மருந்து குழம்பு

Sahi

Well-Known Member
#1
IMG_20190409_220353.jpg தேவையானபொருட்கள்:
சின்ன வெங்காயம்: 10
பூண்டு: 5
புதினா: 1 கையளவு
கறிவேப்பிலை: 2 கொத்து
வெற்றிலை: 2/3
துளசி: 5-10
இலைகள்
புளி:
நெல்லிக்காய் அளவு
உப்பு: ருசிக்கேற்ப
நல்லெண்ணெய்: தாளிக்க
கடுகு: 1 டீ ஸ்பூன்
வெந்தயம்: 1 டீ ஸ்பூன்
மிளகு: 1 டேபிள் ஸ்பூன்
சீரகம்: 1 டேபிள் ஸ்பூன்
தனியா: 2 டேபிள் ஸ்பூன்
சிவப்பு மிளகாய்: 3

செய்முறை:
(1) வெறும் வாணலியில் மிளகு, சீரகம், தனியா, சிவப்பு மிளகாய் இட்டு வாசனை வரும் வரை வறுத்து எடுக்கவும்.
(2)
அதே வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு புதினா, கறிவேப்பிலை, வெற்றிலை, துளசி இலைகளை வதக்கி எடுக்கவும்.
வறுத்து (1), வதக்கியவற்றை (2) மிக்ஸில் விழுதாக அரைக்கவும்.
வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு கடுகு, வெந்தயம் தாளித்து, பொறிந்தவுடன், சின்ன வெங்காயம், பூண்டு சேர்த்து நன்றாக வதக்கவும். வதங்கியபின் கெட்டியாக கரைத்த புளிக் கரைசல் ஊற்றி கொதி வந்ததும் அரைத்த விழுது மற்றும் உப்பு சேர்த்து நன்றாக கொதித்ததும் இறக்கினால் மருந்து அல்லது மூலிகை குழம்பு தயார்.
சூடான சாதத்தில் ஊற்றி சாப்பிட்டால் நெஞ்சு சளி குறையும், நோய் எதிர்ப்பு சக்தி கூடும்.
செஞ்சு பாருங்க எப்படி இருக்குன்னு சொல்லுங்க.

நன்றி.
 

Advertisement

New Episodes