மாலை சூடும் வேளை--10

Advertisement

laxmidevi

Active Member
மாலை -10

பாடல் வரிகள்
சொல்லத்தான் நினைக்கிறேன் சொல்லாமல் தவிக்கிறேன்
காதல் சுகமானது
சின்ன பூவொன்று பாறையை தாங்குமா
உன்னை சேராமல் என் விழி தூங்குமா
தனிமை உயிரை வதைக்கின்றது
கண்ணில் தீ வைத்து போனது நியாயமா
என்னை சேமித்து வை நெஞ்சில் ஓரமா
கொலுசும் உன் பேர் ஜபிக்கின்றது தூண்டிலினை தேடும் ஒரு மீன் போலானேன்
துயரங்கள் கூட அட சுவையாகுது
இந்த வாழ்கை இன்னும் இன்னும் ரொம்ப ருசிக்கின்றது
காதல் சுகமானது.


சுந்தரை அவன் நண்பன் ஹரிஷ் வற்புறுத்தி தன் குடும்பத்தினருடன் ஷாப்பிங் மாலுக்கு அழைத்து வந்திருந்தான். சுந்தர் கனியை தேடித்தேடி சோர்ந்து போயிருந்தான். ஒரு மாறுதலுக்காக சுந்தரை வெளியே கூட்டி வந்திருந்தான்.

சுந்தரும் ஜானுவிற்காக லேப்டாப் வாங்க வேண்டும் என ஹரியுடன் வந்திருந்தான் .

லேப்டாப் வாங்கி முடித்துவிட்டு ஃபுட் கோர்ட்டில் அமர்ந்திருக்கும் பொழுது ஒரு குழந்தை சேரில் கால் தடுக்கி கீழே விழப் பார்த்தது அதை பார்த்ததும் சுந்தர் குழந்தை விழாதவாறு பிடித்துக் கொண்டான்.

பின் அந்த குழந்தையை பார்த்தவனின் மனமோ மகிழ்ச்சியில் திளைத்தது.

அம்மு நீ எப்படி இங்க அம்மா எங்கே டா என்றான் .

நான் அம்மா பாட்டி எல்லாரும் இங்க வந்தோம் அவங்க அங்க இருக்காங்க நான் உங்களை பார்த்ததும் ஓடி வந்தேன் என்றது அந்த குழந்தை.

சரி வா அம்மாவிடம் போலாம் உன்னை தேட போகிறார்கள் என்றான் சுந்தர்.

அதற்குள் அம்முவின் அம்மா அவளை காணாமல் தேடும்பொழுது அம்மு சுந்தர் உடன் வருவதைப் பார்த்தாள் .

என்ன கனி வீடு மாற்றியதை கூட என்னிடம் சொல்ல மாட்டாயா என்றான் சுந்தர்.

அப்படியெல்லாம் ஒன்றுமில்லை சுந்தர் மொபைல் உடைந்துவிட்டது எல்லார் கான்டக் நம்பரும் மிஸ் ஆகிவிட்டது. அதனால்தான் சொல்ல முடியவில்லை என்றாள்.

சரி அம்மாவை எங்கே?

அம்மா இப்பொழுது தான் வீட்டுக்கு சென்றார்கள் சம்மு படம் பார்க்க வேண்டும் என்றாள் அதனால் தான் நாங்கள் மட்டும் இங்கு வந்தோம் என்றாள் கனி.

சரி நான் உன்னுடன் சற்று பேச வேண்டும் பேசலாமா ?
பேசலாம் வா சம்மு.

இல்லை கனி அம்மு ஹரிடன் இருக்கட்டும் பின்பு வந்து அழைத்துக் கொள்ளலாம்.உன்னுடன் நான் சற்று தனித்து பேச வேண்டும்
சரி சுந்தர் .

அம்முவை ஹரிஷின் குழந்தைகளுடன் விளையாட விட்டுவிட்டு சுந்தர் கனியிடம் வந்தான்.

என்ன விஷயம் சுந்தர்?

என்ன சொல்வது என்று தான் தெரியவில்லை கனி என்னை திருமணம் செய்து கொள்கிறாயா?

என்ன பேசுறேன்னு தெரிஞ்சுதான் பேசுறீங்களா ஒரு குழந்தையின் அம்மாவிடம் கேட்கும் கேள்வியா இது? உங்களிடம் இதை எதிர்பார்க்கவில்லை நான் என்றாள் கனி.

ஏன் கனி நான் உன்னிடம் இதை கேட்கக் கூடாதா? இன்னொருவரின் மனைவியிடம் நான் கேட்கவில்லையே . குழந்தையின் அம்மாவிடம் தானே கேட்கிறேன் ‌ .அதில் ஏதும் தவறு இருப்பதாக எனக்கு தோன்றவில்லை.

என்ன சம்முவின் மேல் உள்ள இரக்கத்தில் என்மீது பரிதாபப்பட்டு வாழ்க்கை தருகிறீர்களா சுந்தர்?

முதலில் ஒன்றை நன்றாக புரிந்து கொள் உன்னைப் பார்த்து பரிதாபப்படும் அளவில் நீ இல்லை மற்றொன்று நான் உனக்கு வாழ்க்கையை தரவில்லை என் வாழ்க்கையினை உன்னுடன் சேர்ந்து வாழவே விரும்புகிறேன்.

என்னைப் பற்றி உங்களுக்கு என்ன தெரியும் ? திடிரென வந்து திருமணம் செய்து கொள்கிறாயா என்கிறீர்கள்?

உன்னைப்பற்றி எல்லாம் தெரியும்,உன் அம்மா தான் கூறினார்கள். கோபப்படாதே நான் தான் கேட்டேன் என் மனதில் இருப்பதை அவரிடம் சொல்லிவிட்டேன் அதன் பின்புதான் அவர்கள் கூறினார்கள் . உன்னுடைய கடந்த காலத்தைப் பற்றி எனக்கு எந்தவித கவலையும் இல்லை. நீ உன்னுடைய நிகழ்காலத்தையும் எதிர்காலத்தையும் என்னுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்றே விரும்புகிறேன்.

என் அம்மா என்னைப் பற்றி நல்ல விதமாகத்தான் கூறியிருப்பார்கள். யாராவது பெற்ற பெண்ணை பற்றி தவறாக கூறுவார்களா? என் அம்மா கூறியதை தவிர்த்து என்னை பற்றி உங்களுக்கு என்ன தெரியும் உங்களுக்கு?

ஒருவேளை நீ தவறான ஆளாக இருந்திருந்தால் இவ்வளவு நாள் குழந்தையுடன் தனியாக கஷ்டப்படுவானேன் ?மேலும் நான் மணம் செய்து கொள்வோமா என்று கேட்ட உடனேயே சரி என்று சொல்லி இருப்பாய் மற்றபடி இப்படி மறுத்து பேசிக் கொண்டிருக்க மாட்டாய்.

ஒருவேளை உங்களை கெஞ்ச விட்டு என்னுடைய காரியத்தினை சாதித்துக் கொள்ள எண்ணி இருக்கலாம் அல்லவா?

என்ன கனி இப்படி மாற்றி மாற்றி பேசி என்னை குழப்பலாம் என்று நினைக்கிறாயா ? அது நடக்காது என்னைவிட நான் உன்னை அதிகமாக நம்புகிறேன் எது எப்படி இருந்தாலும் நீதான் என் மனைவி .என்னை புரிந்து கொள்ள முயற்சி செய் கனி .

இதெல்லாம் ஒத்துவராது சுந்தர் எனக்கு என் சம்மு மட்டும் போதும்.
எனக்கும் அம்மு மட்டும் போதும் ஆனால் கூடவே அவளின் அம்மாவாக நீயும் எனக்கு வேண்டும்.அம்முவிற்காக வேணும் என்னை ஏற்றுக் கொள்ளலாம் அல்லவா ?

உங்கள் துணை இல்லாமல் என்னால் வாழ முடியாது என்கிறீர்களா ?

இல்லை நான் இல்லாம உங்களால் வாழ முடியும். ஆனால் நீயும் அம்முவும் இல்லாமல் என்னால் வாழ முடியுமா என்றுதான் தெரியவில்லை .உங்கள் இருவரையும் பார்த்ததில் இருந்தே உங்கள் இருவரும் விட்டுப் பிரிந்திருக்க முடியவில்லை அதனால் நானே வேலைகளை உருவாக்கிக் கொண்டு அந்தமான் வந்தேன் உங்களை பார்ப்பதற்காக.

முதலில் என்னை உங்கள் வீட்டில் ஏற்றுக் கொள்வார்களா ?

அது என்னுடைய கவலை கனிமா. நீ உன்னுடைய சம்மதத்தை மட்டும் சொல் அவர்களை ஒத்துக்கொள்ள வைப்பது என்னுடைய வேலை.

வேண்டாம் சுந்தர் இது எல்லாம் சரி வராது இத்துடன் விட்டு விடுங்கள்.

சரி ஆனால் சரியான ஒரு காரணம் கூறு இத்துடன் எல்லாத்தையும் விட்டு விடுகிறேன்.

எனக்கு உங்களை பிடிக்க வில்லை போதுமா? என்றாள் எரிச்சலாக.

இது நம்பும்படியாக இல்லையே கனி என்றான் சுந்தர் அமர்த்தலாக.

ஏனோ?

நீ நான் முதலில் திருமணத்திற்கு கேட்டபோது என்னை பிடிக்கவில்லை என்று சொல்லியிருந்தால் நான் நம்பி இருப்பேன் ஆனால் வேறு வேறு காரணம் சொன்னாயே தவிர என்னை பிடிக்கவில்லை என்று சொல்லவில்லை அது தவிர உன் கண்களில் எனக்கான நேசத்தினை கண்டிருக்கிறேன் என்றான் சுந்தர் உறுதியாக.

இப்பொழுது மறுத்துப் பேச வேண்டாம் கனி நன்றாக யோசித்து முடிவு சொல் என்னை உன் கணவனாக இல்லாவிட்டாலும் உன்னுடைய
நண்பனாகவோ இல்லை நலம்விரும்பியாக வேணும் ஏற்றுக் கொள்.

இதற்கு எந்த பதிலும் இல்லை கனியிடம். அவளுடைய மௌனத்தையே சம்மதமாக எடுத்துக்கொண்டு சுந்தர் கனி அம்மு இருவரையும் அவர்கள் வீட்டில் கொண்டு போய் விட்டான். சுந்தரின் கண்களில் தன் மீதான நேசத்தினையும் சம்முவின் மீதான பாசத்தையும் கண்ட கனியின் மனது தன் முடிவிலிருந்து மாறத்தொடங்கியது.

நாம் எதை மறக்க நினைக்கிறோமோ அதைத்தான் மனம் அதிகமாக நினைக்குமாம். மலரின் மனம் அவளுடைய ஆனந்தனை மறக்க நினைக்க நினைக்க முன்னிலும் அதிகமாக அவனை விரும்ப தொடங்கியது.

விஜய்ஆனந்த் மலர்விழியினை அவள் பள்ளி இறுதி ஆண்டில் இருந்து காதலித்து வந்தான். மலர் அவளுடைய அன்னையுடன் அவர்கள் வீட்டில் அருகிலுள்ள ஷாப்பிங் காம்ப்ளக்ஸிற்கு வந்திருந்தாள். அங்கு அவள் அம்மாவிடம் ஐஸ்கிரீம் வேண்டும் என அடம் பிடித்துக் கொண்டிருந்தாள். அவரோ மறுத்துக் கொண்டிருந்தார்.
மஞ்சள் கலர் லாங்கவுனில் அழகான சூரிய காந்திப் பூவைப் போல் இருந்தவளை பார்த்தவனுக்கு ஏனோ உடனே பிடித்துப் போனது.
அவளைப் பார்ப்பதற்காகவே அவள் வீடு இருக்கும் பக்கம் அடிக்கடி வந்து போவான் எந்தவித காரணமும் இன்றி.

மலர் விஜய் படிக்கும் கல்லூரியில் சேர்ந்தது விஜய்க்கு இன்னும் வசதியாக போனது.
விஜய் மலரிடம் ஏதேனும் வம்பிழுத்தபடியே இருப்பான். அவளும் சீனியர் என்று பார்க்காது பதிலுக்கு பதில் கொடுப்பாள். இருவரும் ஒருவருக்கொருவர் மோதிக்கொண்டாலும் வேறு யாரிடமும் மற்றவரை விட்டுக் கொடுக்க மாட்டார்கள் .



யாராவது விஜயை பற்றி தவறாக கூறினால் என் சீனியரரை பற்றி நீ எதுவும் பேசாதே எங்களுக்குள் ஆயிரம் இருக்கும் என்று விடுவாள் மலர். விஜயும் அப்படித்தான். இருவரிடையேயும் நல்ல புரிதல் இருந்தது.

அவளுக்காகவே அந்த கல்லூரியிலேயே தன் மேற்படிப்பைத் தொடர்ந்தான் விஜய். தன் காதலை மலரிடம் உரைத்த போது நான் கொஞ்சம் யோசித்து சொல்கிறேன் சீனியர் என்றாள் மலர்.

மலர் எதுவும் எதிர்மறையாக பேசாததே விஜய்க்கு போதுமானதாக இருந்தது.

மலருக்கும் விஜயின் மீது ஈர்ப்பு இருந்தது இப்போது அல்ல முன்பிருந்தே .அவள் பன்னிரண்டாம் வகுப்பு முடித்துவிட்டு விடுமுறையில் இருந்த போது அவள் தோழிகளுடன் அருகிலிருந்த பூங்காவிற்கு செல்வாள்.
அப்போது அங்கிருந்த ப்ளே கிரவுண்டில் விஜய் தன் நண்பர்களுடன் கிரிக்கெட் விளையாடுவான்.
ஒருநாள் தற்செயலாக அவன் விளையாடுவதை பார்த்த மலர் அவனுடைய விசிறியாய் ஆகிப்போனாள்.அவன் பவுலிங் செய்யும்போது எதிரணியினர் போரோ.சிக்ஸோ எடுத்துவிட்டால் இருக்கமாய் மாறும் அவன் முகம் விக்கெட் எடுத்து விட்டால் பிரகாசிக்கும். எல்லாம் விளையாட்டு முடியும்வரை தான் முடிந்துவிட்டதா இரு அணியினரும் சேர்ந்து அரட்டை அடித்துக் கொண்டிருப்பார்கள் .
விஜய் விளையாடும்போது கலையும் முடி, பந்தை கேட்ச் செய்வது பேட்டிங் செய்யும் போது அவன் செய்யும் அலப்பறைகளை எல்லாவற்றையும் பார்த்த அவன் மேல் ஒரு ஈர்ப்பு தோன்றியது மலருக்கு. ஒரு பதின்பருவ மங்கைக்கு அவளின் விருப்பத்திற்கு ஏற்றவாறு ஒரு ஆண்மகனை பார்க்கும் போது ஏற்படும் சாதாரண ஈர்ப்பாகதான் அவள் நினைத்தாள்.

அதன்பின் மலர் கல்லூரியின் அவனை பார்த்ததும் அவன் ஒரு மரியாதை தோன்றியது . என்னதான் அவன் மலருடன் வம்பு இழுத்தாலும் அவனுடைய எல்லையை மீற மாட்டான்.மேலும் ராகிங்கில் போதும் கேலி பேசும் போதும் யாருடைய மனமும் காயம் படாமல் பார்த்துக் கொள்வான் .விளையாட்டும் கேலியும் ஒரு எல்லைக்குள் இருக்க வேண்டும் என்பான். சீனியர்கள் ஜூனியர்களின் தோழர்களாக , வழிகாட்டியாக இருக்க வேண்டும் என்பான்.அது மலருக்கு பிடித்து இருந்தது .

அவளுடைய முதல் செமஸ்டர் முடிந்த போது தான் விஜய் தன் காதலை மலரிடம் கூறினான்.

யோசித்து பதில் தருவதாக மலர் கூறினாள்.

ஆனால் அந்த விடுமுறையில் என்னென்னவோ நடந்துவிட்டது.
செமஸ்டர் லீவு முடிந்து வந்த மலர் முற்றிலும் மாறிப் போயிருந்தாள். விஜயை பார்த்தாலே ஒதுங்கிப் போக ஆரம்பித்தாள் .

ஆசையுடன் அவளது பதிலை எதிர்பார்த்து காத்திருந்த விஜய்க்கு அவளுடைய மாற்றம் அதிர்ச்சியாக இருந்தது .

விஜயை பார்த்தவுடன் அவள் கண்களில் தோன்றும் மலர்ச்சிக்கு பதிலாக ஒரு வித ஒதுக்கமே வந்தது.
மலரிடம் விஜய் என்னாச்சு மலர் ஏதேனும் பிரச்சினை என்னிடம் சொல்லக்கூடாதா ?உன்னை என்னால் இப்படி பார்க்க முடியவில்லை என்றான்.

அதெல்லாம் ஒன்றுமில்லை சீனியர்.
மலர் விஜயின் கண்களை நேருக்கு நேர் சந்திக்கவே தயங்கினாள்.
நான் கேட்டதற்கு நீ இன்னும் பதில் கூறவில்லை மலர்
இல்லை இதெல்லாம் ஒத்துவராது விட்டுவிடுங்கள் என்றாள் மலர் .
பின்பு விஜய் எவ்வளவு முயன்றும் மலர் அவனுடன் பேசவில்லை. எங்கே விஜயுடன் பேசினால் அவளும் விஜயை விரும்புவதை அவன் கண்டு கொள்வான் என்ற பயம் அவளுக்கு.

தன்னுடைய மேற்படி முடிந்து கல்லூரியிலிருந்து செல்லும்போது மலரை கட்டாயப்படுத்தி தன்னுடன் அழைத்துச் சென்றான் விஜய்.
என்னாச்சு மலர் ஏன் இந்த ஒதுக்கம். இது என்னுடைய மலர் இல்லையே? ஒரு வார்த்தைக்கு பத்து வார்த்தை பதில் சொல்லும் மலர் இப்பொழுது பேசவே யோசிக்கிறாளே?

ஒன்னும் இல்ல நான் எப்போதும் போல தான் இருக்கேன்.

சரி இப்போதாவது சொல்ல. என்னை உனக்கு பிடிக்கவில்லையா மலர் என்றான் .

ஒரு சீனியராக உங்களை எப்போதும் இந்த ஜுனியருக்குப் பிடிக்கும் .அதை தவிர வேறு எதுவும் இல்லை என்றாள் மலர்.

சரி மலர் அப்பொழுது என்னுடைய பதிலையும் கேட்டுக் கொள் .எவ்வளவு நாட்கள் ஆனாலும் உன்னுடைய மனம் மாற காத்திருப்பேன் என் வாழ்வில் உன்னை தவிர வேறு யாருக்கும் இடமில்லை .
நன்றாக படி ,வேறு ஏதும் பிரச்சனை செய்யாதே நான் வேறு இல்லை உன்னை காப்பாற்ற .பத்திரமாக இருந்து கொள் மலர் .
நீ என்னுடன் இல்லாவிட்டாலும் உன் நினைவுகள் என்னுடன் எப்பொழுதும் இருக்கும். பாய் மலர் பத்திரம்..



மலரின் மனம் மாறுமா?
கனி சுந்தரை ஏற்றுக் கொள்வாளா?
விக்ரம் என்ன ஆனான்.
பார்ப்போம்.


மாலை தொடுக்கப்படும்
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
லக்ஷ்மிதேவி டியர்
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
கனியின் குழந்தையின் பெயர் ஒரு இடத்தில் அம்மு ஒரு இடத்தில் சம்மு என்று இருக்கு
எது சரி?
 

laxmidevi

Active Member
கனியின் குழந்தை பெயர் சம்பூர்ணா.
சுந்தருக்கு மட்டும் அவள் அம்மு மற்றவர்களுக்கு சம்மு.

சம்பூர்ணாக்கும் ,கனிக்கும் இன்னும் ஒரு பிளாஷ்பேக் இருக்கு அது அப்புறமா வரும்.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top