொண்டே மெதுவாக நடந்து வந்தான் .
பூங்காவில் இருந்து வெளியே செல்லும் போது சுமார் இரண்டரை வயது குழந்தை ஒன்று அவன் காலில் மோதியது.போனை கட் செய்துவிட்டு என்னம்மா அடி ஏதும் படவில்லையே என்று கனிவாக கேட்டான்.
அதெல்லாம் இல்லை அங்கிள் நான்தான் அந்த தனுஷ் கிட்ட சண்டை போட்டுட்டு வேகமாக வந்தேனா உங்களை பார்க்காமல் மோதி விட்டேன் சாரி என்றாள் அந்த வாண்டு .
ஏன்டா தனுஷிடம் சண்டை போட்டாய் என்றான் பெரியவன்.
இல்லை அங்கிள் அவன் அப்பா அவனை மேலே தூக்கி போட்டு விளையாட்டு காண்பிப்பார் அதை சொல்லி என்னை வெறுப்பேற்றினான்.
அதனால்தான்.
நீயும் உன் அப்பாவிடம் அதுமாதிரி தூக்க சொல்ல வேண்டியதுதானே குட்டி?
எனக்குத்தான் அப்பாவே இல்லையே அவரைப்பற்றி கேட்டாலே அம்மா முகம் வாடி விடும் என்று பாட்டி சொல்வார்கள் அதனால நான் அவரைப்பற்றி கேட்பதில்லை அங்கிள் என்று தனக்கு தெரிந்தவற்றை அவனிடம் சொல்லிக் கொண்டிருந்தாள் அவள்.
சுந்தர் குழந்தைக்கு சமமாக பேசியதால் சீக்கிரமாகவே அவனிடம் சேர்ந்து கொண்டாள்.
சரிடா அம்மு நான் உன்னை தூக்கி போட்டு விளையாட்டு காட்டவா என்று கேட்டான் சுந்தர்.
சுந்தர் அந்த குழந்தையை தூக்கி போட்டு ,பிடித்து சுற்றி விளையாடிக் கொண்டிருக்கும் போது , அங்கு வந்த கனிமொழி என்ன சம்மூ அம்மாவை, பாட்டியை விட்டுவிட்டு வந்து விட்டாய் என்றவரே பூங்காவினுள் வந்தாள்.
அப்போது தான் சுந்தரரையும் குழந்தையையும் பார்த்தாள். இருவரையும் சேர்த்துப் பார்க்கும்போது மனதிற்குள் இதம் பரவுவதை உணர்ந்தாள். பின் தன்னை சுதாரித்து ஹலோ சுந்தர் என்றாள் கனி.
இந்த குழந்தை என்று இழுத்தான்.
என் மகள் தான் சுந்தர் பெயர் சம்பூர்ணா. அங்கிளுக்கு வணக்கம் சொல்லு என்றாள் மகளிடம் .
அதற்குள் சம்பூர்ணா சுந்தரிடம் இருந்து கனியிடம் தாவினாள்.
நாங்கள் இருவரும் அப்பவே பிரண்ட் ஆகிவிட்டோம் மா என்றாள் மகள் .
சரிடா சம்மு பாட்டிக்கு கால் வலிக்குதாம் இப்ப வீட்டுக்கு கிளம்புவோமா என்றாள் கனி.
பாய் சுந்தர். அலுவலகத்தில் பார்ப்போம்.
நீயும் அங்கிளுக்கு பாய் சொல்லுமா.
பாய் அங்கிள் நாளையும் நாம் விளையாடலாம் இங்கு வாருங்கள் என்று சுந்தரிடம் கூறினாள் சம்பூர்ணா.
ஓகே டா நாளைக்கு விளையாடலாம் என்று ஆமோதித்தான் சுந்தர்.
பார்த்தால் சின்ன பெண் போல் தெரிகிறது அதுவும் அந்த பூங்காவில் சுடிதாரில் பார்த்த போது கல்லூரி பெண் போலத்தான் தோன்றினாள். பொதுவாக கனி ஆபீஸ்க்கு புடவையில் தான் வருவாள் அழகான வட்ட வடிவ சிவப்பு போட்டு வைத்திருப்பாள். கூந்தலை பின்னதாக பின்னி ஏதாவது ஒரு பூ கொஞ்சமாக வைத்திருப்பாள் திருமணம் முடிந்து 3 வயது குழந்தையும் இருக்கிறது .ஒருவேளை கணவனுடன் ஏதும் பிரச்சினையோ அதனால் தான் தன் தாயுடன் இருக்கிறார் அப்படிதானே சம்மூ கூறினாள் .ஒருவேளை விவாகரத்து ஆகிவிட்டதா என்று தனக்கு தெரிந்த விவரங்களை வைத்து அவளைப்பற்றி கணித்தான்.
சுந்தரால் சம்முவையும் கனியையும் நினைக்காமல் இருக்க முடியவில்லை அவர்களை ஒரு முறையேனும் பார்க்க வேண்டும் என்று ஏங்கிக் கொண்டு இருந்தான் .ஒரு குழந்தையின் தாயை போய் பார்க்கவேண்டும் என எண்ணுவது தவறல்லவா என்று அவனுக்கு அவனே கேட்டுக்கொள்வான் இருந்தாலும் அவர்களை பார்க்கும் எண்ணத்தை ஏனோ அவனால் தடுக்க இயலவில்லை.
ஏதாவது வேலை இருந்தால் மட்டுமே கனி சுந்தரின் அலுவலகத்திற்கு வருவாள் இல்லையேல் அவளுடைய ஆபீஸ்க்கு சென்று விடுவாள் எனவே அப்போது ஏதாவது வேலையை உருவாக்கிக் கொண்டு சுந்தர் கனியை சந்திக்கும் சந்தர்ப்பத்தை உருவாக்கிக் கொண்டான்.
இதையெல்லாம் ஏன் செய்கிறான் என்று அவனுக்கே தெரியவில்லை. மாலை நேரங்களில் சுந்தர் சம்மு விளையாடும் இடங்களிலெல்லாம் தற்செயலாக பார்ப்பதுபோல் சம்முவிடம் பார்த்து பேசி பழகி வந்தான்.
சுந்தர் நான் ஒன்று கேட்கலாமா என்றார் கனியின் அம்மா வைதேகி.
உனக்கு கனியை பிடித்திருக்கிகிறதா என்றார் நேரடியாக.
நீங்கள் சம்மதித்தால் கனியும் விரும்பினால் அவளைத் திருமணம் செய்து கொள்ளலாம் என்று இருக்கிறேன்.
எனக்கு சம்மதம்தான் . கிட்டத்தட்ட நான்கு வருடங்களாக கனிக்கும் சம்முவின் அப்பாவிற்கும் எந்தவித தொடர்பும் இல்லை .அதை பற்றி கேட்டால் அது முடிந்து போன அத்தியாயம் தொடர்வதற்கு இனி வழியில்லை என்று ஒரே வார்த்தையில் முடித்து விடுவாள் .உன்னிடம் மட்டும்தான் கொஞ்சம் உரிமையாக பழகுகிறாள் நீங்கள் இருவரும் மணந்து கொண்டாலா எனக்கு மகிழ்ச்சிதான். ஆனால் அவள் ஒத்துக் கொள்வாளா என்று தெரியவில்லை ?
இதைக் கேட்டதும் சுந்தர் பெரிதும் மகிழ்ந்தான்.
கனியை சம்மதிக்க வைக்க வேண்டியது என்னுடைய பொறுப்பு .ஒரே ஒரு சந்தேகம் அம்மா இன்னும் கனி சம்முஅப்பாவின் நினைவில் இருக்கிறாளா என்றான் அவன்.
கண்டிப்பாக இல்லை சுந்தர் அவருடைய பெயரைக் கூட சம்முவிடம் சொல்லவில்லை என்றால் பார்த்துக்கோ. ஒருமுறை நான் அவளிடம் உன்னுடைய இந்த நிலைமைக்கு யார் காரணம் முடிந்தால் அவருடன் உன்னை சேர்த்து வைக்கிறேன் என்று கேட்டதற்கு,அவன் எல்லாம் ஒரு பெண்ணின் கணவனாக மட்டுமல்ல ஒரு மனிதனாக இருக்க கூட தகுதி இல்லாதவன் . இன்னும் ஒரு முறை அவளை நேரில் பார்த்தால் அவனை கொலை செய்ய கூட நான் தயங்க மாட்டேன் என்று சொல்லி விட்டாள்.
ஒருவேளை கனி சம்மு அப்பாவின் நினைவில் இருக்கிறாரா என்று தான் தயங்கினேன் இப்போது தான் நிம்மதியாக இருக்கிறது
இது போதும் அம்மா கனியை நான் பார்த்துக்கொள்கிறேன் என்றான் சுந்தர்.
இப்பொழுது கனியிடம் சம்மதம் வாங்கிய மாதிரி தான். இன்னும் என்னவோ என்னிடம் கூற வேண்டும் என்றாளே என்னவாக இருக்கும் என்று யோசித்தான் சுந்தர்.
அதைப் பற்றி அறிய வரும்போது சுந்தரின் மனநிலை என்னவாக இருக்கும் .
பார்க்கலாம்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top