மன்னவன் கையால் மலர்மாலை வாங்கிடவே 5

Advertisement

Anu Chandran

Well-Known Member
Tamil Novel Writer
அன்று தான் அந்த தோட்டத்தின் வாயிலில் காவலாய் எழுந்தருளியிருக்கும் முத்துமாரியம்மனின் திருவிழா ஆரம்பமானது..... அந்த தோட்ட மக்கள் வணங்குவதற்கு என்று நிறுவப்பட்டு பூஜை புனஸ்காரங்கள் செய்யப்பட்ட அந்த கருங்கல்லால் ஆன முத்துமாரியம்மன் சிலைக்கு தேவி மற்றும் சந்திரனின் குடும்பத்தாரே கோவில் எழுப்பினர்.. குடும்பத்தின் பெரியவர்களான வீராசாமி மற்றும் கண்ணாத்தா தம்பதியினரே அறங்காவலறாக கோயிலை பொறுப்பெடுத்தி நடத்தினர்.... ஆகவே திருவிழாக்காலத்தில் அவர்களது குடும்பத்தவர் அனைவரும் ஊரிற்கு வந்துவிடுவர்... திருவிழா மூன்று நாட்கள் நடைபெறும் என்பதால் நகரத்தில் இருந்து வருபவர்களுக்கு வேலையில் எந்த வித இடையூறும் ஏற்படாது.... அந்த மூன்று நாட்களும் திருவிழா களைகட்டும்...இரவு நேரமே திருவிழா ஆரம்பிக்கப்படும்... இரவு கொடியேற்றத்தோடு திருவிழா ஆரம்பித்து கரகம் பாலித்தல் இடம்பெறும்... கோயில் பூசாரி உடுக்கடித்து உருவேற்றுவார்.... அந் நிகழ்வு சற்று வித்தியாசமாக இருக்கும்... கோயிலுனுள் பக்தர்கள் சூழ்திருக்க அம்மன் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கும் இடத்திற்கு கீழே அமர்ந்து பூசாரி விதவிதமாக பாடல் பாடி அம்மனை உருவேற்ற வருமாறு அழைப்பார்... சில சமயங்களில் அம்மன் உருவேறி அருள்பாளிக்க நேரம் சுணங்கினால் தகாத வார்த்தைகளால் அம்மனை வசைபாடி வந்து உருவேறுமாரு அழைப்பார்...சில மணிநேர போராட்டத்திற்கு பின் அம்மன் பூசாரி உடம்பில் உருவேற பின் அங்கிருந்து ஆடியவாறு ஆண்கள் அனைவரும் ஆற்றங்கரைக்கு செல்வர்... அங்கே கரகம் பாலிக்கப்படும். அந்த நிகழ்வில் ஆண்கள் மட்டுமே கலந்து கொள்ள வேண்டும்... அங்கு கரகம் தூக்குவதற்கு மூவர் தெரிவு செய்யப்படுவர்.... அந்த மூவர் யார் என்று ஆற்றங்கரையிலேயே முடிவு செய்யப்படும்... பூசாரி உடுக்கடிக்க அந்த கரகம் தூக்க வேண்டிய மூவருக்கும் உருவேறும்.... அதன் மூலமே அவர்கள் கரகம் தூக்க தகுதியானவர்கள் என்று அறியப்படுவர்... பின் அங்கிருந்து கரகத்தை அந்நபர்களை கொண்டு கோயிலுக்கு தூக்கி வருவர்....அந்த கரகம் தூக்கும் மூவரும் கோயில் சந்நிதானத்திலேயே மூன்று நாட்களும் தங்க வேண்டும்... இந்த கரகம் பாலிக்கும் நிகழ்வு விடியும் வரை நடக்கும்.. பின் காலையில் ஆண்கள் வீடு வந்து சேர பெண்கள் அந்த கரகம் தூக்கி வருபவர்களை அவர்கள் தூக்கி செல்லும் வழியில் சூடம் காட்டி வழிபடுவர்.... பின் காலை பூஜை மற்றும் மாலை விளக்கு பூஜையில் பெண்கள் பங்கேற்க இரவு அம்மன் வீதியுலா செல்ல புறப்படுவாள்.... வீதியுலா செல்லும் அம்மன் விக்கிரகம் மதிய வேளையில் கோயிலை வந்தடையும்.... வீதியுலா முடிவடைந்ததும் அன்னதானம் வழங்கப்படும்.... பின் மாலையில் வேட்டைத்திருவிழா கொண்டாடப்படும். கோயிலுக்கு செல்லும் பாதைக்கு சற்று மேல் சமதரையான அகன்ற புல்வெளியில் வேட்டைத்திருவிழா நடைபெறும்... ஐந்து வாழை மரங்கள் நடப்பட்டு அது மரக்கறிகள் கொண்ட நூலால் இணைக்கப்பட்டிருக்கும்.........கிராமிய தெய்வ வழிபாடாகையால் அங்கு தாரை தப்பட்டை வாத்தியங்களே மிகப்பிரபலம்.... தாரை தப்பட்டை ஒலிக்க பூசாரியும் அவரது எடுபிடி இருவரும் தமக்கு உருவேற்ற, ஒலிக்கப்படும் இசைக்கேற்ப அங்கும் இங்கும் ஆடிக்கொண்டு ஒவ்வொரு வாழைமரமாக வெட்டுவர்... அதாவது அசுரனை ஆக்ரோஷத்தோடு அம்மன் வதம் செய்வதை பிரதிபலிப்பது போல் வேட்டைத்திருவிழா சடங்கு நடாத்தப்படும்.......அந்த சந்தர்ப்பத்தில் பார்த்துக்கொண்டு இருக்கும் சிலரும் சாமியாடுவர்....அங்கு இளைஞர் பட்டாளம் அவர்களது நிஜத்தன்மையை அறிய சில சேட்டைகளையும் ஆற்றுவர்..... வேட்டைத்திருவிழா முடிந்ததும் கொடியிறக்கப்படும்.... அடுத்த நாள் காலை மஞ்சள் நீராட்டு விழா நடைபெறும்....... இது அங்குள்ள இளைஞர் பட்டாளத்திற்கான திருவிழா......திருவிழா முடிந்த மகிழ்ச்சியை கொண்டாடும் விதமாக நீரில் மஞ்சள் கரைத்து எதிர்பாலரின் மீது ஊற்றி விளையாடுவர்..... ஆண்கள் முறைப்பெண்,நாத்தனார் மற்றும் மனைவி இருப்பின் அவர்கள் மீது மஞ்சள் கரைத்த நீரை ஊற்றி விளையாடுவர்....... பெண்கள் மாமன்மார், முறைமாப்பிள்ளை மற்றும் கொழுந்தனார் மேல் நீரூற்றி விளையாடுவர்........இதில் மிக சிறப்பு முறைப்பெண்கள் தங்கள் முறைப்பையன் மற்றும் முறைமாமன்களை துரத்தி சென்று மஞ்சள் நீரூற்றுவர்...ஓடி ஒளிய முயலும் ஆண்மக்களை தேடிப்பிடித்து நீராட்டுவர்.... உறவுமுறை இல்லாதவர்கள் மீது மஞ்சள் நீரூற்றி விளையாட மாட்டர்....

அங்கு தேவி,பிரேமா, கலா, கலை என்று பலர் மஞ்சள் கரைக்கப்பட்ட நீரை செம்பினுள் நிறைத்து மாமன் மச்சான் மீது ஊற்றி விளையாடிக்கொண்டிருந்தனர்...... வரவில்லை என்று மறுத்த தேவியை பிரேமாவும் தேவியின் தோழி சங்கீதாவும் இழுத்து வந்திருந்தனர்.....
ஆடவர் கூட்டத்தில் சந்திரன்,நாதன், வசந்தன் மற்றும் இன்னும் அவர்களது உறவுமுறை சகோதரர்கள், பங்காளிகள் என்று அனைவரும் இருந்தனர்....
பெண்கள் கூட்டம் மஞ்சள் நீராடத்தொடங்கினர்... தம் கையில் உள்ள செம்பில் நிறைத்து வைத்திருந்த மஞ்சள் நீரை ஊற்றியவாறு ஆண்கள் கூட்டத்தை துரத்தத்தொடங்கினர் பெண்கள் பட்டாளம்.... தேவியும் பிரேமாவுடன் சேர்ந்து ஆண்கள் பட்டாளத்தை துரத்தினாள்.. ஒரு கட்டத்தில் எல்லோரும் துரத்தும் சுவாரசியத்தில் ஒவ்வொரு இடமாக பிரிய சந்திரனையும் நாதனையும் பிரேமாவும் தேவியும் துரத்தி சென்றனர்..... ஒருகட்டத்தில் சந்திரனும் நாதனும் வெவ்வேறு பாதைகளில் செல்ல நாதனை தொடர்ந்து பிரேமா சென்றதை கவனிக்காத தேவி சந்திரனை தொடர்ந்து துரத்த ஒரு கட்டத்தில் சந்திரன் ஓடுவதை நிறுத்த அவன் பின்னால ஓடிவந்த தேவி
“ஆ.... மாட்டுனீங்களா???? இப்போ எங்கயும் தப்பிச்சு போக முடியாது... இன்னைக்கு என்கிட்ட வசமா மாட்டிகிட்டீங்க.... வா பிரேமா தண்ணியை ஊற்றலாம்” என்று தேவி கூற கைகட்டிக்கொண்டு அவளை பார்த்து சிரித்துக்கொண்டிருந்தான் சந்திரன்.....முழுக்கை சட்டையை மடித்துவிட்டு வெள்ளை வேட்டியை முழங்கால் தெரிய மடித்து கட்டிக்கொண்டு நின்றவனையும் அவனது பார்வை மாற்றமும் தேவியினுள் புதுவிதமான ஒரு உணர்வை தோற்றுவித்தது.. நெடுநெடுவென்று வளர்ந்து அப்போதுதான் அரும்பத்தொடங்கியது போல் அவனது முகத்திற்கு ஏற்றாப்போல் ஒரு சிறு மீசை வீற்றிருக்க திருவிழா காரணமாக மூன்று நாட்கள் சவரம் செய்யப்படாத தாடியில் மயிர்கள் அங்காங்கு நீட்டிய வண்ணம் இருக்க அவற்றுக்கிடையில் மறைந்திருந்த அவனது புன்னகை இவளை கண்டதும் வெளிப்பட்டது இவளுள் புதுவித தடுமாற்றத்தை உண்டுபண்ண தடுக்கும் வழி தெரியாது உயர்ந்த கைகள் செம்பினை பிடித்த வண்ணம் கீழிறங்க தலை குனிந்து நின்றாள்.... அப்போதுதான் தான் சந்திரன் முன் தனியாக நிற்கின்றோம் என்று உணர சுற்றும் முற்றும் தலையை திருப்பி பிரேமாவை தேடத்தொடங்கினாள்... தான் நின்ற நிலையிலேயே அவளது செயல்களை ரசிக்கத்தொடங்கினான் சந்திரன்... அவனை துரத்தி வரும் போது இடுப்பில் அழகாய் சொருகியிருந்த பாவாடையை அவன் நின்றதும் அவள் சரி செய்த விதமும் பின் செம்பினை ஏந்தி உயர்ந்த கைகள் கீழிறங்கி இரு கைகளாலும் செம்பின் வாயினை அழுத்து பிடித்திருந்த விதமும் அவனை கண்டதும் தலை குனிந்து நின்ற விதமும் பின் திருவிழாவில் தொலைந்த பிள்ளையின் பாவனையுடன் அங்கும் இங்கும் தன் கருகமணி விழிகளை உருட்டியுருட்டி அவள் தேடிய விதமும் அவள் மீதான அவனுடைய காதலை உணரச்செய்தது.... இவ்வளவு நாளாக அவளை தன்னுடன் பேசச்செய்வதற்காக வம்புக்கு இழுப்பவனுக்கு இன்று தான் அதற்கு பெயர் காதல் என்று உணர்ந்தான்... தன் மாமா மகள் என்று இவ்வளவு நாள் மனதில் இருந்த எண்ணம் இன்று என்னவள், எனக்காகவே பிறந்தவள் என்று பெயர் மாற்றம் அடைந்தது.......இவ்வாறு அவனது எண்ணங்கள் நீண்டு செல்ல அவனது மூளை அவள் தேடலை நியாபகப்பபடுத்த அவள் யாரைத் தேடுகின்றாள் என உணர்ந்து
“யாரை பாப்பா தேடுற??? பிரேமாவையா??? அவ உங்க அண்ணன் நாதனை துரத்திட்டு உன்னை இங்கு அம்போனு விட்டுட்டு போயிட்டா... அதான் நான் நின்னுட்டேன்ல. செம்புல கொண்டுவந்த மஞ்ச தண்ணிய ஊத்த வேண்டியது தானே???? இந்த ஊத்து.......” என்றவாறு சந்திரன் நிற்க அவள் அசையாது நிற்க
“என்ன பாப்பா ஊத்த மாட்டியா??? சரி செம்ப எங்கிட்ட தா.... நானே ஊத்துறேன்” என்று அவளருகே வந்து செம்பை வாங்க முயல தேவியோ செம்பை தவறவிட்டுவிட்டு ஓடிவந்த வழியே திரும்பி சென்றாள்...
அவளது செயலில் சிரித்த சந்திரன் தேவி தவறவிட்ட செம்பை எடுத்துக்கொண்டு அவனும் வந்த வழியே சென்றான்....
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top