மரவள்ளி கிழங்கு புட்டு/இடியாப்பம்

Joher

Well-Known Member
#1
Dish......... 1
மரவள்ளி கிழங்கை தோல் உரித்து கேரட் துருவலில் துருவி தேங்காய், பொடி உப்பு சேர்த்து mix பண்ணி புட்டு குழல் அல்லது இட்லி தட்டில் வைத்து வேக வைத்தால் சூப்பரா இருக்கும்........

புட்டு குழலில் ஆவி வர time எடுக்கும்........ சித்ரபுட்டு குழல்/இட்லி பாத்திரத்தில் சீக்கிரம் வெந்து விடும்.......

சீனி/வெல்லத்தூள் or மீன் குழம்பு சூப்பர் combination........

Dish......... 2

தேவைக்கு அதிகமான கிழங்கு இருந்தால் அதை தோல் உரித்து கழுவி ஒரு இன்ச் அளவிற்கு துண்டு போட்டு வெயிலில் 2 3 நாள் காய வைக்கணும்........ full dry ஆனது காத்து போல இருக்கும்......... அதில் கொஞ்சம் mixie-யில் போட்டு powder பண்ணினால் dust மாதிரி powder ஆகிவிடும்.......

season-ல இதை store பண்ணி வச்சிடுவோம்........

தேவைப்படும் போது கொஞ்சம் உப்பு தூள், தேங்காய் துருவல், தண்ணீர் அளவா சேர்த்து கொஞ்சம் உதிரியா mix பண்ணி புட்டு குழலில் வைத்து வேகவைக்கணும்..... இதற்க்கு சீனி/வெல்லப்பொடி தான் combination ........

ரெண்டுமே எங்க வீட்டில் எல்லோருக்கும் பிடித்த dish..........
பிள்ளைகளுக்கு மிகவும் பிடிக்கும்......
உடல் உறு திக்கு நல்லது.......

Chitra Puttu Maker.jpg
 
Last edited:
#2
:D :p :D
மரவள்ளிக் கிழங்கு புட்டு/
இடியாப்பம் ரெசிப்பி
ரொம்பவே நல்லாயிருக்கு,
Joher டியர்
 
Last edited:
#5
ஹீ... ஹீ... ஹீ........
இதெல்லாம் எதுக்கு வேஸ்ட்டா
செஞ்சுக்கிட்டு, Joher டியர்?
ஹார்லிக்ஸ் பையன் சொல்ற
மாதிரி அப்படியே சாப்பிடுவேனே
வெறுமனே உப்பு போட்டு
வேக வைச்சாலே போதுமே
எனக்கு ரொம்பவும் பிடிக்கும் பா
மூணு நேரமும் இதையே சாப்பிட
சொன்னாலும் சந்தோஷமாக
சாப்பிடுவேன், Joher டியர்
 

Joher

Well-Known Member
#6
ஹீ... ஹீ... ஹீ........
இதெல்லாம் எதுக்கு வேஸ்ட்டா
செஞ்சுக்கிட்டு, Joher டியர்?
ஹார்லிக்ஸ் பையன் சொல்ற
மாதிரி அப்படியே சாப்பிடுவேனே
வெறுமனே உப்பு போட்டு
வேக வைச்சாலே போதுமே
எனக்கு ரொம்பவும் பிடிக்கும் பா
மூணு நேரமும் இதையே சாப்பிட
சொன்னாலும் சந்தோஷமாக
சாப்பிடுவேன், Joher டியர்
அப்படியே சாப்பிடுங்க........ உடம்புக்கும் உறுதி.......:p:p:p
 

Suvitha

Well-Known Member
#7
மரவள்ளி கிழங்கு புட்டு சின்ன வயசுல நிறைய சாப்பிட்டு இருக்கிறேன் Jo...
ஏன்னா, எங்க தோட்டத்திலேயே நிறைய விளைய வைப்பாங்க.
அது விளைந்து கிழங்கை விற்பனைக்கு பிடுங்கும் போது எங்க அம்மா நீங்க சொன்ன மாதிரி சுத்தபடுத்தி துண்டு போட்டு சுக்கு மாதிரி காய வைத்து எடுத்து வச்சுக்குவாங்க. அப்புறம் தேவைப்படும் போது உரலில் போட்டு இடித்து மாவாக்கி தேங்காய் பூ எல்லாம் சேர்த்து புட்டு அவித்து தருவாங்க பாருங்க... அந்த மணமே அருமையாக இருக்கும்.
என்னோட favourite கூட..
எங்க ஊர் பக்கம் இதை" கப்பகிழங்கு" ன்னு சொல்லுவோம்.simple ஆ "கப்ப"...

அதே போல வேக வைத்து அது கூட கருவாடு/மீன்குழம்பும் தொட்டுக்க வைத்து சாப்டீங்கன்னா...
அடடடா...அந்த combination ஐ அடிச்சிக்கவே முடியாது Jo..
இதெல்லாம் விட நான் பச்சையாகவே சாப்பிடுவேன்.:D
 

Joher

Well-Known Member
#8
நாட்டு கிழங்கு, ரொட்டி கப்பை, மலை கிழங்கு......
நாட்டு கிழங்கு தான் பச்சையா சாப்பிட டேஸ்ட்.....
ரொட்டி கப்பை sometimes கசக்கும்.....
மலை கிழங்கு ரொம்ப hardஆ இருக்கும்.....
எந்த கிழங்காக இருந்தாலும் freshஆ சாப்பிடணும்...... ஒரு நாள் வைத்தால் கூட pink, green colourல் கோடுகள் கிழங்கினுள் தெரியும்..... கிழங்கு கசக்க ஆரம்பிக்கும்......
அப்படியே வைக்கணும்னா தண்ணீரில் போட்டு வைப்பாங்க......

இப்பெல்லாம் கடை மடை விவசாயம் அழிந்துவிட்டதால் கிழங்கு உற்பத்தி வெகுவாக குறைந்துவிட்டது......
முன்ன மாதிரி tasteம் இல்லை.....

சென்னையில் கிடைக்கும் கிழங்கு மரத்துண்டு போல இருக்குது.....

எப்போவும் புதிதான தோல் freshஆ இருக்கும் கிழங்கு பார்த்து வாங்குங்கள்......

கிழங்கு சாப்பிட்டால் அன்று இஞ்சி சாப்பிடக்கூடாதென்று சொல்லுவார்கள்......
பச்சை கிழங்கு அதிகம் சாப்பிட்டால் பித்தம்......

தீ தணலில் சுட்ட கிழங்கு ரொம்ப வித்தியாசமா நல்லா இருக்கும்.....
 
#10
நாட்டு கிழங்கு, ரொட்டி கப்பை, மலை கிழங்கு......
நாட்டு கிழங்கு தான் பச்சையா சாப்பிட டேஸ்ட்.....
ரொட்டி கப்பை sometimes கசக்கும்.....
மலை கிழங்கு ரொம்ப hardஆ இருக்கும்.....
எந்த கிழங்காக இருந்தாலும் freshஆ சாப்பிடணும்...... ஒரு நாள் வைத்தால் கூட pink, green colourல் கோடுகள் கிழங்கினுள் தெரியும்..... கிழங்கு கசக்க ஆரம்பிக்கும்......
அப்படியே வைக்கணும்னா தண்ணீரில் போட்டு வைப்பாங்க......

இப்பெல்லாம் கடை மடை விவசாயம் அழிந்துவிட்டதால் கிழங்கு உற்பத்தி வெகுவாக குறைந்துவிட்டது......
முன்ன மாதிரி tasteம் இல்லை.....

சென்னையில் கிடைக்கும் கிழங்கு மரத்துண்டு போல இருக்குது.....

எப்போவும் புதிதான தோல் freshஆ இருக்கும் கிழங்கு பார்த்து வாங்குங்கள்......

கிழங்கு சாப்பிட்டால் அன்று இஞ்சி சாப்பிடக்கூடாதென்று சொல்லுவார்கள்......
பச்சை கிழங்கு அதிகம் சாப்பிட்டால் பித்தம்......

தீ தணலில் சுட்ட கிழங்கு ரொம்ப வித்தியாசமா நல்லா இருக்கும்.....
எங்கள் வீட்டில் புட்டு-லாம்
பண்ண மாட்டாங்கப்பா
தலையில் கொட்டு வேணா
கொடுப்பாங்க

ஹீ... ஹீ.... ஹீ.........
தோல் உரிக்கும் பொழுது
கொஞ்சம் பச்சைக் கிழங்கு
சாப்பிடுவேன்

அப்புறம் குளிக்க வெந்நீர்
போடும் அடுப்பில் மரவள்ளிக்
கிழங்கை வைத்து சுட்டுச்
சாப்பிடுவேன்
சூப்பரா இருக்கும்ப்பா
சூட்டுக்குப் பயந்து
என்னோட அக்காவை சுட்டுத்
தரச் சொல்லி, அதுக்கு
லஞ்சமாக அவளுக்கு
சில பல குற்றேவல்கள்
செய்வேன்-ப்பா
 
Last edited:

Latest profile posts

ஹாய் ப்ரெண்ட்ஸ், இன்னைக்கு நோ அப்டேட். சண்டே கொஞ்சம் பிசி ஆகிட்டேன். :) நாளைக்கு கண்டிப்பா உண்டு :)
banumathi jayaraman wrote on சரண்யா's profile.
உங்களுடைய புதிய அழகிய நாவலை இங்கே பதிவிடுவது குறித்து இந்த அழகான தளத்தின் admin ஸ்ரீமதி மல்லிகா மணிவண்ணன் டியர் அவர்களை @mallika Profile-லில் or இந்த தளத்தின் moderator சரயு டியர் அவர்களை @Sarayu
Profile-லில் தொடர்பு கொள்ளுங்கள், சரண்யா டியர்
shiyamala sothy wrote on GomathyArun's profile.
HAPPY BIRTHDAY GOMATHYARUN!

Sponsored