மனம் மாறு(ம்+ஓ) - 2

Advertisement

Divyahari

Writers Team
Tamil Novel Writer
முகூர்த்த நேரம் முடியறதுக்குள்ள பொண்ணு மாப்பிள்ளைய அழைச்சிட்டு வாங்கோ...என்ற ஐயரின் குரலைக்கேட்ட நண்பர் கூட்டம் படையெடுத்தது மணமகன் அறையை நோக்கி…

கணேஷ்,பிரதாப் மற்றும் அருணால் மணமகன் அறையில் இருந்த கௌதமின் முகத்தைப் பார்த்து
எதுவும் கணிக்கமுடியவில்லை..

வாடா மச்சான் மூகூர்த்தத்துக்கு டைம் ஆச்சுன்னு அங்க ஐயர் கூப்பிடுறாரு என்ற குரலைக்கேட்டு நிமிர்ந்து பார்த்த கௌதம் தன் கையில் இருந்த அலைபேசியை ஏக்கத்துடன் பார்த்தான்..பின்பு அதனை தன் சட்டைப் பைக்குள் வைத்துவிட்டு நடப்பது நடக்கட்டும் என்ற தொனியில் அவர்களிடம் வந்தான் கௌதம்.

ஒன்றும் பேசாமல் வேக எட்டுகளை வைத்து மணமேடையை நோக்கி நடந்த கௌதமின் நடவடிக்கையால் குழப்பம் அடைந்தனர் நண்பர்கள் மூவரும்.

கணேஷ், டேய் எதுக்குடா இவ்ளோ வேகமா போற..தாலி கட்ட தான போற.தங்கச்சி எங்கேயும் போய்டாது.கொஞ்சம் மெதுவா எங்ககூட சேர்ந்தாப்பள வா என்ற கணேஷின் நக்கலுக்கு தன் அக்மார்க் முறைப்பை பரிசாக அளித்தபடி நடையின் வேகத்தை கொஞ்சம் கூட குறைக்காமல் அவர்களைவிட்டு இரண்டடி முன்னே சென்றிருந்தான் கௌதம்..

அருண், மச்சான் எனக்கு என்னமோ அவன் போற ஸ்பீட பார்த்தா தாலி கட்ட போற மாதிரி தெரியல.கல்யாணத்த நிறுத்தப் போற மாதிரியே இருக்குடா.

கணேஷ், அடேய் உன்னோட வாய ஃபினாயில் ஊத்தி நல்லா கழுவு.அப்டி மட்டும் ஏதாச்சும் ஆச்சு உன்ன என்ன பண்ணுவன்னு எனக்கே தெரியாது பார்த்துக்கோ.

பிராதாப், கணேஷ் கோபப்படாதடா..அருணுக்கு மட்டும் இல்லடா.எனக்கும் அதே டபுட் தான்டா மனசுல ஓடுது.

என்னடா சொல்லி வச்ச மாதிரி இரண்டும் பேரும் ஒரே பதில சொல்றீங்க என்றான் நெஞ்சம் நிறைந்த திகிலுடனும் படபடப்புடனும் கணேஷ்.

அருண், கொஞ்சமாவது யோசிச்சு பாரு சத்யாவ பார்க்காம சந்தியா கழுத்துல கௌதம் தாலி கட்டிடுவானா? அது அவனால முடியுமா சொல்லு.

கணேஷ்,நீ சொல்றதும் கரெக்ட்தான்.ஆனா சந்தியாவ லவ் மேரேஜ் தான பண்ண போறான்.சத்யாக்காக சந்தியாவ கஷ்டப்படுத்த மாட்டான்டா கௌதம்.நா நம்புறேன் டா அவன.

பிராதாப், இன்னுமாடா இந்த உலகம் அவ நடிப்ப நம்புது.உனக்கே தெரியும்ல.கௌதம் சத்யா விஷயத்துல எந்தவித நியாய தர்மமும் பார்க்க மாட்டான்னு.

அருண், ஆமாண்டா ஆளு பார்க்க தடி மாடு மாதிரி எப்டி இருக்கான்.காலேஜ்ல எத்தன பேற தூக்கி போட்டு மிதிச்சு இருக்கான்.ஆனா சத்யா முன்னாடி பொட்டி பாம்பா அடங்கி போவான் பார்த்து இருக்கல.எந்த பிரச்சனைனாலும் சத்யாவ முன்னாடி விட்டு அப்டியே பயந்து போன பச்ச புள்ள மாதிரி அவ முந்தானைய புடிச்சிட்டு சுத்துவான்.தெரியாதா?இந்த லூசும் தாந்தா கௌதமுக்கு பாதுகாப்பு கவசம்ங்கிற நினைப்புலயே சுத்திட்டு இருக்கும்.ஏண்டா 20 வருஷமாடா ஒருத்தன் நடிக்கறத கண்டுபிடிக்காம இருப்பாங்க..

இதுக்கான காரணத்த எப்போவே நா கௌதம் கிட்ட கேட்டுட்டேன்டா.இவ்ளோ தைரியமா இருக்க.ஆனா சத்யாவ பார்த்தா மட்டும் ஏண்டா இப்டி பயந்தாங்கோளி மாதிரி நடிக்கற னு.ஆனா அதுக்கான ஃபிளாஷ்பேக் ரொம்ப பெரிசு.அதுக்கு தனி எபியே போடணும். கல்யாணம் நல்ல படியா நடக்கட்டும்.இன்னொரு நாள் ஃபிளாஷ்பேக்க சாவகாசமா சொல்றேன்.இப்ப மண மேடைக்கு போனவன் என்ன ஆனானு பார்க்கலாம் வாங்க என்று கூறிக்கொண்டே மணமேடையை நோக்கினான் கணேஷ்.

அருண்,என்னடா இப்டி ஃபிளாஷ்பேக் னு சஸ்பென்ஸ்லாம் வைக்கிற.இருக்கற சஸ்பென்ஸே தாங்க முடியல.சத்யா வருவாளா மாட்டாளா? இந்த கல்யாணம் நடக்குமா நடக்காதா ?அப்டியே கல்யாணம் நின்னு போச்சுனா சந்தியாவோட ரியாக்சன் என்னவா இருக்கும்?.ரொம்ப டென்ஷனா இருக்குடா எனக்கு.யப்பா.போதுண்டா சாமி நீங்களும் உங்க சஸ்பென்பும்…

நண்பர்களின் சம்பாஷனைகளை சிறுதும் சட்டை செய்யாமல் ஐயர் கூறும் மந்திரங்களை ஏனோதானோவென்று உச்சரித்துக் கொண்டு இருந்தான் கௌதம்.

பொண்ண அழைச்சிட்டு வாங்கோ என்ற ஐயரின் குரலை அடுத்து ரோஜா வண்ணப்பட்டுப்புடவையில் தங்கமும் வைரமும் மின்ன மணப்பெண்ணிற்குரிய அக்மார்க் புன்னகையுடனும் வெட்கத்துடனும் நடந்து வந்து கௌதமின் அருகில் அமர்ந்தாள் சந்தியா.

இன்னும் சற்று நேரத்தில் தன்னவளாகப் போகிறவள் தன்னருகே அமர்ந்ததை கூட உணரும் நிலையில் இல்லை கௌதம்.

கௌதம் தன்னை நிமிர்ந்து கூட பார்க்காதது சந்தியாவின் மனதை பெரிதும் பாதித்தது.கௌதம் தன்னை பார்ப்பதற்காக சந்தியா எடுத்த முயற்சிகள் அனைத்தும் வீணானது தான் மிச்சம்.ஆனால் இதை எதையும் உணரும் நிலையில் அவன்.

தன் கையில் இருக்கும் போனைப் பார்ப்பதும் வாயிலைப் பார்ப்பதுமாக இருந்தான் அவன்.அவனின் சிந்தனையைக் கலைக்கும் விதமாக ஒலித்தது ஐயரின் குரல்.

கட்டி மேளம் கட்டி மேளம் என்ற ஐயரின் குரலைக்கேட்ட பின்தான் நண்பர்கள் மூவருக்கும் மூச்சே வந்தது.

கௌதம் தாலி கட்டுவதற்கு வாகாக தலையைச் சரித்து குனிந்து இருந்த சந்தியா நொடிகள் பல கடந்தும் தன் கழுத்தில் தாலி ஏறாமல் இருப்பதைக் கண்டு தலையை நிமிர்த்தி பார்த்தாள்.

கையில் எடுத்த தாலியை சந்தியாவின் கழுத்தில் கட்டாமல் தன் சட்டைப்பையினுள் வைத்தான் கௌதம்.

என்ன நடக்கிறது ஏன் கௌதம் தாலி கட்டவில்லை என்ற உறவினர் கூட்டம் சலசலக்க ஆரம்பித்தது.

அனைவரின் வாயையும் அடைக்கும் விதமாக கௌதம் தன் குரலை உயர்த்தி இந்த கல்யாணம் இப்ப நடக்காது.எல்லாரும் என்ன மன்னிச்சிடுங்க என்றான்.

ஏன் நடக்காது எதுக்கு நடக்காது என்று ஆவேசமாக கேட்டபடியே வந்தார் சந்தியாவின் தாய் மல்லிகா.

காரணம் சொல்ல வேண்டியதும் மன்னிப்பு கேட்க வேண்டியதும் சந்தியா ஒருத்திக்கிட்ட மட்டும் தான்.வேற யார்கிட்டையும் விளக்கம் சொல்ல வேண்டிய அவசியம் எனக்கு இல்லை என்று தன் வருங்கால மாமியாரிடம் சீறினான் கௌதம்.

தான் எது நடக்கக்கூடாதுன்னு பயந்தாளோ அதுவே நடந்திருந்தது.சந்தியா பரிதாபமான முகத்தோடு கௌதமை நோக்கினாள்.

சந்தியாவின் பார்வையை சந்திக்க முடியாமல் தலை குனிந்த கௌதம். சந்தியா புரிஞ்சுக்கோடி, சத்யா இல்லாம நம்ம கல்யாணம் எப்டிடி.சத்யா வராம,சத்யாவ பார்க்காம என்னால எப்டி உன்னோட கழுத்துல தாலி கட்ட முடியும் சொல்லு.சந்தியா உன்னால என்ன புரிஞ்சுக்க முடியுது தான.ப்ளீஸ் நீயாவது என்ன புரிஞ்சுப்பங்ற நம்பிக்கைலதான் நான் இந்த முடிவ எடுத்த டி.தன் நிலைமையை எப்படியாவது புரியவைக்கும் நோக்கத்தோடு கெஞ்சிக் கொண்டிருந்தான் கௌதம்.

தன் மனக்குமறலை வெளிக்காட்டும் நேரம் இதுவல்ல என்பதை உணர்ந்த சந்தியா.,என்ன கௌதம் இப்டி சொல்லிட்ட நீ நிறுத்தாட்டி நானே கல்யாணத்த நிறுத்தி இருப்ப.சத்யா இல்லாம கண்டிப்பா நம்ம கல்யாணம் நடக்கவே நடக்காது என்று மனம் நிறைய குரோதத்துடன் கூறினாள்.


மனம் மாறு (ம் + ஓ )?
 

banumathi jayaraman

Well-Known Member
சத்யா வராமல் கௌதம் தாலி கட்ட மாட்டேங்குறான்
சத்யா ஏன் இன்னும் வரலை
அவளுக்கு என்ன ஆச்சு?
யப்பா சந்தியாவுக்கு எதுக்கு யார் மீது இவ்வளவு குரோதம்
சத்யாவின் மீதா?
கௌதம் சந்தியா கல்யாணம் நடக்காதா?
அப்போ கௌதம்மின் குழந்தை?
 
Last edited:

Priyapraveenkumar

Well-Known Member
Gowthamku Sandhya pathi kavalai illama marriage nirutharanna,Sathya avlo mukkiyamanavala???
apdi irukkarava ean varala,varalana marriage niruthuvanu ninaikkalaya?
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top